ஒருவரோ அல்லது ஒரு இயக்கமோ அல்லது ஒரு கட்சியோ எதுவானாலும் அவர்களின் விமர்சன கருத்து என்பது அவர்களின் நோக்கத்தை பொறுத்தது. உதாரணமாக மருதையனோ அல்லது 2.0கும்பலோ அல்லது சங்கிகளோ இப்படி இவர்களெல்லாம் இன்று விடுதலை புலிகளை பற்றியும் தலைவர் பிரபாகரனை பற்றியும்..
👇🏿
அவதூறு செய்வதை தாண்டி பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு என்ன தீர்வை வைத்திருக்கிறார்களென்று கேளுங்கள். இவர்களின் நோக்கம் அம்பலப்பட்டு போகும். இவர்கள் அனைவரும் இணையும் புள்ளி இதுதான். ஈழத்தமிழர்களை 60ஆண்டுகளாக அழித்து ஒழிக்கும் சிங்கள பவுத்த பேரினவாதத்தோடு..
👇🏿
இணைந்து ஈழத்தமிழர்கள் வாழ வேண்டுமென்பது தான். அதை அவரவர்கள் மொழியில் அவரவர்கள் சொல்லுவார்கள். குறிப்பாக
மருதையன் கும்பல் இலங்கை பாட்டாளிவர்க்கமும், ஈழப்பாட்டாளி வர்க்கமும் இணைந்து ஒரே நாட்டில் வாழவேண்டுமென்று சொல்லுவார்கள்.
👇🏿
2.0 கும்பலோ அதிகாரங்கள் பகிரந்தளிக்கப்பட்டு சமமான உரிமையுடன் இலங்கையுடன் இணைந்து ஈழத்தமிழர்கள் வாழ வேண்டுமென்பார்கள்.
சங்கிகளோ, இலங்கை தமிழர்களுக்கு 13ஆவது சட்டத்திருத்தத்தை அமல்படுத்தி சகோதரத்துவடன் இலங்கையோடு வாழவேண்டுமென்பார்கள்.
👇🏿.
இப்படி எல்லா கும்பல்களின் நோக்கமும் அடிப்படையில் ஒன்று தான்.அது சிங்கள பவுத்த பேரினவாதத்தோடு இணைந்து தமிழர்கள் வாழ்ந்து சாக வேண்டுமென்பது தான். இங்கே மோடியோடு நாம் சாவதை போல..
சரி கடந்த காலங்களில் இணைந்து வாழ நினைத்த தமிழர்களை ஏன் சிங்கள பேரினவாதம் கொன்றது?
👇🏿
சம உரிமையுடன் வாழ உறுதியளித்த அரசியலமைப்பை சிங்களம் எரித்தது ஏன்? இந்தியா 34ஆண்டுகளாக 13ஆவது சட்டத்திருத்தத்தை சொல்லியும் சிங்கள பேரினவாதம் ஏற்றுக்கொள்ளாதது ஏன்?
👇🏿
இதற்கெல்லாம் பதில் என்னவென்று மீளாய்வு செய்துவிட்டுவந்து புலிகளின் செயல்களை மீளாய்வு செய்யுங்கள்.
களத்தில் இருந்தவர்களை பற்றி கழுதைகள் உட்கார்ந்து மீளாய்வு செய்யுமாம் அதன் பேர் கருத்துக்களாமாம்.