இந்தியாவில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், நீதிபதி உள்ளிட்ட, 300 பேர்களின் மொபைல் போன் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம், பெரிதாக வெடித்துள்ளது.
இதற்காக இஸ்ரேல் நாட்டின், 'பெகாசஸ்' என்ற, வேவு பார்க்கும் மென்பொருள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 16 பத்திரிகைகளும், ஊடகங்களும் கண்டுபிடித்துள்ளன.
உடனே, இந்தியாவில் உள்ள பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், 'இந்திய அரசு தான் இந்த வேவு பார்க்கும் மென்பொருளை வாங்கிப் பயன்படுத்தியது' என்ற குற்றச்சாட்டை வைக்கின்றன. இது எவ்வளவு துாரம் உண்மை?
எப்படி நம்புவது?
இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று, சர்வதேச இணைய பாதுகாப்பு வழக்கறிஞரான கார்த்திகேயன் கூறியதாவது:இந்த விவகாரத்தை, நாம் அணுகும் விதமே தவறு. உலக அளவில், 50 ஆயிரம் மொபைல் போன் எண்கள், வெளியானதாகச் சொல்கின்றனர்.
யார் வெளியிட்டனர் என்ற விபரமே இல்லை; எப்படி நம்புவது?ஏனெனில் அடிப்படையில், 'பெகாசஸ்' நிறுவனத்தை நடத்தும், என்.எஸ்.ஓ., அல்லது அந்த மென்பொருளை வாங்கும் நாடு ஆகிய இருவரில் யாரோ ஒருவர் தான், வேவு பார்க்கப்படும் மொபைல் போன் எண்களை வெளியிட முடியும்.
மற்றவர்களால், அந்த மென்பொருளை உடைத்து, விபரங்களை எடுக்கவே முடியாது. அவ்வளவு நவீனமான மென்பொருள் அது. 300 கோடி ரூபாய் விலையுள்ள மென்பொருள். அப்படி இருக்கும்போது, எப்படி மொபைல் போன் எண்கள் வெளியே வர முடியும்?'பெகாசஸ் மென்பொருளால் பாதிக்கப்பட்ட, மொபைல் போன்களை ஆய்வு செய்தோம்.
அதில், அதற்கான தடயம்இருந்தது' என்று தெரிவிக்கின்றனர். இப்படி புரிந்து கொள்வோம். வூஹானில் கொரோனா வைரஸ் வந்தபோது, அதன் மரபணு வடிவத்தை, சீன அரசு வெளியிட்டது. அதன் பின்னரே, உலகமெங்கும் அந்த மாதிரியை அடிப்படையாக வைத்து, எல்லா நாடுகளும், கொரோனா நோயை கண்டுபிடிக்க துவங்கின.
யார் எதிரி
அதேபோல், என்.எஸ்.ஓ., நிறுவனம், பெகாசஸ் மென்பொருளின் வடிவமைப்பையும், அது, 'ஜாவா' அல்லது 'சி பிளஸ் பிளஸ்' போன்ற, எந்த தளத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட மென்பொருள் என்பதையும் வெளியிட்டால் தான், மற்றவர்களால் அந்த மென்பொருளையே இனம் காண முடியும்.
என்.எஸ்.ஓ., இதுவரை, அந்த மென்பொருளின் வடிவமைப்பையோ, தளத்தையோ வெளியிடவில்லை. அது, வெளியிடப் போவதும் இல்லை.அப்படி இருக்கும்போது, எப்படி குறிப்பிட்ட மொபைல் போன்களில், பெகாசஸ் மென்பொருள் இருந்தது என்று சொல்கின்றனர்?
மூன்றாவது, அது ஒரு, 'செல்ப் டிஸ்டிரக்டிங்' எனப்படும், 'தன்னைத் தானே அழித்துக் கொள்ளும்' மென்பொருள். 60 நாட்கள் வரை, அதைப் பயன்படுத்தவில்லை என்றால், அது தன்னைத் தானே அழித்துக் கொண்டு விடும். அதன் மிச்சசொச்சங்களைக் கூட
கண்டுபிடிக்க முடியாது.
