நானும் அலுவலக நண்பரும் மதிய உணவருந்த சென்றோம். நாங்கள் சாப்பிட்டு கொண்டிருந்த போது, பக்கத்து டேபிளில் மூன்று இளைஞர்கள் பேசிக்கொண்டிருந்தது கேட்டது. மூவருமே இந்தியர்கள். ஆனால், ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். அதில் அதிகமாக பேசியது ஒரு தமிழ் இளைஞன் தான்.
திமுக ஜெயித்தது குறித்து, கருணாநிதி புதிய சட்டமன்றம் கட்டினார், ஜெயலலிதா அதை மக்கள் பயன்பாட்டிற்காக மருத்துவமனையாக மாற்றிவிட்டார் என்றார். சரி, அம்மா கன்னிப்போல என நினைத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தேன். என் நண்பர் ஒரு பாஜக ஆதரவாளர். கேரளா காரர்.
எதுவும் பேசாமல் சாப்பிட்டுக்கொண்டே, காதை மட்டும் பக்கத்து டேபிளில் வைத்திருந்தேன்.
அந்த தமிழ் இளைஞர், திக எது? திமுக எது? பெரியார் என்ன செய்தார்? கோவிலுக்குள் யாரையுமே விடாத போது, போராடி உரிமையை வாங்கித்தந்தவர் பெரியார். அவர் ஒரு சீர்திருத்தவாதி.
அவருக்கு ஓட்டரசியலில் நம்பிக்கை இல்லை. அதனால் அண்ணா பிரிந்து வந்து திமுகவை ஆரம்பித்தார் என பாடம் எடுத்துக்கொண்டு இருந்தார். எல்லாமே ஆங்கிலத்தில் தான்.
நடுநடுவே, ஆரம்பகால திமுகவில் எம்ஜிஆர் தான் வெயிட்டு என ரெண்டு பிட்டையும் சேர்த்தே போட்டார். அப்போது இருவர் படத்தை சொல்லி,
அது தானே உண்மை வரலாறு என்று அந்த பக்கத்து மாநில நண்பர்கள் பேசிக்கொண்டார்கள். திமுக வரலாறு மணிரத்னம் படம் தான் என்றால் முரசொலி மாறன், க. திருநாவுக்கரசு எல்லாம் திமுக வரலாறு எழுதியது எதற்காக? என நினைத்துக்கொண்டேன் (திரைப்படத்தை சாதாரணமாக கடக்க முடியாது.
கற்பனை கதைகள் தான் நம் மக்களுக்கு பிடிக்கும். அதையே உண்மையென நம்புவார்கள்).
ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து, நடக்க ஆரம்பித்தோம். என் அலுவலக நண்பர் சொன்னார். மூவரில் ஒருவர் தமிழ், ஒருவர் மலையாளி, ஒருவர் தெலுங்கு என்றார். அடப்பாவி, உன் காதும் அங்கு தான் இருந்துச்சா?
என்றுச் சொல்லி சிரித்தேன்.
இருந்தாலும், தென்னிந்தியர்கள் பேசும் அரசியல் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. நம்மிடம் பேச விசயம் இருக்கிறது. இதுவே ஒரு வட இந்தியன் இருந்தால், அவனுக்கு எது தமிழ்நாடு? யார் மலையாளி? எது ஆந்திர அரசியல்? எது தமிழ்நாடு அரசியல்? என எதுவும் தெரியாது.
நாமெல்லாம் அவன் கண்ணுக்கு ஒன்றாக தான் தெரிவோம் என்றேன்.
அதற்கு அந்த பாஜக ஆதரவு, கேரள நண்பர் சொன்னார், ஏனெனில் நம்மையெல்லாம் திராவிடர்களாக தான் அவன் பார்ப்பான். தன்னை ஆரியனாக கருதிக்கொள்வான் என்றார்.
நான் வேறெதுவும் பேசாமல் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்.
இதையெல்லாம் நூறாண்டுகளுக்கு முன்னே பேசிச்சென்ற நம் பாட்டன்களை எவ்வளவு வியந்தாலும்/ போற்றினாலும் பத்தாது!
வாழ்க திராவிட உணர்வு!
