கடந்த வருடம் மருத்துவமனையில் ஆக்சிசன் உற்பத்தி செய்யக்கூடிய Pressure Swing Adsorption oxygen generator வசதியை மோடி அரசு செய்திருந்தால் இன்று நெருக்கடி மோசமாகியிருக்காது. ரூ201 கோடியில் 162 வசதிகளை ஏற்படுத்துவதாக சொல்லிவிட்டு 8 மாதமாக டெண்டர்களை அறிவிக்கவில்லை. இத்தனை நாட்கள் 1/5
கடந்த பின் 162 மருத்துவமனைகளில் 33ல் மட்டுமே நிறுவப்பட்டிருக்கிறது. இவைகளும் குறைந்த அளவில் ஆக்சிசனை உற்பத்தி செய்கின்றன. இத்தனை நாட்கள் மிககுறைந்த விலையில் சாத்தியப்படுத்திருக்கக் கூடிய உற்பத்தியை செய்ய தவறியது ஏன்? நெருக்கடி உருவான பின் ஸ்டெர்லைட் போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு 2/5
வக்காலத்து ஏன் வாங்குகிறார்கள் பாஜக தலைவர்கள்? நெருக்கடியை பற்றி கடந்த வருடமே உணர்த்தும், ஏன் அதற்குரிய வசதிகளை செய்யவில்லை என பாஜக சொல்வார்களா? ஸ்டெர்லைட்டுக்காக கூச்சலிடும் பாஜக கூட்டம் இது பற்றி பேசுவார்களா? 4-6 வாரத்திற்குள் ஆக்சிசனை மருத்துவமனைக்குள்ளாகவே உருவாக்கும் 3/5
வாய்ப்பிருந்தும் இந்த வசதியைப் பற்றி ஏன் மோடி அரசு வாய் திறக்க மறுக்கிறது?
மோடியின் லண்டன் பயணத்தின்போது பெரும் செலவு செய்து விளம்பரப்படுத்திய ஸ்டெர்லைட் முதலாளி மோடியின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல அவர் குஜராத்தி மார்வாடி. இதனாலேயே பாஜகவின்
தமிழக தலைவர்கள் கூச்சிலிடுவதை 4/5
நாம் பார்க்க முடிகிறது. இந்த கூச்சல்களை ஒதுக்கிவிட்டு பேரிடரை எதிர்கொள்ள அணியமாவோம். Pressure Swing Adsorption oxygen generator வசதி ரூ 1.25 கோடிக்குள் சாத்தியமாக்க முடியுமெனில், அதன் வழிவகைகளை ஆய்வு செய்வோம். தமிழக மக்களை காக்க ஒன்றுபட்டு நிற்போம் என மே17 இயக்கம் அழைக்கிறது
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்தியாவிற்குள் சிறிய மாநிலம் வளர்ச்சி அடைவது உண்மையெனில் புதுச்சேரி இன்னொரு சிங்கப்பூராகி இருக்கவேண்டும். திரிபுரா சுவிசர்லாந்தாகியிருக்க வேண்டும். அஸ்ஸாம், அயர்லாந்தாகிருக்க வேண்டும்.
2014 பிரச்சாரத்திற்காக மோடி திருச்சி வந்தபோது மாநிலபிரிப்பு எனும் சூழ்ச்சி விவாதமானது 1/5
தேசிய இனங்களை சிறு சிறு மாநிலங்களாக உடைந்தால் அம்மக்களின் அரசியல் பலம் குறைந்து போகும், பொருளாதார வளர்ச்சி சிதையும்.ஒரு தேசிய இனம் தமக்குள்ளாக முரண்களை வளர்த்து சிதறுண்டுபோகும். அதிக எம்.பிக்களை கொடுக்கும் மிகப்பெரும் மாநிலமான உத்திரபிரதேசத்தின் இந்தி பேசும் மக்கள் 2/5
இந்தியாவிற்குமான ஆட்சியை முடிவு செய்யும் நிலையில் இருக்கும் போது, சிறு-குறு மாநில முதல்வர்களாக டில்லி அரசிடம் குறைந்தபட்ச அங்கீகாரத்திற்காக கையேந்தும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்படுவார்கள். மிக முக்கியமாக காவிரி பறிபோகும், NLC-யில் டீக்கடை வைக்கக்கூட தமிழருக்கு உரிமையிருக்காது 3/5
சரஸ்வதி எனும் இளம்பெண் மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். பெண்கள் மீதான வன்முறை அனைத்துச் சமூகத்தைச் சார்ந்த ஆண்களாலும் தங்குதடையின்றி நிகழ்த்தப்படுகிறது. பட்டியலினச் சமூகமாக இருந்தாலும் ஆண்களின் பெண் மீதான ஆதிக்கபோக்கு குறைந்துவிடவில்லை. சாதியப்படிநிலையில்
அனைவரையும் விட கீழான நிலையிலேயே பெண்கள் வைக்கப்பட்ட இச்சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இன்றளவும் இருக்கிறது. தொடர்ந்து பெண்கள் மீதான வன்முறைக்கான வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. வன்முறையாளர்கள் மீதான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுமில்லை
இந்நிலையைப் போக்க அனைவரும் ஒன்றாக முன்வரவேண்டுமெனும் நிலையையே இது காட்டுகிறது. பெண்கள் மீதான வன்முறையை ஏவுகிறவர்கள் யாராக இருப்பினும் அவர்களை காப்பதும், ஆதரிப்பதும் வன்மத்தின் உச்சம். சேலம் சிறுமியை கொலை செய்தவனை ஏன் கைதுசெய்யவில்லையென கேட்டதற்காக சிபிசிஐடி வழக்கை என் மீது ஏவிய
நீண்டநாட்களுக்குப் பிறகு திரையரங்கில் குடும்பத்துடன் படம்பார்க்க சென்றது கர்ணனுக்காக. மாரிசெல்வராஜின் படைப்பு மிக நேர்த்தியாக அரச பயங்கரவாதத்தையும், அதன் முதுகெலும்பாக அமையும் இந்துத்துவ ஜாதிய வன்மத்தையும், சமூகமயமான சாதிய மனநிலையும் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது தீரா வன்மத்தோடு
வேட்டையாடித் தீர்க்கும் இந்த சமூக-அரசியல்-அதிகாரவர்க்க ஜாதியப் போக்கை அப்பட்டமாக, ஒளிவுமறைவில்லாமல், அச்சப்படாமல் காட்சிப்படுத்தியதை எப்படி போற்றாமல் இருக்கமுடியும். பெருங்காமநல்லூரிலிருந்து வாச்சாத்தி, பரமகுடி, கூடன்குளம் வரை நீண்ட வரலாறு கொண்டது அரசின் பயங்கரவாதம். இந்த
வன்முறைகளில்
சாதிய ஒடுக்குமுறையை உள்ளடக்கி பட்டியலின மக்கள் மீது வெளிப்படுத்தப்பட்ட வன்முறைகளே இன்றளவும் மிக மோசமான வலிநீங்கா வடுக்களாகியிருக்கிறது. நம் சமூகம் சனநாயகமற்று, சாதிய வன்மத்தோடு இயங்கி வருவதை நெற்றியில் அடித்துச் சொல்வதைப் போல வெளிப்படுத்தும் 'கர்ணன்'
இலங்கை பற்றிய ஐ.நாவில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளால் கொண்டுவரப்பட்ட திர்மானம் தமிழர்களின் கோரிக்கையை உள்ளடக்கியதல்ல. அது ஐ.நா மனித உரிமை அவை முன்மொழிந்தவற்றை உள்ளடக்கியவையும் அல்ல, இலங்கையை கடுமையான நெருக்கடிக்குள்ளாக்கும் தீர்மானமுமல்ல. இப்படியாக நீர்த்துபோக செய்யப்பட்ட ஒரு
தீர்மானத்தை கூட மோடி அரசால் ஆதரிக்க இயலாது என்பதே பாஜகவின் தமிழின விரோதத்திற்கு சாட்சி. ஆயிரம் தமிழர் கோவில்கள் உடைக்கப்பட்டதை கண்டுகொள்ளாத போலி கூட்டம், இனப்படுகொலைக்கு நீதிகிடைக்க எப்படி உடன்படும். காங்கிரஸ் கட்சிக்கு எவ்வகையிலும் வேறுபட்டதல்ல பாஜக. தனது பிராந்திய நலனை
அடிப்படையாகக் கொண்டு மேற்குலகம் கொண்டுவரும் இத்தீர்மானம் அமெரிக்கா-பிரிட்டன் தலைமையிலான இராணுவ கூட்டுறவிற்காக தமிழர் கோரிக்கைகளை பேரம்பேச பயன்படுத்துகிறது. தெற்காசிய கடலில் ஏகாதிபத்திய ஆதிக்கத்தை நிலைநாட்ட பயன்படுத்தப்படும் தீர்மானத்தை பற்றிய விவாதத்தில் சாதுர்யமாக