மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறிய கோவை மகேந்திரன் அவர்களின் பேட்டியை பார்த்தேன்.
1) தோல்விக்கு நீங்கள் அனைவரும் தான் காரணம். நீங்களா ராஜினாமா பண்ணுறீங்களா? இல்ல நான் பண்ண வைக்கவா என்று கமலஹாசன் கேட்டதாக கூறுகிறார்.
2) இது என் கட்சி என்று கமல் சொல்லி இருக்கிறார். கட்சிக்கு அவர் தான் நிரந்தர தலைவர் என்று தீர்மானம் போட்டதை நினைவு கூறுகிறார்.
3) தீர்மானங்கள் எல்லாம் கட்சியின் பொதுச்செயலாளர்களுக்கு கூட தெரியாது. மீட்டிங் நடப்பதற்கு முன்பு, இந்த இரண்டு தீர்மானத்தை நீங்க படிச்சுடுங்க, அந்த இரண்டு தீர்மானத்தை நீங்க படிச்சுடுங்க என பிரித்து கொடுத்து படிக்க வைத்துவிடுவார்கள் என்கிறார்.
4) ஒரு நிறுவனத்தை மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பணிக்காக சேர்த்திருக்கிறார்கள். அவர்களின் வேலை திருப்தியாக இல்லாமல் இருக்கவே, யாரென்று ஆராய்ந்தால் இரண்டு நண்பர்கள் சுந்தர் அய்யர், விஜய் டிவி மகேந்திரன் இணைந்து ஆரம்பித்து இருக்கிறார்கள். அந்த நிறுவனத்தின் அலுவலகமாக கமலின் விலாசமே
இருக்கிறது. கட்சியின் கம்பெனி தான் அது என்கிறார்.
5) அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் போன்ற எந்த தலைவர்களும் தான் மட்டும் உட்காரும் ஒரு மேடையை அமைத்ததில்லை. ஏன் மற்றவர்களை அருகே உட்கார அனுமதிக்கவில்லை என்று கேட்டதற்கு, நீங்கள் எல்லாம் உங்களுக்கான புகழை தனியாக தேடிக்கொள்கிறீர்கள் என்று
கமல் பதிலளித்துள்ளார்.
6) கட்சியில் யாரிடமும் கலந்தாலோசிக்காமல் நூற்றுக்கணக்கான சீட்டை கூட்டணிக்கு குடுத்தது மக்கள் எங்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையை குலைத்தது.
7) Private jet ல் பறப்பது தவறில்லை. ஆனால், அப்படி பறந்துவந்துவிட்டு ஆட்டோவில் ஏறினால் மக்கள் நம்புவார்களா?
8) கமல் எளிதாக வெற்றிப்பெற்று இருக்கக்கூடிய கோவை தெற்கில் தோற்றதற்கு அவரை இயக்கும் நிறுவனமே காரணம்.
இப்படி பல விசயங்களை விரிவாக மகேந்திரன் பேசி இருக்கிறார்.ஜனநாயகம்,காந்தி,நேரு என வெளியே பேசும் கமல்,சொந்த கட்சியில் ஒரு ஜெயலலிதா போல இருக்க முயற்சித்து இருக்கிறார் என்று தெரிகிறது.
சினிமா உலகம் வேறு, அரசியல் உலகம் வேறு என்பதை கமல் உணர்ந்தாக தெரியவில்லை.
“தான் தான் எல்லாமே” என்று நினைத்தவர்கள் அழிந்தது தான் வரலாறு. இது சீமானுக்கும் பொருந்தும்!
பேட்டி லிங்க்:
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இத்தனை ஆற்றல் வாய்ந்த தலைவரான ஸ்டாலின் அவர்களுக்கு இத்தனை நாள் முதல்வராக வாய்ப்பு தராமல் போய்விட்டோமே என்கிற குரல்களை கேட்க முடிகிறது.தலைவர் கலைஞர் அவர்களின் சாதனைகளையே 2018 க்கு பிறகு அறிந்தவர்கள் தான் அதிகம். இன்றைய தலைவர் ஸ்டாலின் அவர்களின் ஆற்றல் குறித்தும் பலருக்கு தெரியாது.
நானும் அவரை பற்றி வாசிக்க ஆரம்பித்த பின் தான் எத்தனை பெரிய தலைவர் அவர் என்பதை உணர்ந்தேன். அவரது ஆற்றல், பண்புநலன், உழைப்பு, கனவு ஆகிய அனைத்துமே மிகப்பெரியவை. அதை நாம் நிச்சயம் உணர வேண்டும். உணர்ந்ததோடு மட்டுமல்லாமல் அவர் நம் தமிழ்நாட்டுக்கு எத்தனை முக்கியமானவர் என்பதை
அனைவருக்கும் உணர்த்த வேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டியது, அவரைப் பற்றி வாசிப்பதும், எழுதுவதும் தான்...
முதல்வர் @mkstalin அவர்கள் குறித்து வாசிக்க வேண்டிய முக்கிய புத்தகங்கள் என எதை சொல்வீர்கள்?
நான் அவரைக் குறித்து எனது “திராவிட நம்பிக்கை மு.க. ஸ்டாலின்” புத்தகத்திற்காக
Kubler - Ross Theory. குருநாதர் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு உளவியல் பாடம் இது. பல விசயங்களுக்கு இதை பொருத்திப்பார்க்கலாம். இது தியரியாக பார்த்தால் “துக்கத்தின் ஐந்து நிலைகள் (5 Stages of grief)” என்று சொல்வார்கள்.
ஒரு விரும்பத்தகாத அல்லது ஒரு துக்க நிகழ்வு நிகழ்கிறது.
இப்படி யாராவது வருவார்கள். அதிமுக ஆட்சியில் எப்படி திமுகவுக்கு மட்டும் அட்வைஸ் தந்தார்களோ, அதுப்போல பன்மடங்கு இப்போது தருவார்கள்.
அவர்களின் பிரச்சனை, நீங்கள் எப்போதுமே பேசிக்கொண்டிருப்பது தான்.
சாதி வெறியுடன் “பேசாமல்”, “அமைதியாக” அதிமுகவுக்கு ஓட்டுப்போடுவது அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் தராது. நாம் பேசுவது தான் அவர்களின் பிரச்சனை.
திமுக ரொம்ப யோக்கியமா? ஊபிஸ், மண்டை வீங்கிகள், கட்சி அடிமைகள், கொத்தடிமைகள் என உங்களை உசுப்பேத்திக்கொண்டே இருப்பார்கள்.
இவர்களை தேர்தலுக்கு முன்னர் எப்படி டீல் செய்தீர்களோ,அதேப்போல இப்போதும் டீல் செய்யுங்கள்.
திமுகவை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.திமுக தலைவர் எந்த குறுக்கு வழியையும் நம்பாமல் மக்களை நம்பி ஜெயித்திருக்கிறார்.
திமுக தமிழ்நாட்டை கைப்பற்றவில்லை.தமிழ்நாட்டை காப்பாற்றி இருக்கிறது.
நானும் அலுவலக நண்பரும் மதிய உணவருந்த சென்றோம். நாங்கள் சாப்பிட்டு கொண்டிருந்த போது, பக்கத்து டேபிளில் மூன்று இளைஞர்கள் பேசிக்கொண்டிருந்தது கேட்டது. மூவருமே இந்தியர்கள். ஆனால், ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். அதில் அதிகமாக பேசியது ஒரு தமிழ் இளைஞன் தான்.
திமுக ஜெயித்தது குறித்து, கருணாநிதி புதிய சட்டமன்றம் கட்டினார், ஜெயலலிதா அதை மக்கள் பயன்பாட்டிற்காக மருத்துவமனையாக மாற்றிவிட்டார் என்றார். சரி, அம்மா கன்னிப்போல என நினைத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தேன். என் நண்பர் ஒரு பாஜக ஆதரவாளர். கேரளா காரர்.
எதுவும் பேசாமல் சாப்பிட்டுக்கொண்டே, காதை மட்டும் பக்கத்து டேபிளில் வைத்திருந்தேன்.
அந்த தமிழ் இளைஞர், திக எது? திமுக எது? பெரியார் என்ன செய்தார்? கோவிலுக்குள் யாரையுமே விடாத போது, போராடி உரிமையை வாங்கித்தந்தவர் பெரியார். அவர் ஒரு சீர்திருத்தவாதி.
இணைய திமுகவினரின் Honey Moon காலம் மே 1 னோடு முடிந்தது. மே 2 ல் இருந்து தினமும் நாம் ஏதோ ஒன்றிற்காக கழுவேற்றப்படுவோம். அது தான் இங்கே டிசைன்.
இனி தான் நமக்கான தேவை அதிகமாக இருக்கிறது. 2009 - 2011 நாம் திருப்பி அடிக்காமல் விட்டதன் பலனை தான் பத்தாண்டுகளாக பார்த்தோம்.
இனி,பொய் குற்றச்சாட்டுகள், அவதூறுகளுக்கு அவ்வப்போது பதிலடி தர வேண்டும்.கழகத்தின் சாதனைகளை அடிவரை கொண்டு செல்ல வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக,நீங்க எல்லாருக்கும் நல்லவராக நிருபிப்பதால் நாலு ஓட்டுக் கூட கிடைக்காது.அதுவே,உண்மையை உரக்க பேசினால்,அதைப்பார்க்கும் பலர் திருந்துவார்கள்.
உண்மையை பேச தயங்காதீர்கள். நம் பலமே, உண்மையை ஒழிவு மறைவின்றி பேசுவது தான்.
இதுவரை தமிழ்நாட்டில் பொறுப்பேற்ற அரசிற்கு, முதல்நாளில் இருந்தே ஒரு நெருக்கடி நிலை இருந்ததாக தெரியவில்லை. 1967 ல் திமுக முதன்முறையாக பதவியேற்ற போது உணவு பஞ்சம் இருந்ததாக சொல்வார்கள்.
ஆனால், 2021ல் இருக்கும் நிலை, உலகையே அச்சுறுத்தும் ஒரு பெருந்தொற்று பிரச்சனை.
There is no cooling period for the next government.
இந்த சூழலை யாரால் திறம்பட கையாள முடியும்?
23 வயதில் எமர்ஜென்சி காலத்தில், மிசாவில் அடிக்க அடிக்க பந்தாய் மேழுந்த, ஓராண்டு சிறைவாசத்திற்கு பின்னால், தலைவனாக வெளிவந்த ஒருவர்..
தன் வாழ்நாளில் பல நெருக்கடியான காலக்கட்டத்தை பார்த்தவர், சூழ்நிலைகளை கையாண்ட ஒருவர்..
எல்லாவற்றிற்கும் மேலாக கிராமங்கள், நகரங்கள், மாநகரங்கள் என எல்லா உள்ளாட்சியமைப்பு குறித்தும் ஆழமான அறிவும், அவற்றை மேம்படுத்த பெருங்கனவும் கொண்ட ஒருவர்..