சீனாவில் திடீரென அதிகரிக்கும் கோவிட் தொற்று; அரசு அதிர்ச்சி
கங்சோ: சீனாவின் தெற்கு மாகாணமான கங்சோ மாகாணத்தில் உள்ள முக்கிய நகரம் ஒன்று கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகத்துக்கு கொரோனா வைரஸை பரப்பிவிட்டு தற்போது சீனா படிப்படியாக அதிலிருந்து மீண்டு கொண்டிருக்கும் நிலையில் ஹாங்காங்கின் வடக்குப் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த கங்சோ பகுதியில் வைரஸ் தாக்கம் அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்பகுதியில் 1.5 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த பகுதியில் வைரஸ் சோதனை மேற்கொண்டபோது 20 புதிய நோயாளிகளுக்கு வைரஸ் தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் அந்த மாகாணத்தின் சுகாதாரத் துறையால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த மாகாணத்தில் இருந்து மற்ற மாகாணங்களுக்கு வைரஸ் பரவாமல் தடுக்க சீன கம்யூனிச அரசு இந்த மாகாணத்தில் இருந்து வெளியேறும் அனைத்து வழிகளையும் மூடியுள்ளது.சுகாதாரத் துறையின் பரிசோதனை முடியும்வரை இந்த மாகாணத்திலிருந்து குடிமக்கள் யாரும் வெளியே செல்ல அனுமதி இல்லை.
இந்தியாவில் இருந்தோ அல்லது வேறு நாடுகளில் இருந்தோ யாராவது வந்து புதிய வகைப் வைரஸை பரப்பிச் சென்று உள்ளனரா என்று சீன அரசு சந்தேகிக்கிறது.
ஒரு நாளில் சராசரியாக 7 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இப்பகுதியில் உள்ள முக்கிய மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸை கடந்த 6 மாதமாக திறம்பட கையாண்டு வந்த சீனா, அரசு தற்போது இந்த புதிய வைரஸ் தாக்கத்தால் கவலை அடைந்துள்ளது.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
உலகிலேயே அதிக மக்கள் தொகை: என்ன திட்டத்தில் இருக்கிறது இந்தியா?
சீனாவின் ஆறாவது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு சமீபத்தில் வெளியானது. இந்தக் கணக்கெடுப்பில் சீனாவுக்கு நிறைய செய்திகள் இருந்தன. கொண்டு கூட்டிப் பொருள் கொண்டால் அதில் இந்தியாவுக்கும் செய்திகள் உண்டு.
இந்தக் கணக்கெடுப்பின்படி சீனாவின் மக்கள்தொகை 141 கோடியைத் தாண்டிவிட்டது. உலகிலேயே அதிக மக்கள் வசிக்கும் நாடான சீனாவை விரைவில் இந்தியா விஞ்சிவிடும் என்றார்கள். இது 2030-ல் நடக்கும் என்று மக்கள்தொகைக் கணக்காளர்கள் மதிப்பிட்டார்கள்.
பின்னர், கோட்டைச் சற்று முன்னால் தள்ளி வைத்து 2027-ல் முந்திவிடும் என்றார்கள். இப்போது 2025-லேயே இந்தியா உலகின் அதிக மக்கள் வசிக்கும் நாடாகிவிடும் என்றிருக்கிறார்கள்!
புது காபி பொடியின் புது மணம் ரொம்ப நேரம் நீடிக்காது!
தமிழக நிதியமைச்சர் தியாகராஜன், சமீபத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் கவுன்சிலின் 43வது கூட்டத்தில் பங்கெடுத்துப் பேசினார்.
அடுத்த நாள் ஊடகங்களில், தான் முந்தைய தினம் என்னவெல்லாம் வலியுறுத்தினோம் என்பதை அவரே உணர்ச்சிப் பொங்க, தமிழக மக்களுக்கு எடுத்துரைத்தார்.
அவர் தெரிவித்த கருத்துகளில் உள்ள சாரம் என்ன என்பதைப் பார்த்தால், ஆழமாய் எதுவுமே தெரிந்து கொள்ளாமல், தனக்கிருக்கும் அறிவை மட்டுமே பறைசாற்றி, 'முதல்வர் ஸ்டாலினை விட, எனக்கு தான் மூளை அதிகம்' எனக் காட்டிக் கொள்ளும் முயற்சி என்பதைத் தவிர, வேறு ஒன்றும் விசேஷமாக இல்லை.
கொரோனாவின் கோரத்தாண்டவத்தில் ஒட்டு மொத்த நாடே சிக்கித் தவிக்கையில், டில்லியில் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை கொளுத்தி, விவசாய போராட்டத்தின் ஆறாவது மாதத்தை கொண்டாடிஇருக்கின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலும், பிரதமர் மோடி எதிர்ப்பாளர்கள், முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தியுள்ளனர். எப்போதும் போலவே, முதல்வர் ஸ்டாலினும், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்தி பின் படியுங்கள்.
ஒரு தெளிவு உங்களுக்குள் பிறக்கலாம்...
(இது ஆத்மார்ந்த மூத்தோரின் அறிவுரை)
உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.
நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.
உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.
ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....
*ஒவ்வொரு மனிதனும்*
*தனித்தனி ஜென்மங்கள்.*
அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும்.
அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே.
கரோனா வைரஸ் பரவல் காலத்திலும் பாஜக தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்கள்.
ஆனால், சிலரோ அரசின் தடுப்பூசியைக் கேள்வி கேட்டு, அரசின் நம்பிக்கையைக் குலைத்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை மோடி தடுப்பூசி என்று விமர்சிக்கிறார்கள் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையொட்டி பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று காணொலியில் பேட்டி அளித்தார்.