கோவிட் – தொலைந்த உண்மைகளும், திசை தவறிய விவாதங்களும் ~எஸ்.குருமூர்த்தி

தற்போது மருத்துவமனைகளின் விநியோகத் தொடர்களில் தோன்றியுள்ள இடையூறுகளுக்கு அரசே காரணம் என்று உரத்து ஒலிக்கும் குரல்கள், முக்கியமான உண்மைகளைக் கண்டு கொள்ளவில்லை.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, பிப்ரவரி 15 அன்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன்,  “இந்திய மாவட்டங்களில் ஐந்தில் ஒரு பங்கில் கடந்த ஏழு நாட்களாக கோவிட் -19 பாதிப்புகள் ஏதும்  பதிவாகவில்லை.   ஏறுமுகமாக இருந்த நோய்த்தொற்று ஏற்ற இறக்கமின்றி சீராக உள்ளது.” என்று அறிவித்தார்.
கடந்த ஆண்டு 90,000 என்று இருந்த நோய்த்தொற்று, 9,000 க்கும் குறைவாக ஆகியிருந்தது.  ஆனால், ஏப்ரலில் இது வரலாறு காணாத பெரும் பாதிப்பாக மாறியது ( அட்டவணையைப் பார்க்கவும்).
இந்த நெருக்கடியை சமாளிக்க இந்தியா தீவிரமாக இறங்க வேண்டியுள்ளது.  டெல்லியில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான இறப்புகளால், உண்மைகளும், காரணங்களும் ஒதுக்கப்பட்டு, உணர்ச்சிபூர்வமான கோஷங்கள் தொடங்கின.
உண்மைகள் மறைக்கப் பட்டதால், விவாதங்கள் திசை திரும்பி, நாடு கோவிடை எதிர்கொள்ளத் தேவையான மன உறுதியைக் குலைத்துள்ளன.  மறைக்கப் பட்ட முக்கியமான உண்மைகளை இப்போது பார்ப்போம்.
கொள்ளை லாபம் பெறுவோரின் புகார்

ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் நேர்ந்த மரணங்கள் முதலில் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் தொடங்கின.  இந்த மருத்துவமனைகள் பெருந்தொற்று காலங்களில் மிக அதிக லாபம் பார்த்தன.
இது தொடர்பாக, நேஷனல் ஹெரால்டில் 20.6.2020 அன்று ”கோவிட்-19 காலங்களில் லாபம் – தனியார் மருத்துவமனைகளை அரசுடமையாக்க வேண்டிய காலம் வந்துவிட்டதா?” (Profit in times of COVID-19: Is it time to take over private hospitals?) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்தது.
அதில் “₹25,090, ₹53,090, ₹75,590, ₹5,00,000, ₹6,00,000, ₹12,00,000 – இவை என்ன? இவை கொரோனா நோயாளி ஒருவர் டெல்லி மருத்துவமனைகளில் ஒரு படுக்கைக்கு, ஒவ்வொரு நாளும், இரண்டு வாரங்களுக்கு மொத்தமாகவும் கொடுக்க வேண்டிய கட்டணங்கள்.
இவை தவிர தனி நபர் காப்பு உடை (PPE), சோதனைகள், மருந்துகள் ஆகியவற்றை சேர்த்தால், இந்தியனின் சராசரி ஆண்டு வருமானத்திற்கு ஈடான கட்டணங்கள்.  வீட்டு சிகிச்சை கட்டணமும் ஒன்றும் குறைவில்லை – ஒரு நாளைக்கு ₹5,700 முதல் ₹21,000 வரை – இது தவிர சோதனைகளுக்கான செலவு.” என்கிறது.
ஹெரால்ட், உச்ச நீதி மன்றத்தில், இந்தக் கொள்ளைகளை எதிர்த்துத் தொடரப்பட்ட  ஒரு வழக்கை ஆதாரமாகக் கொண்டு இந்தக் கட்டுரையை வெளியிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, மருத்துவ உதவி வழங்குவோர் சங்கமும் (Association of Healthcare Providers – AHP) FICCI  உறுப்பினர்களும் தங்கள் வணிக முறைகளை சீர்படுத்த ஒப்புக்கொண்டனர்.
சீர் செய்தபின் அவர்கள் அறிவித்த கட்டணங்கள் என்ன?  AHP அறிவித்தவை – பொது வார்டுகளில் ₹15,000, ஆக்ஸிஜனுக்கு ₹5,000 தீவிர சிகிச்சை பிரிவுக்கு ₹25,000, வெண்டிலேட்டருக்கு ₹10,000.  FICCIயின் கட்டணங்கள் இன்னும் அதிகம் – ₹17,000 முதல் ₹45,000 வரை.
இன்னும் இருக்கிறது – மருத்துவமனைகள், PPEக்களை ₹375-500க்கு வாங்கி, 10 முதல் 12 மடங்கு விலை வைத்து நோயாளிகளிடம் விற்றுள்ளனர்.  சென்னையிலும் மும்பயிலும் இதே கதைதான் என்கிறது ஹெரால்ட்.
இதே மருத்துவமனைகள்தான் வாழும் உரிமை என்ற பெயரில் அரசு ஆக்ஸிஜனை வினியோகிக்கவேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளன.  அதே ஆக்ஸிஜனுக்கு அவர்கள், நோயாளிகளிடமிருந்து ₹5,000 வசூலிக்கப் போகின்றனர்.
ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக நிகழ்ந்த மரணங்கள் தொடர்பான கூச்சல்களில், யாராவது இந்தக் கொள்ளைகளைப் பற்றி பேசியுள்ளனரா? இது ஒரு முக்கியமான விஷயம் – ஏனென்றால், இந்த மருத்துவமனைகளே குறைந்த செலவில் ஆக்ஸிஜனை தயாரித்திருக்க முடியும்.
தனியார்மயமாக்கப்பட்ட, தளைகளற்ற ஆக்ஸிஜன் வணிகம்

