ஏழு பேர் விடுதலை சட்ட நிலை என்ன?
குடியரசு தலைவர் அளவுக்குச் செல்லாமலேயே அரசமைப்புச் சட்டம் 161 பிரிவின்கீழ் மாநில அரசே விடுதலை செய்ய சகல அதிகாரமும் உண்டு! @mkstalin@CMOTamilnadu
பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் - 30 ஆண்டுகளுக்குமேல் சிறைத் தண்டனைக் கொடுமையை அனுபவித்துவிட்ட நிலையில், அவர்களை விடுதலை செய்வது என்று ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது கொள்கை முடிவு எடுத்த நிலையில்,
தெளிவாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 161 ஆம் பிரிவுப்படியே மாநில அரசுக்கு (அமைச்சரவைக்கு) உள்ள பரந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி செயல்பட்டிருந்தால், இத்தனை காலதாமதமும், தொடர் குழப்பங்களும் அதன் காரணமாக தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும் அவலமும் உருவாகி இருக்காது.
அரசமை. சட்ட 161ஆம் பிரிவு- கைதிகளின் தண்டனை குறைப்பு, மன்னிப்பு, தண்டனை ஒத்தி வைப்பு (Reprieves), இடைக்கால அவகாசம் (Respites), தண்டனை காலத்தை நிறுத்தி வைத்தல் (Remissions of punishment), குறைத்தல் அல்லது தள்ளுபடி செய்தல் போன்றவற்றிற்கு மாநில அரசுக்கு விரிவான அதிகாரம் தந்துள்ளது.
இந்த எழுவர் வழக்கில் தேவையற்ற காலதாமதத்தை மாநில ஆளுநர் முந்தைய ஆட்சியில் செய்தபோது, பற்பல காலகட்டங்களில் பலவித காரணங்களும், சாக்குபோக்குகளும் கூறப்பட்டன.
உச்சநீதிமன்றத்திடம் அணுகவேண்டும்; அதன் கருத்து முடிவு முக்கியம் என்ற நிலைக்கும் பதில் அங்கிருந்தே கிடைத்தது.
பேரறிவாளனை விடுதலை செய்வதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை - அதுபற்றி முடிவு எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி காட்டிவிட்டது.
CBI &ராஜீவ் கொலை வழக்கு புலன் விசாரணைக் குழுவில் இருப்பதால் என்று ஒரு காரணமும் சொல்லப்பட்டது. அங்கும் தடையில்லை என்று தெளிவாக்கப்பட்டுவிட்டது.
இதன்பிறகு இரண்டாண்டுகளுக்குமேல் சம்பந்தப்பட்ட கோப்பை - விடாமல் அழுத்தமாக வைத்திருந்த தமிழ்நாடு ஆளுநர், திடீரென்று ‘‘குடியரசுத் தலைவர்தான் இதுபற்றி முடிவு எடுக்கவேண்டும்‘’ என்று கூறிவிட்டார்.
இந்நிலையில், புதிய தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நிலையில், எழுவர் விடுதலை என்ற நீண்ட கால நிலுவைப் பிரச்சினைக்குத் தீர்வு காண - சிறைச்சாலைகளில் கரோனா தொற்று அதிகமாகும் நிலையை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவேண்டுமென உச்சநீதிமன்றமே கூறியிருந்தபடியாலும்,
எங்கே தடையை - குடியரசுத் தலைவரிடம் முடிவு இருக்கும் என்ற நிலையை உருவாக்கி விட்டதால், முறைப்படி - இதற்கு தமிழ்நாடு தி.மு.க. அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நாடாளுமன்ற தி.மு.க. கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள்மூலம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தடை என்ற ஒன்றை ஆளுநர் ஏற்படுத்தியதன் காரணமாக ஏற்பட்டுள்ள முறையான நடவடிக்கையாகும்.
இதற்கிடையில் பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோலும், தமிழக அரசு - முதலமைச்சர் அளித்துள்ளதும் வரவேற்கத்தக்கதாகும்.
அடுத்தகட்டமாக மாநில அரசு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 161 ஆம் பிரிவின்படி அமைச்சரவை மீண்டும் முடிவெடுத்து, எழுவரை விடுதலை செய்ய தாராளமாக இடம் உண்டு.
அது அரசமைப்புச் சட்டப்படி சரியான நடவடிக்கையாகவும் அமையும்.
‘‘The Power to grant pardons, under article 161 is very wide and do not contain any limitation as to the time on which and the occasion on which and the circumstances in which the said power could be exercised."
இதன்மூலம் அந்த 161 ஆம் பிரிவின்கீழ் உள்ள அதிகாரம் எவ்வளவு பரந்து விரிந்த ஒன்று என்பதை ‘சத்பால் Vs ஹரியானா அரசு’ என்ற வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்று முக்கியமாய் உறுதிப்படுத்தியுள்ளது.
கலைஞர் முதல்வராக இருந்தபோது, 1996 செப்-அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி, 10ஆண்டுகளாக சிறையில் இருந்த கைதிகளை விடுதலை செய்ய முடிவு எடுத்து, ஆளுநர் மாளிகைக்கு கோப்பு சென்றபோது, CPCபடி 15ஆண்டுகளானால்தான் விடுதலை செய்ய முடியும் என்றுள்ள ஒரு தடையை ஆட்சேபணையாக எழுப்பி, திருப்பியனுப்பினர்
அதனை முதலமைச்சர் கலைஞர், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 161 ஆம் பிரிவின்கீழ், புதிய முடிவு எடுத்து, அவர்களை விடுதலை செய்த முன்மாதிரியும் தமிழக அரசியல் வரலாற்றில் - தி.மு.க. ஆட்சி வரலாற்றில் இருப்பதால், அந்தத் திறவுகோலைப் பயன்படுத்தி,
தாமதிக்கப்பட்ட நீதியை மறுக்கப்பட்ட நீதியாக்கிவிடாமல், கருணையோடும், கனிவோடும், ஆனால், அதேநேரத்தில் அரசமைப்புச் சட்ட உரிமைப்படியும் மாநில அரசின் உரிமைகளை முறைப்படி செயல்படுத்தியும் நல்ல முடிவுகளை எடுத்து, கனிந்த பயன்பெற்று, மனிதநேயத்தை நிலைநாட்ட முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறோம்.
மற்றபடி அவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாற்றின் தன்மை, தண்டனை, விசாரித்த நீதிபதி கே.டி.தாமஸ் கூற்று, எஸ்.பி. தியாகராஜன் பேட்டி - இவையெல்லாம் நியாயம் எந்தப் பக்கம் என்பதற்கும் துல்லியமான ஆதாரங்களாகும்.
நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சரியாக ஒரு நூறு ஆண்டுகளுக்குமுன் பார்ப்பனரல்லாத திராவிட இளைஞர்கள் - ‘‘பஞ்சம, சூத்திர'' - ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்களை மனுவின் கல்வி மறுப்பு தீக்குழியினின்று காப்பாற்றி, பெருமை வாய்ந்த (சென்னை) மாநிலக் கல்லூரி- ‘பிரசிடென்சி காலேஜ்' (1/3)
(உயர்ஜாதியினரும், மேல்தட்டு வர்க்கத்தினரும், வெள்ளைக்காரரும் மட்டுமே கல்வி பயில உரிய கல்விக் கூடமாக இருந்த மாநிலக் கல்லூரி) - திராவிடர் ஆட்சியான, பனகால் அரசர் தலைமையில் அமைந்த ஆட்சியில், பார்ப்பனரல்லாத மாணவர்களைச் சேர்க்க - தனிக் கமிட்டி அமைத்து, (2/3)
அதன் கதவுகளைத் திறந்ததோடு, ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் கல்விக் கண்ணையும் திறந்த - ஆணை போடப்பட்டு செயலுறு கொண்ட நாள் - இந்நாள், இனிய நாள்!
திராவிடத்தால்தான் எழுந்தோம், புரிகிறதா? (3/3)
ஓய்வு வயதை உயர்த்தியும், வெளி மாநிலத்தவருக்கு வாய்ப்பளித்தும்
தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பில் மண்ணை அள்ளிப் போடுவதா?
தமிழக இளைஞர்களே, நடக்கவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலில்
உதயசூரியனை உதிக்கச் செய்வீர்!
உதவாக்கரைகளை வீட்டுக்கு அனுப்புவீர்!!
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் நடைபெறும் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.அரசின் நிதிநிலை மிகவும் மோசமாகியுள்ளதைப் பற்றிக் கவலைப்படாமல் ஏராளமான கடன்வாங்கி, இப்போது அளிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தின்படி இக்கடன் தொகை ரூ.5லட்சத்து 70ஆயிரம் கோடி ஆக உயர்ந்துள்ளது.
பிறக்கப் போகும் ஒவ்வொரு குழந்தைக்கும்கூட ரூ.63 ஆயிரம் கடனோடு பிறக்கும் ‘கீர்த்தியை’ அதன் தலையில் கிரீடமாகச் சூட்டியுள்ளது அதிமுக அரசு.
