[Korean] The Host - 2006
Parasite, Mother, Okja போன்ற அருமையான படங்களை இயக்கிய Bong Joon Ho வின் இயக்கத்தில் வெளிவந்த ஹாரர் மற்றும் சயின்ஸ் ஃபிக்ஷன் கலந்த திரைப்படம் தி ஹோஸ்ட்.
வந்த வேகத்தில் கடற்கரையில் உள்ளவர்களை கொன்று குவித்து விட்டு ஒரு சிறுமியை தூக்கிச் சென்று விடுகிறது.
இந்த சிறுமியை காப்பாற்ற அவரது குடும்பம் மேற்கொள்ளும் முயற்சிகள் தான் படம்.
சிறுமியை காப்பாற்றினார்களா என்பதை படத்தில் பாருங்கள்.
அப்படியே அரசியல் , சோசியல் என கொஞ்சம் மெஸேஜ்
சொல்லி இருப்பார் இயக்குனர். Horror , Sentiment மற்றும் காமெடி என அனைத்தையும் கலந்து கொடுத்து இருப்பார் இயக்குனர்.
கிராஃபிக்ஸ் மிருகம் செமயாக இருக்கும்.
ஒரு எழுத்தாளர் மற்றும் அவரது மனைவி இரண்டு பேரும் தனியாக காட்டிற்குள் ஒரு வீட்டில் வசிக்கிறார்கள். ஒரு நாள் இரவு தங்க இடம் கேட்டு ஒருவர் வருகிறார் அவருக்கு இடம் கொடுக்கிறாரர்கள். அடுத்த நாள் அந்த மனிதனின் மனைவி வருகிறார். அப்புறம் அவர்களது இரண்டு மகன்கள் வருகிறார்கள்.
சகோதரர்களுக்கு இடையே கைகலப்பு முற்றி கொலையில் முடிகிறது. மனைவி மட்டும் வீட்டில் விட்டு விட்டு அனைவரும் ஹாஸ்பிடல் போய்விடுவார்கள்.
அதுக்கு அப்புறம் பல கொடுரமான சம்பவங்கள் நடந்தேறும். அது என்ன என்று படத்தில் பாருங்கள்.
கடைசியில் ரொம்பவே டிஸ்டர்பிங்காக இருக்கும்.
Homefront - 2013
ட்ரான்ஸ்போர்ட்டர் புகழ் Jason Statham நடித்து 2013 -ல் வந்த ஆக்ஷன் படம்
இது போதாதென்று திரைக்கதை எழுதியவர் Sylvester Stallone
படத்தின் கதை பல வருடங்களாக அடித்து துவைத்து எடுக்கப்பட்ட குடும்பத்தை கெட்டவர்களிடம் காப்பாற்றும் கதை தான் #tamil #tamilhollywoodreviews
ஹீரோ முன்னாள் போதைப்பொருள் தடுப்பு அதிரடி போலீஸ். மனைவி இறந்த பின் குழந்தையுடன் ஒரு கிராமத்தில் செட்டில் ஆகிறார். அங்கு ஏற்பட்ட சின்ன உரசல் விஸ்வரூபம் எடுத்து அதன் காரணமாக அவனது பழைய எதிரி அடியாட்கள் + பயங்கரமான ஆயுதங்களுடன் பழிவாங்க கிராமத்துக்கு வருகிறான்.
அந்த கும்பலிடம் இருந்து எப்படி இருவரும் தப்பித்தார்கள் என்பதை படத்தில் பாருங்கள்.
எனக்கு என்னமோ இத லைட்டா டிங்கரிங் பண்ணி தான் தெறி படம் எடுத்த மாதிரி தெரியுது. இந்த படத்துலயும் ஒரு டீச்சர் வருது 😁
நல்ல டைம் பாஸ் படம் கண்டிப்பாக பாருங்கள். Action sequences எல்லாம் நல்லா இருக்கு
சிட்டில நிறைய இடத்துல வேலை இருக்குனு சொல்லி மொத்த நைட்டுக்கும் டாக்ஸியை வாடகைக்கு எடுக்கிறார்.
போற எடுத்துல எல்லாம் டொப் டொப்னு யாரையாவது போட்டுத்தள்ளுறார்.
இதுல நடுல சிக்குன டாக்ஸி ட்ரைவர் நிலைமை என்ன? அவன்ட்ட இருந்து எப்படி தப்பிச்சார்னு படத்தில் பாருங்கள். @PrimeVideoIN
#tomcruise - சாக்லேட் பாய் கெட்டப்ல பார்த்து இருப்போம். இதுல ஸ்டைலிலஷ் + கொடூரமான கொலைகாரனா கலக்கி இருக்கிறார். #jamiefoxx - அப்பாவி ட்ரைவராக நல்ல நடிப்பு.
[Indonesian] The Night Comes For Us - 2018
Raid , Raid 2 படங்கள் பார்த்து இருக்கிறீர்களா ? அது பிடிக்கும் என்றால் யோசிக்காமல் இந்த படத்தை பாருங்கள். ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு பக்காவான ஆக்ஷன் படம். ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் தாறு மாறாக இருக்கும்.
ஒரு பெரிய கொடுரமான கடத்தல் கும்பல். ஹீரோ அதில் முக்கியமான பொறுப்பில் இருக்கும் அடியாள். ஒரு பிரச்சினையில் ஒரு கிராமத்தையே அத்திப்பட்டி ஸ்டைலில் காலி பண்ணுகிறது ஹீரோ குரூப்
ஒரு சிறுமியை கொல்ல வேண்டி வருகிறது. அந்நேரத்தில் திடீர் என திருந்திய ஹீரோ தனது ஆட்கள் அனைவரையும் கொல்கிறார்
கடுப்பான Cartel இருக்குற அடியாட்கள் அனைவரையும் ஹீரோ+ சிறுமியை கொல்ல அனுப்புகிறது. இவர்களிடம் இருந்து தப்பித்து சிறுமியை காப்பாற்றினாரா என்பதை படத்தில் பாருங்கள்
சண்டை எல்லாம் செம அதுவும் Raid 2 படத்தில் சுத்தியல் வச்சுகிட்டு ஒரு பொண்ணு வரும் . அந்த பொண்ணுக்கு 2 தரமான fight
The Swarm - 2021
French படம். சில நேரங்களில் summary மட்டும் பார்த்துவிட்டு புதிதாக #netflixindia ல் சேர்த்த படங்களை பார்ப்பது வழக்கம் .
கூட்டமாக பூச்சி , மிருகங்கள் வந்து கடிச்சு கொல்லும் படங்களை பார்த்து ரொம்ப நாள் ஆச்சுனு பார்த்தேன்
இதுல இரத்தம் குடிக்கும் வெட்டுக்கிளிகள்.
படம் ஸ்லோ தான். இத கம்ப்ளீட்டா மான்ஸ்டர் /அனிமல் மூவில சேர்க்க முடியாது.
சைக்காலஜி திரில்லர் வகையிலும் சேரும்.
பொறுமை இருந்தால் பாருங்கள்.
கடைசில கொஞ்சம் பரவாயில்லை.