#திருப்பட்டுர்:-

தலையெழுத்தை மாற்றும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்

திருச்சி மாவட்டம் திருப்பட்டூரில் அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் கோவில்.

🙏🇮🇳1 Image
தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்? ஆனால் அப்படிப்பட்ட தலையெழுத்தை மாற்றும் சக்தி படைத்த ஆலயங்களும் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன.

அதில் ஒன்றுதான் திருச்சி மாவட்டம் திருப்பட்டூரில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவில்.

🙏🇮🇳2
நம்மைப் படைத்த பிரம்மனுக்கு தனி சன்னிதிகளோ, ஆலயங்களோ அதிகம் கிடையாது. காரணம் பிரம்மனின் அகந்தை. சிவனுக்கு நிகராக ஐந்து தலைகளைப் பெற்ற கர்வத்தில் ஆணவமாகப் பேசிய பிரம்மனின் ஒரு தலையைக் கொய்தார் சிவ பெருமான். அதோடு அவரது படைப்புத் தொழிலுக்கு தடை விதித்தார்.

🙏🇮🇳3
தன் தவறை உணர்ந்த பிரம்மன், சிவனைப் பணிந்து அனுதினமும் பல தலங்களில் சிவலிங்கங்கள் உருவாக்கி பூஜைகள் செய்ததன் பலனாக இழந்தவைகளை மீண்டும் பெற்றார்.

பிரம்மனின் சாபத்தை, சிவபெருமான் போக்கி அருளிய இடமே திருப்பட்டூர். இங்கு பிரம்மனுக்கு தனிச்சன்னிதி இருக்கிறது.

🙏🇮🇳4
இத்தலத்தில் சிவனை அபிஷேகிப்பதற்காக, பிரம்மன் உருவாக்கிய தீர்த்தக்கிணறு ‘#பிரம்மதீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

வழிபாட்டுக்காக பிரம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 12 லிங்கங்கள், இங்கே 12 சிறிய சன்னிதிகளில் பக்தர்களால் வணங்கப்படுகிறது.

🙏🇮🇳5
பிரம்மாவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 12 லிங்கங்களுடன், இங்குள்ள பிரம்ம புரீஸ்வரரையும் வணங்கும்போது, சிவபெருமானின் 13 திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்ட பலன் கிடைக்கும்.

🙏🇮🇳6
ஆகிய சிறப்பான சிவத்தலங் களின் லிங்கங்களே பிரம்மாவால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் ஆதிகோவிலாக அறியப்படும் கயிலாசநாதர் சன்னிதியில் நம்பிக்கையான வழிபாடுகள் அதற்குரிய பலனைத் தரும்.

🙏🇮🇳8
இங்கு அருள்பாலிக்கும் பிரம்மதேவனே, குரு பகவானாக வணங்கப்படுகிறார். எனவே அவருக்கு மஞ்சள் காப்பு செய்து ஆராதனை நடைபெறுகிறது.

🙏🇮🇳9
குருவுக்கு உகந்த வியாழக்கிழமைகளிலும், சிவனாருக்கு உகந்த திங்கட்கிழமைகளிலும், ராஜகிரகமான சூரியனின் ஆதிக்கம் உள்ள ஞாயிற்றுக்கிழமையிலும் இத்தலம் வந்து வழிபாடு செய்வது சிறப்பானது.

🙏🇮🇳10
வருடந்தோறும் பங்குனி 15, 16, 17 ஆகிய தேதிகளில் சூரியன், தன் கதிர்களால் சிவபெருமானை வழிபடும் காட்சி அற்புதமானது.

அந்த நாட்களில் காலை ஆறு மணிக்கு சென்றால் இந்த அற்புதக் காட்சியை கண்டு ரசிக்கலாம்.

🙏🇮🇳11
சூரியன் ஈசனை வழிபடும் தினத்தில் இங்கு வந்து, பிரம்மபுரீஸ்வரரையும், பிரம்மனையும் வழிபட்டால் கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.

இங்குள்ள கயிலாசநாதர் கோவில் புகழ்பெற்ற பல்லவர் காலக் கட்டுமானச் சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளதைக் காணலாம்.

🙏🇮🇳12
ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த இதன் தேர் வடிவிலான கோவில் அமைப்பும், எந்நேரமும் மேலிருந்து விழும் அபிஷேகத்தில் குளிர்ந்தவராக அருளும் பதினாறு பட்டைகள் கொண்ட தாராலிங்கமாக இங்கே ஈசன் அருள்பாலிக்கிறார்.

🙏🇮🇳13
இந்த லிங்கத்தை ‘சந்திரகலா லிங்கம்’ என்கின்றனர். இந்த சன்னிதிக்கு எதிரில் உள்ள நந்தி, நிஜ உருவத்தைப் போன்று அமைந்து வியக்க வைக்கிறது.

ஈஸ்வரருக்கு 64 மூர்த்தங்கள் உண்டு. அதில் தத்புருஷ மூர்த்தங்கள் 25 வகை என்கின்றன சைவ நூல்கள். அவற்றுள் காலபைரவரும் ஒருவர்.

🙏🇮🇳14
நம் பாவபுண்ணியக் கணக்குகளை கணித்து நமக்கு நன்மைகளை வழங்குவதில் காலபைரவர் நிகரற்றவர். பொதுவாக வடகிழக்கு மூலையில் தெற்கு திசையை நோக்கியபடி உள்ள காலபைரவரையே தரிசித்திருப்போம்.

🙏🇮🇳15
ஆனால் திருப்பட்டூர் தலத்தில் மேற்கு நோக்கியபடி இருக்கிறார் கால பைரவர். இவரின் வலது செவியும் அதில் இருக்கும் தாடங்கமும் மற்ற தலங்களில் உள்ளதுபோல் இல்லாமல் வித்தியாசமாக இருப்பதும் கூடுதல் சிறப்பு.

🙏🇮🇳16
இந்த ஆலயத்தில் 36 தீபங்களை ஏற்றி வழிபடுவது சிறப்பான பலன் களைத் தரும் என்பது நம்பிக்கை.

🙏🇮🇳17
நம்மை ஆட்சி செய்யும் 27 நட்சத்திரங்கள் மற்றும் ஒன்பது கிரகங்களைக் குறிக்கும் வகையில் 36 தீபங்களை ஏற்றி, ஒன்பது முறை பிரகாரத்தை வலம் வந்து பிரார்த்தனை செய்யும்போது, நமது துன்பங்கள் அனைத்தும் விலகும்.
கிரக தோஷங்கள் நீங்கும் என் கிறார்கள்.

🙏🇮🇳18
ஒவ்வொருவரின் ஜென்ம நட்சத்திர நாளிலும் இங்கு வந்து இந்தப் பிரார்த்தனையைச் செய்வது நல்ல மாற்றத்தை உண்டாக்கும்.

பிரம்மாவின் தலையைக் கொய்ததால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதில் இருந்து விடுபடுவதற்காக, மகாவிஷ்ணுவை சிவபெருமானை வழிபட்டார். 🙏🇮🇳19
இதனால் மகிழ்ந்த விஷ்ணு, ஈசனின் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கியருளினார் என்பது புராண வரலாறு.

அதன்படி மகாவிஷ்ணுவுக்கும் இங்கு தனிக் கோவில் இருக்கிறது. பிரம்ம புரீஸ்வரர் ஆலயத்தின் மேற்குப்பகுதியில் அது அமைந்துள்ளது. 🙏🇮🇳20
இந்த வரதராஜப் பெருமாள் திருக்கோவில், எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்ம பல்லவனால் கட்டப்பட்டதாகும்.

🙏🇮🇳21
இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்று பிரதோஷ வேளை. இத்தலத்தில் பிரதோஷ நாளில் நந்தியம்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறும் போது, அங்கிருந்தபடி ஒரு துணில் இருக்கும் நரசிம்மரையும் தரிசிக்க முடியும்.

ஒரு பிரதோஷ நாளில் தான் மகாவிஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிபுவை வதம் செய்தார்.🙏🇮🇳22
ஆகவே பிரதோஷ நேரத்தில் நந்தியோடு, நரசிம்மரையும் வழிபட்டால் நம் இன்னல்கள் யாவும் தீரும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் உள்ள ஐந்து நிலை ராஜகோபுரத்தில் நுழைந்து, ஐந்தெழுத்து நாயகனான சிவனாரை தரிசித்தால் வாழ்வின் ஐந்து நிலைகளிலும் நம்மைக் காப்பார் இத்தல இறைவன். 🙏🇮🇳23
அதே போல் கோபுர வாசலில் இருந்து ஏழு நிலைகளை கடந்துதான் இறைவனை தரிசிக்க முடியும். சூரிய பகவானே தன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன், ஏழு நிலைகளைக் கடந்தே சிவனாரை தரிசிக்கிறார் என்பது ஐதீகம்.

ஆகவே இங்கு வந்து தரிசிப்பவர்களின் ஏழேழு ஜென்மப் பாவங்களும் தீரும் என்கிறார்கள்.

🙏🇮🇳24
#திருப்பட்டுர்_கோவில்_முகவரி:-

#நடை_திறக்கும்_நேரம்:-

காலை 07.30 மணிமுதல் - மதியம் 12.00 மணிவரை,

மாலை 04.00 மணிமுதல் - இரவு 08.00 மணிவரை.

வியாழனன்று காலை காலை 06.00 மணிமுதல் - மதியம் 12.30 மணிவரை.

🙏🇮🇳25
#முகவரி:-

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்,
சிறுகனூர்,
திருப்பட்டூர் - 621 105,
திருச்சி மாவட்டம்.

வாழ்க பாரதம் 🇮🇳🙏
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

1 May
#நவகிரக_தரிசனம்

ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய காலநேர அட்டவணையுடன் வழிதடங்கள்.

ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை சுற்றி அமைந்திருக்கின்றன. 🙏🇮🇳1 Image
கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில் பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து அருள் பெற வேண்டுகிறோம்.

🙏🇮🇳2
1, திங்களூர் (சந்திரன்):
தரிசனம் நேரம் :
1-மணி நேரம்
காலை 6மணி

ஒன்பது நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும்
வேண்டியது திங்களூர்தான். 🙏🇮🇳3
Read 21 tweets
30 Apr
திருநீறு பூசுவதன் மகிமை!

புராண காலத்தில் ஒருநாள் துர்வாச முனிவர் தன் காலை வேளை அனுஷ்டானங்களை முடித்து, சிவனை தியானித்து நெற்றியில் திருநீறு அணிந்து பித்ரு லோகம் புறப்பட்டார். மாபெரும் தவசீலரை எதிரில் கண்ட வானவர்கள் மரியாதை நிமித்தம் அவரை வணங்கி நகர்ந்தனர். Image
துர்வாசர் செல்லும் வழியில் பெரிய கிணறு ஒன்று தென்பட்டது.

இவ்வளவு பெரிய கிணறை நாம் பார்த்ததே இல்லையே என்கிற சிந்தனையுடன் அதனுள் ஒரு கணம் கண்களைச் சுருக்கி எட்டிப் பார்த்து விட்டு, மீண்டும் நடக்க ஆரம்பித்தார்.
அந்தப் பெரிய கிணற்றினுள் நரகத்தின் ஒரு பகுதி இயங்கிக் கொண்டிருந்தது. கடும் தீயும், அமில மழையும், பாம்பு - தேள் போன்ற கடும் விஷ ஜந்துக்களும் அங்கே ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தன.
Read 12 tweets
30 Apr
கோவிட் – தொலைந்த உண்மைகளும், திசை தவறிய விவாதங்களும் ~எஸ்.குருமூர்த்தி

தற்போது மருத்துவமனைகளின் விநியோகத் தொடர்களில் தோன்றியுள்ள இடையூறுகளுக்கு அரசே காரணம் என்று உரத்து ஒலிக்கும் குரல்கள், முக்கியமான உண்மைகளைக் கண்டு கொள்ளவில்லை.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, பிப்ரவரி 15 அன்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன்,  “இந்திய மாவட்டங்களில் ஐந்தில் ஒரு பங்கில் கடந்த ஏழு நாட்களாக கோவிட் -19 பாதிப்புகள் ஏதும்  பதிவாகவில்லை.   ஏறுமுகமாக இருந்த நோய்த்தொற்று ஏற்ற இறக்கமின்றி சீராக உள்ளது.” என்று அறிவித்தார்.
கடந்த ஆண்டு 90,000 என்று இருந்த நோய்த்தொற்று, 9,000 க்கும் குறைவாக ஆகியிருந்தது.  ஆனால், ஏப்ரலில் இது வரலாறு காணாத பெரும் பாதிப்பாக மாறியது ( அட்டவணையைப் பார்க்கவும்). Image
Read 20 tweets
30 Apr
காலையிலிருந்து 70 நபர்கள் இறந்து விட்டதாக மக்களை நம்ப வைத்த பெண் பத்திரிக்கையாளர் - ஆதாரம் கேட்டதும் பிடித்த ஓட்டம்!

14 ஆண்டுகள் பத்திரிகைத் துறையில் உள்ள ராணா அயூப் அரசியல் களத்தில் ஆதாரம் இல்லாத தகவல்களை பகிர்ந்து சர்ச்சை உண்டாக்கி வருகிறார்.
ஏற்கனவே காஷ்மீரில் நள்ளிரவு சோதனைகளில் பன்னிரண்டு வயது சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். பெண்கள் கற்பழிப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள். சிறுவர்களுக்கு மின்அதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது அவர்கள் குடும்பத்திற்கு தெரியவில்லை என்று சர்ச்சையான கருத்துகளை கூறி, அதற்கான ஆதாரம் கேட்கப்பட்டவுடன் தலைமறைவானார்.
Read 6 tweets
30 Apr
கரோனா பணியில் ஆர்எஸ்எஸ்: நாடு முழுவதிலும் 43 நகரங்களில் சேவை நிலையங்கள்: 219 நகர மருத்துவமனைகளில் அரசிற்கு உதவி

கரோனாவை தடுக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்(ஆர்எஸ்எஸ்) இறங்கியுள்ளது.
இதன் சார்பில் 43 முக்கிய நகரங்களில் சேவை நிலையங்கள் துவக்கப்பட்டு, 219 நகர மருத்துவமனைகளில் அரசிற்கு உதவி வருவதாக அந்த அமைப்பின் அகில இந்திய செய்தி தொடர்பாளரான சுனில் அம்பேத்கர் தெரிவித்துளார்.
இதுகுறித்து நேற்று செய்தி தொடர்பாளரான சுனில் அம்பேத்கர் செய்தியாளர்களிடம் காணொளியில் பேசினார். அப்போது அவர், நாட்டின் பல பகுதிகளில் கரோனாவினால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
Read 13 tweets
30 Apr
தாயமங்கலம் முத்துமாரியம்மன்

தாயாக நின்று காக்கும் தாயமங்கலம் முத்து மாரியம்மன்! சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே இருக்கிறது தாயமங்கலம் முத்துமாரியம்மன கோயில். 🇮🇳🙏1 Image
இந்தப் பகுதியிலிருக்கும் 22 கிராம மக்களுக்கும், தாயாகவும், மாங்கல்ய பாக்கியம் தந்து மங்கல வரம் அருளும் நாயகியாகவும் திகழ்கின்றாள் முத்துமாரி. இந்த ஊர் 'தாய்மங்கலம்' என்றே அழைக்கப்பட்டு, காலப்போக்கில் தாயமங்கலம் என மருவியது.

🇮🇳🙏2
இங்குள்ள தெய்வம் கன்னித்தெய்வமாக இருப்பதால், திருமண வரம் வேண்டுபவர்கள், தாலிப்பொட்டினை அம்மன் காலடியில் சமர்ப்பித்து, வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

🇮🇳🙏3
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!