தீராத நோய்களைத் தீர்க்கும் திருத்தலம்!! சந்திரனுக்கு காட்சி கொடுத்து, சாபநிவர்த்திகொடுத்த திருத்தலம்.

அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோவில்:-
திருமணிக்கூடம் (திருநாங்கூர்)

🙏🇮🇳1
மூலவர்: வரதராஜபெருமாள், கஜேந்திரவரதன், மணிக்கூட நாயகன்

தாயார்: திருமாமகள் நாச்சியார்

உற்சவர்: வரதராஜபெருமாள்

கோலம்: நின்ற திருக்கோலம்

திசை: கிழக்கு

விமானம்: கனக விமானம்

தீர்த்தம்: சந்திர புட்கரணி

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்

ஊர்: திருநாங்கூர்

🙏🇮🇳3
திருமணிக்கூடம் :-

எல்லா உலகையும் காத்தருளும் இறைவன் நாராயணர் வரமளிக்கும் வரதனாக கச்சி மாநகரில் (காஞ்சிபுரம்) காட்சி தந்து அருள்கிறார். தொண்டை நாட்டிற்கு ஒரு வரதர் போல, சோழ நாட்டிற்கு ஒரு வரதர் இவரே ஆவார். இரு தேவியருடன் காட்சி தந்து அருள்வது மற்றொரு சிறப்பாகும்.

🙏🇮🇳4
மணிக்கூடம் அமைப்பில் இத்தலம் அமைந்துள்ளதால் "திருமணிக்கூடம்" என்பது பெயராகும். இத்தல இறைவனுக்கு மணிக்கூட நாயகன் என்று மற்றொரு திருநாமமும் உண்டு.

🙏🇮🇳5
பெரியதிருவடி சந்திரன் இவ்விருவருக்கும் பெருமாள் இத்தலத்தில் காட்சி கொடுத்ததாக ஐதீகம் நாங்கூர் மணிக்கூடத்திலே எங்கும் தென்றல் உலவுகிறது என்றும் அந்தத் தென்றலும் மணங்கொண்டு உலவுகிறது என்றும் திருமங்கையாழ்வார் குறிப்பிடுகிறார்.

🙏🇮🇳6
மலர் மணத்தைக் குறிப்பிடாமல் இப்பெருமாளின் தெய்வீக மணத்தைத்தான் இப்படிக் குறிப்பால் திருமங்கையாழ்வார் உணர்த்துகிறார். இத்தலத்திலுள்ள பகவானை எந்தை என்று உரிமையோடும் பாசத்தோடும் அழைக்கிறார் திருமங்கையாழ்வார்.

🙏🇮🇳7
திருமங்கையாழ்வார் பெருமாளை அவனே குன்றம் எனவும், அவனே மண் எனவும், அவனே குளிர் புனல் எனவும் அவனே திங்கள் எனவும், அவனே வெண்சுடர் எனவும், அவனே எல்லாம் எனவும் பகவானின் அளப்பரிய தன்மையை எடுத்துரைக்கிறார்.

🙏🇮🇳8
மூலவர் :-

மூலஸ்தானத்தில் பெருமாள் கிழக்கு பார்த்து தாமரை பீடத்தின் மீது நின்ற கோலத்தில், பின் கைகளில் சங்கு சக்கரமும், முன் கைகளில் அபய, ஊரு முத்திரை காட்டியபடி சேவை சாதிக்கிறார்.

🙏🇮🇳9
பெருமாளின் வலது புறத்தில் சதுர வடிவமான தாமரை பீடத்தின் மீது நின்றபடி இடது கரத்தில் தாமரை மலரும், வலது கரத்தினை தொங்கவிட்டபடியும் ஸ்ரீதேவி காட்சியளிக்கிறாள்.

இடது புறத்தில் பூமாதேவி வலது கரத்தில் தாமரை மொட்டும் இடது கரத்தை தொங்கவிட்டபடியும் காட்சி கொடுக்கின்றனர்.

🙏🇮🇳10
சந்திரனின் சாபநிவர்த்தி :-

தக்கனுக்கு 27 மகள்கள், இவர்கள் அனைவரும் சந்திரனை திருமணம் செய்து கொண்டார்கள். 27 பெண்களிடமும் ஒரே போல் அன்பு செலுத்துவதாக சந்திரன், தக்கனுக்கு வாக்கு கொடுத்தான். ஆனால், ரோகிணியிடம் மட்டுமே மிகுந்த காதலுடன் இருந்தான்.

🙏🇮🇳11
இதனால் மற்ற மனைவியர்கள் தன் தந்தையிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட தக்கன், சந்திரனிடம் " உன் அழகும், ஒளியும் தினம் தினம் குறையட்டும்" என சாபம் இட்டான். சாபம் பலித்ததால் முழு சந்திரன் மெல்ல மெல்ல தேயத் தொடங்கினான்.

🙏🇮🇳12
சந்திரன் சாபம் தீர்வதற்கு ஸ்ரீ ரங்கம், திருஇந்தளூர், தலைச்சங்காடு என ஒவ்வொரு கோவிலாக சென்று இறுதியில் திருமணிகூடத்திற்கு வந்தான்.

🙏🇮🇳13
அங்கே பெருமாளிடம் சந்திரன் மனமுருகி தொழுதான். பெருமாள் சந்திரனுக்கு வரதராஜனாக காட்சி கொடுத்து வரம் அளித்தார். சந்திரனின் நோய் நீங்கியது, சாப விமோசனம் கிடைத்தது.

🙏🇮🇳14
மங்களாசாசனம் :-

""கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் மரியும்
மாவும் அண்டமும் சுடரும் அல்லா ஆற்றதுமாய
எந்தை ஒண்டிறல் தென்ன னோட வடவர
சோட்டங்கண்ட திண்டிற லாளர்
நாங்கூர்த் திருமணிக் கூடத்தானே!!!"".
- திருமங்கையாழ்வார்.

🙏🇮🇳15
சிறப்புகள் :-

இறைவன் மணிக்கூட நாயகன் தாமரை பீடத்தில் நின்று காட்சி தரும் திருத்தலம்.

திருமகள் தாயார் திருமாமகள் நாச்சியார் என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.

🙏🇮🇳16
திருநாங்கூரில் நடைபெறும் புகழ் பெற்ற 11 திருத்தல கருட சேவைக்கு இத்தல இறைவனும் எழுந்தருள்வார்.

திருமங்கையாழ்வார் 10 பாசுரம் பாடியருளிய திவ்யதேசம்.

🙏🇮🇳17
வழித்தடம் :-

சீர்காழி பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருத்தலம். திருநாங்கூரிலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ள புளியன்தோப்பின் நடுவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில்.

வாழ்க பாரதம் 🇮🇳🙏
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

21 Jul
பள்ளிப் பாடநூல்கள் அரசியல் கட்சிகளின் பிரச்சார அறிக்கைகள் அல்ல

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டபோது தொடங்கிய விவாதங்களும் சர்ச்சைகளும், அவர் பொறுப்பேற்ற பிறகு வேறு திசையில் இன்னும் தீவிரம்பெற்றிருக்கின்றன.
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பெண்களைக் கண்ணியக் குறைவான முறையில் பேசியதாக லியோனி மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள், அவர் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டபோது மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தப்பட்டிருக்கின்றன.
33 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்த லியோனி, அறிவொளி இயக்கத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டவர். அவரைப் பாடநூல் கழகத்தின் தலைவராக நியமித்தது சரியானதுதான் என்று திமுகவுக்கு வெளியிலிருந்தும் ஆதரவுக் குரல்கள் எழுந்தன.
Read 14 tweets
21 Jul
ஒட்டுக்கேட்பு உண்மையா, தொழில் போட்டியா?

