இளையராஜா ஏன் இசை உலகின் பெரியார் #Thread#ilayaraja
சிந்து பைரவி படத்தில் வரும் மரி மரி நின்னே என்ற தியாகராய காம்போதி ராக கீர்த்தனையை சாருமதி ராகத்தில் மெட்டுப்போட்டு தியாகராஜரை தன் மெட்டுக்கு எழுத வைத்தவர்.அன்று அவரை மோசமாக எழுதி கோர்ட்டு வரை இழுத்தவர்கள் அறிய வகை ஏழைகள்.
மாம ஊடு மச்சான் ஊடு என்ற கானா பாட்டை மோகனம்&சங்கராபரணம் கலந்து பிலஹரி ராகத்தில் மெட்டு போட்டு பக்கவாத்தியத்தை மக்களின் கருவியான பறை மற்றும் பம்பை இசைத்து orchestrationஐ westernல் அமைத்து கலப்பு செய்து பல கர்நாடக இசை ஜாம்பவான்களை வயிறு எரிய வைத்து கால் நடுங்க வைத்தவர் ராஜா.
அதேப்போல் ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்ற பாடலை ஆரம்பத்தில் நாட்டுப்புற இசையான கும்பியில் ஆரம்பித்து பின்பு திரை இசை வடிவம் கொடுத்து கர்நாடக இசையின் மிருதங்கத்தை பக்கவாத்தியமாக அமைத்து western chorusல் முடிப்பார்.
பிள்ளை நிலா என்றப்பாடல் எப்போதும் திரை இசையை பொறுத்தவரை சரணம் முடிந்ததும் இடை இசையைப்போடுவார்கள் ஆனால் முதன் முதலில் அந்த இடத்தில் ஒரு மலைவாழ் மக்களின் இசையை hummingஆக வைத்து மிரட்டினார் ராஜா அதேப்பாட்டில் மூன்றாவது சரணத்தில் துணி தோய்க்கும் மக்களான வண்ணார்களின் இசையை சேர்ப்பார்
கிழக்கு வாசல் படத்தில் வரும் வீட்டுக்கு வீடு வாசப்படி வேண்டும் என்ற பாடலில் raa ra ra raa ra ra raara ra ra என்ற western vilolin இசைக்கோர்வையை வீட்டுக்கு வீடு வாசப்படி வேண்டும் என்று நாட்டுப்புற தாளதில் மெட்டு அமைத்திருப்பார்
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்போல் வைச்ச கிளி என்ற கர்நாடக இசை வடிவு பாடலின் இடையில் உடுக்கையை 1 நிமிடம் அடித்து அது முடியும் அடுத்த நொடியில் அதே இசைக்கோர்வையை Guitarல் வாசிப்பார்
ஏரியில எலந்த மரம் தங்கச்சி வச்ச மரம் என்ற நாட்டுப்புற பாடலை harmonium இசைக்கோர்வையாய் பிண்ணியிருப்பார்
பத்திரகாளி படத்தில் ஒரு அக்கிரகாரத்து ஆணும் பெண்ணும் பாடும் பாடலான வாங்கோனா வாங்கோனா பாடலில் guitarல் ஆரம்பித்து பாடல் முழுவதும் ஒத்த அடி பறையில் அமைத்திருப்பார்
40 வருடங்களுக்கு முன் பறையை பொது இடத்தில் வந்து வாசிக்க முடியாது அதை முதன் முதலில் திரை இசையில் ஜனநாயகப்படுத்தி இசை நிகழ்ச்சியில் கொண்டுவந்து வாசித்தவர் ராஜா
நாம் இளையராஜாவின் இசையில் இனிமையை தேடுகிறோம் ஆனால் 2000 வருட சாதிய இந்தியாவில் அவர் செய்த புரட்சி அலப்பறியது
ராஜாவை பொறுத்தவரை உயர்ந்த இசை தாழ்ந்த இசை எல்லாம் இல்லை அனைத்தையும் ஒரே standardல்தான் வைப்பார் அதனால்தான் ராஜா ஒரு பாட்டில் கை வைத்தால் கடைக்கோடி மக்களில் இருந்து இசை ஜாம்பவான்கள் வரை அவரவர் ரசனைக்கேற்ப ரசிக்க முடியும் எனவேதான் அவர் இசை உலகின் பெரியார்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh