வூஹான் நகர் குறித்த அமெரிக்க கட்டுரை; சீனா காட்டம்
பெய்ஜிங் : கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது. இதுகுறித்து உலகம் முழுக்க உள்ள ஊடகங்கள் பல, பல்வேறு விதமான கட்டுரைகளை எழுதி தீர்த்துவிட்டன.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வூஹான் குறித்து சர்வதேச தொலைக்காட்சி சேனல்கள், இதழ்கள் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளன.
சர்வதேச ஊடகங்கள் பல வூஹான் நகருக்குச் சென்று செய்தி சேகரித்து விஞ்ஞானிகளைப் பேட்டிகண்டு ஆவணப் படங்களையும் வெளியிட்டு விட்டன.
இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வூஹான் குறித்து முன்னதாக ஓர் கட்டுரை எழுதி இருந்தது.
வூஹான் நகருக்கு ஆராய்ச்சி மேற்கொள்ளச் செல்லும் விஞ்ஞானிகள் நோய் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர் என அந்த கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் இக்கருத்தை சீன அரசு மறுத்துள்ளது. முன்னதாக உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் சிலர் கொரோனா வைரஸ் பரவியது குறித்து ஆய்வு மேற்கொள்ள வூஹான் நகரில் தங்கி வைராலஜிஸ்ட்களிடம் பேட்டி எடுத்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அமெரிக்கா வைரஸ் பரவல் குறித்த விவகாரத்தை பெரிதுபடுத்தியவண்ணம் உள்ளது, உலக விஞ்ஞானிகளின் பார்வையை மாற்ற முயற்சி மேற்கொள்கிறது என சீன கம்யூனிச அரசு அமெரிக்க பத்திரிகையின் கட்டுரையை அடுத்து தீவிர விமர்சனத்தை முன் வைத்துள்ளது.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆந்திராவில் 13 லாரி ஓட்டுநர்களை கொன்று சரக்குகளை கொள்ளையடித்த கும்பல்: முதல்முறையாக ஒரே வழக்கில் 12 பேருக்கு தூக்கு தண்டனை; 7 பேருக்கு ஆயுள் சிறை- ஓங்கோல் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
ஓட்டுநர், கிளீனர்களை அடித்துக் கொலை செய்துவிட்டு, லாரியில் உள்ள சரக்குகளை கடத்தி விற்ற கும்பலைச் சேர்ந்த 12 பேருக்கு தூக்கு தண்டனையும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து ஆந்திர மாநிலம் ஓங்கோல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாட்டி லேயே முதன்முறையாக ஒரே வழக்கில் 12 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத் தில் உள்ளது ஓங்கோல். இங்குள்ள கொல்கத்தா - சென்னை தேசிய நெடுஞ் சாலையில் சரக்குகளை ஏற்றி வந்த லாரிகள் அடிக்கடி மாயமாகின.
ஜெ.விநாயகமூர்த்தி-, திருப்பூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனா முதல் அலையில், மத்திய அரசு முதன்முறையாக ஊரடங்கு அமல்படுத்தியபோது, பிரதமர் மோடியை விமர்சித்த ஊடகங்களும், கட்சிகளும் அதிகம்.
கொரோனாவை கட்டுப்படுத்த, உலகம் முழுதும் உபயோகிக்கப்பட்ட ஒரே ஆயுதம், ஊரடங்கு மட்டும் தான். அதை முதன் முதலில் பயன்படுத்திய நம் பிரதமர் மோடியை, உலக நாடுகள் பாராட்டின. அந்த இக்கட்டான காலகட்டத்தில் கூட, பல மாநில அரசுகள், மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை.
ஆனால், அதையெல்லாம் மீறி, முதல் அலையில், நம் நாடு கொரோனாவை வென்றது என்பதே உண்மை.
அதைத் தொடர்ந்து மத்திய அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கையை, மாநில அரசுகளின் பொறுப்பில் விட்டுவிட்டது.
பலவிதங்களில் சிறப்புடைய சுசீந்திரம் திருக்கோவிலின் பூஜை முறைகளில் தனித் தன்மை காண முடிகிறது.
*ஆகமவிதி கடைப்பிடிக்கப்படும் சுசீந்திரம் கோவில்*
பலவிதங்களில் சிறப்புடைய சுசீந்திரம் திருக்கோவிலின் பூஜை முறைகளில் தனித் தன்மை காண முடிகிறது.
🙏🇮🇳1
பல மன்னர்களால், பல கால கட்டங்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு முழுமையான திருக்கோவிலாக திகழ்கின்றது.
🙏🇮🇳2
இந்து மதத்தின் அனைத்து தெய்வங்களையும் இங்கு காணலாம். சைவத்திற்கும், வைணவத்திற்கும் ஒரே போல் முக்கியத்துவம் கொடுத்து சிவன், விஷ்ணுவிற்கு பூஜை களும், திருவிழாக்களும் இங்கு நடைபெற்று வருவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாகும்.
இறைவன் காட்சி தரமாட்டானா என்று தவம் புரிபவருக்கு மத்தியில் பக்தன் ஒருவன் துன்பத்தைக் காண சகியாமல் இறைவனே நேரில் வந்தார். ஆனாலும் சுற்றியிருந்தவர்களால் இறைவனைத் தரிசிக்கும் பேறை பெறமுடியவில்லை.
கோபத்தோடு உக்கிரமாக வெளிவந்த இறைவனைக் கண்சிமிட்டும் வினாடியில் கூட தரிசிக்க முடியாத நிலைமை நரசிம்மன் தூணிலிருந்து வெளிவரும் சமயம் நேர்ந்தது.
பக்தபிரகலாதனைக் காப்பாற்ற தூணிலிருந்து வெளிப்பட்டார் நரசிம்மர்... மனித உடலும் சிங்கமுகமும் கொண்டு அதிபயங்கரமான உருவத்தில் வெளிவந்த நரசிம்மரை அங்கிருந்தவர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. கையிலிருந்த ஆயுதத்தையெல்லாம் கீழே வீசியபடி அங்குமிங்கும் சிதறி ஓடினார்கள்.
பிரதமர் மோடி குறித்து பொய் செய்தி பகிர்ந்த பிரபலங்களுக்கு சிக்கல்
புதுடில்லி: அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பத்திரிகையில், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து செய்தி, படம் வெளியானதாக சமூக வலைதளத்தில், காங்., மூத்த தலைவர் திக்விஜய் சிங் உள்ளிட்டோர் பகிர்ந்தனர்.
ஆனால், அது பொய் செய்தி என்பது தெரியவந்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், சுகாதாரப் பணியாளர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் உரையாற்றினார். கொரோனா பரவல் காலத்தில் அவர்களுடைய சிறப்பான சேவையை பாராட்டி அவர் பேசினார்.
அப்போது உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டார். மோடி, முதலைக் கண்ணீர் வடிப்பதாக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் விமர்சித்தனர்.
கொரோனா தொற்று கிராமங்களுக்கு பரவாமல் இருக்க பிரச்சாரம் - கலக்கும் யோகி அரசு!
யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்த ரபிரதேச அரசு கொரோனா தொற்று மாநிலத்தில் பரவுவதைத் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
குறிப்பாக கிராமப்புறங்களில் நோய்க்கிருமிகள் பரவுவதைக் கட்டுப்படுத்த, மாநிலத்தில் பா.ஜ.க அரசு பல்வேறு பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளது. அதில் சமீபத்தியது 'மேரா கான், கொரோனா முக்த் கான்' என்று கிராமங்களை கொரோனா வைரஸ் தொற்று இல்லாதவையாக அறிவிக்கும் பிரச்சாரம் ஆகும்.
இதன் மூலம் சிறப்பாக செயல்படும் மூன்று கிராமங்கள் மற்றும் வார்டுகளுக்கு பல்வேறு வெகுமதிகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.