#kalaingarinassembly

கலைஞர்- பரிசுத்த நாடாரின் நட்பு பாராட்டிய அரசியல் நாகரீகம்

நான் வாயை தொறந்தால் ஒரு மாசம் அவர் தூங்க மாட்டார்" என்று ஒரு வேட்பாளரும், "பிஞ்சிலே பழுத்த கதையை வெளியில் எடுத்து விடட்டுமா" என்று மற்றொரு வேட்பாளரும் மாறி மாறி பேசி Image
வருவதுதான் இன்றைய பிரச்சாரம் என்று ஆகிவிட்டது!

ஆனால் அன்றைய தேர்தல் காலத்தில் ஒரு கண்ணியம் இருந்தது... நாகரீகம் இருந்தது... இளவயது வேட்பாளர்கள் என்றாலும் ஒருவருக்கொருவர் பரஸ்பர நட்பு காணப்பட்டது! அதற்கு ஒரு உதாரணம்தான் இது!
1962-ம் ஆண்டு! மறைந்த திமுக தலைவர் கலைஞர் தஞ்சாவூரில் போட்டியிட போகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடார் நிற்கிறார்!

பிரச்சாரத்திற்காக தஞ்சாவூர் சென்ற கலைஞர், முதல் வேலையாக எங்கு போனார் தெரியுமா? கட்சி ஆபீசுக்கோ, நிர்வாகிகளை சந்திக்கவோ இல்லை.. நேராக எதிர்
வேட்பாளர், தேர்தல் புலி என சொல்லப்பட்ட பரிசுத்த நாடார் வீட்டுக்கே சென்றுவிட்டார்.

திடீரென்று வீட்டுக்குள் வந்த கலைஞரை பார்த்ததும் பரிசுத்த நாடாருக்கு ஒரு பக்கம் இன்ப அதிர்ச்சி இருந்தாலும், நட்புடன் வரவேற்றார். இதுதான் பரிசுத்த நாடாரின் பெருந்தன்மை!
வீட்டுக்குள் போன கலைஞரோ, "உதயசூரியன் சின்னத்தில் நீங்க எனக்கு ஓட்டு போடணும்" என்று கேட்டிருக்கிறார். இதுதான் கலைஞரின் தில்!

என்ன கிழவி.. சவுக்கியமா.. மச்சான்தான் இங்க நிக்கறாரு.. மறக்காம ஓட்டு போட்டுடு.. அதெல்லாம் ஒரு காலம்!
ஆனால் கலைஞர் இப்படி கேட்டதும் ஒரு செகண்ட் ஷாக் ஆன பரிசுத்த நாடார், "எங்கள் சின்னமான இரட்டை காளை-க்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டார். கடைசியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பரிசுத்த நாடார் தோல்வியை தழுவியது வேறு விஷயம். ஆனால் இப்படி ஒரு நாகரீக சம்பவம் இனிமேல் சத்தியமாக
நடக்கவே நடக்காது!

_____ ________________

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி 60 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இந்தியாவில் எந்த தலைவரும் 50 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்ததில்லை. மேலும் தாம் போட்டியிட்ட எந்த தேர்தலிலும் தோல்வியை சந்திக்காத தலைவர்
என்ற பெருமையயும் பெற்றவர் ஆவார்.

* 1957-ம் ஆண்டு குளித்தலை சட்டமன்ற தொகுதியில் முதன் முறையாக போட்டியிட்ட கலைஞர் 22,785 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.எ.தர்மலிங்கம் 14,489 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் 8,296 வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றிபெற்று கலைஞர் முதன் முறையாக சட்டமன்றத்திற்கு சென்றார்.

* 1962-ம் ஆண்டு தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட கலைஞர் 1,928 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தஞ்சாவூரில் கலைஞரை எதிர்த்து போட்டியிட்டவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரிசுத்த நாடார்.
* 1967-ம் ஆண்டு சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார் கலைஞர். இதில் 20,482 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.ஜி.வினாயகமூர்த்தியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
* 1971-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த என்.காமலிங்கத்தை எதிர்த்து சைதாபேட்டை சட்டமன்ற தொகுதியில் கலைஞர் போட்டியிட்டார். அதில் 12,511 வாக்குகள் வித்தியாசத்தில் கலைஞர் வெற்றி பெற்றார்.
* 1977-ம் ஆண்டு அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டார் கலைஞர். இவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தி போட்டியிட்டார். இதில் 16,438 வாக்குகள் வித்தியாசத்தில் கலைஞர் வெற்றி பெற்றார்.
* 1980-ம் ஆண்டு அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டார் கலைஞர். இவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் எச்.வி. ஹண்டே போட்டியிட்டார். இதில் 699 வாக்குகள் வித்தியாசத்தில் கலைஞர் வெற்றி பெற்றார்.
* 1989-ம் ஆண்டு துறைமுகம் தொகுதியில் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த கே.எ.வகாப்பை எதிர்த்து போட்டியிட்டார். இதில் 31,991 வாக்குகள் வித்தியாசத்தில் கலைஞர் வெற்றி பெற்றார்.
*. 1991-ம் ஆண்டு துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டார் கலைஞர். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.சுப்பு போட்டியிட்டார். இதில் 890 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றார்.
* 1996-ம் ஆண்டு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கலைஞர், காங்கிஸ் வேட்பாளர் நெல்லை கண்ணனை 35,784 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
* 2001-ல் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கலைஞர், காங்கிஸ் வேட்பாளர் தாமோதரனை 4,834 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

* 2006-ம் ஆண்டு மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கலைஞர், சுயேட்சை வேட்பாளர் தாவுத் மியாகானை 8,526 வாக்குகள் x
* 2001-ல் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கலைஞர், காங்கிஸ் வேட்பாளர் தாமோதரனை 4,834 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

* 2006-ம் ஆண்டு மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கலைஞர், சுயேட்சை வேட்பாளர் தாவுத் மியாகானை 8,526 வாக்குகள்
வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

* 2011-ம் ஆண்டு திருவாரூரில் போட்டியிட்டு 1,09,014 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் எம். இராசேந்திரனை தோற்கடித்தார். வாக்கு வித்தியாசம் 50,249.
* 2016-ம் ஆண்டு திமுக தலைவர் கலைஞர் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பன்னீர் செல்வத்தை அவர் 67,212 வாக்குகள் வித்தியாசத்தில் கலைஞர் வீழ்த்தினார்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

4 Aug
வசமாக சிக்கிய வாரிசுகள்! மோடியிடம் கெஞ்சிய இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்!
ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். திடீர் டெல்லிப் பயணத்தின் நோக்கங்கள் ஒவ்வொன்றாக மெல்ல வெளியே வரத் தொடங்கியுள்ளன. இருவரும் பாரதப் பிரதமருடன் நடத்தியது ஒரே ஒரு மீட்டிங். அதைப்பற்றி பாரதப் Image
பிரதமர் மோடிக்கு நெருக்கமான வட்டாரங்கள் இப்பொழுதுதான் வாய் திறக்கத் தொடங்கியுள்ளனர்.
டிசம்பர் மாதம் 2016-ஆம் ஆண்டு எடப்பாடியின் வாழ்க்கையில் மிக முக்கியமான சம்பவம் ஒன்று நடந்தது. அது தொடர்பாகத்தான் எடப்பாடி, பிரதமர் மோடியுடன் பேசியுள்ளார் என்கிறது பிரதமர் அலுவலக வட்டாரங்கள்.
2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அது கருப்புப் பணத்தை கருவறுக்கும் நடவடிக்கை என்று சொல்லப்பட்டதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக, புதிய 2000 ரூபாய் வைத்திருந்தவர்களைத் தேடி வருமானவரித்துறையும், சி.பி.ஐ.யும்
Read 22 tweets
3 Aug
யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!
*.. யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் Image
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னாது என்றலும் இலமே; "மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆறாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம்" என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே."
(புறநானூறு - பாடல்: 192
பாடியவர்: கணியன் பூங்குன்றன்)

பொருள் விளக்கம்
கேளிர்= உறவினர். புதுவதன்று = புதியதல்ல
முனிவின் = வெறுப்பின் காரணமாக
புணை = தெப்பம். திறவோர் = ஆன்றோர்
இலம் = இல்லாமை. (இல்லையென்ற பொருளில் இங்கு வரும்)
Read 20 tweets
3 Aug
மலர்மாரி பொழிகின்றேன்!(பத்துப்பாட்டு (குறிஞ்சிப் பாட்டு) (61 முதல் 95 முடிய) (பாடியவர் : கபிலர்)-கலைஞர் மு.கருணாநிதி

மலர்மாரி பொழிகின்றேன்!
"உள்ளகம் சிவந்த கண்ணேம் வள்இதழ்
ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண்கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடு வேரி, தேமா, மணிச்சிகை Image
உரிதுநாறு அவிழ்தொத்து உந்தூழ், கூவிளம்,
எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான்பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,
பயினி, வானி, பல் இணர்க்காயா,
விரிமலர் ஆவிரை, வேரல், சூரல்,
குறீஇப்பூளை, குறுநறுங்கண்ணி,
குருகிலை, மருதம், விரி பூங்கோங்கம்,
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமா,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமா ரோடம்,
வாழை, தளவம், முள்தாட்தாமரை,
ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
Read 9 tweets
3 Aug
தகடூரான் தந்த கனி! (புறநானூறு-விளக்கம் -கலைஞர் )

"வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல் தொடி தடக்கை
ஆர்கலி நறவின், அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால் புரை பிறை நுதல் பொலிந்தசென்னி
நீலமணி மிடற்று ஒருவன்போல
மன்னுல பெரும நீயே! தொன்னிலைப் Image
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறுயிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே"

(புறநானூறு - பாடல் 87, 91 - அவ்வையார்)
பொருள் விளக்கம்:
தெவ்விர் = பகைவீர்.
பொருநன் = வீரன்
வைகல் = ஒரு நாள்
வலித்த = செய்யப்பட்ட
வலம்படுவாய் வாள் = வெற்றிதரத் தவறாத வாள்
ஒன்னார் = பகைவர்
ஆர்கலிநறவு = ஆரவாரம் செய்கின்ற மது
அணிலின் வால் போல மீசை கொண்ட மன்னவன்
அதியமான் நெடுமான் அஞ்சி யெனும் தென்னவன்
ஆதிநாளில் தமிழ் மண்ணில் முதல் முதலாய்
அருங் கரும்பைக் கொண்டுவந்து விளைச்சல் செய்தார்
Read 13 tweets
3 Aug
தேனாகச் சொட்டும்; தேளாகக் கொட்டும்!-நற்றிணை: பாடல்:177 -கலைஞர் மு.கருணாநிதி

* "பரந்துபடு கூர்எரி கானம் நைப்ப
மரந்தீயுற்ற மகிழ்தலை அம் காட்டு
ஒதுக்கு அரும் வெஞ்சுரம் இறந்தனர் மற்றவர்
குறிப்பின் கண்டிசின் யானே நெறிப்பட
வேலும் இலங்குஇலை துடைப்பப் பலகையும்
பீலி சூட்டி மணிஅணி பவ்வே Image
பண்டினும் நனிபல அளிப்ப இனியே
வந்தன்று போலும் தோழி நொந்து நொந்து
எழுது எழில் உன் கண்பாவை
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே"

(நற்றிணை: பாடல்:177)
பாடியவர்:(பெயர் தெரியவில்லை)

பொருள் விளக்கம்
கூர்எரி=மிகுந்த தீ. கானம்=காடு, நைப்ப=அழிந்துபட. ஒதுக்கு அரும்
வெஞ்சுரம்= ஒதுங்குதற்கு நிழலுமில்லாத வெம்மையான நிலப்பகுதி. இறந்தனர்=சென்றனர். பலகை=கேடகம் அல்லது கேடயம். பண்டினும் நனிபல அளிப்ப=முன் போலன்றி என்னிடம் அளவிலா அன்புகாட்டி

தோழி:
என்னடி நேற்று விடியுமட்டும் வளையல் சத்தம்?
எத்தனை கொடுத்தான்? நூறா, ஆயிரமா; நீ பெற்ற முத்தம்?
Read 23 tweets
3 Aug
#மாட்டுக்கறி பற்றி நம்மளவிட நல்லா தெரிஞ்சு வெச்சிருக்காங்க பார்ப்பனர்கள்..
பசுவைக் கொல்லும் பொது, 'ஹோதா' என்ற புரோகிதன் 'அத்ரிகோ சமீத்வம் ஹுசமீ சமீத்வம்;சமீத்வமத்ரிகா அத்ரிகா உர் இதித்ரிப் ரூயாத்' (ஐதரேய பிராமணம் பஞ்சிகா 2 ,கண்டம் 7 } Image
என்று சொல்லவேண்டும்> அதாவது, நன்றாக அடித்துக் கொல், கொல், கொல். அடிப்பதை நிறுத்தாதே என்று கூறியவாறு பசுவைக் கொலை செய்து அடுத்து அதன் சதையை முப்பத்தி ஆறு பங்குகளாக பிரித்து வழங்க வேண்டும் என்றும் இதனை முறைப்படி உணர்ந்தவன்
சுவர்க்கத்தை அடைகிறான் என்றும், இந்த யாகம் ரிஷிகளால் கண்டுபிடிக்கப் பட்டது என்றும் நம்பியவர்கள் வேதகால ஆரியர்கள்! யாகத்தில் பசு கொள்ளப் பட்ட பின் அதன் சதையை அறுதெடுக்க வேண்டிய முறைப் பற்றி (ஐதரேய பிராமணம் பஞ்சிகா 2 ,கண்டம் 6 }கூறுவதாவது:
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(