கிரந்தத்தைத் தமிழில் இணைத்தால் ஏற்படும் இழப்புகள் என்ன?
கிரந்த எழுத்துக்களை இனியும் நாம் தொடர வேண்டுமா?
தமிழில் பிறமொழி (சமற்கிருதம்) கலந்து முன்பு எழுதப்பட்டதால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட கிளை மொழிகள் இதிலிருந்து பிரிந்து,
1/17
அம்மொழி பேசும் மக்கள் நாம் அனைவரும் ஒன்று என்ற நினைவில்லாமல் ஆற்று நீருக்கும், எல்லைக்குமாகப் பிரிந்து நமக்குள்ளே போரிட்டு நீதிமன்றப் படிக்கட்டுகளில் நாம் நிற்கவேண்டிய நிலைக்கு ஆளானோம்.
2/17
தமிழ் தவிர்ந்த பிறமொழிகள் பிறமொழி கலப்பில்லாமல் வழங்க முடியாது.
ஆனால் தமிழ்மட்டும்தான் பிறமொழிகளின் கலப்பில்லாமல் பயன்படுத்தமுடியும் என்று மொழியியல் அறிஞர் கால்டுவெல் போன்றவர்களால் கூறப்பட்டது.
3/17
அக்கொள்கையை வழிமொழிவதுபோல் தனித் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் தனித்தமிழ் இயக்கம் கண்டு பிறமொழி கலவாமல் எழுதவும் பேசவும் செய்தார்.
4/17
பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட அறிஞர்களின் எழுத்தாக்கமும், பாடல்களும் தமிழ்நாட்டில் தமிழ் மொழியைச் செப்பமாகவும், பிழையின்றியும் எழுதவும் பேசவுமான நிலையை ஆழமாகச் செய்தன.
5/17
முற்காலத்தில் வடமொழியும் தமிழும் கலந்து எழுதும் பெரும்பணியை வைணவ உரையாசிரியர் பெரியவாச்சான் பிள்ளை போன்றவர்கள் செய்தனர்.
6/17
அதன் நீட்சி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஏன் இடைப்பகுதி வரையிலும் தென்படுவதைப் பழைய தமிழக நாளேடுகளைப் புரட்டிப் பார்த்தால் நமக்கு உண்மை விளங்கும்.
தினமணி நாளேட்டின் இன்றை எழுத்து நடையும், 1967க்குமுன் உள்ள மனிப்பிரவாள நடையும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
7/17
தமிழ்தான் உலகில் தோன்றிய முதன்மொழி என்ற பாவாணர் கூற்று அண்மைக் காலமாகக் கிடைத்துவரும் சான்றுகள் (கீழடி, ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கேரள புதைபொருள் அகழ்வாய்வுகள், செம்பியன் கண்டீயூர் கல்வெட்டுகள்) இந்த உண்மையை நோக்கி நம்மை ஆற்றுப்படுத்துகின்றன.
8/17
குமரிக்கண்ட அகழ்வாய்விலும், பூம்புகார், கடலாய்விலும் நாம் முழுமையாக ஈடுபடாமல் தமிழறிவற்றவர்களை, தமிழில் ஈடுபாடில்லாதவர்களை தமக்கு அணுக்கமாக ஆட்சியாளர்கள் அமர்த்திக்கொண்டதால் நம் ஆராய்ச்சியைப் பின்னுக்குத் தள்ளி வருகின்றது.
9/17
மொழியியல் அறிஞர்களின் கூற்றுகள் புறக்கணிக்கப்பட்டு, வெற்று ஆரவாரப் பேர்வழிகள் அரசுக்கு அறிவுரைஞர்களாக அமைந்தமையும் நம் பின்னடைவுக்குக் காரணங்களாகச் சுட்டலாம்.
கலைஞர் கருணாநிதியின் ஆட்சியே தமிழில் பரவலாக இருந்த மனிப்பிரவாள நடையை ஒழித்துக் கட்டியதிலும்,
10/17
தமிழின் தொண்மையை உலகறிய செய்ய தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத்தந்தது.
தமிழுக்குக் காலந்தோறும் இடையூறுகள் ஏற்பட்ட பொழுதெல்லாம் தமிழ் தன்னைத்தானே காத்துக் கொண்டுள்ளது.
