ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயில் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பிருந்து, அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு கோவில் ஆகும்.
மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் ஆனது.
🇮🇳🙏1
தொண்டை மண்டலத்தில் வேதபுரி அகஸ்தீசபுரம் வேதபுரம் எனும் பெயர்களோடு இருந்தது இந்த பாண்டிச்சேரி.
600 ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சுக் காரர் களின் ஆட்சியில் கடற்கரைக்கருகில் உள்ள “மணல்” நிறைந்த “குளத்தின்” கரை யில் அமைந்து மக்கள் வழிபட்டு வந்த விநாயகரை, 🇮🇳🙏2
அன்றைய பிரெஞ்சு அரசு, அந்த இடத்தில் கட்டடம் கட்டுவதற்காக விநாயகர் சிலையை, அருகில் உள்ள கடலில் போட்டதாகவும் அது மீண்டும் மிதந்து கரைக்கு வந்ததாகவும் சொல்லப் படுகிறது.
🇮🇳🙏3
இத்துடன் இந்த கோவிலுக்கு மற்றொரு சிறப்புண்டு. புதுவை மற்றும் அதன் சுற்றுபுறத்தில் வாழ்ந்த 41க்கும் மேற்பட்ட சித்தர்களில் தொல்லைக்காது சித்தர் சுவாமிகள் மணக்குள விநாயகரால் கவரப்பட்டு அவரை தினசரி தரிசனம் செய்தார்.
🇮🇳🙏4
அவர் வேண்டுகோளை ஏற்று அவர் இறந்த பிறகு அந்த கோவிலுக்கு அருகிலேயே அவரை அடக்கம் செய்தனர்.
🇮🇳🙏5
புதுவையில் 1908 முதல் 1918 வரை பத்து ஆண்டுகள் தங்கி இருந்த “முண்டாசுக்கவிஞன்’ பாரதி , இந்த விநாயகரை போற்றி; நான்மணிமாலை என்ற தலைப்பில் 40 பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
🇮🇳🙏6
பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன் மனமே! எனை நீ வாழ்த்திடுவாய்! என்ற பாரதியின் கனவுப்படி இந்தக்கோயில் கருவறை விமானம் பொன்னால் வேயப்பட்டுள்ளது.
🇮🇳🙏7
*தலவரலாறு*
ஒயிட் டவுன்’ எனப்படும் இந்தப் பகுதியின் அருகில் ஒரு குளம் உண்டு; 'மணற் குளம்’ என்பர். இதன் அருகில் கோயில் கொண்டதால், மணற்குள விநாயகர் எனப் பெயர் பெற்ற கணபதியை, தற்போது ஸ்ரீமணக்குள விநாயகர் என்கிறோம்.
🇮🇳🙏8
கஸ்தோனே தே ஃபோஸ்’ என்ற பிரெஞ்சு வரலாற்று ஆசிரியரின் குறிப்பின்படி, 1688-ஆம் வருடம் பிரெஞ்சுக்காரர்கள் இங்கு ஒரு கோட்டை கட்ட திட்டமிட்டனர்.
அந்தக் கோட்டையின் பின்புறம் மணக்குள விநாயகர் ஆலயம் இருந்தது.
🇮🇳🙏9
அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் வாழ்ந்த இந்துக்கள் இந்த விநாயகருக்குத் தினமும் அபிஷேக - ஆராதனைகளுடன் அவ்வப்போது உத்ஸவங்களையும் நடத்தி வந்தனர்.
🇮🇳🙏10
பிரெஞ்சு ஆட்சியாளர்களால் இதனை சகித்துக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து, ஈஸ்டர் காலம் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமி உத்ஸவம் போன்ற வைபவங் களை நடத்தக்கூடாது என்று அப்போதைய பிரெஞ்சு கவர்னர் தடை உத்தரவு பிறப்பித்தார்.
🇮🇳🙏11
இதனால் கோபம் அடைந்த அந்தப் பகுதியில் வாழ்ந்த தொழிலாளர் குடும்பத்தினர் எவரும் வேலைக்குச் செல்லாமல் இருந்ததுடன், ஊரைவிட்டே வெளியேறவும் முற்பட்டனர். 🇮🇳🙏12
அப்படி நிகழ்ந்தால், வேலை செய்ய ஆட்கள் இல்லாது திண்டாட நேரிடுமே என்ற அச்சத்தில், அவர்களின் போராட்டத்துக்குப் பணிந்தார் கவர்னர். தடை உத்தரவு வாபஸ் ஆனது.
ஆனாலும், மணக்குள விநாயகர் ஆலயத்தை அங்கிருந்து அகற்ற திட்டமிட்டனர் பிரெஞ்சுக்காரர்கள்.
🇮🇳🙏13
கோயிலுக்கு அருகில், பிரெஞ்சுக்காரர் 'மொம்பரே’ என்பவரின் பூங்கா இருந்தது. அவருக்கும், விநாயகர் கோயிலுக்கு அதிகமான பக்தர்கள் வந்துசெல்வது பிடிக்கவில்லை.
இதையடுத்து, எவரும் அறியாத வண்ணம் இரவோடு இரவாக விநாயகர் சிலையை எடுத்துக் கடலில் போடுமாறு தனது ஆட்களை ஏவினார் மொம்பரே. 🇮🇳🙏14
அவ்வாறே கடலில் போடப்பட்டது விநாயகர் சிலை. ஆனால், மறுநாள் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கோயிலில் எந்த இடத்தில் அந்தச் சிலை வைக்கப்பட்டு இருந்ததோ அதே இடத்தில் மறுபடியும் இருந்தது.
🇮🇳🙏15
மொம்பரே அதிர்ச்சி அடைந்தார். தான் அனுப்பிய ஆட்கள் மீதே அவருக்குச் சந்தேகம் எழுந்தது. மறுபடியும், விநாயகர் சிலையை கடலில் கொண்டுபோய் போடும்படி உத்தரவிட்டவர், அந்தமுறை தானும் உடன் சென்றார்.
🇮🇳🙏16
மொம்பரேயின் ஆட்கள் சிலையைப் பெயர்த்தெடுத்துக் கடலில் போட முயன்றபோது, திடீரென கண்பார்வை இழந்தார் மொம்பரே.
மணக்குள விநாயகரின் மகிமையை உணர்ந்தார். தனது செயலுக்காக வருந்தியதுடன், தன்னுடைய தவறுக்குப் பரிகாரமாக கோயிலை அபிவிருத்தியும் செய்தார்.
🇮🇳🙏17
வெள்ளைக்காரருக்கு மனமாற்றம் தந்ததால் இவரை, வெள்ளைக்காரப் பிள்ளையார் என்றும் அழைக்கிறார்கள்
🇮🇳🙏18
கோவில்அமைப்பு
கிழக்கு நோக்கி அருளும் விநாயகரின் திருமேனியில் பின் இரு கரங்கள் பாசம் அங்குசம் ஏந்தியும், முன் இரு கரங்கள் அபயம் வரதமாகவும் அமைந்துள்ளன.
மணற்குளம் இருந்ததன் அடையாளமாக விநாயகர் பீடத்தின் முன்புறம் உள்ள குழியில் இப்போதும் நீர் சுரந்துகொண்டிருக்கிறது.
🇮🇳🙏19
கோயில் மண்டபத்தைச் சுற்றிலும் விநாயகரின் பல்வேறு வடிவங்களும் அவரது திருவிளையாடல்களும் சுதைச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
பிராகாரத்தில் தென் மேற்கு மூலையில் ஸ்ரீபால விநாயகரும், வடமேற்கில் ஸ்ரீபால சுப்ரமணியரும் அருள்கின்றனர். வடக்குப் புறம் ஸ்ரீசண்டீசர் சந்நிதி உள்ளது. 🇮🇳🙏20
அங்குள்ள உத்ஸவர் மண்டபத்தில் ஸ்ரீநர்த்தன கணபதி, ஸ்ரீஹரித்ரா கணபதி, ஸ்ரீசித்தி புத்தி கணபதி, ஸ்ரீலட்சுமி கணபதி, ஸ்ரீபாலசுப்ர மணியர், வள்ளி-தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமணியர், சண்டீசர், அஸ்திரதேவர் முதலான உத்ஸவ மூர்த்திகளுடன் ஸ்படிக லிங்கமும் உள்ளது.
🇮🇳🙏21
தங்கத்தேர் உலாவும் உண்டு.
அனைத்து மதத்தினரும், வெளிநாட்டுப் பயணிகளும் இவரை வணங்கிச் செல்கிறார்கள்.
தினமும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது.
🇮🇳🙏22
மகான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பண்டித வி.மு. சுப்ரமண்ய ஐயர், கோவை நாகலிங்க சுவாமிகள் போன்ற அருளாளர்கள் மணக்குள விநாயகரைப் போற்றிப் பாடியுள்ளனர்.
🇮🇳🙏23
*கிணற்றின் மீது தான் மூலவர்*
தற்போது மூலவரான மணக்குளத்து விநாயகர் இருக்கும் பீடம் இருப்பதே நீர் நிலை அமைந்துள்ள ஒரு கிணறு அல்லது குளத்தின் மீதுதான் என்பது இத்தலத்தை நன்கு அறிந்த பலருக்கும் தெரியாத செய்தி.
🇮🇳🙏24
பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு மிக அருகில் அரை அடி விட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்லுகிறது. அதில் தீர்த்தம் உள்ளது. இதன் ஆழம் கண்டுபிடிக்க முடியவிலலை. சென்றுகொண்டே இருக்கிறது.
🇮🇳🙏25
இதில் வற்றாத நீர் எப்போது உள்ளது. இது முன்காலத்தில் இருந்த குளமாவும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள்.
🇮🇳🙏26
*தலசிறப்பு*
விநாயகர் தலங்களில் வேறு எங்குமே இல்லாத சிறப்பாக பள்ளியறை இங்கு உள்ளது.
இங்கு பள்ளியறையில் விநாயகரோடு உடன் இருப்பது அவரது தாயார் சக்தி தேவியார் ஆவார்.
🇮🇳🙏27
தினமும் நைவேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்கு செல்வார். இதன் அடையாளமாக பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ விக்ரகம் கொண்டு செல்லப்படுகிறது.
🇮🇳🙏28
*தலபெருமை*
அகில இந்திய அளவில் விநாயகருக்கு கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட கோயில் இந்த கோயில் மட்டுமே.
உற்சவர் வில்புருவமும் மூன்று பதமாகவும் நிற்கிறார். வேறு எங்குமே பார்த்திர முடியாத சிறப்பு இது.
🇮🇳🙏29
விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும்தான் திருக்கல்யாணம் நடக்கிறது. இங்கு சித்தி புத்தி அம்மைகள் மனைவியாக உள்ளனர்.
சிவதலங்களில் இருக்கும் நடராஜரைப் போல் நர்த்தன விநாயகர் இங்கு இருக்கிறார்.
🇮🇳🙏30
*கோவில் யானை லட்சுமி*
மணக்குள விநாயகர் கோவிலில் கோவில் யானை ஒன்று உள்ளது .
அதன் பெயர் லட்சுமி .இந்த யானை மற்ற கோவில் யானைகள் போல் அல்லது மக்களுடன் மிகவும் அன்புடன் பழகி வருகிறது .
லட்சுமி யானை புதுவை மக்களால் பெரிதும் பேரன்புடன் கண்டு செல்ல கூடிய ஒரு நிலை இன்று உள்ளது .
🇮🇳🙏31
மணக்குள விநாயகர் கோவில் நுழைவாயில் முன் லட்சமி நின்று கொண்டு வரும் பக்தர்களை வரவேற்பதை நாம் இன்றும் காண முடியும்
கல்யாணவரம், குழந்தை வரம் உள்ளிட்ட எந்த காரியமானாலும் இவரை வணங்கினால் நன்மை கிடைக்கிறது. 🇮🇳🙏32
தொழில் தொடங்குவோர், புதுக்கணக்கு எழுதுவோர், கல்யாண பத்திரிக்கை வைத்து வழிபட விரும்புவோர், புது வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர்.
🇮🇳🙏33
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவெனில் இந்து மதம் என்றில்லாமல் முஸ்லிம், கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்களும் வெளிநாட்டினர் பெருமளவில் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.
🇮🇳🙏34
பாண்டிச்சேரியை விட்டு வெளியூர் கிளம்புவர்கள் இத்தலம் வந்து மணக்குள விநாயகரை வணங்கிவிட்டுத்தான் தாங்கள் போக வேண்டிய ஊருக்கு போகிறார்கள் என்பது ஆச்சர்யமான உண்மை. அத்தனை விசேஷம் படைத்தவர் இந்த மணக்குளத்து விநாயகர்.
🇮🇳🙏35
உண்டியல் காணிக்கை, வெளிநாட்டு பக்தர்களின் உபயம் ஆகியவற்றால் கோயில் மிகுந்த சிறப்புடன் திகழ்கிறது.
அமெரிக்க வைரத்தாலேயே கவசம் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்பது அதற்கு உதாரணம்.
🇮🇳🙏36
இத்தலத்தில் முக்கியமாக பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனாக சித்தி புத்தி விநாயகருக்கு கல்யாண உற்சவம் நடத்தி வைக்கிறார்கள் வெள்ளித்தேர் இழுத்தும் நேர்த்திகடன் செலுத்துகிறார்கள்.
தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்கிறார்கள்.
