இப்போது வழங்கப்பட்டுள்ள மத்திய தொகுப்பில் உள்ள இடங்களுக்கான OBC இட ஒதுக்கீடு 27% என்பது நீண்ட காலமாக நடைபெற்று வந்த சட்ட போராட்டத்திற்கு பின் கிடைத்த வெற்றி ஆகும்.
மத்திய தொகுப்பு என்பது1986 ஆம் ஆண்டு உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி உருவாக்கப்பட்டது.
இதன் படி அனைத்து மாநிலங்களும் தங்கள் வசம் உள்ள கல்லூரிகளில் உள்ள இடங்களில் 15% வரை மத்திய தொகுப்பில் கொடுக்க வேண்டும்.
இதற்கு காரணம் அந்த காலத்தில் வட கிழக்கு மாநில வளர்ச்சி மிக குறைவு. அங்கு மருத்துவ கல்லூரி போன்றவை அந்த மாநிலத்துக்கு தேவையான அளவில் இல்லை
எனவே அனைத்து மாநில கல்லூரிகளில் இருந்து வாங்கி, மத்திய தொகுப்பில் வைத்து, அகில இந்திய அளவில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
2007 ஆண்டு முதல் இந்த மத்திய தொகுப்பில் SC/ST இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால் OBC மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை 2012ஆம் ஆண்டுக்கு பின்னர் தான் வந்தது.
இதற்கான சட்ட போராட்டம் 2016 முதல் ஆரம்பமானது. ஆனால் ஒன்றிய அரசு இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்த முடியாது என்று உச்ச நீதி மன்றத்தில் இருந்த சலோமி வழக்கை காரணம் காட்டியது.
கடந்த 2020 ஆம் ஆண்டு வந்த தீர்ப்பின் அடிப்படையில் செயல்படுத்த சொன்ன போது, 2021ஆம் கல்வி ஆண்டு முதல் செயல்படுத்த இருப்பதாக சொன்னது.
இந்த ஆண்டும் அரசு அமல்படுத்த நடவடிக்கை எடுக்காத காரணத்தால், திமுக உயர் நீதி மன்றத்தில் நீதி மன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தனர்
இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் OBC இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்றால் நீட் தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டியது இருக்கும் என்ற கடுமையான எச்சரிக்கைக்கு பின்பே இந்த 27% இட ஒதுக்கீடு அறிவிப்பு வந்துள்ளது
திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் இது முதல் கட்ட வெற்றி என்றும் தொடர்ந்து போராடுவோம் என்று கூற காரணம், தமிழ் நாடு கேட்பது 50% OBC இட ஒதுக்கீடு.
மத்திய தொகுப்பில் உள்ள இடங்கள் நிரப்பப்படும் போது, அந்தந்த மாநில இட ஒதுக்கீடு (State Specified Reservation) முறையே பின்பற்ற வேண்டும்.
அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் OBC என்பது BC + MBC என இரு பிரிவை சேர்த்து 50% ஆகும்.
நாம் கேட்பது அகில இந்திய அளவில் இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்பதல்ல. தமிழ் நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில், மத்திய தொகுப்பிற்கு கொடுக்கும் 15% இடங்களில் இந்த 50% கொடுக்க வேண்டும்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள OBC மாணவர்கள் அதிக இடங்களை பெற முடியும்.
இதற்கான சட்ட போராட்டம் தொடரும் என்றே திமுக எம்பி வில்சன் அவர்கள் தெரிவித்து உள்ளார். 50% OBC இட ஒதுக்கீடு என்பது நம் மாநில கல்லூரிகளில் தான் கேட்கிறோம். அது விரைவில் சாத்தியமாகும்.
கூடுதல் தகவல்: நாம் சட்ட போராட்டத்தின் மூலம் 27% OBC இட ஒதுக்கீடு பெற்ற அதே நேரம், அரிய வகை ஏழைகள் 10% இலவச இணைப்பாக பெற்று கொண்டனர்.
தமிழ்நாட்டில் 10% EWS அமல்படுத்த மாட்டோம் என்பதே கடந்த அதிமுக & இன்றைய திமுக அரசின் நிலைப்பாடு ஆகும். இதை எதிர்த்து திமுக வழக்கு நடத்தி வருகிறது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தோழர் தொல். திருமாவளவன் MP அவர்களே 21 வாடகை வீட்டில் குடியிருந்த நபர்களுக்கு தான் வீடுகள் ஒதுக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார்.
ஆனால் இதை இங்குள்ள போராளிகள் திமுக மொத்தமாக தலித் விரோதிகள் போல் சித்தரித்தது எல்லாம் பொய் என்ற வேசம் கலைந்த பின்னர் யாரையும் காணவில்லை
கோயம்புத்தூரில் தீண்டாமை சுவர் இடிக்கப்படும் நிகழ்வு பற்றியும் எந்த ஒரு போராளியும் பதிவு செய்யவில்லை.
ஒருவேளை அவர்கள் போராட காரணம் கொடுக்காமல் திமுக அரசு இடிக்க நடவடிக்கை எடுத்துவிட்டார்கள் என்ற வருத்தமோ என்னவோ தெரியவில்லை 😔
கடந்த தேர்தலுக்கு முன் ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்கு செயல்பட அனுமதி கொடுக்க ஒருமனதாக அனைத்து கட்சிகளில் ஒன்றாக திமுக ஆதரவு கொடுத்த நிகழ்வுக்கு பொங்கிய போராளிகள், இன்றைய ஆலை மூடும் உத்தரவிற்கு எந்த சலனமும் இன்றி சைலன்ட்டாக இருப்பது ஏனோ தெரியவில்லை.
நேற்று முதல் கூவம் நதி ஓரம் தங்கி இருந்த மக்களை அரசு திட்டமிட்டு காலி செய்து வருவது போல் சித்தரித்து வருகின்றனர்.
இது 2020 ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை ஆகும்.
அங்கு இருப்பவர்களுக்கு முறையான அறிவிப்பு கொடுத்து, மாற்று இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது
முதலில் அவர்களை பெரும்பாகத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புக்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் மக்களின் கோரிக்கை ஏற்றுக்கொண்டு, தமிழ்நாடு அரசு KP பார்க் அருகில் புளியந்தோப்பு அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கி உள்ளது.
இருப்பினும் அங்கு வாடகை வீடுகளில் வசித்து வந்த மக்கள், தங்களுக்கும் வீடு ஒதுக்கி தர வேண்டும் என்று தான் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.