ஒரு துறவியை இளைஞர் பட்டாளம் சந்தித்தது. சுவாமி! கடவுள்... கடவுள் என்கிறீர்களே! அவர் எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்? எப்படி இருப்பார்? என்றெல்லாம் கேலியாகக் கேட்டார்கள்.
துறவி அவர்களிடம், ஒரு சட்டியில் பால் கொண்டு வாங்களேன், என்றார். பால் வந்தது. அவர் அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவ்வப்போது, விரலை உள்ளே விட்டு துழாவிப் பார்த்தார். சட்டியை எடுத்து சுற்றியசைத்தார். தரையில் வைத்தார். திரும்பவும் உற்றுப்பார்த்தார்.
இப்படியே, இரண்டு மூன்று முறை அவர் பார்த்துக் கொண்டிருக்கவே, பொறுமையிழந்த இளைஞர்கள், சுவாமி! நாங்கள் கடவுள் எங்கே எனக்கேட்டால், நீங்கள் பால் சட்டியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறீர்களே! என்று கத்தினர்.
அமைதி...அமைதி... என்ற துறவி, பாலில் வெண்ணெய் இருக்கிறதா என துழாவிப்பார்த்தேன், என்றார்.
அட அறிவிலி துறவியே! வெண்ணெய் எடுக்க வேண்டுமானால், முதலில் பாலைத் தயிராக்க வேண்டும். அதைக் கடைந்தால் வெண்ணெய் வந்து விட்டுப் போகிறது, என்றனர் இளைஞர்கள்.
நீங்கள் சொல்வது சரிதான். அப்படியானால், இந்த பாலின் ஒவ்வொரு துளியிலும் வெண்ணெய் இருப்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.
கடவுளும் அப்படித்தான். கண்ணுக்குத் தெரியமாட்டார். பால் என்பது உலகம். அதைத் தயிராக்க வேண்டும் என்ற உணர்வைத் தருவது அறிவு.
அந்த அறிவை, கடவுளைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியத்துடன் கடைந்தால், உலகிலுள்ள எல்லா உயிரிலும் கடவுள் தெரிவார், என்றார். இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கினர்.
🇮🇳🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கைலாஷ் மலையை இதுவரை ஏறியவர்கள் எவரும் இல்லை! முயற்சித்தவர்கள் வயோதிகர்களாக இறந்தது மட்டுமே மிச்சம்! இதன் மர்மம் என்ன? மலை மொத்தமும் DNA மூலக்கூறுகள்! வியந்த விஞ்ஞானிகள்!
12 மணி நேரம் கைலாஷ் மலை ஏறினால் மனித உடல் இரண்டு வாரத்திற்கான வளர்ச்சியை பெறுகிறது. நகம், முடி அனைத்தும் இரண்டு வாரத்திற்கான வளர்ச்சியை பெறுகிறது! இது வரை யாராலும் கைலாஷ் மலையை முழுமையாக ஏறியதில்லை. ஏற முயற்சித்தவர்களும் திரும்பியதில்லை.
Dr Ernst Muldashev இரஷ்ய விஞ்ஞானி:
எர்நெஸ்ட் முல்டஷேவ் என்னும் இரஷ்ய விஞ்ஞானி கைலாஷ் மலையில் உள்ள இரகசியங்களை உடைத்தெரிய எண்ணினார். அதன்படி கலாஷ் மலையை ஆராய்வதற்காக வந்தார். இதுவரை ஏன் எந்த மனிதனாலும் கைலாஷ மலையை ஏற இயலவில்லை என்பது குறித்து ஆராயத் தொடங்கினார்.
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,920 பேர் பாதிப்பு: 390 பேர் பலி
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,920 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரஷ்ய சுகாதார மையம் தரப்பில், “ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,920 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாஸ்கோவில் மட்டும் 2,096 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 390 பேர் பலியாகினர்.
இதுவரை 49 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,16,965 பேர் பலியாகி உள்ளனர். 10% பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம் சங்கு வடிவில் கோவில்"!
லிங்க வடிவில் பலா..!!
அருள்மிகு குற்றாலநாதசுவாமி திருக்கோயில்..!!
🙏🇮🇳1
அமைவிடம்;
உலகம் சமநிலையை அடைய தென் பகுதிக்கு அகத்தியர் நடந்து வந்தாராம். இங்கு வந்த அகத்தியர் குற்றாலம் பகுதியில் ஒரு விஷ்ணு கோயில் இருந்ததைப் பார்த்தாராம். பின் அதனை சிவன் கோவிலாக மாற்றியுள்ளார். 🙏🇮🇳2
அகத்தியர் மாற்றிய அந்த கோயில்தான் குற்றாலத்தின் பெரிய அருவி பக்கத்தில் அமைந்துள்ள திருக்குற்றாலநாதர் கோயில்.
மாவட்டம் '"'
அருள்மிகு குற்றாலநாதசுவாமி திருக்கோயில், குற்றாலம், திருநெல்வேலி மாவட்டம்.
1989 அருப்புக் கோட்டை எஸ் பி கே மேல்நிலைப் பள்ளியில் படித்த போது சிவன் கோயிலில் நடைபெற்ற திருமுருக கிருபானந்த வாரியார் சாமி அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வில் பேசியது.
வேதாந்த தத்துவங்களை எளிதில் புரியும் உதாரணங்களோடு கூறுவதில் அவருக்கு நிகர் அவரே.
அன்று அவர் கூறிய ஒரு தத்துவம்.
மாட்டு வண்டி உங்கள் அனைவருக்கும் தெரியும். வண்டிக்கு அறிவு கிடையாது. மாட்டுக்கு அறிவு உண்டு. ஆனால் அறிவுள்ள மாட்டால் வண்டியை தானேபூட்டிக் கொள்ள முடியாது. அறிவில்லாத வண்டியாலும் தானே போய் மாட்டின் மேல் இணைய முடியாது.
கெஜ்ரிவால் இந்தியாவின் பிரதிநிதியாக பேசக்கூடாது: மத்திய அமைச்சர் கண்டிப்பு
புதுடில்லி: 'டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியாவின் பிரதிநிதியாகப் பேசக்கூடாது' என, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் மத்திய அரசுக்கு நேற்று ஒரு கோரிக்கை விடுத்தார். அதில், 'சிங்கப்பூரில் உருமாற்றம் அடைந்த கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது.
சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து விமானச் சேவைகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' எனத் தெரிவித்தார்.
கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற அறநிலையத்துறைக்கு உத்தரவு
சென்னை: அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தரவு சேகரிக்கும் பணிகள் மற்றும் இணையப்பதிவேற்றம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலில், அறநிலையத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார்.