சிலபொழுது அறிஞர்கள் கூடித் தமிழ்க் காப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
11/17
அவ்வகையில் நாம் தமிழ்க்காப்புப் பணிகளில் ஈடுபடவேண்டிய ஒரு இருக்கமான சூழல் இப்பொழுது உருவாகியுள்ளது.
தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்தாலும், பிறமொழிகளின் எழுத்துகள் கலந்தாலும், பிறமொழி ஒலி கலந்தாலும் தமிழின் தனித்தன்மை கெடும்.
12/17
அவ்வாறு கெடாமல் செவ்வியல் மொழியைப் பாதுகாப்பது அந்த மொழியை தாய்மொழியாக கொண்ட தமிழர்கள் ஒவ்வொருவரின் இன்றியமையாத கடமையாகும்.
தமிழர்களின் சிறப்பு இன்னும் உலக அரங்கில் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை.
13/17
தமிழார்வம் இல்லாத தலைமைகளும், தமிழின் சிறப்புணராத மக்களையும் கொண்ட அரசியல் கட்சிகளால் தமிழின் சிறப்பு முழுமையாக அறிய முடியாமல் போனமைக்குக் காரணங்களாகும்.
14/17
தனித்தமிழ் இயக்கம் வரலாற்றுத் தேவையாக இருந்தது.
திராவிட இயக்கம் நல்ல தமிழுக்குரிய நாற்றங்காலாக கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக்காலம் முதல் தொடர்ந்து பங்காற்றி வருகிறது.
15/17
எனவே இன்றைய தமிழக அரசு நம் தமிழ் மொழியை வட மொழி ஆதிக்கத்தில் இருந்து முற்றிலும் விடுவிக்க தமிழ் எழுத்துக்களில் கலந்துள்ள கிரந்த எழுத்துக்களை முற்றிலும் நீக்க அச்சு, ஒலி, ஒளி ஊடகங்கள் கிரந்த எழுத்துக்களை பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.
16/17
தமிழ் அச்சுப் பொறிகளில், கணினிகளில் கிரந்த எழுத்துக்களை நீக்க தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அரசாணை பிறப்பித்து தமிழின் தொண்மையை போற்றி பாதுகாக்க வேண்டும்.
நன்றி: முனைவர் மு.இளங்கோவன்
17/17
தமிழ் மொழி வளர்ச்சிக்காக நிரந்தரமாக ஒரு தனி துறையை ஏற்ப்படுத்தி, அதற்கு அமைச்சாராக தமிழார்வம் மிக்க மொழிப் பேரறிஞர் ஒருவரை மந்திரியாக நியமிக்க வேண்டும்.
18/18.
தமிழோடு கிரந்த எழுத்துக்கள் கலந்தது எப்படி?
கிரந்தத்தைத் தமிழில் இணைத்தால் ஏற்படும் இழப்புகள் என்ன?
வடமொழி கிரந்த எழுத்துக்கள் எந்தக் காலகட்டத்தில், எப்படி தமிழ் எழுத்துகளுக்குள் நுழைந்தன?
0/22
என்பது பற்றி தமிழ் மொழி ஆராய்ச்சியாளரும், தமிழ்ப் பண்பாட்டு தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் கருத்துக்களை இங்கு தருகிறோம்.
1/22
தமிழ் எழுத்துக்கள் 247 என்றுதான் பள்ளியிலே படிக்கிறோம். ஆனாலும், எழுதும்போது வடமொழி எழுத்துக்களான ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ எனப்படும் கிரந்த எழுத்துக்களையும் சேர்த்தே எழுதவேண்டிய சூழலுக்கு ஆளாகிறோம்.
2/22
கிரந்தம் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலும் கேரளத்திலும் சமசுகிருத மொழியில் இருந்து தோன்றி தமிழில் பயன்படுத்தப்பட்ட சொற்களை எழுதப் பயன்பட்ட ஓர் இலிபி (எழுத்து முறை).
1/4
இருபதாம் நூற்றாண்டில் தேவநாகரி எழுத்துகள் பிரபலமடைந்ததாலும் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் சமற்கிருதம் மீது பொதுவாக செய்த தாக்கத்தாலும் கிரந்தத்தின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது.
2/4
தமிழில் சமசுகிருதம் மற்றும் தமிழின் கலப்பால் உருவான மணிப்பிரவாளம் பரவலாக இருந்த பொழுது கிரந்த எழுத்துகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது.
3/4