50 ஆயிரம் ஏக்கர் கோயில் விவசாய நிலம் மாயம்: பா.ஜ., எச்.ராஜா குற்றச்சாட்டு

சிவகங்கை : தமிழகத்தில் கோயிலுக்கு சொந்தமான 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் காணாமல் போயுள்ளது. இதனை தமிழக அரசு மீட்க வேண்டும்,'' என சிவகங்கையில் பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அரசின் கையில் தமிழக கோயில்கள் இருப்பதால், அவை அழிந்து வருகின்றன. உண்டியல், இதர வருவாய் உள்ள கோயில்களை மட்டுமே அரசு பராமரிக்கிறது. இன்றுவரை 10 ஆயிரம் கோயில்கள் இடிபாடுடன் கிடக்கின்றன. இந்த அரசு ஹிந்து கோயில்களை மட்டுமே கண்டுகொள்வதில்லை.
அதே நேரம் பிற மதக்கோயில்கள் அழிய அனுமதிப்பார்களா. சிவகங்கை கவுரி விநாயகர் கோயில் நிலம் 142 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆனால், 9.58 ஏக்கரை மட்டுமே மீட்டு, அனைத்து ஆக்கிரமிப்பையும் அகற்றி விட்டதுபோல், தி.மு.க., அரசு நாடகம் ஆடுகின்றது.
கோயில் நில ஆக்கிரமிப்பு அகற்ற குழு

சென்னை உயர்நீதிமன்றம், அறநிலையத்துறைக்கு விடுத்துள்ள உத்தரவில் கோயில் நிலங்களை மீட்க மாவட்ட வாரியாக 5 பேர் குழு அமைக்க கூறியது. ஆனால், அது குறித்து அரசிடம் எந்த நடவடிக்கையும் இல்லை.
அறநிலையத் துறையின் கீழ் 4 லட்சத்து 78 ஆயிரத்து 239 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. ஆனால் இத்துறை கொள்கை விளக்க குறிப்பில் 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் உள்ளதாக கூறியுள்ளது. அப்படியானால் எஞ்சிய 50 ஆயிரம் ஏக்கர் நிலம் எங்கே போனது என்பது பற்றி அரசு அறிக்கை வெளியிட வேண்டும்.
ஆக்கிரமிப்பு நிலங்கள் பட்டியல்

அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில் சொத்துக்களில் 2 கோடியே 44 லட்சத்து 51 ஆயிரத்து 348 சதுர அடியில் 22 ஆயிரத்து 599 வணிக வளாகங்கள், 29 கோடியே 14 லட்சத்து 66 ஆயிரத்து 216 சதுர அடியில் 33 ஆயிரத்து 627 வீட்டு மனைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன.
சென்னை - காஞ்சிபுரம் ரோட்டில் பாப்பான்சத்திரம் ஊராட்சி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் உள்ள 177 ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும்.கோயில் நிலத்தில் புனித ஜான் பள்ளி ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்றக்கோரி 2018 செப்.,2ல் உண்ணாவிரதம் இருந்தேன்.
சென்னை அருணாசலபுரத்தில் 500 ஏக்கர், சென்னை கிரீன்வேஸ் ரோட்டில் கபாலீஸ்வரர் கோயில் நிலம் 14 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளன.
வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் கோயிலுக்கான 28 ஆயிரத்து 600 ஏக்கர் நிலத்தை ஏக்கருக்கு ஆண்டுக்கு 2 ரூபாய் 40 பைசாவிற்கு வாடகைக்கு விட்டு, இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். தமிழக அரசு விரைந்து கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
கோயில் நில வாடகை உயர்வு

44 ஆயிரம் கோயில்களில் எஸ்.டி., பிரிவினர் உட்பட அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராக உள்ளனர். இதில் எவ்வித ஏற்றத்தாழ்வும் இல்லை. ஆனால், திராவிட கட்சிகள் ஹிந்து சமயத்திற்கு எதிராக செயல்படுகின்றனர்.
ஹிந்து அறநிலையத்துறை சட்டத்திலேயே கோயில் வணிக கட்டடங்களின் வாடகையை 3 ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தலாம் என உள்ளது .ஆனால், இத்துறை வாடகையை உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சென்னையில் முன்னாள் அமைச்சர் பொங்கலுார் பழனிச்சாமிக்கு சொந்தமான கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லுாரி உள்ளது. வில்வபூஜை செய்வதற்காக அறக்கட்டளை ஒன்று சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வழங்கிய நிலத்தை ஆக்கிரமித்து தான், இக்கல்லுாரி கட்டியுள்ளனர். அதையும் அரசு அகற்ற வேண்டும்.
'ஊராட்சி' ஆன தமிழக அரசு

பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோது, ரூ.2.25 லட்சம் கோடிக்கு மேல் பெட்ரோலிய பில்லுக்கான தொகை நிலுவையில் இருந்தது.அவர் பிரதமராக இருந்தபோது கூட்டாளியாக இருந்தது தி.மு.க.,தான்.
மத்திய அரசை ஒன்றியம் என கூறினால், தமிழக அரசை 'ஊராட்சி' என்று தான் சொல்ல வேண்டும். இவ்வூராட்சியின் அக்கவுண்டன்ட்' தான் நிதி அமைச்சர் தியாகராஜன். காவிரிநதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கு துரோகம் இழைத்தது தி.மு.க., தான்.
'நீட்' தேர்வு சமூக பாதிப்பில்லை

உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு பின்னர் தான் நீட்' தேர்வு நடத்தப்பட்டது. இதை மத்திய அரசு கூட நிறுத்த முடியாது. 2004 முதல் 2016 வரை தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் 200 பேருக்கு தான் மருத்துவ சீட் கிடைத்தது.
ஆனால், நீட் தேர்வுக்கு பின் கடந்த ஆண்டு மட்டும் அரசு பள்ளிகளில் படித்த 450 பேர் எம்.பி.பி.எஸ்., சேர்ந்துள்ளனர். நீட் தேர்வால் சமூக ரீதியாக பாதிப்பு இல்லை, என்றார்.

தினமலர்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

22 Jun
'நாங்கள் ஆட்சிக்கு வந்தால்!' - தி.மு.க-வின் வாக்குறுதிகளும், அடித்த பல்டிகளும்!
"ஸ்டாலின்தான் வராரு, விடியல் தரப் போறாரு!" என கோடிகளில் இறைத்து விளம்பரம் செய்து ஆட்சியை பிடித்த தி.மு.க ஆரம்பம் முதல் இன்றுவரை ஆட்சி செய்வதில் குளறுபடி, வாக்குறுதிகளில் பல்டி, நிர்வாகத்தில் பூஜ்யம் என மண்ணை கவ்வி வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அப்படி தி.மு.க அடித்த அந்தர் பல்டிகள்,

1) பெட்ரோல், டீசல் விலையில் பல்டி

கடந்த ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலையை காரணம் காட்டி தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையில் 5 ரூபாயையும் டீசல் விலையில் 4 ரூபாயையும் குறைப்போம் என்று
Read 23 tweets
22 Jun
உ.பி.,யில் கட்டாய மத மாற்றம் பாக்., உளவாளிகள் கைது

லக்னோ : வாய் பேச மற்றும் காது கேட்க இயலாதவர்களை கட்டாய மத மாற்றம் செய்ய முயற்சித்த, பாகிஸ்தான் உளவு அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேரை, உத்தர பிரதேச போலீசார் கைது செய்தனர்.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., அரசு நடக்கிறது. இங்குள்ள நொய்டாவில் வசிப்பவர்கள் உமர் கவுதம், ஜஹாங்கீர். வாய் பேச மற்றும் காது கேட்க இயலாத மாற்றுத் திறனாளியான பெண் மற்றும் சிறுமியை கட்டாயப்படுத்தி, முஸ்லிம் மதத்துக்கு இவர்கள் மாற்ற முயற்சித்தனர்.
பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், இருவரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:கைது செய்யப்பட்ட இருவரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள். இதுவரை, 1,000 பேரை கட்டாய மத மாற்றம் செய்துள்ளனர்.
Read 5 tweets
22 Jun
ஸ்ரீ நரசிம்மர் சயனக் கோலம்...

பள்ளிகொண்ட கோலத்தில் அரங்கனை தரிசித்துள்ளோம். ஹிரண்யனை சம்ஹாரம் செய்த நரசிம்மமூர்த்தியும் களைத்துப் போய் சயன கோலத்தில் காட்சி அளிப்பதை திருவதிகை (பண்ருட்டி அருகில்) சரநாராயண திருத்தலத்தில் தரிசிக்கலாம். 🇮🇳🙏1
ஸ்ரீ நரசிம்மர் சயனக் கோலக் காட்சியை இக் கோயிலில் மட்டுமே காணலாம்.

திருமாலின் திவ்வியத்திருத்தலங்களில் இக்கோயிலில் தான் சயன நரசிம்மர் சயன திருக்கோலத்தில் தெற்கு நோக்கி சயனித்திருக்கிறார். இது ஒர் மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சமாகும்.

🇮🇳🙏2
மேலும் தாயாரும் உடன் எழுந்தருளியிருப்பதால் இது போக சயனம் ஆகும். இந்த சயன நரசிம்மர், திருவக்கரையில் வக்ராசுரனை அழித்து விட்டு, அதன் பரிகாரத்துக்காக இத்தலத்தில் வந்து சயனித்துள்ளார்.

🇮🇳🙏3
Read 4 tweets
21 Jun
*பஞ்ச பாண்டவர்களில் முதல்வரான தர்மர் தான் உலகிலேயே மிக அதிக தர்மம் செய்தவர் என்பார்கள்.*

தன்னைத் தவிர இவ்வுலகில் அதிக தானம் செய்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்பது தர்மரின் எண்ணம். இதுவே, அவருக்கு அகந்தையாக மாறி விடக் கூடாது என்ற எண்ணம் கண்ணபிரானுக்கு ஏற்பட்டது.
எனவே அவர் தர்மருடன் மலை நாட்டுக்கு சென்றார். அந்த நாட்டை மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு வந்தார்.

அங்குள்ள ஒரு வீட்டிற்குச் சென்று குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர்.
அவ்வீட்டு பெண்மணி தங்கச் செம்பில் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தாள். அவர்கள் குடித்து முடித்ததும் செம்பை வீசி எறிந்து விட்டாள்.

தர்மர் அவளிடம், "தங்கச் செம்பை பத்திரமாக வைத்திருக்க வேண்டாமா? தெருவில் வீசி எறிந்து விட்டீர்களே,'' என" ஆச்சரியமாகக் கேட்டார்.
Read 8 tweets
21 Jun
'தேர்தல் சமயத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு' - ஸ்டாலினை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!

"தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு என்பதுதான் தற்போதைய தி.மு.க நிலைமையாக உள்ளது" என முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "தி.மு.க ஆட்சி அமைந்த உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்து விட்டு இன்று அதை பற்றி விசாரிக்க குழு அமைக்க பட்டிருக்கிறது.
ஆனால் தேர்தல் அறிக்கையிலும், பிரச்சாரத்தின் போதும் நீட் தேர்வு ரத்து என்று சொல்லி விட்டு, இப்போது குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. தேர்வு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு,தேர்வு வந்ததற்கு பின்பு ஒரு பேச்சினை பேசி வருகின்றனர்.
Read 5 tweets
21 Jun
தடுப்பூசிகளுக்கு எதிரான வதந்தி ஏழைகளை அதிகம் பாதிக்கிறது: ஹர்ஷ் வர்தன்

புதுடில்லி: 'கோவிட் தடுப்பூசிகளுக்கு எதிரான வதந்தியால் ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
வதந்தி பரப்புவோரிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச யோகாதினம் இன்று (ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமது இல்லத்தில் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் யோகாசனங்களை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

கோவிட் தடுப்பூசிகளுக்கு எதிராக வதந்தி பரப்புவோரிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(