தன்னை ஒரு ஆல்-இன்-ஆல் அழகுராஜாவாக காட்டிக்கொள்ள விழையும் @KPMunusamy, இல்லை, பதவி சுகத்துக்காக OPS மற்றும் EPS தோள்களில் குழந்தை போல மாறி மாறி சவாரி செய்யும் பேபி முனுசாமி, செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். (1/7)
மாதங்களாக பராமரிப்பு பணிகள் நடைபெறாத காரணத்தால் உண்டான விளைவுகள் என்ன என்பதை பலமுறை புள்ளி விவரங்களுடன் விளக்கிவிட்டேன். அப்போதெல்லாம் மூளையை முதுகு பக்கமும், முகத்தை மூடின கதவு பக்கமும் வைத்திருந்திருந்தீர்களோ? (2/7)
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருந்திருந்தால், ஏன் 4.5 லட்சம் விவசாய இணைப்புகள் தரவில்லையென @EPSTamilNadu -யிடமும் @PThangamanioffl -யிடமும் காரணங்களை கேட்டு ஒரு 80 பக்க நோட்டில் குறித்துக்கொண்டு முனுசாமி மனப்பாடமாக சொல்ல வேண்டும். (3/7)
எடப்பாடியின் ஆட்சியில் மின் உற்பத்திக்காக துவங்கப்பட்ட திட்டங்கள் எவை? திட்டங்களின் மதிப்பீட்டு தொகை எவ்வளவு? அதற்காக செலவு செய்யப்பட தொகை என்ன? அந்த திட்டங்களால் எத்தனை மெ.வா மின்சாரம் தயாரிக்கப்பட்டது? அந்த திட்டங்களின் இன்றைய நிலை என்ன என்பதை முனுசாமி சொல்ல வேண்டும். (4/7)
எருதுக்கு பதிலாக ஏரோப்ளேனை கட்டி ஏர் ஓட்ட வேண்டுமென பேராசைக் கொண்ட முனுசாமி, சென்ற அதிமுக ஆட்சியில் எத்தனை லட்ச முறைகள் மின்வெட்டுகள் ஏற்பட்டதென எண்ண ஆரம்பித்தால், 3 வாரம் கழித்து தான் உணவு உண்ண முடியும். (5/7)
பதவி சுகத்துக்காக OPS மற்றும் EPS என அணி மாறி கழுத்தை அறுத்த முனுசாமி , விசுவாசம் பற்றி பேசுவது, நரி நியாயம் பேசுவது போல இருக்கிறது. ராஜ்யசபா எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு MLAவா மாற குட்டிக்கரணங்கள் அடித்த முனுசாமி நிர்வாக திறன் பற்றி பேசலாமா? (6/7)
ஆளுமைமிக்க தலைவரிடம் நான் பணியாற்றுகிறேன், எந்த கேள்வியும் எதிர்கொள்ளும் நெஞ்சுரம் தலைவர் தந்தது. புள்ளி விவரத்துடன் என்னுடன் விவாதியுங்கள். இல்லையெனில், இப்படி எதுவுமே தெரியாமல் உளறாமல், உங்களில் யார் அடுத்த அடிமையென ஓரமாக விளையாடிக்கொண்டு இருங்கள். (7/7)
13 அப்பாவி தமிழர்கள் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதை டிவி பார்த்து தெரிந்துக்கொண்ட, கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதினார் என கண்டுப்பிடித்த @EPSTamilNadu, இப்பொழுது மின்சாரத்தில் இயங்கும் டிவியை பார்த்து மின்தடை இருப்பதை கண்டறிந்திருக்கிறார். (1/5)
முதலில் @EPSTamilNadu 'யின் ஆட்சியில் மின் உற்பத்திக்காக துவங்கப்பட்ட புதிய மின் திட்டங்கள் எவை? திட்டங்களின் மதிப்பீடு என்ன? அதற்காக செலவு செய்யப்பட தொகை எவ்வளவு? அந்த திட்டங்களின் இன்றைய நிலையென்ன என்பதை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். (2/5)
மேதகு ஆளுநர் உரையில் குறிப்பிட்டது போல் கடந்தகால ஆட்சியில் ஏற்பட்ட குளறுபடிகள், தவறுகள், நிதிநெருக்கடிகள் தொடர்பாக மின் துறையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முறையான பராமரிப்பு இல்லாததால் (3/5)
மாநிலத்திலுள்ள அனைத்து மின் நுகர்வோருக்கும் தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வது இந்த அரசின் முக்கிய நோக்கமாகும். கடந்த சில ஆண்டுகளிலிருந்த தவறான நிர்வாகத்தால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமும், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகமும் கடுமையான நிதி (1/n)
நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இவ்விரு கழகங்களின் நிதிநிலை மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மின் உற்பத்தி திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதன் மூலமும், பழைய, செயல்திறன் குறைந்த காற்றாலைகளை புனரமைக்கப்படும். (2/n)
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலமும், மின் உற்பத்தித் திறன் உயர்த்தப்படும். நவீன தொழில்நுட்பங்களையும், நுண் மின்கட்டமைப்புகளையும் பயன்படுத்தி,மின் சேமிப்பை உயர்த்துதல் /விநியோகத்தில் மின் இழப்புகளைக் குறைத்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். (3/n)
6,95,697 மக்கள் ( 63%) வாக்களித்து வெற்றி பெற்ற, மக்கள் பிரதிநிதி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் S.ஜோதிமணி @jothims அவர்கள், 23 ஆண்டுகள் பொதுவாழ்வில் நேர்மையையும் கண்ணியத்தையும், தூய்மையையும் தொடர்ந்து கடைப்பிடிப்பவர். ஒன்றிய குழு உறுப்பினராக தனது அரசியல் வாழ்வை தொடங்கி, ( 1/6)
கடின உழைப்பால் இன்று நாடாளுமன்றத்திற்க்கு சென்றவர். விவசாய குடும்பத்தில் பிறந்து எளிய முறையில் வாழ்ந்து மக்களின் செல்வாக்கை பெற்ற S.ஜோதிமணி மீது, News 7 தொலைகாட்சி விவாதத்தில் நாகரீகமற்ற முறையில் பேசியுள்ள கரு.நாகராஜன் அவர்களின் பேச்சு, கடும் கண்டனத்திற்கு உரியது. கொரோனோ ( 2/6)
தொற்று காலத்தில், செயல்படாத மோடி, எடப்பாடி அரசின் மீதான, மக்களின் எண்ணத்தை, நேரலையில் பிரதிபலித்த, S.ஜோதிமணி @jothims மீது, முறையான பதிலை அளிக்க தவறி, " ஆட தெரியாதவன் கூடம் கோணல் என்றானாம் " என்பது போல, நேரலையில் பதில் அளிக்க திராணி இல்லாமல் அவர் மீது, நாகரீகமற்ற முறையில் (3/6)