#ஜெய்பீம்@Suriya_offl
1818 ஜனவரி 1 அன்று மராட்டியத்தின் பீமா நதிக்கரையில் சித்பவனப் பார்ப்பனர்களாகிய பேஷ்வாக்களின் படையை கிழக்கிந்திய கம்பனியின் படையிலிருந்த மகர் சிப்பாய்கள் வீழ்த்தி வெற்றி கொண்ட போது எழுப்பிய முழக்கம் "ஜெய் பீம்".
1936ஆகஸ்ட்15, அம்பேத்கர் சுதந்திரத்தொழிலாளர் கட்சியைத் தொடங்குகிறார். அதன் தலைமைச்செயலாளரும் காம்தி சட்டமன்ற உறுப்பினருமான எல்.என். பாபு ஹர்தாஸ் 16.02.1937 அன்று நிகழ்ச்சியொன்றில் பீம்ராவ் அம்பேத்கருக்கே வெற்றி என்ற பொருளில் ஜெய் பீம் முழக்கத்தை மறுபுழக்கத்திற்கு கொண்டுவருகிறார்
அதன்பிறகு ஒடுக்கப்பட்ட மக்கள் சந்தித்துகொள்ளும் போது பரஸ்பரம் கூறிக்கொள்ளும் வணக்கச்சொல்லாகிய ஜெய் பீம், பினாளில் தலித்துகளை ஒன்றுபடுத்துகிற- ஆவேசமூட்டுகிற ஆற்றல்படுத்துகிற முழக்கமாகவும் வீறுகொண்டது.
இந்தப் பின்புலம் அறியாமலே அது ஜெய் ஸ்ரீராம் போன்றதுதான் என்று சில மூடர்கள் இகழ்வதுண்டு. ஜெய் ஹிந்த் என்ற முழக்கத்தினை மறுதலித்து உருவாக்கப்பட்டதே ஜெய்பீம் முழக்கம் என்று எலினார் செலட் போன்ற ஆய்வாளர்களும்கூட தவறாக கூறியதுண்டு.
பி.டி.ராம்டெக், ஜெய்பீம் ஜெய்ஹிந்தைவிட காலத்தால் முந்தையது என ஆய்ந்தறிந்துள்ளார். இந்த உண்மைக்கும் வரலாற்றுக்கும் @Suriya_offl நியாயம் செய்வாரா? மீதியை வெள்ளித்திரையில் காண்போம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh