சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக "திருஞானசம்பந்தர் தன் வேல் ஒன்றினைத் திருமங்கையாழ்வாருக்குப் பரிசளித்த தலம்"!!!.
திருமகள் தாயார் திரிவிக்கிரமனரை மார்பில் தாங்கி காட்சியளிக்கும் அற்புதத் திருத்தலம்!!!!!
பிரம்மனின் கர்வத்தை உரோமச முனிவர் அடக்கிய தலம்!!!
🇮🇳🙏1
அருள்மிகு திருவிக்கிரம நாராராயணன் திருக்கோவில் :-
சீர்காழி என்ற காழிச்சீராம விண்ணகரம்.
மூலவர்: திருவிக்கிரமன், தாடாளன்
தாயார்: லோகநாயகி, மட்டவில்குழலி
உற்சவர்: திருவிக்கிரம நாராயணன்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: புட்கலாவர்த்த விமானம்
🇮🇳🙏2
தீர்த்தம்: சங்க தீர்த்தம், சக்கர புஷ்கரணி
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
ஊர்: சீர்காழி
🇮🇳🙏3
காழிச் சீராம விண்ணகரம் :-
உலகனைத்தும் நிறைந்துள்ள ஒப்பற்ற பரம்பொருளாம் இறைவன் நாராயணன் எடுத்த பத்து அவதாரங்களில் ஒன்று வாமன அவதாரம். மகாபலியின் கர்வத்தை அடக்க உலகம் முழுவதையும் ஈரடியால் அளந்தார் அந்த அனந்த மூர்த்தியான இறைவன்.
🇮🇳🙏4
அத்தகைய விண்ணளக்கும் மூர்த்தி சீர்காழி என்னும் பதியில் கோவில் கொண்டருள்வதால், இத்தலத்திற்கு "காழிச்சீராம விண்ணகரம்" என்னும் பெயர் உண்டானது.
🇮🇳🙏5
தலவரலாறு :-
பிரம்மனுக்குத் தன் ஆயுளைப்பற்றிக் கர்வம் இருந்ததாகவும், அதனை அடக்க உரோமசர் என்னும் முனிவர் மகாவிஷ்ணுவால் தான் இந்த கர்வத்தை அடக்க முடியும் என எண்ணிணார்.
🇮🇳🙏6
திருமாலின் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தவர் "உரோமச முனிவர்". ஒருநாள் உரோமச முனிவருக்கு வைகுண்ட வாசன் வாமன அவதாரம் எடுத்து திரிவிக்கிரமனாக காலைத் தூக்கி மூவுலகத்தையும் அளந்து காட்டிய திருக்கோலத்தைக் காண வேண்டும் என்ற ஆசை எழுந்தது.
🇮🇳🙏7
இதனால், சுவாமியை வேண்டி இத்தலத்தில் கடும் தவம் இருந்தார்.
உரோமச முனிவரின் தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு "உன் உடம்பில் உள்ள (தலையில் உள்ள) ஒரு உரோமம் உதிர்ந்தால் பிரம்மனின் ஆயுளில் ஒருவருடம் குறையும்" என்று கூறி, இன்னும் வேறு என்ன வரம் வேண்டும் கேள்!!! என்றார் உரோமச முனிவரிடம்.🇮🇳🙏8
எம்பெருமான் எடுத்த திரிவிக்ரம அதாரத்தை இவ்விடத்தே எனக்கு காட்டியருளவேண்டுமென்று வேண்ட, அவ்வண்ணமே அவருக்கு காட்சி தந்த இறைவன் தன் இடக்காலைத் தூக்கி திருவிக்கிர அவதாரத்தைக் காட்டி அருளினார்.
🇮🇳🙏9
இதனால், இத்தல இறைவனுக்கு விண்ணளந்த பெருமாள், பிற்காலத்தில் "தாடாளன்" என்ற திருநாமமும் உண்டானது.
🇮🇳🙏10
சிதம்பரம் படையாச்சி :-
சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வூர் மன்னன் ஆற்காடு நவாப்பின் ஆதிக்கத்தில் இருந்துள்ளது. அப்போது இறைவன் தாடாளன் உற்சவர் திருமேனியை தன் மகளுக்கு பரிசாக கொடுக்க நவாப் எண்ணிய நிலையில், 🇮🇳🙏11
அதைத் தடுக்கும் பொருட்டு சிதம்பரம் படையாச்சி என்பவர் யாரும் அறியாத வண்ணம் தானே எடுத்துச் சென்று காப்பாற்றியதாக கர்ண பரம்பரை வழிச் செய்திகள் தெரிவிக்கிறது.
இதை நினைவு கூறும் விதமாக இத்தலத்தில் சிதம்பரம் படையாச்சி வம்சத்தாருக்கு தனிமரியாதை செய்யப்படுகிறது.
🇮🇳🙏12
தவிட்டு பானை தாடாளன் :-
இத்திருத்தலப் ஒருமுறை சிதைந்து போன தருவாயில் ஒரு மூதாட்டி உற்சவர் திருமேனியை தவிட்டு பானைக்குள் வைத்து பாதுகாத்ததாகவும், திருமங்கையாழ்வார் இத்தலம் வந்த போது அவரிடம் சமர்ப்பித்ததாகவும் கூறப்படுகிறது. 🇮🇳🙏13
இதன் காரணமாக இத்தல உற்சவருக்கு "தவிட்டு பானை தாடாளன்" என்ற திருநாமம் உண்டானது.
திவ்யதேசம் : காழிச்சீராம விண்ணகரம் ( சீர்காழி ) ஸ்ரீ தாடாளன்
வைகுண்ட ஏகாதசியன்று ஒருநாள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்."தாள்' என்றால் "பூமி அல்லது உலகம்', "ஆளன்' என்றால் "அளந்தவன்' என்று பொருள்🇮🇳🙏14
தன் திருவடியால் மூன்று உலகங்களையும் அளந்தவன் என்பதால் இவருக்கு ஆண்டாள் இவருக்கு "தாடாளன்' என்ற பெயரை சூட்டினாள்.
🇮🇳🙏15
சிறப்புகள் :-
திருஞானசம்பந்தர் திருமங்கையாழ்வாரைப் பாராட்டி தமது வேல் ஆயுதத்தைப் பரிசாக அளித்த தலம்.
திருமகள் தாயார் லோகநாயகி என்னும் திருநாமத்தில் காட்கி கொடுக்கும் தலம்.
லோகநாயகி தாயார் திருவிக்கிரமரை மார்பில் தாங்கி காட்சியளிக்கும் தலம்.
சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் பேருந்துகள் இத்தலம் வழியாகவே செல்கின்றன. சீர்காழி பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. 🇮🇳🙏17
சீர்காழி இரயில் நிலையத்திலிருந்து 01 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.
அருள்மிகு திருவிக்கிரமன் சுவாமி திருவடிகளே சரணம்.
அருள்மிகு லோகநாயகி தாயார் திருவடிகளே சரணம்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம், பேரணி எல்லாம் நடத்தப்படுகின்றன.
அந்த போராட்டங்களில் எல்லாம், 'மத்திய அரசை கண்டிக்கிறோம்' என்ற கோஷமே இருக்கிறது.பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றத்தில் மாநில அரசுக்கும் பங்குண்டு என்பது காங்கிரசாருக்கு நன்கு தெரியும்.
பெட்ரோலின் அடிப்படை விலை 39 ரூபாய், 30 காசுகளாக இருக்கும் நிலையில், அதன் மீது 32 ரூபாய், 90 காசுகளை மத்திய அரசு வரியாக விதிக்கிறது.
இதனால் 1 லிட்டர் பெட்ரோல் 72 ரூபாய், 20 காசுகளுக்கு மாநிலங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
எனும் கவிதை வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ தாண்டவமாடி அசுரன் அபஸ்மரனை ஒரு காலால் மிதித்து வதம் செய்து இன்னொரு காலை தூக்கி வைத்து நடனமாடிக் காட்சித் தந்து கொண்டிருக்கும் தில்லையம்பல நடராஜருக்கு இவ்வார்த்தைகள் தகும்.
திருநாளில் தானே நாட்டியம் களைக்கட்டும். எப்பொழுதுமே நடனமாடிக் கொண்டிருக்கும் சிவப்பெருமானுக்கு என்றுமே திருவிழாதான்.
நடராஜரின் வலது கால், முயலகன் என்பவன் மீது இருக்கிறது. இவனை, "அபஸ்மாரன்'என்பர்.
திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மத துவேஷத்தில் ஈடுபட்டதாக 4 பேர் கைது
திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த 6-ம் தேதி மாலை பேகம்பூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பெட்ரோல், டீசல், காஸ் என ஒரு பதாகையில் எழுதி, அதை பாடை கட்டி தூக்கி ஊர்வலமாகச் சென்றனர். உடன் மயானத்துக்கு ஈமக்கிரியை செய்ய ஒரு சிறுவன் செல்வதுபோல் அவருக்கு நாமமிட்டு, மாலை அணிவித்து, கையில் சட்டியைக் கொடுத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு திண்டுக்கல் மாவட்ட இந்து முன்னணி அமைப்பினர், இதில் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாரை வலியுறுத்தினர்.
பொது சிவில் சட்டம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
பொது சிவில் சட்டம் அவசியமானது. அதை அமல்படுத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 44-வது பிரிவு பொது சிவில் சட்டத்தை பரிந்துரைக்கிறது.
இந்தியாவில் 2 சட்டங்கள் உள்ளன. ஒன்று சிவில் சட்டம், இன்னொன்று கிரிமினல் சட்டம்.இந்த கிரிமினல் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் சிவில் சட்டம் பொதுவானது இல்லை.
இந்த சட்டம் பல்வேறு சிக்கல்களை கொண்டது. மத ரீதியான நிறைய சிக்கல் இதனால் வரும். இந்த சட்டத்தின்படி இந்திய குடிமகன்கள் எல்லோருக்கும் திருமணம், சொத்து, விவாகரத்துஉள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் ஒரேவிதமான சட்டம் இருக்கும். அவர்கள் பின்பற்றும் மதம் சார்ந்த சட்டங்கள் செல்லுபடியாகாது.
புதுடில்லி : 'கூ' சமூக வலைதளத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில் கணக்கு துவக்கப்பட்டுள்ளது.
'டுவிட்டர், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களை போல், 'கூ' என்ற பெயரில் சமூக வலைதளத்தை இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் அப்ரமேயா ராதாகிருஷ்ணா, மயங்க் பிடாவட்கா ஆகியோர் துவக்கினர்.
இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ட சட்டவிதிகளை ஏற்க மறுத்து வருவதால், டுவிட்டருக்கும், மத்திய அரசுக்கும் மோதல் நீடித்து வருகிறது. இதையடுத்து இந்தியர்கள் பலரும், கூ சமூக வலைதளத்தில் கணக்கு துவக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நிபுணர் குழுக்களில் தகுதி, நேர்மை; அரசு பரிசீலிக்க ஐகோர்ட் அறிவுரை
சென்னை : நிபுணர் குழுக்களில் நேர்மையான தகுதி படைத்தவர்களை நியமிக்கவும் வெளிப்படைத்தன்மை இருக்கவும் அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
உதயநிதி 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' படத்தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர். தமிழில் பெயர் உள்ள படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதன்படி இந்த நிறுவன தயாரிப்பின் சில படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு கோரிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
இதையடுத்து கேளிக்கை வரி விலக்கு அளிக்கவும் படங்களை பார்த்து பரிந்துரைப்பதற்கு புதிய குழுவை அமைக்கவும் கோரி ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளன.