வன்னியர் மீதான அவதூறுகளுக்கு பதிலடி கொடுக்க பாமக சார்பில் புதிய பரப்புரை இயக்கம: ராமதாஸ் அறிவிப்பு
வன்னியர்கள் மீதான அவதூறுகளுக்கு பதிலடி கொடுக்க, இனமான உரிமை காப்பு அறிவுசார்பரப்புரை இயக்கம் தொடங்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
அரக்கோணம் சோகனூர் இரட்டைக் கொலை தொடர்பாக பாமக, வன்னியர் சமுதாயத்தின் மீது அவதூறுகள் அள்ளி வீசப்படுகின்றன.
அடிப்படையற்ற அவதூறுகளை சில அரசியல் கட்சித் தலைவர்களும், ஊடக அறத்தை மதிக்காதசில ஊடகங்களும் ஆதரிப்பதும்,ஊக்குவிப்பதும் கண்டிக்கத்தக்கது. இந்தக் கொலைகளுக்கான காரணம் சாதியோ, தேர்தலோ, அரசியலோ இல்லை.
கொலையானவர்களும், கொலை செய்யப்பட்டதாக கூறி கைது செய்யப்பட்டவர்களும் நீண்டகாலமாக நண்பர்களாக இருந்தவர்கள். கொலைநடப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு வரை அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில்தான் இந்தக் கொலை நடந்திருக்கிறது.
இதுதான் மறுக்க முடியாத உண்மை. இது குடிபோதையில் இருந்த இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதல்.
கொல்லப்பட்டவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அல்ல. கொலை செய்ததாக கூறப்படுபவர்கள் பாமகவினரும் அல்ல. கொல்லப்பட்ட இருவரும் புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்தவர்கள்.
இந்த மோதலின் பின்னணியில் அரசியல் இல்லை என்று அந்தக் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி கூறியிருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே, யாரோ செய்த தவறுக்கு எல்லாம் வன்னியர்கள் மீது பழி போடலாம், அவர்களுக்கு ஆதரவாக பாமக குரல் கொடுத்தால் அதன் மீது சாதிமுத்திரை குத்தலாம் என்ற போக்குஅதிகரித்து வருகிறது. இது ஆரோக்கியமானது அல்ல. இப்போக்கை சம்பந்தப்பட்ட சக்திகள் உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
இனிவரும் காலங்களில் வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும்போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடம் இருந்து வன்னிய மக்களை காக்கவும் அறிவுசார்ந்த பரப்புரைகளை மேற்கொள்ள வன்னியர் இன மான,
உரிமை காப்பு அறிவுசார் பரப்புரை இயக்கம் தொடங்கப்படுகிறது. 22 முதல் 30 வயது வரையுள்ள பட்டதாரி இளைஞர்களும், இளம் பெண்களும் சேரலாம். இதில் சேர விரும்புபவர்கள் bit.ly/HateFreeTN என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
அரக்கோணம் நிகழ்வு போன்றவற்றில் தேவையில்லாமல் வன்னியர் சமுதாயத்தை தொடர்புபடுத்தி, அவதூறு பரப்பும் கும்பலை முறியடிக்க ஆதரவு கொடுங்கள்.
இயக்கத்தின் நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள். பாமகமுன்னாள், இந்நாள் எம்.பி.,எம்எல்ஏக்கள் இதன் ஆலோசகர்களாக இருந்து வழிநடத்துவார்கள்.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்து
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
புதுடில்லி : 'நேஷனல் ஹெரால்டு' வழக்கில், சுப்பிரமணியன் சுவாமி மனு மீது, சோனியா, ராகுல் உள்ளிட் டோர் பதில் அளிக்க, கால அவகாசத்தை நீட்டித்து, டில்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை நடத்தி வந்த, 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' என்ற நிறுவனத்துக்கு, காங்கிரஸ் கட்சி, 90 கோடி ரூபாய் கடன் அளித்தது.
இந்த நிறுவனத்தின் பங்குகளை, காங்., தலைவர் சோனியா மற்றும் அவரது மகன் ராகுல் இயக்குனர்களாக உள்ள, 'யங் இந்தியா' என்ற நிறுவனம் விலைக்கு வாங்கியது.
தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. 🙏🇮🇳1
அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.
🙏🇮🇳2
* திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். 🙏🇮🇳3
நம் துன்பத்திற்கு இவர்தான் காரணம் என்று நாம் யாரையாவது நினைத்துக்கொண்டு மேலும் துன்பப்படுகிறோம்.
உண்மையில் நம் துன்பத்திற்கு யார் காரணம்..? இவர் மட்டுமா ..? இல்லை நம் வினைகளுமா ..?
இதனை அறிய கர்ணன் கதையைக் காணலாம்...
கர்ணனை அர்ஜூனன் தான் கொன்றான் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
உண்மையில் கர்ணனை வலிமை இழக்கச் செய்து கொல்வதற்கு பங்களித்தவர்கள் ஆறு பேர்கள்...!!
கர்ணனைக் கொல்ல அர்ஜூனன் அம்பாய்ப் பயன்பட்டானே தவிர, அவன் மீது அந்த அம்பை எய்தவர்கள் ஆறு பேர்.
யார் அந்த ஆறு பேர்கள்...?
────────●●●────────
முதலாவதாகப் பரசுராமர்....
இவர் அந்தணர்களுக்கு மட்டும்தான் வில்வித்தை கற்றுக் கொடுப்பேன் என்று சபதம் செய்திருந்தார். இதையறிந்த கர்ணன், தான் அந்தணன் என்று சொல்லி அவரிடம் வில்வித்தை கற்றுக் கொண்டான்.
ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள குட்டி தீவு நாடு, நவுரு. ஜனத் தொகை, 10 ஆயிரம் பேர் மட்டுமே; 30 நிமிடத்தில் சுற்றி வரக் கூடிய நாடு.
கடந்த, 1968-ம் ஆண்டுக்கு முன் வரை, மீன் பிடித்தல், விவசாயம் என, சாதாரண நாடாக இருந்த நவுரு, அதன்பின், மிகப் பெரிய, வரம் பெற்ற நாடாக உருமாறியது.
காரணம், பறவை வாழ்வதற்கு ஏற்ற இடமாக, நவுரு தீவு இயற்கையிலேயே இருப்பதால், அந்த பகுதியில் தான் அவை கழிவிறக்கம் செய்து வந்துள்ளன. அவை, 'பாஸ்பேட்' எனும் தாதுவாக மாறி இருந்தன.பாஸ்பேட் தாதுவிற்கு, சர்வதேச சந்தையில் கிராக்கி. எனவே, பன்னாட்டு கம்பெனிகள், நவுரு தீவுக்கு வந்திறங்கின.
கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
சபரிமலை: கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், நேற்று இருமுடி கட்டி வந்து, சபரிமலையில் தரிசனம் செய்தார்.
கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான், நேற்று மாலை, 4:30 மணிக்கு, மகன் கபீருடன் பம்பை வந்தார். 5:10 மணிக்கு இருமுடி கட்டுடன், மலை பாதையில், சுவாமி அய்யப்பன் ரோட்டில் நடக்க தொடங்கினார். இரவு, 7:00 மணிக்கு சன்னிதானம் பெரிய நடைப்பந்தல் வந்து சேர்ந்தார்.
அவரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின், படிபூஜையில் பங்கேற்றார்.