இப்படி இருக்கும்போது, எப்படி மொபைல் போன்களில், பெகாசஸ் மென்பொருள் இருந்ததாக சொல்கின்றனர்?இங்கே தான் இந்த விவகாரத்தை, வேறு மாதிரி பார்க்க வேண்டும். பெகாசஸுக்கு யார் எதிரி.'வாட்ஸ் ஆப்' நிறுவனம் தான்.
ஏனெனில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, வாட்ஸ் ஆப் செயலி வாயிலாகத் தான், பெகாசஸ் வேவு பார்க்கும் மென்பொருள், மொபைல் போன்களுக்குள் செலுத்தப்பட்டது. அதாவது, வாட்ஸ் ஆப் என்பது பாதுகாப்பான, ஒரு சமூக ஊடக மென்பொருள் என்று பெருமை பேசுகிறது.
அதன் வழியாக நடைபெறும் உரையாடலையோ, குரல்வழி பேச்சுக்களையோ, வெளியே எவரும் தெரிந்து கொள்ள முடியாது; மிகவும் பாதுகாப்பானது; 'எண்டு டு எண்டு என்கிரிப்டட்' என்று, சொல்லிக் கொள்கிறது. ஆனால் பெகாசஸ், வாட்ஸ் ஆப்பின் பாதுகாப்பை உடைத்து விட்டது.
இப்போது, தன்னுடைய தனித்தன்மையைக் காப்பாற்றவும், மேலும் வளரவும், வாட்ஸ் ஆப்ஏன் இந்த பெகாசஸ் மோசடி கதையை அவிழ்த்து விட்டு இருக்கக் கூடாது?
நடவடிக்கை
அதுவும், 40 நாடுகளைச் சேர்ந்தவர்களுடைய பட்டியல், தற்போது வெளியாகி இருப்பதாகச் சொல்கின்றனர். அதில் இடம்பெற்று இருப்பவர்கள் யார் என்று பாருங்கள். மக்களுடைய கவனத்தை கவரக்கூடிய அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இது, இந்தியாவில் மட்டுமல்ல, பெகாசஸ் மென்பொருள் மீது குற்றம் சாட்டப்படும் அனைத்து நாடுகளிலும் இதே, 'பேட்டர்ன்' தான் இருக்கிறது.
அப்படியென்றால், பெகாசஸ் மென்பொருளை உருவாக்கிய, என்.எஸ்.ஓ., நிறுவனத்தின் மீது, உலகத்தின் கோபம் திரும்ப வேண்டும்;
அந்நிறுவனம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தில், இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் அல்லவா? இப்படியும் யோசிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார். -
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பள்ளிப் பாடநூல்கள் அரசியல் கட்சிகளின் பிரச்சார அறிக்கைகள் அல்ல
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டபோது தொடங்கிய விவாதங்களும் சர்ச்சைகளும், அவர் பொறுப்பேற்ற பிறகு வேறு திசையில் இன்னும் தீவிரம்பெற்றிருக்கின்றன.
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பெண்களைக் கண்ணியக் குறைவான முறையில் பேசியதாக லியோனி மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள், அவர் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டபோது மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தப்பட்டிருக்கின்றன.
33 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்த லியோனி, அறிவொளி இயக்கத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டவர். அவரைப் பாடநூல் கழகத்தின் தலைவராக நியமித்தது சரியானதுதான் என்று திமுகவுக்கு வெளியிலிருந்தும் ஆதரவுக் குரல்கள் எழுந்தன.
தமிழகத்தில் விவசாய நிதி உதவி திட்டத்தில் 7.22 லட்சம் போலிகள் பயன்
புதுடில்லி:''பிரதமர் விவசாயிகள் ஆதரவு நிதியுதவி திட்டத்தில் உதவி பெற தகுதியற்ற 42 லட்சத்துக்கும் அதிகமானோர் பலன் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட, 3,000 கோடி ரூபாயை திரும்ப வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, லோக்சபாவில் மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும், 7.22 லட்சம் போலிகள், 340 கோடி ரூபாய் நிதி உதவி பெற்றது தெரியவந்துள்ளது. விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளில் 6,000 கோடி ரூபாய் வழங்கும் பிரதமர் விவசாயிகள் ஆதரவு நிதியுதவி திட்டத்தை 2019 பிப்ரவரியில் மத்திய அரசு துவக்கியது.