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் செயலாளராக, மத்தியக் குழு உறுப்பினராக, ‘ஜனசக்தி'யின் ஆசிரியராக, நாடாளுமன்ற உறுப்பினராக, தலைசிறந்த பேச்சாளராக, எழுத்தாளராக, நூலாசிரியராகப் பரிணமித்தவர் தோழர் தா.பா.
உடலால் தோழர் தா.பா. மறைந்தாலும், அவரின் உரைவீச்சு என்னும் சங்கநாதம் - முழக்கம் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவரது பிரிவு - இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சிக்கு எவ்வளவு துயரமோ, அதே அளவு துயரத்தை திராவிடர் கழகம் வெளிப்படுத்துகிறது.
தோழர் தா.பாண்டியன் அவர்களின் அளப்பரிய பொதுத் தொண்டுக்குக் கழகத்தின் சார்பில் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவில் பல முக்கிய ஊர்களில் எல்லாம் பங்கேற்று அவர் ஆற்றிய உரைகள் ‘‘சமுதாய விஞ்ஞானி பெரியார்'' எனும் நூலாக நாம் வெளியிட்டோம் - பல பதிப்புகளாக வெளிவந்துள்ளன.
எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, அவரால் கொண்டுவரப்பட்ட வருமான வரம்பு ஆணையை எதிர்த்து திராவிடர் கழகம் மேற்கொண்ட அனைத்து மாநாடுகள் - நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்ற சமூகநீதியாளர் அவர்!
கடந்த ஆண்டு தந்தை பெரியார் நினைவுநாளில் (24.12.2020) அவருக்குப் ‘‘பெரியார் விருது'' அளித்து பெருமகிழ்ச்சி கொண்டது திராவிடர் கழகம். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், கடைசிவரையில் அமர்ந்து, ‘இந்த விருதுக்கு நிகர் வேறு ஒன்றும்இல்லை!' என்று மனந்திறந்து நெகிழ்ச்சியுரையாற்றினார்.
வேலியே பயிரை மேய்வதா? பாலின சீண்டல் குற்றச்சாட்டுக்கு ஆளான காவல்துறை தலைவரை பதவி நீக்கம் செய்க!
பாலின குற்றச்சாட்டுக்கு ஆளான சட்டம் - ஒழுங்கு சிறப்பு காவல்துறை தலைவரை (டி.ஜி.பி.) பதவி நீக்கம் செய்யவேண்டும்.
முதலமைச்சர் சுற்றுப்பயணத்துக்குச் சென்றபோது, பாதுகாப்புக்குச் சென்ற பெண் அய்.பி.எஸ். அதிகாரியான ஒரு மாவட்ட காவல்துறை அதிகாரிக்கு (டி.எஸ்.பி.), சிறப்பு டி.ஜி.பி. என்ற பதவியில் இடையில் சொருகப்பட்ட ராஜேஷ் தாசின் பாலின சீண்டல் குற்றச்சாட்டு மிகவும் அருவருக்கத்தக்க செய்தியாகும்.
சிறப்பு டி.ஜி.பி. மீதான பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு தமிழக அரசுக்கும், தமிழ்நாட்டிற்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது!
கரோனா புதிய அலை மீண்டும்
பெரு உருவெடுக்கும் அபாயம்!
கவனம்! கவனம்!! முழு கவனம்!!!
நம் நாட்டில் சுமார் 7, 8 மாநிலங்களில் கரோனா (கோவிட் 19) புதிய அலை மீண்டும் பெரு உருவெடுக்கும் அபாயம் உள்ளது.
தமிழ்நாட்டிலும் அது தொடங்கியுள்ளது என்பது அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உரிய செய்தியாகும்!
இதற்கு முக்கிய காரணம், முகக்கவசம் அணிவது முதல் மற்ற தனிநபர் இடைவெளி, அடிக்கடி சோப்பு போட்டுக் கைகழுவுதல், கிருமிநாசினிகளைத் தவறாமல் பயன்படுத்துதல் முதலியவற்றைக் 30% பேரே கடைப்பிடிக்கிறார்கள். மீதியுள்ள 70% பேர் மேற்கண்டவற்றை கடைப்பிடிக்காமல் சகஜமாக நடமாடுவதும், பழகுவதுமாக உள்ளனர்
எனவே, ஒவ்வொருவரும் தவறாமல் கண்டிப்பாக மேற்கண்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்தாமல் கடைப்பிடியுங்கள்!
நம் தோழர்கள்கூட முகக்கவசம் அணியாமலும், அணிவோர்கூட, அதை எடுத்து கழுத்துக்குக் கீழே ‘ஸ்டைலாக’ தொங்க விட்டுக் கொண்டு பேசுவதும் விரும்பத்தகாதவையாகும்.