என் அப்பா, திரு.முகமதலி அவர்களின் நினைவுநாள் இன்று. அதற்கான ஒரு நீண்ட thread இது. என் சிறு வயதிலேயே மகேந்திரன் பாரதிராஜா பாலுமகேந்திரா பாலசந்தர் போன்ற பெயர்களை எனக்கு அறிமுகம் செய்தது அப்பா அம்மாவின் உரையாடல்கள்தான். அந்த ரசனமிக்க காதல் ஜோடிக்கு என் முதல் நன்றி
என் அப்பா!
அரை டவுசர் போட்ட காலத்தில், அதிலும் அவரிடமிருந்த ஒரே அரை டவுசர் அவருடைய பள்ளி சீருடையான அந்த ஓட்ட காக்கி டவுசர்தான், அந்த கஞ்சிக்கு வழியில்லாத காலத்திலேயே எப்படியோ ஒரு ‘Click-3’ கேமிரா வாங்கி, போட்டோக்கள் பல எடுத்தவர்.
எடுத்த போட்டோக்களின் சதுர நெகடிவ்களை கழுவி ப்ரிண்ட் போட கூட அவரிடம் காசில்லை. ஒரு சில போட்டோக்கள் தவிற அவர் க்ளிக் செய்த பல போட்டோக்களை அவரே நெகட்டிவாக மட்டும்தான் பார்த்திருக்கிறார்.
நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது அப்பா ப்ரெய்ன் ட்யூமர் காரணமாக இரண்டு வருட சிகிச்சைக்கு பிறகு இறந்து போனார். அவருடைய ஒரு பச்சை சூட்கேஸ் எங்கள் வீட்டில் இருந்தது. அதை திறந்தால் படுபுடவை கட்டி ஊர்வசி அழகாக அமர்ந்திருக்கும் ஒரு பேப்பர் கட்டிங் ஒட்டியிருக்கும். மிகவும் ரசனையான ஆள்.
அந்த பெட்டியில் அவருடைய முக்கியமான பொருட்கள் இருக்கும். அதில் அவர் பிண்ட் போடாத பல சதுர நெகட்டிவ்கள் இருந்தன.
2010ல் அந்த நெகட்டிவ்களை எப்படியாவது டெவலப் செய்து ப்ரிண்ட் போட வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
என் தந்தையின் நிறைவேறா கணவை பூர்த்தி செய்வதன் மூலம் எனக்கு ஒரு மன நிறவு கிடைக்கும் என்று எண்ணினேன். அந்த பழைய கால சதுர நெகட்டிவ்களை ப்ரிண்ட் போடும் வசதி இப்பொழுதிருக்கும் எந்த கடைகளிலும் இல்லை. வடபழனி முருகன் கோயில் தெருவில் ஒரு பழைய போட்டோ ஸ்டுடியொ இருந்தது.
ஒரு நெகட்டிவ்கு ரூபாய் 30 என்று பேரம் பேசி சாஃப்ட் காப்பியாக கன்வர்ட் செய்தேன்.
அந்த போட்டோக்களை பார்த்த பிறகுதான் தெரிந்தது எனக்கு சினிமா ஆர்வம் எங்கிருந்து வந்ததென்று.
80களில் குங்குமம் குமுதம் விகடனில் வந்த தொடர்கதைகளையெல்லாம் வாராவாரம் வெட்டி வைத்து கடைசியில் ஒரு முழு நாவலாக பைண்ட் செய்து வைப்பார் அப்பா. எண்டமூரி வீரேந்திரநாத், சுஜாதா, பாலகுமாரன், சிவசங்கரி முக்கியமாக கலைஞர். கலைஞரின் தமிழுக்கு அப்பா அடிமை. கலைஞரின் பேரபிமானி #HBDKalaignar98
எங்க ஊரு கொக்கராயன்பேட்டைல மாரியம்மன் கோயில் திருவிழா சமயத்துல, ரெக்கார்ட் டான்ஸ் நிகழ்ச்சி நடக்குமாம். ரெக்காடான்சர் ப்ரேமா ஆடும் அந்நாட்களில் ஊரே ரெக்க கட்டி பறக்கும். ஓட்ட காக்கி டவுசர போட்டுகிட்டு எங்கப்பா அவங்ககூட அப்படி ஒரு டான்ஸ் போடுவாராம்.
..கூட்டிட்டு வந்து ஆட்டத்த கண்டினியூ பன்னாங்களாம். அப்படி ஒரு மன்மதராசா எங்கப்பா. ஊருல இருக்க அத்தன பொன்னுங்களும் அப்பாவ சைட் அடிப்பாங்களாம். ஆனா அப்பா லவ் பன்னது எங்கம்மாவ மட்டுந்தானாம். நான் பார்த்த சிறந்த காதலர்கள் அப்பா அம்மாதான். LUV U APPA
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மரணதண்டனை விதித்தால் பாலியல் குற்றங்கள் நடக்காது என்று நம்புவது சரியா? கோவையில் இப்படி ஒரு குற்றவாளியை போலிசே சுட்டுக் கொன்றது நாம் அறிந்ததே. அதற்கு பிறகு கொடூரங்கள் நடக்கவில்லையா என்ன?
பெண்ணை காமப்பொருளாக மட்டுமே பார்க்கும் ஆணின் மனநிலை மாற்றம் பெர வேண்டும் #JusticeforJayapriya
#JusticeForJayarajandBennicks என்று போராடிக்கொண்டிருந்த நாம், இப்பொழுது மீண்டும் என்கவுண்டர் கேட்கிறோம். சட்டத்தை நம் வசதிக்கு வளைக்க நினைப்பதே ஒரு குற்றம்தான். கொலைக்கு தண்டனை கொலை என்பது கண்டிப்பாக தீர்வல்ல. இதன் #RootCause என்னவென்று ஆராய வேண்டும். பயத்தை விதைப்பது தீர்வல்ல
ஜெயராஜ் பென்னிக்சை கொன்றவர்களுக்கும், ஜெயப்பிரியாவை கொன்றவர்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இவர்கள் ஏன் இந்த கொடூரங்களை செய்தனர்? Becos they can. அவர்களால் முடியும். அதனால் செய்தனர். போலிசுக்கு சாமானியனும், சைக்கோபாத்துகளுக்கு ஒரு 7வயது குழந்தையும் easy prey.