ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள குட்டி தீவு நாடு, நவுரு. ஜனத் தொகை, 10 ஆயிரம் பேர் மட்டுமே; 30 நிமிடத்தில் சுற்றி வரக் கூடிய நாடு.
கடந்த, 1968-ம் ஆண்டுக்கு முன் வரை, மீன் பிடித்தல், விவசாயம் என, சாதாரண நாடாக இருந்த நவுரு, அதன்பின், மிகப் பெரிய, வரம் பெற்ற நாடாக உருமாறியது.
காரணம், பறவை வாழ்வதற்கு ஏற்ற இடமாக, நவுரு தீவு இயற்கையிலேயே இருப்பதால், அந்த பகுதியில் தான் அவை கழிவிறக்கம் செய்து வந்துள்ளன. அவை, 'பாஸ்பேட்' எனும் தாதுவாக மாறி இருந்தன.பாஸ்பேட் தாதுவிற்கு, சர்வதேச சந்தையில் கிராக்கி. எனவே, பன்னாட்டு கம்பெனிகள், நவுரு தீவுக்கு வந்திறங்கின.
பாஸ்பேட்டை வெட்டி எடுத்தன; நவுரு அரசுக்கு ஏராளமான வருமானம் வந்தது.பத்தாயிரம் பேர் மட்டுமே உள்ள அந்நாட்டின் அரசிடம், 170 கோடி டாலர்கள் இருந்தன. அவ்வளவு பணத்தையும் என்ன செய்தனர்... மக்கள் அனைவருக்கும் இலவச உணவு, 'டிவி' உள்ளிட்ட பொருட்களைக் கொடுத்தனர்.
அரசின் சார்பில், விமானக் கம்பெனி துவக்கப்பட்டு, பல்வேறு நாடுகளுக்கு, மக்கள் இலவச பயணம் சென்றனர்.ஒரே ஒரு நபருக்காக, விமானம் புறப்பட்டு, சிங்கப்பூர் சென்ற கதை எல்லாம் உண்டு. ஆளே இல்லாத ஓட்டலில், ஐந்து மில்லியன் டாலர் செலவு செய்து, கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
இப்படி, 15 ஆண்டுகள் ஆடம்பரங்கள் அனைத்திலும், நவுரு மக்கள் திளைத்தனர்.ஒரு கட்டத்தில் நவுரு தீவில், பாஸ்பேட் தீர்ந்தது; கம்பெனிகள் விடை பெற்றன; அரசின் வருமானம் நின்றது.
இலவச உணவு காரணமாக, மக்கள் உழைக்க முடியாவண்ணம் குண்டாகி இருந்தனர். இளைய தலைமுறைக்கு விவசாயம், மீன்பிடி போன்றவை குறித்து தெரியவில்லை. பாஸ்பேட் சுரண்டப்பட்டதால், அந்த மண்ணும், விவசாயத்திற்கு தகுதியற்றதாக மாறி விட்டது.
வேறுவழியின்றி, நவுரு அரசு, தன் நாட்டுக் குடியுரிமையை, பணத்திற்கு விற்றது.மாபியா கும்பல் எல்லாம், நவுரு வங்கியில் பணத்தைப் போட்டு, கறுப்பை வெள்ளையாக்கினர். கடைசியாக உலக நாடுகள், நவுரு மேல் பொருளாதாரத் தடை விதிக்க, மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இன்று, உலகின் ஏழ்மை நிரம்பிய, ஆரோக்கியம் குறைவானோர் அதிகம் இருக்கும் நாடாக நவுரு ஆகிவிட்டது.
ஆஸ்திரேலியா அரசு கொடுக்கும் நிதி உதவியால் தான், நவுரு மக்கள் ஒரு வேளை உணவாவது உண்கின்றனர்.நம் நாட்டு அரசியல்வாதிகளின் தேர்தல் அறிக்கையைப் படிக்கையில், இலவசங்களால், நாமும், நவுரு தீவாகி விடுவோமோ என, அச்சம் ஏற்படுகிறது
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வன்னியர் மீதான அவதூறுகளுக்கு பதிலடி கொடுக்க பாமக சார்பில் புதிய பரப்புரை இயக்கம: ராமதாஸ் அறிவிப்பு
வன்னியர்கள் மீதான அவதூறுகளுக்கு பதிலடி கொடுக்க, இனமான உரிமை காப்பு அறிவுசார்பரப்புரை இயக்கம் தொடங்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
அரக்கோணம் சோகனூர் இரட்டைக் கொலை தொடர்பாக பாமக, வன்னியர் சமுதாயத்தின் மீது அவதூறுகள் அள்ளி வீசப்படுகின்றன.
அடிப்படையற்ற அவதூறுகளை சில அரசியல் கட்சித் தலைவர்களும், ஊடக அறத்தை மதிக்காதசில ஊடகங்களும் ஆதரிப்பதும்,ஊக்குவிப்பதும் கண்டிக்கத்தக்கது. இந்தக் கொலைகளுக்கான காரணம் சாதியோ, தேர்தலோ, அரசியலோ இல்லை.
புதுடில்லி : 'நேஷனல் ஹெரால்டு' வழக்கில், சுப்பிரமணியன் சுவாமி மனு மீது, சோனியா, ராகுல் உள்ளிட் டோர் பதில் அளிக்க, கால அவகாசத்தை நீட்டித்து, டில்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை நடத்தி வந்த, 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' என்ற நிறுவனத்துக்கு, காங்கிரஸ் கட்சி, 90 கோடி ரூபாய் கடன் அளித்தது.
இந்த நிறுவனத்தின் பங்குகளை, காங்., தலைவர் சோனியா மற்றும் அவரது மகன் ராகுல் இயக்குனர்களாக உள்ள, 'யங் இந்தியா' என்ற நிறுவனம் விலைக்கு வாங்கியது.
தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. 🙏🇮🇳1
அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.
🙏🇮🇳2
* திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். 🙏🇮🇳3
நம் துன்பத்திற்கு இவர்தான் காரணம் என்று நாம் யாரையாவது நினைத்துக்கொண்டு மேலும் துன்பப்படுகிறோம்.
உண்மையில் நம் துன்பத்திற்கு யார் காரணம்..? இவர் மட்டுமா ..? இல்லை நம் வினைகளுமா ..?
இதனை அறிய கர்ணன் கதையைக் காணலாம்...
கர்ணனை அர்ஜூனன் தான் கொன்றான் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
உண்மையில் கர்ணனை வலிமை இழக்கச் செய்து கொல்வதற்கு பங்களித்தவர்கள் ஆறு பேர்கள்...!!
கர்ணனைக் கொல்ல அர்ஜூனன் அம்பாய்ப் பயன்பட்டானே தவிர, அவன் மீது அந்த அம்பை எய்தவர்கள் ஆறு பேர்.
யார் அந்த ஆறு பேர்கள்...?
────────●●●────────
முதலாவதாகப் பரசுராமர்....
இவர் அந்தணர்களுக்கு மட்டும்தான் வில்வித்தை கற்றுக் கொடுப்பேன் என்று சபதம் செய்திருந்தார். இதையறிந்த கர்ணன், தான் அந்தணன் என்று சொல்லி அவரிடம் வில்வித்தை கற்றுக் கொண்டான்.
கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
சபரிமலை: கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், நேற்று இருமுடி கட்டி வந்து, சபரிமலையில் தரிசனம் செய்தார்.
கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான், நேற்று மாலை, 4:30 மணிக்கு, மகன் கபீருடன் பம்பை வந்தார். 5:10 மணிக்கு இருமுடி கட்டுடன், மலை பாதையில், சுவாமி அய்யப்பன் ரோட்டில் நடக்க தொடங்கினார். இரவு, 7:00 மணிக்கு சன்னிதானம் பெரிய நடைப்பந்தல் வந்து சேர்ந்தார்.
அவரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின், படிபூஜையில் பங்கேற்றார்.