#goofybooks
நா.முத்துக்குமார் புத்தகங்கள் : A Thread
#HappyBirthdayNaMuthukumar
பட்டாம்பூச்சி விற்பவன்
1997 ஆம் ஆண்டின் சிறந்த கவிதை நூலுக்கான பாரத ஸ்டேட் வங்கியின் முதல் பரிசை பெற்றது.
சுவாசத்தை போல, தாய் மொழி போல, சைக்கிள் மிதிப்பது போல கவிதை இவருக்கு படு இயல்பாக இவருக்கு கைவருகிறது.
-பாலுமகேந்திரா
நியூட்டனின் மூன்றாம் விதி
கிராமம் நகரம் காடு வயல் ஜனங்கள் மத்தியில் ஒரே நேரத்தில் நின்றுவிட்டு வந்தது போலும்; நிறைய வாங்கி வந்து போலும் உள்ளது வாசித்து முடிக்கையில்.
-கந்தர்வன்
குழந்தைகள் நிறைந்த வீடு
கவிதைகளின் ஜூம் லென்ஸ் எனப்படும் ஹைக்கூக்களின் தொகுப்பு.
ஹைக்கூ என்னும் சின்னஞ்சிறு மீன்கள் குறுகுறுவென்று என் பாதங்களை உரச தொடங்கிய நேரத்தில் நான் வாழ்க்கை நதியில் இறங்கத் தொடங்கியிருந்தேன்.
-நா. முத்துக்குமார்.
அ'னா ஆ'வன்னா
வாழ்வில் எதிர்கொள்கிற ஒவ்வொரு மறக்க முடியாத கதாபாத்திரமும், சம்பவமும் ஒரு படம்போல நம்மோடு தங்கிவிடுகின்றன. இக் கவிதைகளில் அன்றாட வாழ்வின் உயித்துடிப்புள்ள சித்திரங்களை உருவாக்குகிறார்.
என்னை சந்திக்க கனவில் வராதே
காதலும் காற்றும்தான் இந்த உலகை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. இனம், மொழி, தேசம் கடந்து காதல் தன் கால்தடத்தை அனைவரின் நெஞ்சிலும் விட்டுவிட்டுச் செல்கிறது. ஜப்பான் தேசத்து கவிஞர்களின் காதல் கவிதைகளின் தொகுப்பு.
பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்
நா. மு, பச்சையப்பன் கல்லூரியில் படித்தபோது கலந்துகொண்ட கவியரங்கங்கள், கவிதைபோட்டிகள் போன்றவற்றிற்காக எழுதப்பட்டது.
கிராமம் நகரம் மாநகரம்
பால்யம் ஒரு கண்ணாடிக்குளம். அதை உடைத்து உள்ளே மூழ்கும்போது சில்லுச் சில்லாய் முப்பரிமாண பிம்பங்கள் அறியப்படாத ஓர் உலக்கிற்கு அழைத்துச்செல்கின்றன. கிராமத்தில் பிறந்து நகரத்தில் படித்து மாநகரத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவனின் பதிவுகள்.
அணிலாடும் முன்றில்
எத்தனை முறை சொன்னாலும், ஏதோ ஒரு கணத்தில், எங்கோ ஒரு திருப்பத்தில் நம் கண்கள் நம்மை அறியாமல் வந்த வழியை திரும்பி பார்ப்பதில்லையா? அந்தக் கணத்தின், அந்தத் திருப்பத்தின் அனுபவங்கள்தான் இந்த தொகுப்பு.
பால்யத்தின் கண்கள் வழியாக உறவுகளை அணுகி இருக்கிறார்.
வேடிக்கை பார்ப்பவன்
காற்றில் படபடக்கும் காகிதத்தின் வரிகளைப்போல, மடபள்ளியில் இருந்து அரை நிமிடம் பெருமாளுக்கு திறந்துகாட்டும் பிரசாதத்தை போல, கடந்து செல்லும் ரயிலுக்கு கையாட்டும் சிறுவனைப்போல இக் கட்டுரையில் என் வாழ்க்கையின் சிறு பகுதியை வரைந்திருக்கிறேன்.
-நா. மு
நினைவோ ஒரு பறவை - கட்டுரைகள்
பூக்களின் இதழ்களில் குழந்தைகளின் முகத்தையும், குழந்தைகளின் முகத்தில் பூக்களின் இதழ்களையும் பார்க்கத் தெரிந்தவன் ஆசீர்வதிக்கப்பட்டன். இரண்டையும் வாடாமல், உதிராமல் பார்த்துக் கொள்பவன் மிகப்பெரும் பாக்கியவான்!
பால காண்டம்
மனம், ஒரு மாய சிலேட்டுப்பலகை. குழந்தைப் பருவத்தில் அதில் எழுதப்பட்டவற்றை மறுபடியும் அழித்து எழுத எந்தக்கோவை இலைகளும் கிடைப்பதில்லை. கனிகளுக்குள் முழு மரத்தின் சாரமும் அடங்கியிருப்பதைப் போல குழந்தைப்பருவத்தில்தான் நம் முழு வாழ்க்கையின் சாரமும் ஒளிந்திருக்கிறது.
காண்பேசும் வார்த்தைகள்
'கண் பேசும் வார்த்தைகள்' பாடலில் “காட்டிலே காயும் நிலவைக் கண்டுகொள்ள யாருமில்லை. தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்குச் சொந்தமில்லை” என ஒருதலைக்காதலுக் இரண்டு உருவகங்களை எனக்குக் கொடுத்தது.
"பட்டாம்பூச்சி விற்பவன், நியூட்டனின் மூன்றாம் விதி, குழந்தைகள் நிறைந்த வீடு, அ'னா ஆ'வன்னா, என்னை சந்திக்க கனவில் வராதே" கவிதை நூல்களின் முழுத்தொகுப்பு.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தமிழில் வெளிவந்த நாவல்களில் 18+ content உள்ள நாவல்கள். கதையோட்டத்தில் ராவான கலவி விவரிப்புக்கள் விவரணைகள்னு எழுத்தாளர்கள் அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள்.
இதில் எது இலக்கியம் என வாசகர்களாகிய நீங்களே முடிவு செய்யுங்கள்.
01. பொண்டாட்டி
ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, அம்மன் என எல்லாரையும் நாவலின் கதாபாத்திரங்கள் ஆக்கி இருக்கிறார். பல வகையான பெண்டாட்டிகளை நாவலில் உலாவ விட்டிருக்கிறார்.
02. நான் ஷர்மி வைரம்.
Call boy network, பெண்கள் மட்டும் பங்குகொள்ளும் பிரபலமான பார்ட்டிகள் என ஆரம்பிக்கும் நாவல் ஒரு வைரக்கொள்ளையுடன் முடிவடைகிறது.
"இந்தியாவில் எத்தனை மனிதர்கள் வாழ்ந்தார்களோ, அத்தனை வகை மகாபாரதம் இருக்கிறது." என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். எழுத்து வடிவிலும், செவி வழியாகவும் பல வடிவங்கள் கூறப்பட்டு வந்துள்ளன.
எண்ணற்ற கதாபாத்திரங்களையும், பல சிக்கல்களையும் காரண காரியத்தோடு கதைகள், உபகதைகள், கிளைக்கதைகள், பின்கதை என பல அடுக்குகளினூடு குழப்பம் இல்லாமல் சொல்லப்பட்டிருக்கும். மகாபாரதம் தொடர்புடைய புத்தகங்கள் பற்றிய தொகுப்பு இது.
1. வெண்முரசு: ஜெயமோகன்
7 வருடங்களில் 26 நாவல்களாக 25000 பக்கங்களில் இயற்றப்பட்டுள்ள மகத்தான ஆக்கம் வெண்முரசு. இது உலகின் மிகப்பெரிய நாவல்களில் ஒன்றாகும். இந்நாவல்வரிசை மகாபாரதத்தை முழுமையாக நவீன வாசகனுக்கான மொழியில் மறுஆக்கம் செய்துள்ளது.