#கர்ணன் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிங்கப்பெருமாள் கோயிலுக்கும் மகேந்திரா சிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது சத்தியா நகர். ஊர் சுடுகாட்டின் பக்கத்து தெருவில் சுமார் 200+ குடும்பங்கள் உள்ளது. பெரும்பாலும் தினக்கூலிகள். இன்றும் இங்கே பேருந்து நிறுத்தம் கிடையாது. 1/4
தலித் மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க என் அப்பா பல மனுக்களை எழுதி நடவடிக்கை எடுத்தது இன்னும் நினைவில் உள்ளது. T60, M500 பேருந்துகள் சத்தியா நகரை கண்டு கொள்வதே கிடையாது. நடந்தோ, ஷேர் ஆட்டோவோ, சைக்கிள், பைக் தான் அவர்களுக்கு உள்ள போக்குவரத்து வழி! -2
நெடுஞ்சாலைக்கு அருகே வசித்தாலும் இப்பகுதி மக்கள் கால்நடையாகவே வேலைக்கும் பள்ளிக்கும் செல்வதை பார்த்திருக்கிறேன். சத்தியா நகர் - திருத்தேரி 1கிமீ
சத்தியா நகர் - சிங்கபெருமாள்கோயில் -2 கிமீ
சத்தியா நகர் - மகேந்திரா சிட்டி - 1.5 கிமீ. அவசரத்திற்கு வெளியூர் செல்லணும்னா கஷ்டம்! 3/4
வளர்ந்துவரும் நகர்புற பகுதியான S.P.Koil, மகேந்திரா சிட்டி பகுதியை ஒட்டியுள்ள சத்தியா நகர் மக்கள் அவசரத்திற்கு மருத்துவமனை செல்வது என்பது பெரிய சவால் தான். பஸ் பாஸ் இருந்தாலும் பேருந்தை பயன்படுத்த முடியாது. உண்மை நிலவரத்தை கள ஆய்வில் ஆவணபடுத்த வேண்டுகிறேன்! 4/4 @meenakandasamy
நான் பிறந்து வளர்ந்தது இந்த சத்தியா நகர் பகுதியை அடுத்த திருத்தேரி கிராமத்தில் தான். மேலே சொல்லப்பட்ட தகவல் 100% உண்மை! என் அப்பாவும் அம்மாவும் அப்பகுதி மக்கள் மீது பேரன்பு கொண்டவர்கள்.
நான் திருமணம் ஆகி வந்த ஊர் புதுச்சேரி. என் அம்மா அப்பாவின் பூர்வீகமும் புதுச்சேரி தான்.
சென்னை தேசிய நெடுஞ்சாலை NH 45 சிங்கப்பெருமாள் கோயிலுக்கும் மகேந்திரா சிட்டிக்கும் அமைந்துள்ள சத்தியா நகர் பேருந்து நிலைய அமைப்பு! இன்று மாலை எடுத்த புகைப்படம்! நிற்காத பேருந்துகளுக்கு பழக்கப்பட்ட மக்களும்! மூன்று தலைமுறைகளாக இது தான் நிலைமை! #Karnan
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh