சித்த மருத்துவத்தைப் பேசி பேசுனா பட்டி டிங்கரிங் பாத்துடலாம். ஆனா, டீச்சர் என்ன கிள்ளி வச்சுட்டான் ரேஞ்சுக்கு அழத் தொடங்கிடுவாங்க.
மூலிகை, இலை, தழை, தண்டு, வேர், பட்டை எல்லாம் கரிம / கனிம வேதிப்பொருட்களால் ஆனவை என்பது அறிவியல் அறிந்தவர் அறிந்ததே. 👇
எந்த ஒரு வேதிப்பொருளும் வெவ்வேறு வகையாக வினைகளில் ஈடுபடும் என்பதும், அந்த வினைகளில் நமக்குத் தேவையில்லாத வினைகளும் இருக்கும் (அதாவது பக்கவிளைவு) என்பதும் அறிவியல் சொல்கிறது.
இப்படி இருக்க, இந்த இலையின் சாறு இத்தனை ஆழாக்கு குடிக்கணும்னு ஒரு மருத்துவமுறை சொல்ல, அதில் என்னென்ன 👇
வேதிப்பொருட்கள் இருக்குன்னு, அது எப்படி எப்படி வேலை செய்யும், அதுக்கு என்னென்ன பக்கவிளைவுகள் இருக்கு என்பதைப் பற்றி எந்தத் தகவலும் கேட்டா, பக்கவிளைவுகளே இல்லை என்பது பதிலாக வருகிறதுன்னு வச்சுக்குவோம்.
பக்கவிளைவே இல்லையா பக்கவிளைவுகள் குறித்த தகவல் இல்லையான்னு தோனுமா இல்லயா? 👇
தலைமுறையாக மருத்துவர்கள் என்று சொல்பவர்கள் தங்களது மருத்துவமுறையை மற்றவர்க்குச் சொல்வதில்லை, ஓலையில் இருப்பதை வைத்து செய்கிறோம் என்பவர்கள் அதை இன்றுள்ள அறிவியலின் துணையோடு ஆய்ந்து அதை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதில்லை.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபுடிச்சிட்டோம்னு Cleviraவைத் தூக்கிப் பிடிச்சிட்டு வர்றவங்க அதை ICMR supportive medicine ஆகத் தான் சொல்லிருக்குன்னு புரிஞ்சுக்குவாங்களா? அதாவது, modern medicine எடுத்துக் கொள்ளும் நோயாளிகள், கூடவே இதையும் எடுத்துக் கொள்ளலாம்.
இதற்கு அவர்கள் எடுத்த clinical trial மொத்தம் 100 பேர்கள் மட்டும் வைத்து எடுத்தது. 50 பேருக்கு placebo, 50 பேருக்கு clevira (ஆயுர்வேத மருந்து)வும் கொடுத்து எடுத்த trialல் promising என ஆய்வு முடிவு வந்தது. ஆனா, இந்த 100 பேருமே மற்ற மருந்துகளும் எடுத்துட்டு வந்தாங்க.
அந்த மருந்தோடு supportive மருந்தாக clevira மருந்தையும் எடுத்துக் கொண்டாங்க. ஏற்கனவே இந்த clevira மருந்து டெங்குவிற்கும் பயன்படுத்தப்பட்டது. அதற்கும் supportive மருந்தாகவே பயன்படுத்தப்பட்டது. வெறும் 100 பேர்களின் தகவல்களை மட்டும் கொண்டு, supportive மருந்தாக ஏற்றுக் கொள்ளப்படும் 👇
இந்த ஊருல தான் Three phase clinical trials, தகவல்கள், vaccine efficacy rate, இதெல்லாம் இருந்தும், தடுப்பூசி பற்றிய அச்சத்தை எளிதில் பரப்பி விட முடிகிறது.
சித்தா, ஆயுர்வேதா ஆகிய முறைகள் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட செய்ய வேண்டியவை அவற்றை முறைப்படுத்த வேண்டியதே.
அறிவியல் முறைப்படி, மூலிகைகளில் வேதியியல் பொருட்கள், அவை செயல்படும் முறை, அவற்றின் விளைவுகள், பக்கவிளைவுகள் ஆகியவற்றைத் தரவுகளோடு முறைப்படுத்துதல். இவ்வாறு செய்தால், பழமைப் பெருமை என்று மட்டும் அல்லாது அறிவியல் வழி மருத்துவமுறையாகவும் மாறும். இன்னமும் செவிவழி முறைகளையும், 👇
முன்னோர் சொன்னதையும் ஆராயாது அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருந்தால், கத்திக்கிட்டே இருங்க, நான் போயி ஆகுற வேலையப் பாக்குறேன்னு உலகம் உங்களைத் தாண்டிப் போயிடும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கடல்நீரைக் குடிநீராக்கல் (Desalination) குறித்து, சு.சா போன்ற புல்லறிவாளர்களேப் பேசும் போது, அத்துறையில் பணி புரியும் நானும் தெரிந்ததைச் சொல்ல இந்த இழை... 👇👇👇
உவர்நீக்கல் - Desalinationக்குச் சரியான தமிழாக்கமாக இருக்கலாம். கடல்நீரின் உவர்ப்புச்சுவை நீக்கி குடிக்க ஏற்ற நீராய் மாற்றல்.... கடல் நீரில் கரைந்துள்ள உப்பு, கரியமில வாயு ஆகியவற்றை நீக்கி, பின் குடிக்க ஏதுவாக சில உப்புக்களைக் கலந்து குடிநீராக்கல்...
உப்பு நீக்கல் பொருத்து, பொதுவாக இருவகைப்படும்... 1. காய்ச்சி வடித்தல் (Distillation) 2. எதிர்மறை சவ்வூடுபரவல் (Reverse Osmosis)