எஸ்.சுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகம் எங்கும் நிறைந்துள்ள லஞ்சம், ஊழல் ஆகியவற்றை அடியோடு களையெடுக்காமல் எந்த மக்கள் நல திட்டத்தையும் செயல்படுத்த முடியாது.
எனவே அவற்றை ஒழிக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வாசகர் ஒருவர் இப்பகுதியில் ஆலோசனை வழங்கிஇருந்தார். நம் அரசியல்வாதிகளை பற்றி இன்னமுமா புரிந்து கொள்ளாமல் இருக்கின்றீர்?
லஞ்சத்தையும், ஊழலையும் ஒழித்து கட்டி நல்லாட்சி நடத்துவதற்காகவா 360 கோடி ரூபாயை அள்ளி கொடுத்து, ஓர் ஆலோசகரை நியமித்தனர்? ஒவ்வொரு பஞ்சாயத்திலும் 2 கோடி ரூபாய் செலவழித்து, 'ஒன்றிணைவோம்' என எதற்காக கூட்டம் நடத்தினர்?
சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி; பரவச அனுபவம் தரும் ஆன்மிகத் தலம். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த சதுரகிரி சித்தர்களின் பூமியாக உள்ளது.
🇮🇳🙏1
தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு என்ற கிராமம் உள்ளது.இங்கிருந்து 15 கிலோ மீட்டர் பயணித்தால் தாணிப்பாறை என்ற மலையடிவாரப்பகுதி உள்ளது.இதுதான் சதுரகிரியின் நுழைவாசல்.
🇮🇳🙏2
இங்கிருந்து 5 மைல்கள் தூரம் அடர்ந்த காட்டுப்பாதையில்(சாலை வசதி கிடையாது.பாதை கரடு முரடானது)பயணித்தால் சதுரகிரியை அடையலாம்.
பறிபோகும் கோவில் சொத்துகள் - வடபழனி முருகன் கோவிலின் 1,600 சதுரஅடி நிலம் மசூதி பாதைக்கா?
வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 1,600 சதுரஅடி நிலம் மசூதிக்கு செல்லும் பாதைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக, இந்து முன்னணியின் சென்னை மாநகரத் தலைவர் ஏ.டி.இளங்கோவன் பேசுகையில்,
மஜீத் நகரில் உள்ள வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் இரும்பு தடுப்பு அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது.
அப்போது, நிலத்துக்கு அருகில் உள்ள மசூதிக்குச் செல்வதற்கான பாதைக்காக குறிப்பிட்ட இடத்தை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அப்பகுதி முஸ்லிம்கள் முறையிட்டனர். அவ்வாறு வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்று சம்பந்தப்பட்ட அதிகாரி கூறியுள்ளார்.
இந்தியாவின் சூரியஒளி மின்திட்டங்களுக்கு உலக வங்கி பாராட்டு!
இந்தியாவின் சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டங்களை உலக வங்கி பாராட்டியுள்ளது. இந்தியாவின் இத்தகைய முன்முயற்சிகள் உலக நாடுகளின் நடவடிக்கைக்கு ஊக்கமளிப்பதாகவும் கூறுகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியான சூரியஒளியின் திறனை முழுமையாக உபயோகிப்பதற்கான இந்தியாவின் பாதை இந்தியர்களுக்கு மிகப்பெரிய மைல் கல்லாகும் என்றும் அதே போல் காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கும் இது முக்கிய பங்களிப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் (WB) சமீபத்திய அறிக்கையில், "2022 ஆம் ஆண்டளவில் 100 ஜிகாவாட் சூரிய உற்பத்தி திறன் என இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இது அதன் வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.