அது தொடர் (சீரியல்) கொலைகளா ?
அந்த கொலைகளை யார் செஞ்சாங்க ?
ஏன் செஞ்சாங்க ன்னு கண்டுபுடிக்கிறது தான் படமே..
ஜாவா: த்ரில்லரா ? ஹாரரா ?
பிரபா: கிரைம் கதை மாப்ள..
ஒரு கொலை நடந்த இடத்துல ஒரே ஒரு தடயம் இருக்கு அதுல சில நம்பர் பிரிண்ட் ஆகி இருக்கு, ரெண்டாவது கொலை நடத்த இடத்துலயும் அதே மாதரி ஒரு நம்பர் கார்டுல பிரிண்ட் ஆகி இருக்கு, மூணாவதும் கொலை நடக்குது,,,,
ஜாவா: என்ன அதே கார்டு அதே நம்பர், அதானே ??
பிரபா: அதே தான் மாப்ள, இப்போ தான் கதையே ஆரம்பிக்குது..
ஜாவா: ஓஹோ..
பிரபா: ஆனா கொலை செய்யப்பட்ட மூணு பேருக்கும் எந்த வித சம்பந்தமுமே இல்லை,
முதல் கொலைல கிடைச்ச நம்பர் ஒரு ஜிபிஎஸ் நம்பர்,
அது ரெண்டாவது கொலை நடந்த இடத்தை சொல்லுது,
அதே போல ரெண்டாவது கொலை நடந்த இடத்துல இருந்த கார்டு மூணாவது கொலை நடந்த இடத்தை ரொம்ப துல்லியமா சொல்லுது,
இதெல்லாம் கண்டுபுடிகிறது நம்ம ஹீரோ,
அப்புறம்..
ஜாவா: மூணாவது கொலை நடந்த இடத்துல இருந்த கார்டு நாலாவது கொலை நடந்த இடத்தை சொல்லுது, ஆதானே ?
பிரபா:
லைட்டா தப்பு மாப்ள..
நாலாவது கொலை நடக்க போற இடத்தை சொல்லுது..
நாலாவது கொலை இன்னும் நடக்கவே இல்ல,
அந்த இடம் என்னன்னு பாத்தா அது ஒரு ஸ்டார் ஓட்டல்,
ஓட்டல் மேனேஜர் கிட்ட பேசி டிடெக்டிவ் அதிகாரிகள்,
ஹீரோவும் அவனோட கொஞ்சம் ஆளுங்களையும் ஹோட்டல்ல வேலை செய்யுற மாதிரி
நடிக்க வச்சி கொலைகாரனை புடிக்க பாக்குறாங்க,
ஹீரோவுக்கு அந்த ஹோட்டல் வேலை புடிக்கவே இல்ல..
கடைசில ஹீரோ அந்த கொலைகாரனை புடிச்சானா ?
எப்படி புடிச்சான் ?
எதுக்கு அந்த கொலைகள் நடக்குது ?
இதெல்லாம் படத்துல பாருங்க மாப்ள..
ஜாவா: போங்க, எப்போவும் இப்படி சஸ்பென்ஸ் வைக்குறீங்க..
பிரபா: அப்போ தான மாப்ள எல்லாருக்கும் படம் பாக்கணும்ன்னு ஆர்வம் வரும்...
படம் கொஞ்சம் பொறுமையா தான் போகும், என்னோட ரேட்டிங் 7/10 மாப்ள..