பிராமண துவேஷம்

By ராம் ஸ்வரூப் அகர்வால் 

எந்த ஒரு நாட்டில் வீரர்களும் அறிஞர்களும் நிரம்ப இருக்கிறார்களோ அந்த நாட்டை எளிதில் அடிமைப் படுத்தவோ வீழ்த்தவோ முடியாது.
இது உண்மை.
முதன்முதலில் மொகலாயர்கள் பாரதத்தின் மீது படையெடுத்து வந்தபோது எண்ணற்ற போர் வீரர்கள் இருந்தனர்.அறிவில் சிறந்த பிராமணர்கள் கல்வியையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்து போதித்து வந்தனர்.
முதலில் வந்த முகமது பின் காசிம் முதலில் செய்ய விழைந்தது பிராமணர்களுக்கு சுன்னத் தான்.அவர்கள் மறுத்ததால் 17வயதுக்கு மேலுள்ளவர்கள் கொல்லப்பட்டனர் என்ற வரலாற்றுக் குறிப்பை அம்பேத்கர் கூறுகிறார்.
அடுத்ததாக வந்தது போர்த்துகீசர்கள்.St.xavier என்பவன் தனது அரசனுக்கு எழுதுகிறான்,பிராமணர்கள் மட்டுமில்லையென்றால் அத்தனை இநதியர்களையும் மதம் மாற்றிவிடலாம் என.
ஒரு சுவிசேஷகனாக எவ்வளவு தூரம் வெறுக்கமுடியுமோ பிராமணர்களை அவ்வளவு வெறுத்தான்.குதர்க்கமான இனம் என்றான்.
மிகுந்த துன்பப்பட்ட இனமானது பிராமண இனம்.
பின்னர் ஆங்கிலேயர் வந்தனர்.நம் நாட்டை நிராயுதபாணியாக்கினர்.மிஷனரிகள் ஒருபுறம் நமது  ஆன்மீகம் சார்ந்த நம்பிக்கையைச் சிதைத்தனர்.
ரெவரன்.புகானன் கூறியது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஞானஸ்நானம் செய்வித்து தமக்கு கீழ்படிய வைக்கவேண்டும்.ஆனால் குறுக்கே நிற்பவர்கள் பிராமணர்கள் தாம்.
வில்லியம் கேரி என்பவன் தலைமையில் மிஷநரிகள்The Book of Wisdom என்ற துண்டு பிரசுரத்தை விநியோகித்தனர். அதில் பிராமணர்களை கீழ்தரமானவர்கள்,அருவெறுப்பானவர்கள் என குறிப்பிட்டிருக்கும்.
அரசியல் ஆலோசகர்களாக பிராமணர்கள் சாதூர்யமாகச் செயல்பட்டனர்.அதனால் அவர்களுக்கு செல்வாக்கும் மரியாதையும் இருந்தது.
அதை உடைக்கவே பிராமண எதிர்ப்பு என்ற அஸ்திரத்தை நாடெங்கிலும் தொடுத்தனர்.
இன்றும் அந்த துஷ்பிரயோகம் நிற்கவில்லை.
பிராமணர்கள் தந்திரமானவர்கள், ஒட்டுண்ணி, அகம்பாவமானவன் என சித்திரிக்கப்பட்டனர்.அந்த எண்ணம் மக்கள் மத்தியில் வலுப்பெற மிஷநரிகள் மிகவும் மெனக்கெட்டனர்.
இன்றும்,இஸ்லாமியர்,மார்க்சிஸ்டுகள், பிரிவினைவாதிகள், பிராமணர்களை எதிர்ப்பது போல பாவித்து மொத்த ஹிந்துக்களை எதிர்க்கின்றனர் .
பாரதம் துண்டாடப்பட்டால் தான் இந்தக் கூட்டத்தின் எண்ணம் பலிக்கும்.அதற்காகவே பிராமண எதிர்ப்பு எனும் பெயரில் ஹிந்து விரோதம்.
இன்று பிராமணர்களின் ஏழ்மை நிலை இந்தக் கூட்டத்திற்கு வெற்றியே!
அரசாங்கமோ,ஆள்பவர்களோ பிராமணர்களுக்கு ஆதரவில்லை.கோவில்களை அழித்து இவர்களை ஏழ்மையில் தள்ளினர்.பழைய பெருமையை இழந்து அனாதரவாக நிற்கும் வஞ்சிக்கப்பட்ட இனம்.
சுதந்திர இந்தியாவிலும் நிலை மாறவில்லை.1978ல் கர்நாடகாவில் நடந்த ஆய்வின் படி SC/STயை விடவும் பிராமணர்கள் பின்தங்கியவர்கள்.
வேதம் மட்டுமே பயின்ற பிராமணர்கள் ,கோவில் அர்ச்சகர்கள் நிலை இன்னும் மோசம்.கோவில் ஊழியர்களைவிட இவர்களுக்கு ஊதியம் குறைவு.
ஆனாலும் கம்யூனிஸ்டுகளுக்கு பிராமணர்கள் என்றால் தந்திரசாலிகள் தான்.
ஹிந்துத்வம் பேசும் கட்சிகள் கூட இவர்களை ஆதரிக்காது.
கோவில்களையும் அர்ச்சகர்களையும் நிராகரித்த தேசம் எப்படி செழிப்படையும்?
பிராமணர்களே! நீங்களே களமிறங்குங்கள்.தர்மப் பிரச்சாரம் செய்யுங்கள்.பழம் பெருமையை மீட்டெடுங்கள்.உங்கள் சேவை உலகுக்கே தேவை.

மொழிபெயர்ப்பு ஆசிரியர்:ஸ்ரீப்ரியா இராம்குமார்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

10 Jun
லஞ்சப் புகாரில் கைது செய்யப்படுபவர்கள் குற்ற வழக்கில் விடுவிக்கப்பட்டதைக் காரணம் காட்டி, துறை ரீதியிலான நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது எனக் கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், துறைமுக அதிகாரி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் துணை தலைமைப் பொறியாளராகப் பணியாற்றியவர் வி.பிரபாகர். லஞ்சப் புகாரில் இவரை 2013-ம் ஆண்டு சிபிஐ கைது செய்தது. அதையடுத்து இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு சிபிஐ நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
Read 15 tweets
10 Jun
இது உங்கள் இடம்: ஆட்சிக்கு தேவை புதிய சிந்தனை!

இதிஹாசமயம் சீதாராமன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

கொரோனாவை கையாளுவதில், தமிழக அரசு காட்டும் ஆர்வம் பாராட்டத்தக்கது. ஆனால், மற்ற செயல்பாடுகள் பாராட்டும்படி இல்லையே!மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என அழைக்க வேண்டுமாம்.
தமிழை, மத்திய ஆட்சி மொழியாக ஆக்க வேண்டுமாம். இதெல்லாம் இன்றைய சூழலில் தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கும் செயல்கள்.

வரிப்பணத்தை, ரேஷன் கடைவழியாக மக்களுக்கு வாரி வழங்குவது, ஆளுங்கட்சியின் சாதனை அல்ல. திராவிட ஆட்சியாளர்கள் யார் வந்தாலும், செய்யும் காரியம் தான்.
புதிய ஆட்சியாளர்களிடம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்றவற்றை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.கோவில் சொத்தை எடுத்து, தவறாக பிரயோகம் செய்வது; ஹிந்திக்கு எதிராக செயல்படுவது போன்றவற்றை, மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
Read 7 tweets
10 Jun
*செட்டிபுண்ணியம் ஸ்ரீயோக ஹயக்ரீவர் கோவில்*

*கல்விச்செல்வத்தை குறைவில்லாது வாரி வாரி வழங்கும் ஸ்ரீ யோக ஹயக்ரீவமூர்த்தி கோவில்.*

🙏🇮🇳1
*அக்காலத்தில் சரியான சாலைகள் இல்லாததாலும், போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்ததாலும், செங்கல்பட்டு அருகே செட்டிப்புண்ணியம் என்ற சிற்றூர் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியாக, மக்கள் நடமாட்டம் அதிகமாக இல்லாத பகுதியாக இருந்தது. 🙏🇮🇳2
இதனால் ஆங்கிலேயர்களிடம் இருந்து, இந்து கடவுள் சிலைகளை பாதுகாக்க, இந்த ஊரை நம் முன்னோர்கள் தேர்வு செய்தனர்.*

பல புகழ்பெற்ற ஊர்களில் உள்ள கோவில் விக்கிரகங்கள் இங்கு மறைத்து வைக்கப்பட்டன.

🙏🇮🇳3
Read 22 tweets
9 Jun
ஸ்ரீமடத்தில் மாலை வேளை தரிசனம். மகானை, பக்தர்கள் ஏகாந்தமாகத் தரிசித்துக் கொண்டு இருந்த சமயம் மகாபிரபு அருளுரை நல்க, அதை மெய்மறந்து மக்கள் கேட்டுக் கொண்டு இருந்தனர்.
இந்த நேரத்தில் மகான், "அடடா விளக்கு அணைந்து போயிற்றே...யானை மிரள்கிறதே" என்று சற்று பதறியதைப் போல் சொல்ல...உடனிருந்த அனைவரும் ஒன்றும் புரியாமல் திகைத்தனர்
"என்ன விளக்கு? எங்கே யானை?" என்று அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை..
அருகில் இருந்த ஒருவரை அழைத்து, "திருவனந்தபுரத்தில் உள்ள ரப்பர் போர்டு சுவாமிநாத அய்யருக்கு போன் போட்டு எல்லாம் நல்லபடியா நடக்கிறதான்னு கேள்" என்றார் பெரியவா.
Read 9 tweets
9 Jun
இந்திய அரசியல்... இந்திய அரசியல் சாசனத்தில் 'ஒன்றிய அரசு' என குறிப்பிடப்பட்டுள்ளதா? பா.ஜ.க தலைவர் SG சூர்யா விளக்கம்!
தி.மு.க-வினர் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக மத்திய அரசு என்ற ஒன்றே இல்லை என்றும், இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்பதால் ஒன்றிய அரசு என்றே அழைக்க வேண்டும் என்றும் பிரிவினையை ஊக்குவிக்கும் வண்ணம் பேசி வருகின்றனர்.
இது உண்மையா என்று ஆராய்ந்து நடுநிலையுடன் செய்தி வெளியிட வேண்டிய ஊடகங்களும் தி.மு.க-வினரின் பொய்ப் பிரச்சாரத்தையே தொடர்கின்றன. உண்மையிலேயே அரசியல் அமைப்புச் சட்டத்தில் 'ஒன்றிய அரசு' என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறதா? மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதை பா.ஜ.க எதிர்ப்பது ஏன்?
Read 9 tweets
9 Jun
தமிழகத்தின் கோயில் சொத்து ஆவண விவரங்கள்: இந்து சமய அறநிலையத்துறை இணையத்தில் பதிவேற்றம்

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களின் நில உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் பார்வைக்கு, கருத்து சொல்ல இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 36 ஆயிரத்து 488 கோயில்கள், 56 திருமடங்கள், திருமடத்துடன் இணைந்தபடி 58 கோயில்கள் உள்ளன.
இவை தவிர, 17 சமணக் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்கள் மற்றும் திருமடங்களுக்குச் சொந்தமாக நன்செய், புன்செய், மானாவாரி என்று 4 லட்சத்து 78 ஆயிரத்து 348 ஏக்கர் நிலங்கள் உள்ளன.
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(