மகாபாரதத்தில் வரும் கதாபத்திரங்களில் காங்கேயன் என்னும் #பீஷ்மர் மிகச் சிறந்தவர். இவரது தந்தை சாந்தனு ஒரு மீனவ பெண்ணை மணக்க விரும்பினார். பெண் வீட்டில் ஒரு நிபந்தனை விதித்தனர். அவர்கள் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைகளும் அவர்களின் வாரிசுகளுமே அரியணை ஏற வேண்டும் என்பதே அது. இதைக்
கேட்ட அவர் தன் தந்தையின் மகிழ்ச்சிக்காக அரசாட்சியை துறந்தது மட்டுமன்றி, மணவாழ்க்கையையும் துறந்து பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொள்வதாக சத்தியம் செய்தார். இந்த கடுமையான விரதத்தை மேற்கொண்டவுடன் அவருக்குக் கிடைத்தப் பெயர் பீஷ்மர்-பயங்கரமானவர் என்று பொருள். இந்த விரதத்தை மேற்கொண்டதால்
அவர் தந்தை மிக மகிழ்ந்து இறைவனிடம் வேண்டி பீஷ்மருக்கு அளித்த வரம் 'இச்சா மரணம்'-தான் விரும்பும் நாளில், விரும்பும் நேரத்தில் மட்டும் மரணம் என்ற வரமாகும். பாரதப் போரின் பத்தாம் நாள் சிகன்டிகை அர்ஜுனனின் தேரில் அவனுக்கு முன் நிற்பதை கண்டார். பீஷ்மர் சிகண்டியைத் தாக்கவில்லை. சிகண்டி
யார் என்பதை நினைவு கூர்ந்து தன் ஆயுதத்தை கீழே வைத்தார், ஆயுதம் ஏதும் கையில் இல்லை. அர்ஜுனன் அத்தருணத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரைப்படி தன் முழு பலத்தோடும், ஆற்றலோடும் அம்பை செலுத்தினான். அம்பு காற்றை கிழித்து கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் பீஷ்மரின் கவசத்தைப் பிளந்தது.
அடுத்தடுத்து ஏழு அம்புகள், பீஷ்மரின் மார்பில் பாய்ந்தன. அர்ச்சுனனின் அம்புகள் பீஷ்மரின் உடலெங்கும் தைத்தன. பீஷ்மர் நிலை குலைந்தார். தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேரிலிருந்து பீஷ்மர் சாய்ந்த போது மலர் மழை பொழிந்தனர். அவரது உடல் தரையில் விழாதபடி அவர் மேல் விழுந்திருந்த அம்புகள்
தாங்கிக்கொண்டன. ஆயினும் தன் தந்தைக்காக கடவுளர்களிடம் பெற்ற இச்சா மரண வரத்தினால், அம்புப் படுக்கையில் இருந்தும் உயிர் நீங்காமல் இருந்தார். அப்பொழுது அவர் யுதிஷ்டிரருக்கு தர்ம சாஸ்திரங்களையும் ராஜ தந்திரங்களையும் உபதேசித்தார். அங்கு ஸ்ரீ கிருஷ்ணரும் நிற்பதைக் கண்டு அவரின் அவதார
பெருமையை அறிந்த அவர் அப்போது ஸ்ரீமன் நாராயணனின் பெருமையை அற்புதமாக விளக்கும், அவரைப் போற்றி ஆயிரம் நாமாக்களை-ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை அருளினார் (நாம மகிமையின் பெருமையை இந்தச் செயல் விளக்கும்). தட்சிணாயன காலத்தில் உயிர் பிரிந்தால் மோட்சம் கிட்டாது என்பதால் உத்தராயண காலம் துவங்கும்
வரை காத்திருக்க விரும்பினார் பீஷ்மர். ஆனால் உத்தராயண புண்ய காலம் வந்தும் அவர் உயிர் பிரியவில்லை. அதனால் வேத வியாசரிடம் நான் என்ன பாவம் செய்தேன். நான் விரும்பியபடி ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை என்று வருந்தி கேட்டார். நீ எவ்வளவோ புண்ணியம் செய்திருந்தாலும் திரௌபதி சபையில் மான
பங்கப் படுத்தப்பட்ட போது அதைப் பார்த்துக் கொண்டிருந்தாய். தடுக்கவில்லை. அதனால் தான் இன்னும் இறக்காமல் உள்ளாய் என்றார். உன்னுடைய அனைத்து அங்கங்களும் திரௌபதியை காப்பாற்றாமல் செயலிழந்து நின்றதால் வந்த வினை இது என்று கூறினார். அதற்கு என்ன பரிகாரம் என்று அவர் கேட்க வேதவியாசர்
முன்கூட்டியே கொண்டு வந்திருந்த எருக்கன் இலைகளை பீஷ்மரிடம் காண்பித்து, இந்த எருக்கன் இலைகள் சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்கபத்ரம். அர்க்கம் என்றால் சூரியன் என்றே பொருள். சூரியனின் முழுச் சக்தியும் இதில் உள்ளது. ஆகவே இந்த இலைகளால் உன்னுடைய அங்கங்களில் வைத்து அவை சூரிய ஒளி
பட்டு உன்னை புனிதப்படுத்தும் என்று கூறினார். அவ்வாறு வியாசர் வைத்த பிறகு மன அமைதியடைந்து தியானத்தில் ஆழ்ந்து தியான நிலையிலேயே முக்தியும் அடைந்தார். தை மாத ரத சப்தமிக்கு அடுத்த நாள் பீஷ்மர் தான் விரும்பியபடி உயிர் துறந்தார். அந்த நாள் அஷ்டமி திதி. அதுவே, “பீஷ்மாஷ்டமி’ என்று
போற்றப்படுகிறது. எனவே #ரதசப்தமி அன்று விரதம் மேற்கொண்டு, எருக்கன் இலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு சாஸ்திரத்தில் சொன்னபடி நீராடினால் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த பாவங்கள் நீங்கும். ரத சப்தமிக்கு அடுத்த நாள் பீஷ்மாஷ்டமி அன்று புனிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும்
முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது நம்பிக்கை.
ஹரே கிருஷ்ணா🙏🏾 #ரதசப்தமி பற்றிய இழை இங்கே
பலன் இல்லாத பிரார்த்தனை என்பது மனித ஹிஸ்டரியிலேயே கிடையாது என்று மகா பெரியவா சொன்னதை தெய்வத்தின் குரல் வாயிலாக ராம சர்மா விளக்குகிறார். சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை இந்தக் காணொளி விளக்கும். பிரார்த்தனைக்கான பலன் பற்றிய மேற்கோள் அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மை சம்பவம்.
அந்த மேற்கோளில் பிரார்த்தனைக்குரிய தெய்வம் ஜீஸஸ். தெரிந்த கதை தான் ஆனால் இவர் சொல்வதை கேட்பதிலும் ஒரு சுவாரசியம் உள்ளது.
என்ன அழகா விளக்குகிறார் பாருங்கள். He says the doctor is neither a theist or an atheist, he is also not an agnostic. அவர் தன் வேலையை செய்து பலனை எதிர்பார்க்காமல் இருக்கும் ஒரு கர்ம யோகி. நாம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும்🙏🏻
After a week of painful struggle against Modi government, Twitter concedes defeat via @tfiglobaltfiglobalnews.com/2021/06/01/aft… The defeat in Indian courts serves as a big lesson for Twitter. It cannot get away by flouting Indian laws and will be taken to task for its misadventures.
India is certainly not the United States, where Twitter can get away with its stunts. In India, Twitter will have to pay costly prices for its digital colonialism. Twitter has been facing the heat in countries like Russia too. A Russian court on Thursday fined Twitter $259,000
for failing to delete content considered illegal by Moscow. Twitter has been subjected to a punitive slowdown in Russia since March. American big tech, as a matter of fact, has been receiving pushback from around the world. Whether it be countries like Australia, France, Poland,
கோவிட் தடுப்பூசிக்கு 5% ஜி.எஸ்.டி உண்டு. இதை மிகக் கேவலமாக விமர்சித்து வருகிறார் #டபுள்_வாட்ச்_டக்ளஸ்.
நிர்மலா மேம்: 50% ஐ நாங்கள் பர்சேஸ் செய்து உங்களுக்கு இலவசமாகத் தருகிறோம். ஜி.எஸ்.டி யை நாங்கள்தானே கட்டுகிறோம். உனக்கு என்னய்யா பிரச்சனை?
ட.வா.டக்ளஸ்: மீதமுள்ள 50%?
நிர்மலா மேம்: மீதமுள்ள 50% ல் 25% தனியார் வாங்குகிறார்கள் அதற்கு அவர்கள் வரிக்கட்டுகிறார்கள். அந்த வரியில் பாதி உனக்கு, பாதி எனக்கு. அவர்கள் ஜி.எஸ்.டி கட்டுவதால் மாநில அரசுக்கு இலாபம்தானே?
ட.வா.டக்ளஸ்: மீதமுள்ள 25% ஐ நாங்கள் வாங்குகிறோம். அதற்கு நாங்கள் ஜிஎஸ்டி கட்டவேண்டியுள்ளதே.
நிர்மலா மேம்: அந்த ஜி.எஸ்.டி ல் பாதி உனக்கு திரும்பி வந்துவிடுமே. மீதி பாதிதானே மைய அரசுக்கு.
டபுள் வாட்ச் டக்ளஸ்: நாங்கள் வாங்கும் 25% ஊசிக்கு 5% ஜி.எஸ்.டி கட்டி அதில் 2.5% மட்டும்தானே திரும்பப் பெருகிறோம். அது எங்களுக்கு இழப்புத்தானே.
நிர்மலா மேம்: தனியாருக்கு தரும் 25%
Everyone listen to the above audio of Mahaperiava own voice. Excellent clear speech. Nead of the hour. நம் பணத்தை எப்படி மேலுலகுக்கும் எடுத்துச் செல்ல முடியும் என்று சொல்கிறார் மகாபெரியவா🙏🏻
Sri Adi Shankaracharya Sharada LakshmiNarasimha Peetam, an ancient Dharmapeetam directly established by Jagadguru Sri Adi Shankaracharya, is situated at the Puranic Kshetra of Hariharapura in Chikmagalur District, Karnataka.
Located at the holy banks of River Tunga, Lord Sri LakshmiNarasimha Swamy and Goddess Sri Sharadambika are the chief deities of this Dharmapeetam. This ancient Dharmapeetam boasts an unbroken illustrious chain of Jagadgurus, right from the time of Sri Adi Shankaracharya.
The Puranic history of Hariharapura dates back to the episode of Daksha Maha Yajnya. Skanda Purana (Sahyadri Kanda) addresses Hariharapura by the name Dakshashrama - the place where Daksha Maha Yajnya took place. As per the well known legend of Daksha Yajnya, Lord Shiva enraged
திருவரங்கத்தில் மேட்டழகிய சிங்கர் சன்னிதியின் முன்னால் கம்பன் இரணியன் வதைப் படலத்தைப் படிக்கும் போது, குறிப்பாக “திசை பிளந்து அண்டம் கீறச் சிரித்தது செங்கட் சீயம்” என்ற வரிகள் வரும்போது மேட்டழகிய சிங்கரே ஆரவாரம் செய்து கர்ஜித்த்தாகச் சொல்லப்படுகிறது. வால்மீகி இராமாயணத்தில் இல்லாத
நரசிம்ம அவதாரம் கம்பராமாயணத்தில் இடம் பெற்றுள்ளது.
"ஆயவன் தன்னை, மாயன், அந்தியின் அவன் பொற் கோயில்
வாயிலின் மணிக்க வான் மேல், வயிரவாள் உகிரின் வாயின்
மீயெழு குருதி பொங்க, வெயில் விரி வயிர மார்பு
தீயெழப் பிளந்து நீக்கி, தேவர் தம் இடுக்கண் தீர்த்தான்!"
அரண்மனை வாயில் படியில், அவன்
மார்பை, தீப்பொறி உண்டாகப் பிளந்து, தேவர்கள் துன்பம் தீர்த்தான் நரசிம்ம மூர்த்தி!
இரணியனைச் சிங்கப்பிரான் வதை செய்த பின்னர். அவன் பிரகலாதனிடம் என்ன கைம்மாறு செய்வது என்று கேட்கும் போது பிரகலாதன் சொல்வது இது:
முன்பு பெறப்பெற்ற பேறோ முடிவு இல்லை;
பின்பு பெறும் பேறும் உண்டோ?