இது உங்கள் இடம்: கார்த்தி சிதம்பரம் யோசனை சொல்வாரா?

எஸ்.ராமகிருஷ்ணன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரம், தமிழக அரசுக்கு ஓர், 'அற்புதமான' யோசனையை வழங்கிஉள்ளார்.
அதாவது, தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்பனையை துவக்க வேண்டும் என, அவர் கூறியுள்ளார்.ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவின் தாக்கத்தால், நம் நாடு பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தமிழகமும் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
தற்போது புதிதாக ஆட்சியில் அமர்ந்துள்ள தி.மு.க., அரசு, கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றவும், இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.தமிழக அரசின் பொருளாதாரத்தை மேம்படுத்த, கார்த்தி சிதம்பரம், லாட்டரி யோசனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், பொருளாதார நிபுணருமான, சிதம்பரத்தின் மகன் என்பதை, இந்த யோசனையின் மூலம் அவர் நிரூபித்துள்ளார்.தற்போது, தமிழக மக்கள் வேலையின்றி, தொழில் செய்யவும் வழியின்றி, அன்றாட செலவுக்கும் கூட பணம் சம்பாதிக்க முடியாமல் தெருவுக்கு வந்துவிட்டனர்.
இதற்கு முன், தமிழர்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை எல்லாம், தமிழக அரசின், 'டாஸ்மாக்' கடைகளுக்கு கொடுத்தனர். அதனால், கொரோனா காலத்தில் சேமிப்பு என்று ஏதுமில்லை.இந்நிலையில், லாட்டரி விற்பனையையும் அரசு கையில் எடுத்தால், தமிழக மக்களை யாராலும் காப்பாற்ற முடியாது.
லாட்டரி சீட்டால் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அழிந்த நிலையில் தான், அதன் விற்பனையை, தமிழக அரசு நிறுத்தியது.

மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை; பணம் சம்பாதிப்பது தான் அரசின் குறிக்கோள் என, கார்த்தி சிதம்பரம் நினைத்தால், பின்வரும் ஆலோசனைகளையும்,
தி.மு.க., அரசுக்கு அவர் வழங்கலாம்...
*அரசு அனுமதியுடன் கஞ்சா விற்பனை
*சூதாட்டம், 'நைட் கிளப்' ஆகியவற்றிற்கு அனுமதி
*தாய்லாந்தில் உள்ளது போல், விபசாரத்தை ஒரு தொழிலாக அங்கீகாரம் அளிக்க வேண்டும்.இவை போதும்... தமிழக அரசுக்கு இந்த யோசனைகளை வழங்குவாரா?

தினமலர்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

31 May
உலகிலேயே அதிக மக்கள் தொகை: என்ன திட்டத்தில் இருக்கிறது இந்தியா?

சீனாவின் ஆறாவது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு சமீபத்தில் வெளியானது. இந்தக் கணக்கெடுப்பில் சீனாவுக்கு நிறைய செய்திகள் இருந்தன. கொண்டு கூட்டிப் பொருள் கொண்டால் அதில் இந்தியாவுக்கும் செய்திகள் உண்டு.
இந்தக் கணக்கெடுப்பின்படி சீனாவின் மக்கள்தொகை 141 கோடியைத் தாண்டிவிட்டது. உலகிலேயே அதிக மக்கள் வசிக்கும் நாடான சீனாவை விரைவில் இந்தியா விஞ்சிவிடும் என்றார்கள். இது 2030-ல் நடக்கும் என்று மக்கள்தொகைக் கணக்காளர்கள் மதிப்பிட்டார்கள்.
பின்னர், கோட்டைச் சற்று முன்னால் தள்ளி வைத்து 2027-ல் முந்திவிடும் என்றார்கள். இப்போது 2025-லேயே இந்தியா உலகின் அதிக மக்கள் வசிக்கும் நாடாகிவிடும் என்றிருக்கிறார்கள்!
Read 25 tweets
31 May
புது காபி பொடியின் புது மணம் ரொம்ப நேரம் நீடிக்காது!

தமிழக நிதியமைச்சர் தியாகராஜன், சமீபத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் கவுன்சிலின் 43வது கூட்டத்தில் பங்கெடுத்துப் பேசினார்.
அடுத்த நாள் ஊடகங்களில், தான் முந்தைய தினம் என்னவெல்லாம் வலியுறுத்தினோம் என்பதை அவரே உணர்ச்சிப் பொங்க, தமிழக மக்களுக்கு எடுத்துரைத்தார்.
அவர் தெரிவித்த கருத்துகளில் உள்ள சாரம் என்ன என்பதைப் பார்த்தால், ஆழமாய் எதுவுமே தெரிந்து கொள்ளாமல், தனக்கிருக்கும் அறிவை மட்டுமே பறைசாற்றி, 'முதல்வர் ஸ்டாலினை விட, எனக்கு தான் மூளை அதிகம்' எனக் காட்டிக் கொள்ளும் முயற்சி என்பதைத் தவிர, வேறு ஒன்றும் விசேஷமாக இல்லை.
Read 23 tweets
31 May
இது உங்கள் இடம்: அவர்கள் விவசாயிகள் அல்ல!

வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்:
கொரோனாவின் கோரத்தாண்டவத்தில் ஒட்டு மொத்த நாடே சிக்கித் தவிக்கையில், டில்லியில் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை கொளுத்தி, விவசாய போராட்டத்தின் ஆறாவது மாதத்தை கொண்டாடிஇருக்கின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலும், பிரதமர் மோடி எதிர்ப்பாளர்கள், முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தியுள்ளனர். எப்போதும் போலவே, முதல்வர் ஸ்டாலினும், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
Read 10 tweets
31 May
ஐந்து அதிசயங்களை உள்ள‍டங்கிய  ஆயிரமாண்டு ஆலயம் ஒன்று உள்ள‍து

கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் ஆறாவது கிலோமீட்ட‍ர் தொலைவில் உள்ள‍து "பேரூர் " என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்....

நால்வரால் பாடல்பெற்ற‍ இவ்வாலயம், மேல சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது...

🙏🇮🇳1
இங்கு "நடராஜப்பெருமான்" ஆனந்த தாண்டவம் ஆடியபோது அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச் செய்தியும் உண்டு....

🙏🇮🇳2
இக்கோவிலில் ஐந்து அதிசயங்கள் எது என்றால்.....

*இறவாத "பனை", 

*"பிறவாத புளி," 

*"புழுக்காத சாணம்," 

*"எலும்பு கல்லாவது," 

*"வலதுகாதுமேல் நோக்கிய நிலையில் இறப்ப‍து." 

"இதுதான் அந்த அதிசயங்கள்....!!"

🙏🇮🇳3
Read 30 tweets
30 May
படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்தி பின் படியுங்கள்.

ஒரு தெளிவு உங்களுக்குள் பிறக்கலாம்...
(இது ஆத்மார்ந்த மூத்தோரின் அறிவுரை)
உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.

நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.

உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.
ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....

*ஒவ்வொரு மனிதனும்*
*தனித்தனி ஜென்மங்கள்.*

அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும்.
அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே.
Read 17 tweets
30 May
கரோனா வைரஸ் பரவல் காலத்திலும் பாஜக தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்கள்.
ஆனால், சிலரோ அரசின் தடுப்பூசியைக் கேள்வி கேட்டு, அரசின் நம்பிக்கையைக் குலைத்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை மோடி தடுப்பூசி என்று விமர்சிக்கிறார்கள் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையொட்டி பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று காணொலியில் பேட்டி அளித்தார்.
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(