#துளசிதேவி அவர் மகிமைகளை சொல்லில் அடக்கமுடியாது. சகல தோஷங்களையும் துயரங்களையும் விரட்டும் வல்லமை வாய்ந்தது துளசி. புராணங்களிலும் புனித நூல்களிலும் துளசியின் பெருமை குறித்து விவரிக்கப்பட்டுள்ளன. தேவர்களும், அசுரர்களும் சாகா வரம் தரக்கூடிய அமிர்தத்தைப் பெற கடலைக் கடைந்த போது
அதிலிருந்து ஆலகால விஷம், அமிர்தம் தவிர துளசி தேவி, மகாலட்சுமி, சாளக்கிராமம் உள்ளிட்ட தெய்வீக வாய்ந்தவையும் வெளியாகின. அப்படி வெளியான துளசி தேவி திருமாலை சரணடைந்தார். மூலிகை செடியாக வெளி வந்த துளசி, திருமாலுக்கு மிகப் பிரியமானவர். நம் முன்னோர்கள் பெரும்பாலானோரின் வீட்டில் துளசி
மாடம் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது துளசி மாடம் வைக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. ஓரிடத்தில் வகை வகையாக மலர்ச் செடிகள் செழித்து வளர்ந்திருந்தாலும் அங்கு துளசிச் செடி இல்லையெனில், அந்த இடத்தை நந்தவனமாக ஏற்க இயலாது. துளசி படர்ந்த இடத்தை ‘பிருந்தாவனம்’ என்று சொல்லுவார்கள்.
துளசிக்கு ‘பிருந்தா’ என்றும் பெயர் உண்டு. துளசியின் மகிமையை முழுவதும் வர்ணிக்க இயலாது என்றாலும் #பத்மபுராணம் குறிப்பிடுவதில் சில:
ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான மேலும் எல்லா வகையிலும் புனிதமான துளசி தேவியை சாதாரணமாக தொடுவதாலும், பார்ப்பதாலும், உணரப்படுவதாலும், துளசியின்
மண்ணை வணங்குவதாலும், துளசியைப் பற்றி கேட்டபதாலும், வளர்ப்பதாலும், நம் பாவங்கள் நீங்கி புனிதமடைவோம். துளசி அனைத்து பக்தி தொண்டுகளின் சாரம். துளசி இலை பூ, வேர்கள், கிளைகள், நிழல் எல்லாம் ஆன்மீகமானவை. பக்தியுடன் துளசியின் இலையை கிருஷ்ணருக்கு அளிப்பவர் அவர் அருகிலேயே வாழ்வர். மற்ற
தெய்வங்களும் அவர் கூடவே இருப்பார். துளசியின் மண்ணை எடுத்து உடலில் பூசிக்கொண்டு ஸ்ரீ கிருஷ்ணரை வணங்குபவர், ஒவ்வொரு நாளும் நூறு நாள் பூஜை செய்த பயனை அடைவர். துளசி மஞ்சரியை கிருஷ்ணருக்கு அளிப்பவர் மற்ற எல்லா புஷ்பங்களையும் அளித்த பலனை பெறுவர். ஒருவர் துளசியை பார்த்தாலோ அது இருக்கும்
வீட்டிற்கோ, தோட்டத்திற்கோ சென்றால் அவர் பிரம்ம ஹத்தி பாவத்தில் இருந்தும் கூட விடுதலை பெறுகிறான். துளசி உள்ள காடுகள் வீடுகள் ஆகிய இடங்களில் கிருஷ்ணர் ஆனந்தமாக வசிக்கிறார். துளசி உள்ள வீடுகள் எந்த கேடான காலத்திலும் வீழ்ச்சி அடையாது. எல்லா புனித ஸ்தலங்களிலும் புனிதமானது. துளசியின்
வாசனை முகர்ந்து பார்க்கும் அனைவரையும் தூய்மையாக்கும். துளசி இல்லாமல் கிருஷ்ணர் பூவோ, உணவோ அல்லது சந்தனத் தைலமோ ஏற்பதில்லை.
துளசியைக் கொண்டு கிருஷ்ணரை தினமும் வணங்கும் பக்தர்கள், எல்லா ஸ்தலங்களையும், தானங்களையும், மற்றும் தியாகங்களையும் செய்தவர் ஆகிறார்.
அவர் எல்லா இலக்கியம்
புராணங்களையும் படித்தவர் ஆகிறார். கிருஷ்ணருக்கு படைக்கப்பட்ட துளசியை தலையிலோ, வாயிலோ போட்டுக் கொண்டவர் கிருஷ்ணரின் திருநாட்டிற்குள் நுழைவர். #கலியுகத்தில் ஒருவர் துளசியை நினைத்தாலோ, வளர்த்தாலோ, வணங்கினாலோ அவர் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டு இறுதியில் கிருஷ்ணரை அடைகிறார்.
துளசியை கொண்டு கிருஷ்ணரை பூஜிப்பவர் தன் முன்னோர் அனைவரையும் பிறவித் தளையிலிருந்து விடுவிக்கிறார். துளசியின் மகிமையை பிறருக்குச் சொன்னால் ஆன்மீக உலகில் நிலையான ஓரிடம் காத்திருக்கும் என்பது திண்ணம். #ஸ்ரீ_துளசி_ப்ரணாம்
வ்ருந்தாயை துளசி தேவ்யாயை ப்ரியாயை கேஷவசஸ்ய
கிருஷ்ண பக்தி ப்ரதே
தேவி ஸத்யவத்யை நமோ நம:
எம் பெருமான் கேசவனுக்கு மிகவும் பிரியமான, ஸ்ரீமதி துளசி தேவிக்கு, விருந்தாவன ராணிக்கு மீண்டும் மீண்டும் எனது வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.
துளசிதேவி பகவான் கிருஷ்ணருக்கு பக்தி தொண்டு புரியக் கூடிய வரத்தை அளிக்கும் தாங்கள் மிகமிக உயர்ந்த ஸத்யத்தை உடையவர்.
கோரோ நிஜ தாஸி
தீன கிருஷ்ண தாஸே கோய், ஏய் ஜனமோர ஹோய்
ஸ்ரீ ராதா கோவிந்த ப்ரமே ஸதாஜேன பாஸி
ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிரியமான துளசிதேவி தங்கள் முன் நான் மீண்டும் மீண்டும் வீழ்ந்து வணங்குகிறேன். ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஷ்ணருக்கு பக்திதொண்டு செய்வதே எனது பூரணமான விருப்பம்.
தங்களை அடைக்கலமாகக்
கொண்ட அனைவரின் விருப்பங்களும் பூர்த்தியாகிவிடும். தங்களது கருணையை அவர்பால் அருளி, அவரை விருந்தாவனவாசி ஆக்குகிறீர்கள். ஸ்ரீ விருந்தாவன திவ்ய தேசத்தின் இனிய வனங்களில் எனக்கும் ஓர் இருப்பிடத்தை தாங்கள் அளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு ராதா மற்றும் கிருஷ்ணரின் அழகிய மதுர
லீலைகளை நான் என்றும் எண்ணியிருப்பேன். விரஜபூமியின் இடையர்குலச் சிறுமியரைப் பின்பற்றுபவனாக என்னை ஆக்கிவிடுமாறு நான் வேண்டுகிறேன். பக்தித் தொண்டெனும் உயர்ந்த வரத்தை எனக்கு அளித்து தங்களது தாஸனாக என்னை ஆக்கிக் கொள்ள வேண்டுகிறேன். ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் பணிவான சேவகனாகிய நான்
வேண்டுவது, ஸ்ரீ ராதா மற்றும் கோவிந்தரின் தூய பக்தி தொண்டு புரிய வேண்டும் என்பதே!
யானி கானிச பாபனி ப்ரஹ்ம ஹத்யாதிகானி
தானி தானி ப்ரணஷ்யந்தி ப்ரதக்ஷணே பதே பதே
ப்ரம்மஹத்தி பாவம் மட்டுமன்றி, ஒருவன் செய்த அனைத்து பாவங்களும் ஸ்ரீமதி துளசி தேவியை வலம் வந்து வணங்குவதால் அழிந்து போகும்.
வாழ்நாளின் அந்திம காலத்தில் துளசி தீர்த்தம் உட்கொள்பவர், மகா விஷ்ணுவுடன் ஐக்கியமாகி விடுவார்கள் என்பது ஐதீகம்.
பூஜைக்காக துளசியைப் பறிக்கும்போது, அதிகாலை வேளையிலும், நகம் படாமல் விஷ்ணுவின் பெயரை உச்சரித்தவாறும் துளசியைப் பறிப்பதே முறை. துளசியைப் பறித்து மூன்று நாட்கள் வரை
பயன்படுத்தலாம். தனித்தனி இலையாகப் பறிக்காமல் நான்கு இதழ், ஆறு இதழ்களாகப் பறிக்கவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். முன்னோர் திதிநாள், விரத நாள், தெய்வப் பிரதிஷ்டை தினம், மகாவிஷ்ணுவை வழிபடும் வேளை, தானம் கொடுக்கும் நேரங்களில் துளசியை உபயோகிப்பதால், பன்மடங்கு பலன் கிடைக்கும்.
சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒரே இடத்தில் பூஜை செய்பவர்களுக்கு, முக்காலத்தையும் உணரும் சக்தி ஏற்படும். பரமபத வாசல் கிடைப்பது உறுதி என்கிறது தர்ம சாஸ்திரம். ஒரு துளசி தளத்தில் 33கோடி தேவர்களும், பன்னிரு சூரியர்களும், அஷ்ட வசுக்களும், அஸ்வினி தேவர்களும் வசிக்கின்றனர். அதன்
நுனிப்பகுதியில் பிரம்மாவும் நடுவில் மகாவிஷ்ணுவும், லட்சுமி, சரஸ்வதி, காயத்ரீதேவி, பார்வதி ஆகியோரும் வசிக்கின்றனர். துளசியை வளர்த்து வழிபடுபவதால் ஆயுள் பலம், புகழ், செல்வம், குழந்தைப்பேறு ஆகியன கிட்டும். துளசி காஷ்டம் என்ற மணிமாலையைக் கழுத்தில் அணிபவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம்
முழுவதுமாக விலகும். சகல பாபங்களும் விலகி புண்ணியங்கள் பெருகும் என்கிறது துளசி புராணம். எந்த இடத்தில் துளசிச் செடி உள்ளதோ அங்கே அகால மரணம் ஏற்படாது. அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு துர்மரணமில்லை. துளசியை பூஜை செய்து வந்ததன் பலனாகவே சீதாதேவி ராமபிரானைக் கணவராக அடைந்ததாக துளசி ராமாயணம்
கூறுகிறது. சிலர், கருந்துளசியைப் பயன்படுத்தக் கூடாது என்பார்கள். இது தவறு. கருந்துளசிக்குக் ‘கிருஷ்ண துளசி’ என்ற பெயர் உண்டு. இதை, கிருஷ்ணருக்கு மட்டுமல்ல, எல்லா தெய்வங்களுக்குமே பயன்படுத்தலாம். விநாயகர், சக்திதேவி, சிவனார் ஆகியோருக்கு துளசி போடாமல் தவிர்க்கலாம். பச்சையும் சிறிது
வெண்மையும் கலந்ததே வெண் துளசி. இதை ராமபிரானுக்கும் அனுமனுக்கும் சூட்டலாம். இவை தவிர, செந்துளசி என்றும் வகையும் அரிதாகக் கிடைக்கிறது. அமாவாசை அன்று யாக்ஞவல்கியரின் மனையாளான காத்யாயினி சக்தியை துளசியால் வழிபட்டால் பிரிந்த தம்பதி மீண்டும் இணையும் பாக்கியம் கிடைக்கும். தாலி பாக்கியம்
நிலைக்கும். துஷ்ட சக்திகளும் துர்சகுனங்களும் விலகிவிடும். ஆரோக்கியத்துடனும் ஆயுளுடனும் வாழலாம்! துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன
கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும். அதிலும் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. துளசி இலைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி,
இரும்பு மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தொற்று நோய்களை தடுக்கவும் உதவுகிறது. துளசி இலைகளை வெறும் வயிற்றில் உட்கொள்வது உங்களுக்கு நன்மை அளிக்கும். துளசி இலைகளில் அடாப்டோஜன்கள் நிறைந்துள்ளன. அவை உடலில் உள்ள மனஅழுத்த அளவைக் குறைக்க
உதவும். நரம்பு மண்டலத்தை தளர்த்த உதவுகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது அமில ரிஃப்ளக்ஸை சமப்படுத்துகிறது மற்றும் ஆரோக்கியமான செரிமானம் இருப்பதை உறுதி செய்ய pH அளவை பராமரிக்க உதவுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் உள்ளன. இது வேறுபட்ட
தொற்றுக்களை நீக்க பயன்படுகிறது. இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா, வைரஸ்களை எதிர்த்துபோராட தேவையான நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் துளசியின் மகிமையை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். துளசியை நாம் வணங்குவோம், இறைவனை வழிபட பயன்படுத்துவோம், நாமும்
உட்கொண்டு பயன் அடைவோம். துளசி செடிகளை நாம் வீட்டில் வளர்ப்போம். சிறிய இடம் போதும் வளர்க்க. ஸ்ரீ துளசி தேவியே நமஹ🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
எல்லா மந்திரங்களுமே குருமுகமாகத் தான் கற்றுக் கொள்ள வேண்டும். நமக்கு எந்த மந்திரம் தேவை என்பதை அவர்களே அறிவார்கள். குரு கிடைக்க நாம் மனதார பிரார்த்தித்தால் அவரே நம்மை தேடி வருவார். அவர் உபதேசிக்கும் மந்திரமே பலனைத் தரும். மேலும் பிழையில்லாமல் கற்றுக்கொள்ள முடியும். ஒரு எழுத்து
மாறினாலும், உச்சரிப்பு மாறினாலும் பொருள் மாறும், நற்பலனுக்குப் பதிலாக கெடுதி வந்து சேரும்.
இதை சொன்னாலேயே எல்லாமே கிடைக்கும் என சிவ புராணம் சொல்லும் சக்தி வாய்ந்த ஆறு சிவ மந்திரங்கள்: 1. பஞ்சாக்ஷர சிவ மந்திரம்
"ஓம் நமசிவாய"
இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதால் உடல்
The News in TOI Delhi read : ‘Procure Pfizer Vax as soon as possible for kids, says #Kejriwal’.
Now, read the message below, which has been in circulation on Social media.👇 1. The Gandhi family started backing Pflzer openly along with its associates (Opposition) in social media.
2. A news float in Social Media that there would be third wave which will put children’s at risk. 3. In two weeks, CDC, Center of Disease Control under Biden approves vaccination of kids from May 13, 2021 4. As soon as CDC approves, Pfizer roll out vaccination for kids the very
next day all over US. 5. No trial data is ever shared in public. No one knows when, how and where it was developed 6. India has appox 40Cr children under 18 years. With Rs 3000 Pflzer per kid, the minimum business for Pflzer is appox 120000+ Cr. If a conservative 20% commission
Hi - The second wave of Covid in TN may be coming down, but the repurcusions that it has left behind for the families who have lost a loved one may be permament. Coviduthalai is partnering with an NGO (Sarada Foundation) to identify such famililies and help rehabilitate them.
If you know a family who has lost their breadwinner to covid and are struggling financially - please let us know. We will do our best to help them get back on their feet once again. We may be able to help with : 1) Finding the spouse (or an eligible son/ daughter) a job or a help
them find a better job with more pay if possible 2) Help them identify, enroll and 100% fund their upskilling course to be job ready 3) (or) Help them buy small capital investment product to help them start a business
The applicant has to fill ONLY their name and number here
"காருண்யம் – கருணை காட்டுவது – என்றால் இப்படிக் கருணை காட்டுகிறவர் ஓரு படி உயர நிற்கிற மாதிரியும், கருணைக்குப் பாத்திரமாகிறவர் ஒரு படி கீழே நிற்கிற மாதிரியும் தொக்கி நிற்கிறது. ”நாம் உசந்த ஸ்தானத்தில் இருக்கிறோம், நம் உதவியைப் பெறுகிறவர் நம்மைவிடத் தாழ்த்தியாக இருக்கிறார், நாம்
‘கருணை’ காட்டுகிறோம்” என்று நினைக்கிறபோதே நாம் செய்கிற உபகாரம் அசுத்தமாகிவிடுகிறது. உபகாரம் செய்வதன் பயனாக நமக்கு எளிமை, அடக்கம், அஹங்கார நீக்கம் ஆகியன உண்டாக வேண்டும். மாறாக நாம் உபகாரம் பண்ணும்போது, போனால் போகிறது என்றும் யாருக்கோ கருணை காட்டுகிற மாதிரி நினைத்தோமானால், இது ஆணவ
அஹங்காரங்களுக்கு இடமாகிவிடுகிறது. உபகாரத்தால் நம் ஆத்மாவை உயர்த்திக் கொள்வதற்கு நேர்மாறாக ஆத்மஹானியே உண்டாகிவிடும். கருணை, காருண்யம் என்கிற வார்த்தையைச் சொல்வதைவிட அன்பு என்று சொல்லிவிட்டால் இந்த ஏற்றத் தாழ்வு தொனிக்காமல் இருக்கும். அன்பு என்பது நம்மவர்களிடமே நாம் ஸ்வபாவமாகச்
பலன் இல்லாத பிரார்த்தனை என்பது மனித ஹிஸ்டரியிலேயே கிடையாது என்று மகா பெரியவா சொன்னதை தெய்வத்தின் குரல் வாயிலாக ராம சர்மா விளக்குகிறார். சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை இந்தக் காணொளி விளக்கும். பிரார்த்தனைக்கான பலன் பற்றிய மேற்கோள் அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மை சம்பவம்.
அந்த மேற்கோளில் பிரார்த்தனைக்குரிய தெய்வம் ஜீஸஸ். தெரிந்த கதை தான் ஆனால் இவர் சொல்வதை கேட்பதிலும் ஒரு சுவாரசியம் உள்ளது.
என்ன அழகா விளக்குகிறார் பாருங்கள். He says the doctor is neither a theist or an atheist, he is also not an agnostic. அவர் தன் வேலையை செய்து பலனை எதிர்பார்க்காமல் இருக்கும் ஒரு கர்ம யோகி. நாம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும்🙏🏻
மகாபாரதத்தில் வரும் கதாபத்திரங்களில் காங்கேயன் என்னும் #பீஷ்மர் மிகச் சிறந்தவர். இவரது தந்தை சாந்தனு ஒரு மீனவ பெண்ணை மணக்க விரும்பினார். பெண் வீட்டில் ஒரு நிபந்தனை விதித்தனர். அவர்கள் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைகளும் அவர்களின் வாரிசுகளுமே அரியணை ஏற வேண்டும் என்பதே அது. இதைக்
கேட்ட அவர் தன் தந்தையின் மகிழ்ச்சிக்காக அரசாட்சியை துறந்தது மட்டுமன்றி, மணவாழ்க்கையையும் துறந்து பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொள்வதாக சத்தியம் செய்தார். இந்த கடுமையான விரதத்தை மேற்கொண்டவுடன் அவருக்குக் கிடைத்தப் பெயர் பீஷ்மர்-பயங்கரமானவர் என்று பொருள். இந்த விரதத்தை மேற்கொண்டதால்
அவர் தந்தை மிக மகிழ்ந்து இறைவனிடம் வேண்டி பீஷ்மருக்கு அளித்த வரம் 'இச்சா மரணம்'-தான் விரும்பும் நாளில், விரும்பும் நேரத்தில் மட்டும் மரணம் என்ற வரமாகும். பாரதப் போரின் பத்தாம் நாள் சிகன்டிகை அர்ஜுனனின் தேரில் அவனுக்கு முன் நிற்பதை கண்டார். பீஷ்மர் சிகண்டியைத் தாக்கவில்லை. சிகண்டி