உயிரும் மெய்யும் சேர்ந்து உருவாகும் ஒலிகளைக் குறிப்பன உயிர்மெய் எழுத்துகள் ஆகும்.
உயிர்மெய் எழுத்துகளின் வடிவங்கள் குறித்துத் தொல்காப்பியம், எழுத்ததிகாரத்தில் 17 ஆவது நூற்பா கூறுகிறது.
1/9
இதன்படி மெய் அகரத்தோடு கூடும்போது உருவம் திரிபடையாமல் இருக்கும்.
பிற உயிர்களோடு சேரும்போது உருவம் திரிபு அடையும்.
திரிபடையும் எழுத்துகள், பின்வருமாறு திரிபடைகின்றன
•மேல் விலங்கு பெறுதல்
•கீழ் விலங்கு பெறுதல்
•கோடு பெறுதல்
2/9
•புள்ளி பெறுதல்
•கோடும் புள்ளியும் பெறுதல்
தற்கால எழுத்து முறையில் இவை பின்வருமாறு அமைகின்றன.
மெய்கள் இகரத்துடனும், ஈகாரத்துடனும் சேரும்போது மேல் விலங்கு பெறுகின்றன. இதைத் தற்காலத்து "விசிறி"யை ஒத்தது.
எடுத்துக்காட்டாக, கி, கீ என்பன இவ்வாறு விசிறி பெற்ற எழுத்துகள்.
3/9
உகரத்துடனும், ஊகாரத்துடனும் சேரும்போது மெய்கள் கீழ் விலங்கு பெறுகின்றன. கு, கூ போன்றவை கீழ் விலங்கு பெற்ற மெய்களுக்கு எடுத்துக்காட்டுகள்.
4/9
"கோடு" என்பது தற்காலத்து ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு ஆகியவற்றை ஒத்தது. எகர, ஏகார உயிர்மெய்கள் இவ்வாறானவை. கெ, கே என்னும் மெய்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
5/9
ஆகாரத்தோடு சேர்ந்த மெய்கள் புள்ளி பெற்றுத் திரிபடைவதற்கு எடுத்துக்காட்டுகள். தற்காலத்தில் இது கா, சா போன்றவற்றை ஒத்தது.
ஒகர, ஓகார மெய்கள் கோடும், புள்ளியும் பெறுவன. தற்கால எழுத்துகளில் கொ, கோ போன்றவற்றை இவற்றுடன் ஒப்பிடலாம்.
6/9
தொல்காப்பியர் காலத்தில் மேல், கீழ் விலங்குகள், கோடு, புள்ளி என்பவை, தற்கால வடிவங்களுடன் வேறுபட்டுக் காணப்பட்டாலும், அடிப்படைக் கருத்துரு தற்கால எழுத்து முறையிலும் மாறாமல் இருப்பதைக் காணலாம்.
7/9
கீழேயுள்ள அட்டவணையின் முதலாவது வரிசையில் மெய்யெழுத்துகள் காட்டப்பட்டுள்ளன.
முதல் நிரலில் உயிரெழுத்துகள் உள்ளன.
ஒவ்வொரு மெய்யெழுத்துக்குரிய நிரலும், உயிரெழுத்துக்குரிய வரிசையும் கூடும் இடத்தில் அவற்றின் புணர்ச்சியினால் உருவான உயிர்மெய்யெழுத்து காட்டப்பட்டுள்ளது.
8/9
9/9
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கிரந்தத்தைத் தமிழில் இணைத்தால் ஏற்படும் இழப்புகள் என்ன?
கிரந்த எழுத்துக்களை இனியும் நாம் தொடர வேண்டுமா?
தமிழில் பிறமொழி (சமற்கிருதம்) கலந்து முன்பு எழுதப்பட்டதால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட கிளை மொழிகள் இதிலிருந்து பிரிந்து,
1/17
அம்மொழி பேசும் மக்கள் நாம் அனைவரும் ஒன்று என்ற நினைவில்லாமல் ஆற்று நீருக்கும், எல்லைக்குமாகப் பிரிந்து நமக்குள்ளே போரிட்டு நீதிமன்றப் படிக்கட்டுகளில் நாம் நிற்கவேண்டிய நிலைக்கு ஆளானோம்.
2/17
தமிழ் தவிர்ந்த பிறமொழிகள் பிறமொழி கலப்பில்லாமல் வழங்க முடியாது.
ஆனால் தமிழ்மட்டும்தான் பிறமொழிகளின் கலப்பில்லாமல் பயன்படுத்தமுடியும் என்று மொழியியல் அறிஞர் கால்டுவெல் போன்றவர்களால் கூறப்பட்டது.
3/17
தமிழோடு கிரந்த எழுத்துக்கள் கலந்தது எப்படி?
கிரந்தத்தைத் தமிழில் இணைத்தால் ஏற்படும் இழப்புகள் என்ன?
வடமொழி கிரந்த எழுத்துக்கள் எந்தக் காலகட்டத்தில், எப்படி தமிழ் எழுத்துகளுக்குள் நுழைந்தன?
0/22
என்பது பற்றி தமிழ் மொழி ஆராய்ச்சியாளரும், தமிழ்ப் பண்பாட்டு தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் கருத்துக்களை இங்கு தருகிறோம்.
1/22
தமிழ் எழுத்துக்கள் 247 என்றுதான் பள்ளியிலே படிக்கிறோம். ஆனாலும், எழுதும்போது வடமொழி எழுத்துக்களான ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ எனப்படும் கிரந்த எழுத்துக்களையும் சேர்த்தே எழுதவேண்டிய சூழலுக்கு ஆளாகிறோம்.
2/22
கிரந்தம் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலும் கேரளத்திலும் சமசுகிருத மொழியில் இருந்து தோன்றி தமிழில் பயன்படுத்தப்பட்ட சொற்களை எழுதப் பயன்பட்ட ஓர் இலிபி (எழுத்து முறை).
1/4
இருபதாம் நூற்றாண்டில் தேவநாகரி எழுத்துகள் பிரபலமடைந்ததாலும் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் சமற்கிருதம் மீது பொதுவாக செய்த தாக்கத்தாலும் கிரந்தத்தின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது.
2/4
தமிழில் சமசுகிருதம் மற்றும் தமிழின் கலப்பால் உருவான மணிப்பிரவாளம் பரவலாக இருந்த பொழுது கிரந்த எழுத்துகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது.
3/4