#goofymovies
Incendies (2010/French)
மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து புலம்பெயந்து கனடாவில் வசித்துவந்த Nawal இறந்துவிடுகிறார். அவரின் முதலாளியும் குடும்ப நண்பருமான Jean Lebel; Nawal இன் இரட்டை பிள்ளைகளான மகள் Jeanne மற்றும் மகன் Simonஐ அழைத்து பேசுகிறார்.
Nawal தனது உயிலில்,அவரின் கடைசி ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், அது நிறைவேற்றப்படவில்லை எனின் அவர் உடலை முறையாக அடக்கம் செய்யக்கூடாது என எழுதி இருப்பார்.அதன்படி இரட்டையர்கள் அதுவரை அறியாத அவர்களின் தந்தையையும், சகோதரனையும் தேடி தாய் அவர்களுக்கு எழுதிய கடிதத்துடன் செல்கின்றனர்.
மேலே சொன்ன அனைத்தும் படத்தின் ஆரம்ப காட்சிகள்தான். "அதன் பின் அவர்கள் தந்தையையும், சகோதரனையும் கண்டுபிடித்து கடிதத்தை ஒப்படைத்தார்களா?" என்பதுதான் மீதிக்கதை. கடைசி twist உங்களை நிச்சயமாக தலைகீழாக போட்டு தாக்கும்.
எண்ணற்ற விருதுகளை வென்ற இந்த படத்தின் இயக்குனர் Denis Villeneuve. இவர் படங்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. Prisoners, Enemy, Sicario, Arrival, Blade Runner 2049 போன்ற கிளாசிக் படங்களின் இயக்குனர்.
Incendies உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ரொம்ப நாளைக்கு பிறகு நெகிழ்ச்சியான feel good movie. Down syndromeல பாதிக்கப்பட்ட அண்ணனுக்கும், அவரின் தம்பிக்கும் இடையிலான பாசப்போராட்டம்தான் கதை. ரொம்ப இயல்பான நடிப்பு, வசனங்கள் என்று படம்முடியும் போது ஒரு மன நிறைவைத் தருகிறார்கள்.
எப்போவும் நிறைய positivity இருக்கிற படங்களை பார்க்க பிடிக்கும். Depressionல இருக்கிறப்போ எல்லாம் இந்த மாதிரி படங்களை பார்க்கிறப்போ டக்குன்னு நம்மளை boost பண்ணும். பிடித்த மனிதர்களும், படங்களும்தான் என்னோட happy pills.
படத்துல ஒரு வசனம் வரும், "உன்னால முடியாது என்று சொன்னவங்களுக்கு முன்னால, நீ அதை உன்னால முடியும்னு செய்து காட்டு". எத்தனை சத்தியமான வார்த்தைகள்.
#goofymovies
ஒரு இயக்குனர் தன் வாழ்வில் சந்தித்த பத்து பெண்களின் கதைதான் பதினொரு இயக்குனர்கள் இயக்கியுள்ள “X : Past is Present (2014)” படத்தின் கதை.
ஒவ்வொரு பெண்ணின் கதையையும் 10 நபர்கள் எழுதி, இயக்கி இருக்கிறார்கள். ஆக , படம் பல்வேறு நபர்களின் ஒரு கூட்டுப்பார்வை. இப்படி ஒரு விசித்திரமான ஐடியாவிற்கு உரிமையாளர், விமர்சகரும், இயக்குனருமான சுதிஷ் கமாத்.
திரைப்பட திருவிழா ஒன்றில் இயக்குனர் கே என்கிற கிஷனை சந்திக்கிறார் ஒரு பெண். இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து காலை பத்து மணி வரை அந்தப்பெண்ணுடன் கிஷன் பேசும் உரையாடல் தான் படம். காதல், காமெடி, காமம், ஹாரர், ஃபேன்டசி என சினிமாவின் பல வகைகளை கலந்து எடுக்கப்பட்டு இருக்கிறது X.
புத்தகங்களை வாங்கி அதன் வாசம் முகர்ந்து நெஞ்சோடு அணைத்து வாசித்த காலங்கள் கடந்து, இப்பொழுது மின்னூல்கள், புத்தகம் வாசிக்கும் செயலிகள், ஒலிப்புத்தகங்கள் என்று பல பரிமாணங்களை அடைந்துள்ளது. இன்று ஒலிப்புத்தகங்களுக்கான செயலியான "storytel" பற்றி பார்க்கலாம்.
மராத்தி, ஆங்கிலம், தமிழ், மலையாளம், ஹிந்தி, பெங்காலி மொழிகளில் ஒலிபுத்தகங்களும், புத்தகங்களும் இருக்கின்றன. விரும்பிய மொழியில் கதை கேட்கலாம்.
எண்ணற்ற வகைகளிலும் ஒலிப்புத்தகங்கள் கிடைக்கின்றன. crime, thrillers, short stories, non - fiction, fiction, history என விரும்பிய genre ஒலிப்புத்தகங்களை கேட்கலாம்.
அறிவியல் வளர்ச்சியும் படிப்பறிவும் உள்ள இந்த காலத்திலே, உலகையே ஆட்டி வைத்து பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்திய 'கொரோனா" வைரஸ் நோய்க்கிருமிக்கு 'கொரோனா தேவி' என்று பெயர் வைத்து, சிலையும் வைத்து கடவுளாக்கி விட்டார்கள்.
ஒவ்வொரு கடவுளரையும் எப்படி உருவாக்கியிப்பார்கள் என்று யோசிக்க முடிகிறது. தன் இஷ்டத்துக்கு ஒரு கடவுளும், அதன் பின்னணியில் ஒரு ovop கதையும் சேர்த்து ஒரு கூட்டத்தையே அடிமுட்டாள் ஆக்கி வேண்டுதல்களும்,பரிகாரமும், விரதமும், பூசையும் என்று சொல்லி எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள்.
உலகின் தீயவர்களை அழிக்க தேவிபராசக்தி கோரோனா தேவியாக அவதாரம் எடுத்து வந்தார், உலகை காத்தார் என்று
காதிலேயே செய்வார்கள். தீர்த்தமாக மாட்டு மூத்திரத்தையும், நைவேத்தியமாக மாட்டு சாணியையும் கொடுத்தாலும் ஆச்சரிய பட ஒன்றும் இல்லை.
IMDb Rating : 8.4/10
சைபர் கிரைம் குற்றங்களையும், அதை கண்டுபிடிக்கும் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகளையும், அவர்களுடன் இணைந்து பணியாற்றும் temporary பணியாட்கள் இருவர் முகம்கொடுக்கும் பிரச்சனைகளையும் பற்றிய படம்தான் இது.
படத்தில் உண்மையில் நடந்த மூன்று சைபர் கிரைம் குற்றங்களையும், அதன் குற்றவாளிகளை கண்டுபிடித்த முறைகளையும் ரொம்ப எளிமையாக காட்சிப்படுத்தி இருப்பார்கள். Cyber crime என்றதும் ஆங்கில படங்களில் வரும் high tech, hacking போன்று இல்லாமல் இயல்பான வழிகளில் கண்டுபிடித்திருப்பார்கள்.
அதன் இடையே, நாம் கவலையீனமாக விடும் சிறு தவறுகள் மூலம் நடக்கும் வெவ்வேறு குற்றங்கள் : Data theft, Identity fraud, Cyberextortion, phishing பற்றியும் காட்சிப்படுத்தி இருப்பார்கள்.
படத்தில் ஒரு காட்சியில்,
"They want what you've got. Don't give it to them."
குடும்ப நாவல்களின் சூப்பர் ஸ்டார் முத்துலட்சுமி ராகவன் இறந்துவிட்டார். எங்க அம்மா அவங்களோட பெரிய ரசிகை. அம்மாக்காக வாரம் 2 புத்தகம் லைப்ரரில எடுத்து கொடுக்கிறது வழக்கம். முத்துலட்சுமி ராகவன் புத்தகங்களுக்கு என்றே தனியா இரண்டு rack ஒதுக்கியிருப்பாங்க.
அவங்க புத்தகம் எல்லாம் தொடர்ச்சியா பெண்களால் வாசிக்கப்படுற புத்தகம். எப்போ போனாலும் அந்த rackல ரெண்டு பேர் புத்தகம் எடுத்திட்டு இருப்பாங்க. 2,3,4,5,6,7,8 பாக நாவல்களை எழுதி இருக்கிறார். ஒவ்வொன்றும் 300 தொடக்கம் 500 பக்கங்கள் வரை இருக்கும்.
'எப்பிடி அம்மா முத்துலட்சுமி ராகவன் இப்பிடி எழுதுறாங்க?' என்று ஒரு தடவை கேட்டபோ 200 ஆவது நாவலை 20 பாகங்களாக எழுதப்போவதாக சொன்னார். இப்போ வரை 164 நாவல்கள் எழுதி இருக்கிறார். இலக்கியவாதிகள் தட்டையான எழுத்து என்று விமர்சித்தவரை ஆதர்சமாக வைத்து பல பெண்கள் எழுத ஆரம்பித்திருந்தார்கள்.