சென்னை : கொரோனா சிகிச்சைக்கு, சித்த மருத்துவத்தை, தமிழக அரசு அனுமதித்ததற்கு, தி.மு.க.,- - எம்.பி., எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தர்மபுரி தி.மு.க.,- - எம்.பி., செந்தில் குமார், தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது: தி.மு.க., ஒரு முற்போக்கு பகுத்தறிவு கட்சி. அறிவியல் ரீதியாக நிரூபணமாகாத, சித்த மருத்துவ சிகிச்சை முறைகளை, கொரோனா சிகிச்சைக்கு, அரசு பயன்படுத்துவது வருத்தம் அளிக்கிறது.
நீராவி பிடிப்பது போன்ற, அறிவியல் ஆதாரமற்ற சிகிச்சைகளால், கொரோனா நெருக்கடி காலத்தில், மனித வளம் வீணாகிறது.
தமிழக அரசு மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த மருத்துவர்கள் அடங்கிய, ஆலோசனை குழுவை முதல்வர் அமைத்து, அறிவியல் மற்றும் நவீன மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில், சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற அறநிலையத்துறைக்கு உத்தரவு
சென்னை: அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தரவு சேகரிக்கும் பணிகள் மற்றும் இணையப்பதிவேற்றம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலில், அறநிலையத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார்.
'கொரோனாவைக் கட்டுப்படுத்துகிறோம்' என, தமிழக அரசு பகீரத முயற்சி எடுத்து வருகிறது. வாழ்த்துகள்! முயற்சி பலன் தருமா?
* தினமும் காலை 10:00 மணி வரை, காய்கறி கடைகள் இயங்கும் என அறிவித்து, அத்திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இப்படி மக்களை கூடச் செய்வதில் இருக்கும் சிக்கலைப் பாருங்கள்.
* காய்கறி வாங்க வருவோரில் பாதிக்குப் பாதி பேராவது, நோயாளியுடன் மருத்துவமனையில் தங்கியவராக இருக்கலாம்; நோயாளியுடன் பல காலம் வீட்டில் தங்கியவராக இருக்கலாம். அல்லது அறிகுறிகளே இல்லாமல், வைரசைத் தாங்கியவர்களாக இருக்கலாம்.
புதுடில்லி : 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை மோசடி தொடர்பான வழக்கில், 'ஜூலை 30ல் இறுதி விசாரணை நடக்கும்' என டில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல் உள்ளிட்டோர் இயக்குனர்களாக உள்ள 'யங் இந்தியா' என்ற நிறுவனம் விலைக்கு வாங்கியது. இதில் மோசடி நடந்துள்ளதாக பா.ஜ., மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
டில்லி நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரவும், சாட்சியங்களை முன்வைக்க அனுமதிக்கும்படியும், டில்லி உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்தியாவை வீணாக விமர்சிக்கலாமா; சர்வதேச மீடியாவுக்கு ஹைடன் சவுக்கடி
சிட்னி: கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனை அறியாத சில சர்வதேச ஊடகங்கள் தவறாக விமர்சிக்கின்றன. இதனை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கண்டித்துள்ளார்.
இது குறித்து இவர் வெளியிட்டுள்ள கட்டுரை: கொரோனா இரண்டாவது அலையை எதிர்த்து இந்தியா போராடி கொண்டிருக்கிறது. சுமார் 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், பொது மக்களுக்கான எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்துவது சவாலானது.
இதனை அறியாமல் உலக மீடியா தேவையில்லாமல் விமர்சிக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன்.
மூலவர் : சிவசூர்யன்
அம்மன்/தாயார் : உஷாதேவி, சாயாதேவி
தல விருட்சம் : வெள்ளெருக்கு
தீர்த்தம் : சூரியதீர்த்தம்
ஊர் : சூரியனார்கோயில்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
🙏🇮🇳1
*திருவிழா:*
ரதசப்தமி உற்சவம்: தை மாதம் - 10 நாட்கள் திருவிழா - இது இத்தலத்தின் மிக முக்கிய திருவிழா ஆகும்.
*சிறப்பு வழிபாடு:*
பிரதி தமிழ் மாதம் முதல் ஞாயிறன்று சிவசூர்ய பெருமானுக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
🙏🇮🇳2
மகா அபிசேகம் என்று அழைக்கப்படும் இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்வார்கள்.
சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி ஆகியநாட்களில் இத்தலத்தில் மிக சிறப்பான முறையில் அபிசேக ஆராதனைகள் நடக்கும்.
பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்வர்.
ஒரு துறவியை இளைஞர் பட்டாளம் சந்தித்தது. சுவாமி! கடவுள்... கடவுள் என்கிறீர்களே! அவர் எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்? எப்படி இருப்பார்? என்றெல்லாம் கேலியாகக் கேட்டார்கள்.
துறவி அவர்களிடம், ஒரு சட்டியில் பால் கொண்டு வாங்களேன், என்றார். பால் வந்தது. அவர் அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவ்வப்போது, விரலை உள்ளே விட்டு துழாவிப் பார்த்தார். சட்டியை எடுத்து சுற்றியசைத்தார். தரையில் வைத்தார். திரும்பவும் உற்றுப்பார்த்தார்.