ஆக்ஸிஜனின் தயாரிப்பு, வணிகம், சேமிப்பு ஆகியன தனியார்மயமானவை.  மருத்துவத் தேவைக்கான ஆக்ஸிஜனின் விலை, இரசாயனம் மற்றும் உர அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய மருந்தக விலை ஆணையத்தால் (NPPA)  நிர்ணயிக்கப் பட்டிருந்தாலும்,
அதன் வர்த்தகம் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை.  ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்கள், தனியார் மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், அரசு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் தனிப்பட்ட ஒப்பந்தப்படி ஆக்ஸிஜன் வழங்குகின்றனர்.
மருத்துவமனைகள் தங்கள் தேவை, தயாரித்து அனுப்பத் தேவையான கால அவகாசம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு திட்டமிட்டு ஆக்ஸிஜனைக் கொள்முதல் செய்கின்றனர். இந்தக் கால அவகாசமும், தொழிற்சாலையிலிருந்து மருத்துவமனைகளின், முக்கியமாக டெல்லி மருத்துவமனைகளின்  தூரமும் மிக அதிகம்.
ஏனென்றால், ஆக்ஸிஜன் பல மாநிலங்களில் தயாரிக்கப் பட்டு, வெகு தூரம் கடந்தே நகரங்களை அடைய முடியும்.  கிழக்கு மாநிலங்களில் தொழில் மையங்களில் தயாரிக்கப்பட்டு டிரக்குகள் மூலம் அவை டெல்லி சென்றடைகின்றன.  சாதாரண காலங்களில்கூட இதை மிகத் துல்லியமாகத் திட்டமிட வேண்டும்.
ஆனால், மருத்துவமனைகள், செலவை மிச்சப்படுத்த, அவசரத் தேவைக்கேற்ப ஆக்ஸிஜன் சேமிப்பை சரியாகத் திட்டமிடவில்லை. கடந்த 10 நாட்களாக எழுந்த கூச்சல்களில் யாராவது இதைப் பற்றி கேள்விப்பட்டிருப்போமா?

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

2 May
நீங்கள் பிறந்த மாதத்தில் வரும் உங்களின் ஜென்ம ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் தவறாமல் உங்களின் ஜென்ம நட்சத்திரம் அமைந்துள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று அபிஷேகம் செய்து உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற வஸ்திரத்தை சுவாமிக்கு  அலங்காரப்படுத்தி

🙏🇮🇳1
புஷ்பம் மஞ்சள்  குங்குமம் எண்னெய் கோவிலுக்கு வாங்கி கொடுத்து உங்கள் நட்சத்திர அதிபதியின் (கிரகத்தின்)எண்ணிக்கை யின் படி அன்னாதானம்  செய்து விட்டு வர

🙏🇮🇳2
உங்கள் நட்சத்திர தெய்வம் உங்களுக்கு முழு யோகத்தை அளிப்பார் .........தவறாமல் செய்யுங்கள் ......பின் நடப்பதை நீங்களே தெரிந்து கொள்விர்கள்.........................

உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கோயில் எது? 

எப்படி செல்ல வேண்டும்? 

அங்கு சென்றால் கிடைக்கும்

பலன் என்ன! .🙏🇮🇳3
Read 108 tweets
2 May
கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம் அருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில், அக்ஷர்தாம், அகமதாபாத்*

🇮🇳🙏1 Image
*தல சிறப்பு* 7 அடி உயரமுள்ள சுவாமியின் தங்கச்சிலை.

*பொது தகவல்*

உள்ளுக்குள் இருக்கும் பிரம்மாண்ட திரையரங்கில், "குரு இல்லாமல், ஒரு மனிதன் கடைத்தேற முடியாது' என்பதை விளக்கும் திரைப்படம் காட்டப்படுகிறது.

🇮🇳🙏2
இப்படி ஒரு திரைப்பட அரங்கு ஆசியாவில் வேறு எங்கும் இல்லை என கோயில் நிர்வாகிகள் கூறுகின்றனர். அதாவது ஒரே இடத்தில் 14 திரைகள் உள்ளன.

22 ஸ்லைடு வீடியோ புரொஜக்டர்களைக் கொண்டு திரையிடுகின்றனர். ஒரே நேரத்தில் 14 காட்சிகளை பார்ப்பதென்றால் வியப்புக்குரியது தானே!