- ராஜராஜன் ஆர்.ஜெ
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இப்படி யாராவது வருவார்கள். அதிமுக ஆட்சியில் எப்படி திமுகவுக்கு மட்டும் அட்வைஸ் தந்தார்களோ, அதுப்போல பன்மடங்கு இப்போது தருவார்கள்.
அவர்களின் பிரச்சனை, நீங்கள் எப்போதுமே பேசிக்கொண்டிருப்பது தான்.
சாதி வெறியுடன் “பேசாமல்”, “அமைதியாக” அதிமுகவுக்கு ஓட்டுப்போடுவது அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் தராது. நாம் பேசுவது தான் அவர்களின் பிரச்சனை.
திமுக ரொம்ப யோக்கியமா? ஊபிஸ், மண்டை வீங்கிகள், கட்சி அடிமைகள், கொத்தடிமைகள் என உங்களை உசுப்பேத்திக்கொண்டே இருப்பார்கள்.
இவர்களை தேர்தலுக்கு முன்னர் எப்படி டீல் செய்தீர்களோ,அதேப்போல இப்போதும் டீல் செய்யுங்கள்.
திமுகவை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.திமுக தலைவர் எந்த குறுக்கு வழியையும் நம்பாமல் மக்களை நம்பி ஜெயித்திருக்கிறார்.
திமுக தமிழ்நாட்டை கைப்பற்றவில்லை.தமிழ்நாட்டை காப்பாற்றி இருக்கிறது.
இணைய திமுகவினரின் Honey Moon காலம் மே 1 னோடு முடிந்தது. மே 2 ல் இருந்து தினமும் நாம் ஏதோ ஒன்றிற்காக கழுவேற்றப்படுவோம். அது தான் இங்கே டிசைன்.
இனி தான் நமக்கான தேவை அதிகமாக இருக்கிறது. 2009 - 2011 நாம் திருப்பி அடிக்காமல் விட்டதன் பலனை தான் பத்தாண்டுகளாக பார்த்தோம்.
இனி,பொய் குற்றச்சாட்டுகள், அவதூறுகளுக்கு அவ்வப்போது பதிலடி தர வேண்டும்.கழகத்தின் சாதனைகளை அடிவரை கொண்டு செல்ல வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக,நீங்க எல்லாருக்கும் நல்லவராக நிருபிப்பதால் நாலு ஓட்டுக் கூட கிடைக்காது.அதுவே,உண்மையை உரக்க பேசினால்,அதைப்பார்க்கும் பலர் திருந்துவார்கள்.
உண்மையை பேச தயங்காதீர்கள். நம் பலமே, உண்மையை ஒழிவு மறைவின்றி பேசுவது தான்.
இதுவரை தமிழ்நாட்டில் பொறுப்பேற்ற அரசிற்கு, முதல்நாளில் இருந்தே ஒரு நெருக்கடி நிலை இருந்ததாக தெரியவில்லை. 1967 ல் திமுக முதன்முறையாக பதவியேற்ற போது உணவு பஞ்சம் இருந்ததாக சொல்வார்கள்.
ஆனால், 2021ல் இருக்கும் நிலை, உலகையே அச்சுறுத்தும் ஒரு பெருந்தொற்று பிரச்சனை.
There is no cooling period for the next government.
இந்த சூழலை யாரால் திறம்பட கையாள முடியும்?
23 வயதில் எமர்ஜென்சி காலத்தில், மிசாவில் அடிக்க அடிக்க பந்தாய் மேழுந்த, ஓராண்டு சிறைவாசத்திற்கு பின்னால், தலைவனாக வெளிவந்த ஒருவர்..
தன் வாழ்நாளில் பல நெருக்கடியான காலக்கட்டத்தை பார்த்தவர், சூழ்நிலைகளை கையாண்ட ஒருவர்..
எல்லாவற்றிற்கும் மேலாக கிராமங்கள், நகரங்கள், மாநகரங்கள் என எல்லா உள்ளாட்சியமைப்பு குறித்தும் ஆழமான அறிவும், அவற்றை மேம்படுத்த பெருங்கனவும் கொண்ட ஒருவர்..
படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். படித்தவர்கள் அரசியல் பேச வேண்டும். இப்படி சொல்பவர்கள் தமிழ்நாட்டில் அதிகம். இதற்கு பின்னால் உள்ள உளவியலை ஆராய்ந்தால், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் படிக்காதவர்கள், பள்ளியை கூட முடிக்காதவர்கள், இவர்கள் எல்லாம் அரசியலுக்கு லாயக்கில்லை,
அரசியலுக்கு வருவதற்கே “நீட் தகுதி தேர்வு” வைக்க வேண்டும் என பேசிக்கொண்டிருப்பார்கள். இவர்களின் பேச்சு எங்கு தொடங்கியிருக்கும் என்று நீங்கள் “நூல் பிடித்து” தேடிப்பார்த்தால், “ராஜாஜி காலத்துக்கு அப்புறமா..” என அக்காரவடிசல் வடியும் ரங்கராஜன் என்கிற சுஜாதா போன்றோர் இருப்பார்கள்.
அதைத்தான் சங்கர் முதல் ஷங்கர் வரை உள்வாங்கி திரும்ப துப்பிக்கொண்டு இருப்பார்கள்.
உண்மையில், இவர்களுக்கு காண்டு என்னவென்றால், படிக்காத தலைவர்கள் என இவர்கள் சொல்லும் தலைவர்கள் தான் மக்களை அதிகம் படிக்க வைத்தார்கள், படிப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
ஏன் திமுகவிற்கு கிடைக்கும் மக்கள் ஆதரவு போன்று பிற கட்சிகளுக்கு கிடைக்கவில்லை?
இதற்கு விடை மிக எளிது. பேரறிஞர் அண்ணா வகுத்து தந்த அரசியல் பாதையும், அதில் பயணிக்கும் திமுகவும் தான் இதற்கு காரணம்.
மக்களிடம் செல்,
அவர்களுடன் வாழ்,
அவர்களிடம் கற்றுக்கொள்,
அவர்களுக்கு பணியாற்று,
அவர்களோடு திட்டமிட்டு,
அவர்களுக்கு தெரிந்தவற்றை வைத்து தொடங்கு,
அவர்களிடம் இருப்பதை வைத்து கட்டமை.
இதை தான் 72 ஆண்டுகளாக திமுக எனும் கட்சி செய்து வருகிறது. எளிய மனிதர்களுக்கான கட்சியாக தொடங்கப்பட்டு இன்று வரை அப்படியே இருக்கிறது.
திமுகவின் வேட்பாளர்கள் குறித்து மக்களிடம் கேட்கும் போது, அவர்களை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம், எந்த உதவி வேண்டுமானாலும் கேட்கலாம், என் மருத்துவதிற்கு உதவி செய்தார், என் பிள்ளை படிப்புக்கு உதவி செய்தார் என்று சொல்வதை கேட்கலாம். இத்தனைக்கும் திமுக பத்தாண்டுகளாக
வணக்கம், இந்த கட்டுரை எழுதும் நான் எழுத்து உலகில் பிரதிலிபி இனையதளம் மூலமாக குடும்ப நாவல்களை எழுதி வருபவன், மற்றபடி என் இயல்பு திராவிடம் சார்ந்து இருந்தாலும் சில விடயங்களில் முரண்பட்டவனாகவும் இருந்துள்ளேன். ஆம், நான் கடவுள் மறுப்பு கொள்கை
கொண்டவன் அல்ல. இராமானுசர் வகுத்த இறை நெறியான வைணவத்தை தீவிரமாக பின்பற்றுபவன். ஆனாலும், என்னுடைய முப்பத்தி இரண்டாம் அகவையில் நடக்க உள்ள இந்த தேர்தலிலும் சரி மற்றும் இதற்கு முன்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் சரி, நான் உதயசூரியன் அல்லது திமு கழகத்தின் தோழமை கட்சிகளின்
சின்னங்களில் மாத்திரமே என் வாக்கினை செலுத்தி உள்ளேன். அதற்கான காரணத்தை விளக்குவதே இந்த கட்டுரையின் சாராம்சம்.
நான் பிராமணர் அல்லாத முன்னேறிய வகுப்பினை சார்ந்தேன். எனக்கும் ஒரு காலத்தில் 90% மதிப்பென் இருந்தும் ஒரு மூன்றாம் தர பொறியியல் கல்லூரியில் எனக்கு கிடைத்த கல்வி,