🇮🇳🙏37
*திருவிழா*
விநாயகர் சதுர்த்தி - இத்தலத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். அது தவிர ஜனவரி முதல் தேதி அன்றுதான் இத்தலத்தின் பிரமாண்டமான அளவில் பக்தர்கள் கூடுவர்கள். 🇮🇳🙏38
பிரம்மோற்ஸவம் - ஆவணி - 25 நாட்கள் திருவிழா பவித்திர உற்சவம் - 10 நாட்கள் திருவிழா இது தவிர மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தின் போது மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் மிக விமரிசையாக நடக்கும். அப்போது
ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வர்
🇮🇳🙏39
காலை மணி 6 முதல் 1 மணி வரை மாலை 4மணி முதல் இரவ 10 மணி வரை கோவில் திறந்திருக்கும்.
கும்பகோணத்தில் இருந்து 132 km. கும்பகோணத்தில் இருந்து சென்னை சாலையில் வடலூர் சென்று வடலூரில் இருந்து கடலூர் சென்று பாண்டிசேரியை அடையலாம்.
🇮🇳🙏40
புதுவை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது . புதுவை ரயில் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது .
வாழ்க பாரதம் 🇮🇳🙏
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
உலக அரசுகள் கொரொனாவுடன் வாழ பழகுங்கள் இனி வேறுவழியில்லை என கையினை விரித்துவிட்டது, இனியும் ஊரடங்கை தாங்க அரசுகளால் முடியாது, தேசத்து கட்டமைப்பே உடைந்துவிடும் என அஞ்சுகின்றன.
லட்சகணக்கில் மக்களை காவு கொடுத்த அமெரிக்காவும், ஐரோப்பாவும் இந்த முடிவுக்கு வந்தாயிற்று, மருத்துவமும், அரசும் கைவிட்ட நிலையில் இனி தெய்வமே கதி.
சென்னையிலும் கொரோனா தலைவிரித்தாடும் நேரமிது...
அறிவியல் உச்சத்தில் ஆடும் அந்த தேசங்கள் மருந்தில்லா நோய்க்கு தெய்வமே துணை என சரணடைந்துவிட்ட நேரம் சென்னையும் தமிழகமும் அதற்கு தப்பமுடியாது.
இந்நிலையில் தமிழர்கள் ஒரு காட்சியினை நினைத்து பார்க்கலாம்...
காங்., தலைவர்களே தடுப்பூசிக்கு எதிராக பிரசாரம்; மன்மோகனுக்கு ஹர்ஷ்வர்தன் பதில்
புதுடில்லி: தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கடிதம் எழுதியிருந்தார்.
தற்போது அதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எழுதியுள்ள கடிதத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் பெரும்பாலோனோர் தடுப்பூசிக்கு எதிராகப் பிரசாரம் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வருவது, தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று (ஏப்.,18) கடிதம் எழுதியிருந்தார்.
திருநள்ளாறு திருத்தலத்தில் தியாகராஜப் பெருமான் சந்நிதியில் மரகதத்திலான சிவலிங்கம் உள்ளது. பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள இதற்கு ஐந்து கால அபிஷேக, ஆராதனைகள் நடைபெறகின்றன.
🙏🇮🇳1
மரகத நடராஜர்!
திருஉத்தரகோச மங்கை திருத்தலத்தில் நடராஜர் மரகதத் திருமேனியுடன் காட்சியளிப்பார். எப்போதும் சந்தனக்காப்புடன் இருப்பார். திருவாதிரை நாளில் மட்டும் புதிய அலங்காரம் நடைபெறும்.
🙏🇮🇳2
ஆண் பெண்ணாக உலா!
திருவானைக்காவில் பங்குனி மாதம் நடைபெறும் பஞ்சப்பிரகாரத் திருவிழாவில் இறைவன் பெண் வேடத்திலும், இறைவி ஆண்வேடத்திலும் திருவீதிவுலா வருகிறார்கள்.
**சுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் கற்பனைக்கும் எட்டாத நன்மைகள்!*
1. ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
1
2. காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார்.
2
உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார். அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.
3. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.
மேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில் ‘முன்னாள் முதல்வர்' பதவி கிடைத்துவிடும்: பிரதமர் நரேந்திர மோடி கிண்டல்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு விரைவில் 'முன்னாள் முதல்வர்' பதவி கிடைத்துவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி கிண்டலாக கூறினார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 5 கட்டவாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், 6-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, அசன்சோல் பகுதியில் பாஜக சார்பில் நேற்று பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
மேற்கு வங்கத்தில் ஒரு சர்வாதிகாரியை போல ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் மம்தாபானர்ஜி.