ஜாலியன்வாலாபாக் , கருப்பு ஜூலை போன்ற ஒரு கொடூர படுகொலை கந்தன் கருணை இல்ல படுகொலை. இது ஒரு தமிழ் வியாபாரிக்கு சொந்தமானது இயக்க தேவைக்கு என புலிகள் அபகரித்து அவரை வீட்டை விட்டு விரட்டினர்.
மற்ற அமைப்புகளை தடை செய்த புலிகள் அதன் போராளிகளை இந்த வீட்டில் அடைத்தனர்.
கிட்டுவுக்கும் மாத்தையாவுக்கும் இடையேயான பிரச்சனையில் கிட்டு தன் காதலி வீட்டுக்கு சென்று வரும் பொழுது அவர் மீது மாத்தையா ஆட்கள் குண்டு வீசினர் இதில் கிட்டுவின் கால் பறிபோனது. #அறிவோம்ஈழம்
இதைக் கேள்வி பட்ட விடுதலை புலியில் உள்ள கிட்டுவின் ஆதரவாளரானஅருணன் என்பவன் இதற்க்கு காரனம் மாற்ற இயக்கத்தவர் தான் என கருதி இரண்டு தானியங்கி ரக துப்பாகியுடன் வீட்டின் உள்ளே கூட்டாளிகளுடன் நுழைந்தான் அடைத்து வைத்து இருந்தோரை எல்லாம் சுட்டு கொன்றான்.
ஒரு துப்பாகி ரவை எத்தனை பேரை துளைக்கும் என சோதிக்க வரிசையில் நிற்க வைத்து சுட்டு பார்த்தான்
இப்படி இவர்கள் சுமார் 60 பேரை சுட்டு கொன்றனர் பின்னர் அவர்கள் பிணத்தை எடுத்து சென்று எரியூட்டினர்
இந்த படுகொலையை நியாயப்படுத்த புலிகள் சொன்ன காரணம் அவர்கள் தப்பி ஓட முயன்றார்கள் என்பதே
சிங்களவெறியன் சிறையில் தமிழர்களை கொன்றதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?
இந்த மாற்று இயக்கதவர்களும் ஈழத்தை நேசித்து போராட வந்தவர்களே!
இவர்களை கொடூரமாக கொன்ற புலிகள் தான் பின்னாளில் அதற்க்கான பலனை அனுபவித்தனர்.
கந்தன் கருணை இல்ல படுகொலைக்கு மூல காரணமான தளபதி கிட்டு (எ) சதாசிவம் இலங்கைக்கு எதிரான போரில் சாகவில்லை.
மாறாக இந்தியாவிற்குள் படகு மூலம் நுழைய முற்பட்ட போது இந்திய கடற்படையின் மேற்கு கடற்கரை பிரிவு கமாண்டோ வீரர்களால் சரமாரியாக சுடப்பட்டு கடலுக்குள் தள்ளப்பட்டான். @mrpaluvets
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அமிர்தலிங்கம் இவர் அகிம்சாவாதி.
தமிழர்களின் நலனுக்காக தொடர்ந்து போராடியவர்.
இவர் தமிழ்மக்கள் மத்தியில் மிகுந்த நல்ல பெயர் எடுத்தவர் இவர் சார்ந்த தமிழர் விடுதலை கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் ஆனார்.
அவருக்கு முன் எந்த தமிழரும் எதிர்கட்சி தலைவர் அந்தஸ்த்துக்கு வந்தது இல்லை
1983 ல் தமிழர்க்கு எதிரான சட்ட திருத்தத்தை கண்டித்து அந்த பதவியை துறந்தார்.
அமைதிப்படை இலங்கையில் செயல்பட்ட காலத்தில் சிங்கள பிரேமதாசா அதை எதிர்த்தார் .
இந்திய அரசு படை எடுத்து வந்திருப்பதாக சிங்களவர் கருதினர். அதனாலேயே ராஜிவ்வை ஒரு சிங்கள சிப்பாய் துப்பாக்கி கட்டையால் தாக்க மூயான்றான். இந்த சூழ்நிலையில் புலிகளும் அமைதி படையை எதிர்த்தனர்
அதேவேளை அமிர்தலிங்கம் அமைதிபடையால் மக்களுக்கு பாதுகாப்பு என்று கருதினார் . மேலும் ராஜிவை
பற்குணம்: புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் துரையப்பா கொலைக்காக தன் தங்கையின் திருமணத்துக்கு வைத்திருந்த நகையை விற்று பணம் கொடுத்தவர் விடுதலை புலிகளின் மத்திய குழு உறுப்பினர் பிரபாகரனின் சர்வாதிகார நடவடிக்கைகள் பிடிக்காமல் தான் வெளியேற போவதாக
கூறினார்.
அவரிடம் பேச வேண்டும் என புளியங்குளம் முகாமுக்கு வரச் சொல்லிய பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.
ஆதாரம்: ஈழ போராட்டத்தில் எனது பதிவுகள் பக்கம் 54
இந்த கொலையை நியாயப்படுத்த இயக்கத்தில் இருந்து பிரிந்தால் கொலை என்பது இயக்க விதி
இதுதான் பிரபாகரன் முன்வைத்த வாதம்
பின்னாலில் கட்சி தலைமை உமா மகேஸ்வரன் கைக்கு சென்றதும் பிரபாகரன் அதை ஏற்க்காமல் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து ரெலோ இயக்கத்தில் இணைந்து இரண்டு ஆண்டு செயல்பட்டார்
பற்குணத்துக்கு ஒரு நியாயம் சரி என்றால் பிரபாவும் தன்னை சுடச் சொல்லியிருக்க வேண்டும் அல்லவா?!!
"இஸ்லாமியர்களின் ரத்தத்தில் விடுதலை புலிகளின் காலடிகள்"
புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா?
1987ம் ஆண்டு ஜுன் இரண்டாம் தேதி புலிகளின் ரக் வண்டிகள் யாழ்பாணத் தெருக்களில் நிறுத்தப்பட்டு அங்கு வாழ்ந்துவந்த முஸ்லீம்களை..
உடனடியாக ரஹ்மானியா கல்லூரியில் ஒன்று கூடுமாறு கேட்கப்பட்டனர்
ஒன்று கூடிய மூஸ்லீம்கள் அனைவரும் இரண்டு மணிநேர அவகாசத்தில் தாங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த பூர்வீக பூமியை விட்டு வெளியேறுமாறு கேட்கப் பட்டதுடன் அவர்கள் உடுத்திருந்த உடுப்பை தவிர ஐம்பது ரூபாய் பணம் மட்டும்
எடுத்துச் செல்ல அனுமதிக்கபட்டனர்.
முஸ்லிம் மக்களின் வீடுகள் வியாபார ஸ்தலங்கள் மற்றும் நிலங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மேலும் முஸ்லிம் பெண்கள் அணிந்திருந்த நகைகள் (கையில், காதில் மூக்கில், கழுத்தில் அணிந்திருந்த சிறு சிறு நகைகள் உட்பட) அனைத்துமே பயங்கரவாத விடுதலைப்புலிகளினால்
இலங்கையில் புலிகளின் ஆதிக்க பகுதியில் 30 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களை விரட்டி அடித்து விட்டு அவர்கள் குடும்பங்களில் இருந்து கொள்ளையடித்த பொருட்களின் அன்றைய மதிப்பு சுமார் 1026 கோடி
இந்த கொள்ளை அதோடு முடியவில்லை. இவர்களால் வெளியேற்றப்படாத கிழக்கு பகுதி முஸ்லிம்களுக்கு இவர்களால்,
விதிக்கப்பட்ட வரி விபரம்
ஒரு ஏக்கர் வயல் போகத்துக்கு 1500 ரூ
ஆடு,மாடு ஒன்றிற்கு ரூ 300
சாதா மீன்பிடி படகுக்கு மாதம் ரூ 300
இயந்திர மீன்பிடி படகு மாதம் 1000 ரூ
மாட்டு வண்டிக்கு வருடம் 1500 ரூ
விறகுக்கு மாதம் 1500 ரூ #அறிவோம்ஈழம்
ஆதாரம் : ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை நூல் பக்கம் 126 ,127
சங்கி கும்பலின் CAA , NRC சட்டத்தை எதிர்க்கும் புலிகளின் ஆதாரவாளர்கள்
இஸ்லாமியருக்கு புலிகள் தனிவரி விதித்தது பற்றி என்ன சொல்ல போகிறீர்கள் ? #அறிவோம்ஈழம்
3 ஆகஸ்ட்1990 இல் காத்தான்குடி ஏறாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்களை படுகொலையை செய்தது கரிகாலன் நியூட்டன் போன்ற தளபதிகள் தான்.
கிழக்கில் மட்டக்களப்பு அம்பாறை திரிகோணமலை மாவட்டங்களில் தோல்வியுற்ற முஸ்லிம் இன சுத்திகரிப்பு முயற்சியை வடக்கு மாவட்டங்களான யாழ்ப்பாணம்,
முல்லைத்தீவு வவுனியா மன்னார் கிளிநொச்சி ஆகியவற்றில் வெற்றிகரமாக முன்னின்று செய்தவர் ஆஞ்சநேயர்(எ) இளம்பரிதி.
இந்த கரிகாலனும் இளம்பரிதியும் இறுதி யுத்தத்தின் கடைசி நாள் வரை பிரபாகரன் உடன் இருந்தனர். வெள்ளைக்கொடி ஏந்தி சரண்டராகி காணாமல் போன தலைவர்கள் பட்டியலில் இந்த இருவரும் உண்டு.
இதை இப்போது இங்கு குறிப்பிடக் காரணம், காத்தான்குடி படுகொலை வடக்கு இனச்சுத்தீகரிப்பு குறித்து புலி ஆதரவாளர்களே இப்போது ஒப்புக்கொண்டு எழுதி வருகிறார்கள்.