இந்தியாவில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், நீதிபதி உள்ளிட்ட, 300 பேர்களின் மொபைல் போன் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம், பெரிதாக வெடித்துள்ளது.
இதற்காக இஸ்ரேல் நாட்டின், 'பெகாசஸ்' என்ற, வேவு பார்க்கும் மென்பொருள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 16 பத்திரிகைகளும், ஊடகங்களும் கண்டுபிடித்துள்ளன.
உடனே, இந்தியாவில் உள்ள பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், 'இந்திய அரசு தான் இந்த வேவு பார்க்கும் மென்பொருளை வாங்கிப் பயன்படுத்தியது' என்ற குற்றச்சாட்டை வைக்கின்றன. இது எவ்வளவு துாரம் உண்மை?
Read 17 tweets
21 Jul
தமிழகத்தில் விவசாய நிதி உதவி திட்டத்தில் 7.22 லட்சம் போலிகள் பயன்

புதுடில்லி:''பிரதமர் விவசாயிகள் ஆதரவு நிதியுதவி திட்டத்தில் உதவி பெற தகுதியற்ற 42 லட்சத்துக்கும் அதிகமானோர் பலன் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட, 3,000 கோடி ரூபாயை திரும்ப வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, லோக்சபாவில் மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும், 7.22 லட்சம் போலிகள், 340 கோடி ரூபாய் நிதி உதவி பெற்றது தெரியவந்துள்ளது. விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளில் 6,000 கோடி ரூபாய் வழங்கும் பிரதமர் விவசாயிகள் ஆதரவு நிதியுதவி திட்டத்தை 2019 பிப்ரவரியில் மத்திய அரசு துவக்கியது.
Read 17 tweets
21 Jul
இது உங்கள் இடம் : கனவு கூட காணாதீர்!

எஸ்.சுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகம் எங்கும் நிறைந்துள்ள லஞ்சம், ஊழல் ஆகியவற்றை அடியோடு களையெடுக்காமல் எந்த மக்கள் நல திட்டத்தையும் செயல்படுத்த முடியாது.
எனவே அவற்றை ஒழிக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வாசகர் ஒருவர் இப்பகுதியில் ஆலோசனை வழங்கிஇருந்தார். நம் அரசியல்வாதிகளை பற்றி இன்னமுமா புரிந்து கொள்ளாமல் இருக்கின்றீர்?
லஞ்சத்தையும், ஊழலையும் ஒழித்து கட்டி நல்லாட்சி நடத்துவதற்காகவா 360 கோடி ரூபாயை அள்ளி கொடுத்து, ஓர் ஆலோசகரை நியமித்தனர்? ஒவ்வொரு பஞ்சாயத்திலும் 2 கோடி ரூபாய் செலவழித்து, 'ஒன்றிணைவோம்' என எதற்காக கூட்டம் நடத்தினர்?
Read 5 tweets
21 Jul
*சிவனும் சித்தர்களும் வாழும் சதுரகிரி*

நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம்.

சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி; பரவச அனுபவம் தரும் ஆன்மிகத் தலம். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த சதுரகிரி சித்தர்களின் பூமியாக உள்ளது.

🇮🇳🙏1
தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு என்ற கிராமம் உள்ளது.இங்கிருந்து 15 கிலோ மீட்டர் பயணித்தால் தாணிப்பாறை என்ற மலையடிவாரப்பகுதி உள்ளது.இதுதான் சதுரகிரியின் நுழைவாசல்.

🇮🇳🙏2
இங்கிருந்து 5 மைல்கள் தூரம் அடர்ந்த காட்டுப்பாதையில்(சாலை வசதி கிடையாது.பாதை கரடு முரடானது)பயணித்தால் சதுரகிரியை அடையலாம்.

🇮🇳🙏3
Read 19 tweets
20 Jul
பறிபோகும் கோவில் சொத்துகள் - வடபழனி முருகன் கோவிலின் 1,600 சதுரஅடி நிலம் மசூதி பாதைக்கா?

வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 1,600 சதுரஅடி நிலம் மசூதிக்கு செல்லும் பாதைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக, இந்து முன்னணியின் சென்னை மாநகரத் தலைவர் ஏ.டி.இளங்கோவன் பேசுகையில், 

மஜீத் நகரில் உள்ள வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் இரும்பு தடுப்பு அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது.
அப்போது, நிலத்துக்கு அருகில் உள்ள மசூதிக்குச் செல்வதற்கான பாதைக்காக குறிப்பிட்ட இடத்தை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அப்பகுதி முஸ்லிம்கள் முறையிட்டனர். அவ்வாறு வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்று சம்பந்தப்பட்ட அதிகாரி கூறியுள்ளார்.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(