நடந்தது சட்டசபை தேர்தல் என்பதை மறந்து, தி.மு.க., கூட்டணி கட்சிகள், பிரதமர் மோடியை விமர்சித்தே அதிகம் பிரசாரம் செய்தன.
'மதவாத, பா.ஜ.,வை தலை துாக்க விட மாட்டோம்' என, அக்கட்சிகள் கொக்கரித்தன. அதெல்லாம் சரிங்க... 2021ல், தமிழகத்தில் ஓரளவிற்கு வளர்ந்திருக்கும் பா.ஜ.,வுக்கு, கூட்டணியில், அ.தி.மு.க., கொடுத்தது, 20 சீட்டுகள் தான்.
ஆனால், 2001ல், வளரவே இல்லாத பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்து, தி.மு.க., ஒதுக்கியது, 21 சீட்டுகள்!
இதில், 'ஹைலைட்' என்ன தெரியுமா...தேர்தல் வெற்றிக்குப் பின், முதன் முதலாக, தமிழக சட்டசபைக்குள், நான்கு உறுப்பினர்களுடன், பா.ஜ., நுழைந்தது.
அந்த வரலாறு எல்லாம் மறந்து விட்டதா, தி.மு.க.,வினரே?கருணாநிதிக்கும், எம்.ஜி.ஆருக்கும் நடந்த, 'ஈகோ' மோதலில் தான், அ.தி.மு.க., தோன்றியது. எம்.ஜி.ஆர்., இருக்கும் வரை, தி.மு.க., ஜெயிக்கவே முடியாது என்ற உண்மையை, கருணாநிதிக்கு காலம் உணர்த்தியது.
அது மட்டுமா... 1977 தேர்தலில், 48 இடங்கள்; 1980ல், 37; 1984ல், 24 இடங்கள் என, தி.மு.க., தேய்ந்த கதையையும் மறந்து விடக்கூடாது.
எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், அ.தி.மு.க., உடைந்ததால் தான், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததே தவிர, தி.மு.க.,வின் செல்வாக்கு ஒன்றும் உயரவில்லை.
ஜெயலலிதா தலைமையில், அ.தி.மு.க., பீனிக்ஸ் பறவையாக உயிர்த்தெழுந்து, 1991ல் ஆட்சி அமைத்த போது, தி.மு.க., வெற்றி பெற்ற இடங்கள், இரண்டே இரண்டு தான்.இன்னொன்று சொல்லவா... 2006ல் வெறும், 96 இடங்கள் ஜெயித்து, தமிழகத்தில், 'மைனாரிட்டி' ஆட்சி நடத்திய ஒரே கட்சியும், தி.மு.க., தான்.
தி.மு.க., தனித்து நின்று, 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது. அ.தி.மு.க.,விற்கு இருந்த செல்வாக்கு, தைரியம் எதுவும், தி.மு.க.,விற்கு கிடையாது.இந்த லட்சணத்தில், 2021 தேர்தலில், 234 தொகுதிகளிலும், தி.மு.க., ஜெயிக்கும் என, ஸ்டாலின் பிரசாரத்தில் முழங்கினார்.
அவரது மகன் உதயநிதியோ கொஞ்சம் பெருந்தன்மையாக, 200 தொகுதிகளை தாண்ட வேண்டும் என, ஆசைப்பட்டார். தி.மு.க.,வின் வெற்றி என்பது, கூட்டணி கட்சிகளின் தயவால் கிடைப்பது என்பதை, அக்கட்சியினர் நினைவில் கொள்ள வேண்டும்.
இதில் வேடிக்கை என்ன வென்றால், முதல்வர் வேட்பாளர் களத்தில் நிற்கும், இ.பி.எஸ்., போட்டியிட்ட தொகுதி, 85.60 சதவீத ஓட்டுப் பதிவுடன், முன்னிலை வகிக்கிறது.ஆனால், ஸ்டாலின் தொகுதியிலோ, 60.52 சதவீதம் தான்.
உதயநிதி தொகுதியிலோ, வெறும், 58.41 சதவீதம் தான். இவர்களை விட, தினகரன், கமல் உள்ளிட்டோர் போட்டி இட்ட தொகுதிகளில், ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகம்.மே 2ல், எல்லாம் வெளிச்சமாயிடும். பார்க்கத் தானே போறோம், தமிழக மக்களோட ஆட்டத்தை!
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
உலக அரசுகள் கொரொனாவுடன் வாழ பழகுங்கள் இனி வேறுவழியில்லை என கையினை விரித்துவிட்டது, இனியும் ஊரடங்கை தாங்க அரசுகளால் முடியாது, தேசத்து கட்டமைப்பே உடைந்துவிடும் என அஞ்சுகின்றன.
லட்சகணக்கில் மக்களை காவு கொடுத்த அமெரிக்காவும், ஐரோப்பாவும் இந்த முடிவுக்கு வந்தாயிற்று, மருத்துவமும், அரசும் கைவிட்ட நிலையில் இனி தெய்வமே கதி.
சென்னையிலும் கொரோனா தலைவிரித்தாடும் நேரமிது...
அறிவியல் உச்சத்தில் ஆடும் அந்த தேசங்கள் மருந்தில்லா நோய்க்கு தெய்வமே துணை என சரணடைந்துவிட்ட நேரம் சென்னையும் தமிழகமும் அதற்கு தப்பமுடியாது.
இந்நிலையில் தமிழர்கள் ஒரு காட்சியினை நினைத்து பார்க்கலாம்...
காங்., தலைவர்களே தடுப்பூசிக்கு எதிராக பிரசாரம்; மன்மோகனுக்கு ஹர்ஷ்வர்தன் பதில்
புதுடில்லி: தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கடிதம் எழுதியிருந்தார்.
தற்போது அதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எழுதியுள்ள கடிதத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் பெரும்பாலோனோர் தடுப்பூசிக்கு எதிராகப் பிரசாரம் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வருவது, தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று (ஏப்.,18) கடிதம் எழுதியிருந்தார்.
திருநள்ளாறு திருத்தலத்தில் தியாகராஜப் பெருமான் சந்நிதியில் மரகதத்திலான சிவலிங்கம் உள்ளது. பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள இதற்கு ஐந்து கால அபிஷேக, ஆராதனைகள் நடைபெறகின்றன.
🙏🇮🇳1
மரகத நடராஜர்!
திருஉத்தரகோச மங்கை திருத்தலத்தில் நடராஜர் மரகதத் திருமேனியுடன் காட்சியளிப்பார். எப்போதும் சந்தனக்காப்புடன் இருப்பார். திருவாதிரை நாளில் மட்டும் புதிய அலங்காரம் நடைபெறும்.
🙏🇮🇳2
ஆண் பெண்ணாக உலா!
திருவானைக்காவில் பங்குனி மாதம் நடைபெறும் பஞ்சப்பிரகாரத் திருவிழாவில் இறைவன் பெண் வேடத்திலும், இறைவி ஆண்வேடத்திலும் திருவீதிவுலா வருகிறார்கள்.
**சுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் கற்பனைக்கும் எட்டாத நன்மைகள்!*
1. ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
1
2. காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார்.
2
உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார். அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.
3. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.
மேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில் ‘முன்னாள் முதல்வர்' பதவி கிடைத்துவிடும்: பிரதமர் நரேந்திர மோடி கிண்டல்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு விரைவில் 'முன்னாள் முதல்வர்' பதவி கிடைத்துவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி கிண்டலாக கூறினார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 5 கட்டவாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், 6-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, அசன்சோல் பகுதியில் பாஜக சார்பில் நேற்று பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
மேற்கு வங்கத்தில் ஒரு சர்வாதிகாரியை போல ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் மம்தாபானர்ஜி.
சொ.பீமன், விருதுநகரிலிருந்து எழுதுகிறார்: தமிழக ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 44 ஆயிரம் கோவில்கள் உள்ளன.
அதில், 12 ஆயிரம் கோவில்களில், ஒரு கால பூஜைக்குக் கூட பொருளாதார வசதி இல்லை; அந்த கோவில்களும் பராமரிப்பு இன்றி, சிதிலம் அடைந்து காணப்படுகின்றன.
கோவில்களுக்கு சொந்தமாக, 5.25 லட்சம் ஏக்கர் நிலங்களில், 50 ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருக்கிறது என்ற தகவல், அதிர்ச்சி அளிக்கிறது.