புதுடில்லி : 'கூ' சமூக வலைதளத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில் கணக்கு துவக்கப்பட்டுள்ளது.
'டுவிட்டர், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களை போல், 'கூ' என்ற பெயரில் சமூக வலைதளத்தை இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் அப்ரமேயா ராதாகிருஷ்ணா, மயங்க் பிடாவட்கா ஆகியோர் துவக்கினர்.
இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ட சட்டவிதிகளை ஏற்க மறுத்து வருவதால், டுவிட்டருக்கும், மத்திய அரசுக்கும் மோதல் நீடித்து வருகிறது. இதையடுத்து இந்தியர்கள் பலரும், கூ சமூக வலைதளத்தில் கணக்கு துவக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ளே உள்ளிட்ட பலர், கூ சமூக வலை தளத்தில் இணைந்து உள்ளனர். இந்நிலையில் கூ சமூக வலைதளத்தில், ஆர்.எஸ்.எஸ்., சார்பில் கணக்கு துவக்கப்பட்டு உள்ளது.
இது பற்றி ஆர்.எஸ்.எஸ்., செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'தொண்டர்கள் மற்றும் மக்களை, இந்திய மொழிகளில் தொடர்பு கொள்ளும் நோக்கில், கூ சமூக வலைதளத்தில் ஆர்.எஸ்.எஸ்., இணைந்துள்ளது' என்றார்.
கூ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 'கூ சமூகவலைதளத்தில், 65 லட்சத்துக்கும் அதிகமான பயனாளர்கள் உள்ளனர்.இப்போது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு கணக்கு துவக்கியுள்ளதால், விரைவில் பயனாளர்கள் எண்ணிக்கை, ஒரு கோடியை தாண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம், பேரணி எல்லாம் நடத்தப்படுகின்றன.
அந்த போராட்டங்களில் எல்லாம், 'மத்திய அரசை கண்டிக்கிறோம்' என்ற கோஷமே இருக்கிறது.பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றத்தில் மாநில அரசுக்கும் பங்குண்டு என்பது காங்கிரசாருக்கு நன்கு தெரியும்.
பெட்ரோலின் அடிப்படை விலை 39 ரூபாய், 30 காசுகளாக இருக்கும் நிலையில், அதன் மீது 32 ரூபாய், 90 காசுகளை மத்திய அரசு வரியாக விதிக்கிறது.
இதனால் 1 லிட்டர் பெட்ரோல் 72 ரூபாய், 20 காசுகளுக்கு மாநிலங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
எனும் கவிதை வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ தாண்டவமாடி அசுரன் அபஸ்மரனை ஒரு காலால் மிதித்து வதம் செய்து இன்னொரு காலை தூக்கி வைத்து நடனமாடிக் காட்சித் தந்து கொண்டிருக்கும் தில்லையம்பல நடராஜருக்கு இவ்வார்த்தைகள் தகும்.
திருநாளில் தானே நாட்டியம் களைக்கட்டும். எப்பொழுதுமே நடனமாடிக் கொண்டிருக்கும் சிவப்பெருமானுக்கு என்றுமே திருவிழாதான்.
நடராஜரின் வலது கால், முயலகன் என்பவன் மீது இருக்கிறது. இவனை, "அபஸ்மாரன்'என்பர்.
திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மத துவேஷத்தில் ஈடுபட்டதாக 4 பேர் கைது
திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த 6-ம் தேதி மாலை பேகம்பூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பெட்ரோல், டீசல், காஸ் என ஒரு பதாகையில் எழுதி, அதை பாடை கட்டி தூக்கி ஊர்வலமாகச் சென்றனர். உடன் மயானத்துக்கு ஈமக்கிரியை செய்ய ஒரு சிறுவன் செல்வதுபோல் அவருக்கு நாமமிட்டு, மாலை அணிவித்து, கையில் சட்டியைக் கொடுத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு திண்டுக்கல் மாவட்ட இந்து முன்னணி அமைப்பினர், இதில் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாரை வலியுறுத்தினர்.
பொது சிவில் சட்டம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
பொது சிவில் சட்டம் அவசியமானது. அதை அமல்படுத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 44-வது பிரிவு பொது சிவில் சட்டத்தை பரிந்துரைக்கிறது.
இந்தியாவில் 2 சட்டங்கள் உள்ளன. ஒன்று சிவில் சட்டம், இன்னொன்று கிரிமினல் சட்டம்.இந்த கிரிமினல் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் சிவில் சட்டம் பொதுவானது இல்லை.
இந்த சட்டம் பல்வேறு சிக்கல்களை கொண்டது. மத ரீதியான நிறைய சிக்கல் இதனால் வரும். இந்த சட்டத்தின்படி இந்திய குடிமகன்கள் எல்லோருக்கும் திருமணம், சொத்து, விவாகரத்துஉள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் ஒரேவிதமான சட்டம் இருக்கும். அவர்கள் பின்பற்றும் மதம் சார்ந்த சட்டங்கள் செல்லுபடியாகாது.
நிபுணர் குழுக்களில் தகுதி, நேர்மை; அரசு பரிசீலிக்க ஐகோர்ட் அறிவுரை
சென்னை : நிபுணர் குழுக்களில் நேர்மையான தகுதி படைத்தவர்களை நியமிக்கவும் வெளிப்படைத்தன்மை இருக்கவும் அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
உதயநிதி 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' படத்தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர். தமிழில் பெயர் உள்ள படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதன்படி இந்த நிறுவன தயாரிப்பின் சில படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு கோரிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
இதையடுத்து கேளிக்கை வரி விலக்கு அளிக்கவும் படங்களை பார்த்து பரிந்துரைப்பதற்கு புதிய குழுவை அமைக்கவும் கோரி ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளன.