இது உங்கள் இடம் : பஞ்சமி நிலத்தை மீட்போம்!

சொ.பீமன், விருதுநகரிலிருந்து எழுதுகிறார்: தமிழக ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 44 ஆயிரம் கோவில்கள் உள்ளன.
அதில், 12 ஆயிரம் கோவில்களில், ஒரு கால பூஜைக்குக் கூட பொருளாதார வசதி இல்லை; அந்த கோவில்களும் பராமரிப்பு இன்றி, சிதிலம் அடைந்து காணப்படுகின்றன.
கோவில்களுக்கு சொந்தமாக, 5.25 லட்சம் ஏக்கர் நிலங்களில், 50 ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருக்கிறது என்ற தகவல், அதிர்ச்சி அளிக்கிறது.
நேர்மையான, மதசார்பற்ற அரசு, அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோவில் நிர்வாகத்திடம் நிலங்களை ஒப்படைக்க வேண்டும். தற்போது, ஹிந்து கோவில்களில் உள்ள நிலங்களைமட்டும் அரசுைடமையாக்கி, ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளதாம்.
அது என்ன, ஹிந்து கோவில்கள் மீது மட்டும் அவ்வளவு வன்மம் அல்லது அக்கறை? அனைத்து மத வழிபாட்டுத் தல நிலங்களையும் அரசுைடமையாக்க வேண்டும். ஹிந்து கோவில்களுக்கு, 5.25 லட்சம் ஏக்கர் மட்டுமே உள்ளன.
இதை விடுத்து, தமிழகத்தில் உள்ள, 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களின் மீது அக்கறை செலுத்தலாம். கடந்த, 1892ல், ஆங்கிலேய அரசால், தலித் மக்களுக்கு வழங்கப்பட்டது, பஞ்சமி நிலம். இதற்கான பயனாளி மற்றும் நில விபரங்கள் குறித்து, தற்போது ஆய்வு நடத்த வேண்டும்.
அந்த நிலம், யார் ஆக்கிரமிப்பில் இருந்தாலும், கட்சிகளின், நிறுவனத்தின் பிடியில் இருந்தாலும், அதை மீட்க வேண்டும்; அவற்றை அரசுடைமையாக்கி, ஏழைகளுக்கு வழங்கலாம். இந்திய அறக்கட்டளை சட்டம், அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும்.
பெரும்பாலானவை அறக்கட்டளை நிர்வாகங்கள், சேவைகளில் ஈடுபடுவது இல்லை. எனினும் அவை, வருமான வரி ஏய்ப்புக்காக நடத்தப்படுகின்றன என்பது, அனைவருக்கும் தெரியும்.
அறக்கட்டளை நிர்வாகம் என்ற பெயரில், பல லட்சம் கோடி ரூபாய் கறுப்பு பணம் புதைந்திருக்கிறது. அவற்றின் மீது, மத்திய அரசு கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

தினமலர்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

19 Apr
உலக அரசுகள் கொரொனாவுடன் வாழ பழகுங்கள் இனி வேறுவழியில்லை என கையினை விரித்துவிட்டது, இனியும் ஊரடங்கை தாங்க அரசுகளால் முடியாது, தேசத்து கட்டமைப்பே உடைந்துவிடும் என அஞ்சுகின்றன‌.
லட்சகணக்கில் மக்களை காவு கொடுத்த அமெரிக்காவும், ஐரோப்பாவும் இந்த முடிவுக்கு வந்தாயிற்று, மருத்துவமும், அரசும் கைவிட்ட நிலையில் இனி தெய்வமே கதி.

சென்னையிலும் கொரோனா தலைவிரித்தாடும் நேரமிது...
அறிவியல் உச்சத்தில் ஆடும் அந்த தேசங்கள் மருந்தில்லா நோய்க்கு தெய்வமே துணை என சரணடைந்துவிட்ட நேரம் சென்னையும் தமிழகமும் அதற்கு தப்பமுடியாது.

