#PunishTheCorrupt#Viswanathan
1 தமிழ்நாடு மின்சார வாரியத்திற்காக தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. சந்தை விலையை விட அதிகமாக விலை நிர்ணயம் செய்து டெண்டர் செட்டிங் செய்யப்படுகிறது. அப்பொழுது மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.
2 வாங்கப்பட்ட நிலக்கரியில் 50% பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் அதானியிடம் வாங்கப்படுகிறது. இந்த முறைகேடு குறித்து CAG அறிக்கையிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு பல கோடிகள் இழப்பு ஏற்படுத்திய
3 முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் மின்சார துறை அதிகாரிகள் மீது அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புதுறையில் கொடுத்த புகார் விசாரிக்கப்படுமா?
சட்டம் தன் கடமையை செய்யுமா?
4 நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்த ஆதாரங்களும் விளக்கங்களும்:
Evidence - bit.ly/AdaniNathamCoa…
Press Meet Video -
In short -
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1) கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அதே காட்சிகள் தற்பொழுது சென்னை மாநகராட்சியில் அரங்கேற துவங்கிவிட்டன. ஆன்லைன் மூலம் EMD (டெண்டர் வைப்புத்தொகை) செலுத்த வழிவகை செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்து ஒரு வாரம் கூட முடியாத நிலையில் மணலியில் டெண்டர் விண்ணப்பிக்க..
2) EMD செலுத்த வந்தவர்களை பெட்டியில போடவிடாமல் குண்டர்களை வைத்து விரட்டிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. அதையும் மீறி EMDஐ பெட்டியில் போட்ட ஒருவரின் டெண்டர் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. EMD செலுத்தவில்லை என்று காரணம் கூறி மற்ற டெண்டர்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
3) இந்த குண்டர்களை மாநகராட்சி அலுவலகத்திற்குள் அனுப்பியது யார்? திருவற்றியூர் திமுக MLA திரு.சங்கர் @KPShankarMLA பதில் சொல்வாரா? உள்ளாட்சி அமைச்சர் @KN_NEHRU இது குறித்து விசாரணை நடத்துவாரா? சென்னை மாநகராட்சி ஆணையர் ஆன்லைன் மூலம் EMD செலுத்தும் முறையை உடனடியாக கொண்டு வருவாரா?
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவர்களும், ஊழியர்களும் கடந்த 8ம் தேதி கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக கல்லூரி வளாகத்தின் உள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
1. அவசர சிகிச்சை பிரிவையும்,கொரோனா காய்ச்சல் பிரிவையும் இடைவெளி விட்டு தனித்து அமைக்க வேண்டும்.
2. கொரோனா உறுதிசெய்யப்பட்ட சுகாதார ஊழியர்களின் தொடர்புகள் அனைவருக்கும், உடனடியாக கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும்.
3. சுகாதார ஊழியர்களின் கொரோனா சோதனை அறிக்கையை, சோதனை செய்யப்பட்ட தினமே முன்னுரிமை கொடுத்து வெளிப்படைத்தன்மையோடு வழங்க வேண்டும்.
4. தங்கும் விடுதிகளையும், சாப்பாடு இடங்களையும் சரிவர தூய்மைப்படுத்த வேண்டும்.