🇮🇳🙏3
Read 23 tweets
1 May
மகாபாரதத்தில் ஊரடங்கு !

மஹாபாரத யுத்தத்தில் தன்னுடைய தந்தை துரோணாச்சாரியரை ஏமாற்றிக் கொன்றதில் அஸ்வத்தாமன் மிகவும் கோபமடைந்தார்.

அவர் பாண்டவ சேனை மீது மிக பயங்கரமான ஒரு ஆயுதம் "நாராயண அஸ்த்ரம்" விட்டு விட்டார்.
இதற்கு மாற்று உபாயம் எதுவுமே கிடையாது. யாருடைய கைகளில் எல்லாம் ஆயுதம் உள்ளது அல்லது யுத்தம் செய்வதற்கு முயற்சி செய்கின்றார்களோ அவர்களைப் பார்த்து அவர்கள் மீது அக்னி மழை பொழியும். அவர்கள் அழிந்து விடுவார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணர் சேனைக்கு அவரவர் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு அமைதியாக கைகளைக் கட்டிக் கொண்டு நிற்குமாறு கட்டளையிடுகிறார்.

மேலும் மனதில் யுத்தம் செய்வதற்கான எண்ணம் கூட வரக் கூடாது இந்த அம்பு அதையும் கண்டறிந்து அவர்களை அழித்து விடும் என்று கூறினார்.
Read 6 tweets
1 May
திறமையானவர்கள் தற்காலிகப் பணியாளர்களாக உள்ளனர்; ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிகாரிகள் அனைத்துப் பயன்களையும் பெறுகிறார்கள்: நீதிபதி வேதனை
தகுதியான, திறமையான பலர் குறைந்த ஊதியத்தில், ஒப்பந்தப் பணியாளர்களாகப் பணி நீக்கம் செய்யப்படுவோம் என்கிற அச்சத்தில் பணியாற்றும் நிலையில்,
ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிப் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் அனைத்துப் பணப் பலன்களையும் பெறுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
Read 11 tweets
1 May
உலகின் பல்வேறு நாடுகளின் மக்கள்தொகை
அமெரிக்கா: 33.1 கோடி
ரஷ்யா: 14.6 கோடி
ஜெர்மனி: 8.5 கோடி
துருக்கி: 8.4 கோடி
யூ:கே : 6.8 கோடி
பிரான்ஸ்: 6.5 கோடி
இத்தாலி: 6.1 கோடி
ஸ்பெயின்: 4.7 கோடி
போலந்து: 3.8 கோடி
ருமேனியா: 1.9 கோடி
நெதர்லாந்து: 1.7 கோடி
கிரீஸ் டப்பா : 1.7 கோடி
பெல்ஜியம்: 1.2 கோடி
செக் குடியரசு: 1.1 கோடி
போர்ச்சுகல்: 1.1 கோடி
சுவீடன்: 1 கோடி
ஹங்கேரி: 1 கோடி
சுவிட்சர்லாந்து: 0.9 கோடி பல்கேரியா: 0.7 கோடி
டென்மார்க்: 0.6 கோடி
--------------------
மொத்தம்: 105.3 கோடி
============
ஐரோப்பாவின் பிற 44 சிறிய நாடுகளின் மக்கள் தொகை: 6 கோடி

105.3 கோடி + ஐரோப்பாவின் மற்ற 44 சிறிய நாடுகள் 6 கோட்டி + பிரேசிலின் மக்கள் தொகை 21.2 கோடி + அர்ஜென்டினாவின் மக்கள் தொகை 4.45 கோடி = 136.95 கோடி!
Read 7 tweets
1 May
ஆரியபட்டர் இல்லனா உங்களுக்கு எண்களே இல்லை....

இராமானுஞ்சர் இல்லனா உங்களுக்குக் கணிதமே இல்லை....

போகர் இல்லனா உங்களுக்கு இரசாயனமே இல்லை.....

விமான சாஸ்த்திரம் இல்லனா உங்களுக்கு விமானங்களே இல்லை....

பஞ்சாங்கம் இல்லனா உங்களுக்கு வானியலே இல்லை....
சுஸ்ருதர் இல்லனா உங்களுக்கு சர்ஜிகல் டூல்ஸே இல்லை.....

சோழ வம்சம் இல்லனா உங்களுக்கு Trignometryயே இல்லை.....

மூவேந்தர்கள் இல்லனா உங்களுக்குக் கட்டடக் கலையே இல்லை.....

தமிழ் இல்லனா மொழிகளே இல்லை.....

அகஸ்தியர் இல்லனா உங்களுக்கு மின்சாரமே இல்லை....
பதஞ்சலி இல்லனா உங்களுக்கு யோகக் கலையே இல்லை.....

சித்தர்கள் இல்லனா உங்களுக்கு மருத்துவமே இல்லை....

ஜெகதீசன் இல்லனா மரம் செடி கொடிகளுக்கும் உயிர் உண்டு என்று உங்களுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை....

வள்ளுவன் இல்லனா உங்களுக்கு அறநெறியே இல்லை....
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!