இலங்கையில் புலிகளின் ஆதிக்க பகுதியில் 30 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களை விரட்டி அடித்து விட்டு அவர்கள் குடும்பங்களில் இருந்து கொள்ளையடித்த பொருட்களின் அன்றைய மதிப்பு சுமார் 1026 கோடி
இந்த கொள்ளை அதோடு முடியவில்லை. இவர்களால் வெளியேற்றப்படாத கிழக்கு பகுதி முஸ்லிம்களுக்கு இவர்களால்,
விதிக்கப்பட்ட வரி விபரம்
ஒரு ஏக்கர் வயல் போகத்துக்கு 1500 ரூ
ஆடு,மாடு ஒன்றிற்கு ரூ 300
சாதா மீன்பிடி படகுக்கு மாதம் ரூ 300
இயந்திர மீன்பிடி படகு மாதம் 1000 ரூ
மாட்டு வண்டிக்கு வருடம் 1500 ரூ
விறகுக்கு மாதம் 1500 ரூ #அறிவோம்ஈழம்
ஆதாரம் : ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை நூல் பக்கம் 126 ,127
சங்கி கும்பலின் CAA , NRC சட்டத்தை எதிர்க்கும் புலிகளின் ஆதாரவாளர்கள்
இஸ்லாமியருக்கு புலிகள் தனிவரி விதித்தது பற்றி என்ன சொல்ல போகிறீர்கள் ? #அறிவோம்ஈழம்
ஏற்கனவே இலங்கையில் புலிகளின் கட்டுபாட்டில் சிங்கள அரசு வரி + புலிகளின் வரி என இரட்டை வரி பாதிப்பு உண்டு இது பத்தாது என்று முஸ்லிம்களுக்கு மேலும் ஒரு வரி.
இது பற்றி ஒருமுறை செய்தியாளர் கேள்விக்கு பதில் தந்த தமிழ்செல்வன், #அறிவோம்ஈழம்
தமிழ்மக்களுக்கு விடுதலை கிடைக்கும் போது
முஸ்லிம்களுக்கும் கிடைக்கும் என்றார்.
இது எத்தனை திமிர் பதில் இது தனக்கு கீழ் ஒருவனை அடிமை ஆக்கி கொண்டு தான் விடுதலை ஆகும் பொழுது அவனை நான் விடுவிப்பேன் என்ற வக்கிரம்தானே இது.
"இஸ்லாமியர்களின் ரத்தத்தில் விடுதலை புலிகளின் காலடிகள்"
புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா?
1987ம் ஆண்டு ஜுன் இரண்டாம் தேதி புலிகளின் ரக் வண்டிகள் யாழ்பாணத் தெருக்களில் நிறுத்தப்பட்டு அங்கு வாழ்ந்துவந்த முஸ்லீம்களை..
உடனடியாக ரஹ்மானியா கல்லூரியில் ஒன்று கூடுமாறு கேட்கப்பட்டனர்
ஒன்று கூடிய மூஸ்லீம்கள் அனைவரும் இரண்டு மணிநேர அவகாசத்தில் தாங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த பூர்வீக பூமியை விட்டு வெளியேறுமாறு கேட்கப் பட்டதுடன் அவர்கள் உடுத்திருந்த உடுப்பை தவிர ஐம்பது ரூபாய் பணம் மட்டும்
எடுத்துச் செல்ல அனுமதிக்கபட்டனர்.
முஸ்லிம் மக்களின் வீடுகள் வியாபார ஸ்தலங்கள் மற்றும் நிலங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மேலும் முஸ்லிம் பெண்கள் அணிந்திருந்த நகைகள் (கையில், காதில் மூக்கில், கழுத்தில் அணிந்திருந்த சிறு சிறு நகைகள் உட்பட) அனைத்துமே பயங்கரவாத விடுதலைப்புலிகளினால்
ஜாலியன்வாலாபாக் , கருப்பு ஜூலை போன்ற ஒரு கொடூர படுகொலை கந்தன் கருணை இல்ல படுகொலை. இது ஒரு தமிழ் வியாபாரிக்கு சொந்தமானது இயக்க தேவைக்கு என புலிகள் அபகரித்து அவரை வீட்டை விட்டு விரட்டினர்.
மற்ற அமைப்புகளை தடை செய்த புலிகள் அதன் போராளிகளை இந்த வீட்டில் அடைத்தனர்.
கிட்டுவுக்கும் மாத்தையாவுக்கும் இடையேயான பிரச்சனையில் கிட்டு தன் காதலி வீட்டுக்கு சென்று வரும் பொழுது அவர் மீது மாத்தையா ஆட்கள் குண்டு வீசினர் இதில் கிட்டுவின் கால் பறிபோனது. #அறிவோம்ஈழம்
இதைக் கேள்வி பட்ட விடுதலை புலியில் உள்ள கிட்டுவின் ஆதரவாளரானஅருணன் என்பவன் இதற்க்கு காரனம் மாற்ற இயக்கத்தவர் தான் என கருதி இரண்டு தானியங்கி ரக துப்பாகியுடன் வீட்டின் உள்ளே கூட்டாளிகளுடன் நுழைந்தான் அடைத்து வைத்து இருந்தோரை எல்லாம் சுட்டு கொன்றான்.
3 ஆகஸ்ட்1990 இல் காத்தான்குடி ஏறாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்களை படுகொலையை செய்தது கரிகாலன் நியூட்டன் போன்ற தளபதிகள் தான்.
கிழக்கில் மட்டக்களப்பு அம்பாறை திரிகோணமலை மாவட்டங்களில் தோல்வியுற்ற முஸ்லிம் இன சுத்திகரிப்பு முயற்சியை வடக்கு மாவட்டங்களான யாழ்ப்பாணம்,
முல்லைத்தீவு வவுனியா மன்னார் கிளிநொச்சி ஆகியவற்றில் வெற்றிகரமாக முன்னின்று செய்தவர் ஆஞ்சநேயர்(எ) இளம்பரிதி.
இந்த கரிகாலனும் இளம்பரிதியும் இறுதி யுத்தத்தின் கடைசி நாள் வரை பிரபாகரன் உடன் இருந்தனர். வெள்ளைக்கொடி ஏந்தி சரண்டராகி காணாமல் போன தலைவர்கள் பட்டியலில் இந்த இருவரும் உண்டு.
இதை இப்போது இங்கு குறிப்பிடக் காரணம், காத்தான்குடி படுகொலை வடக்கு இனச்சுத்தீகரிப்பு குறித்து புலி ஆதரவாளர்களே இப்போது ஒப்புக்கொண்டு எழுதி வருகிறார்கள்.