இந்நிலையில் தமிழர்கள் ஒரு காட்சியினை நினைத்து பார்க்கலாம்...
Read 25 tweets
19 Apr
காங்., தலைவர்களே தடுப்பூசிக்கு எதிராக பிரசாரம்; மன்மோகனுக்கு ஹர்ஷ்வர்தன் பதில்

புதுடில்லி: தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கடிதம் எழுதியிருந்தார்.
தற்போது அதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எழுதியுள்ள கடிதத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் பெரும்பாலோனோர் தடுப்பூசிக்கு எதிராகப் பிரசாரம் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வருவது, தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று (ஏப்.,18) கடிதம் எழுதியிருந்தார்.
Read 8 tweets
19 Apr
இது உங்கள் இடம்: கூட்டணி தயவில் தி.மு.க.,

மல்லிகா அன்பழகன், சென்னையிலிருந்து எழுதுகிறார்:

நடந்தது சட்டசபை தேர்தல் என்பதை மறந்து, தி.மு.க., கூட்டணி கட்சிகள், பிரதமர் மோடியை விமர்சித்தே அதிகம் பிரசாரம் செய்தன.
'மதவாத, பா.ஜ.,வை தலை துாக்க விட மாட்டோம்' என, அக்கட்சிகள் கொக்கரித்தன. அதெல்லாம் சரிங்க... 2021ல், தமிழகத்தில் ஓரளவிற்கு வளர்ந்திருக்கும் பா.ஜ.,வுக்கு, கூட்டணியில், அ.தி.மு.க., கொடுத்தது, 20 சீட்டுகள் தான்.
ஆனால், 2001ல், வளரவே இல்லாத பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்து, தி.மு.க., ஒதுக்கியது, 21 சீட்டுகள்!

இதில், 'ஹைலைட்' என்ன தெரியுமா...தேர்தல் வெற்றிக்குப் பின், முதன் முதலாக, தமிழக சட்டசபைக்குள், நான்கு உறுப்பினர்களுடன், பா.ஜ., நுழைந்தது.
Read 10 tweets
19 Apr
*சிறப்பு வாய்ந்த சிவ வடிவங்கள்.*

மரகத லிங்கம்!

திருநள்ளாறு திருத்தலத்தில் தியாகராஜப் பெருமான் சந்நிதியில் மரகதத்திலான சிவலிங்கம் உள்ளது. பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள இதற்கு ஐந்து கால அபிஷேக, ஆராதனைகள் நடைபெறகின்றன.

🙏🇮🇳1 Image
மரகத நடராஜர்!

திருஉத்தரகோச மங்கை திருத்தலத்தில் நடராஜர் மரகதத் திருமேனியுடன் காட்சியளிப்பார். எப்போதும் சந்தனக்காப்புடன் இருப்பார். திருவாதிரை நாளில் மட்டும் புதிய அலங்காரம் நடைபெறும்.

🙏🇮🇳2
ஆண் பெண்ணாக உலா!

திருவானைக்காவில் பங்குனி மாதம் நடைபெறும் பஞ்சப்பிரகாரத் திருவிழாவில் இறைவன் பெண் வேடத்திலும், இறைவி ஆண்வேடத்திலும் திருவீதிவுலா வருகிறார்கள்.

🙏🇮🇳3
Read 8 tweets
18 Apr
**சுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் கற்பனைக்கும் எட்டாத நன்மைகள்!*

1. ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.

1
2. காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார்.

2
உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார். அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.

3. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.

3
Read 22 tweets
18 Apr
மேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில் ‘முன்னாள் முதல்வர்' பதவி கிடைத்துவிடும்: பிரதமர் நரேந்திர மோடி கிண்டல்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு விரைவில் 'முன்னாள் முதல்வர்' பதவி கிடைத்துவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி கிண்டலாக கூறினார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 5 கட்டவாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், 6-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, அசன்சோல் பகுதியில் பாஜக சார்பில் நேற்று பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் ஒரு சர்வாதிகாரியை போல ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் மம்தாபானர்ஜி.
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!