சென்னை: கடந்த 10 ஆண்டுகளாககிடப்பில் போடப்பட்டு உள்ள, இயற்கை வேளாண் கொள்கையை, அரசு வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், நுண்ணுாட்ட சத்துக்களை, பல மாவட்ட விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்தி, சாகுபடி செய்து வருகின்றனர். இதுபோன்ற ரசாயனங்களின் பாதிப்பு, உணவுப் பொருட்களிலும் கலந்து விடுகிறது.
ரசாயன கலப்புள்ள உணவு பொருட்களை சாப்பிடுவதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதுமட்டுமின்றி, ரசாயன கலப்பு உள்ள பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை நீடிக்கிறது.
ரசாயன உரங்களுக்கு மாற்றாக, இயற்கை உரங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, அ.தி.மு.க., ஆட்சியில், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, இயற்கை வேளாண் கொள்கை வகுக்கப்பட்டது.
இதிலுள்ள சில அம்சங்களை, வேளாண் பல்கலை எதிர்த்ததால், வேளாண் கொள்கை வெளியிடப்படவில்லை.
இதைத்தொடர்ந்து இ.பி.எஸ்., ஆட்சியிலும், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் உள்ளிட்ட பிரிவுகளின், அதிகாரிகள் குழுவினர் இணைந்து, இயற்கை வேளாண் கொள்கையை தயாரித்தனர்.
இது, வேளாண் துறை செயலர் வாயிலாக, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து, விரிவாக ஆய்வு செய்து, கொள்கையை வெளியிட திட்டமிடப்பட்டது. சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதால், கொள்கை வெளியிடப்பட வில்லை.
தற்போது, புதிதாக பொறுப்பேற்றுள்ள தி.மு.க., அரசு, இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் என, முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
எனவே, அதற்கு வசதியாக, 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள, இயற்கை வேளாண் கொள்கையை, அரசு வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அருள்மிகு ஸ்ரீ கற்பகாம்பாள் உடனுறை ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில்.
இக்கோவில் உள்ள இறைவனை சந்திரனும், சூரியனும் வந்து தொழுது செல்வதாக கூறப்படுகிறது.
🇮🇳🙏1
மேற்கு பார்த்தபடி அமைந்த சிவன் கோவில் இது,
இந்த ஊருக்கு தாரமங்கலம் என்று பெயர் வரக்காரணம், சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இங்கு திருமணம் நடந்தது என்றும், திருமால் தாரை வார்த்துக் கொடுத்து மணவிழாவினை நடத்தியதால் ‘தாரமங்கலம்’ என்ற பெயர் வந்ததென்றும் கூறுவர்...
🇮🇳🙏2
ஆண்டுதோறும் உத்தராயண, தட்சணயான புண்ணிய காலங்களில் மாலை வேளையில் சூரியன் கதிர்களும், சந்திரன் ஒளியும் சிவலிங்கத்தின் மீது விழுகிறது.
மூட்டை தூக்கும் தொழிலாளியான ராமதேவ் தினமும் மாலையில் நீராடி, ஸ்ரீபாண்டுரங்கனைப் பாடி பூஜித்து, பழம்- கற்கண்டுகளை பக்தர்களுக்கு வழங்கி வந்தான்.
சம்பாதிப்பதில் ஒரு பங்கை உண்டியலில் சேமித்து வைத்து, வருடா வருடம் பண்டரிபுரம் சென்று, விட்டலனுக்கு வஸ்திரம் சமர்ப்பிப்பது வழக்கம்.
உண்டியல் பணத்தை எண்ணினார் ராமதேவன்.
இதில் விட்டலனுக்கு நூல் வேஷ்டியும்- அங்கவஸ்திரம் மட்டும்தான் வாங்க முடியும் என வருந்தினார். பிறகு மனதைத் தேற்றியபடி, நூல் வேஷ்டி மற்றும் அங்க வஸ்திரத்தை வாங்கிக் கொண்டு பண்டரிபுரம் நோக்கி நடந்தார்.
தி.மு.க. அமைச்சர் அறிவித்த குடும்ப கடன் ரூ.2.64 லட்சம் ! முதல் ஆளாக கட்ட வந்தவரால் பரபரப்பு !
தமிழக அரசின் கடன் ரூ.5.7 லட்சம் கோடி ரூபாய் இருப்பதாக திமுக நிதியமைச்சர் நேற்று வெள்ளை அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார். அதில் ஒவ்வொரு குடும்பத்திற்கு தலா 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், பொம்மைக்குட்டைமேட்டை சேர்ந்தவர் காந்தியவாதி ரமேஷ். இவர் தனது கடனுக்கான தொகையை செலுத்துவதற்காக ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு வந்தார். அப்போது ஆர்.டி.ஓ.விடம் தனது கடனுக்கான காசோலையை வழங்கினார். ஆனால் அதனை அவர் வாங்க மறுத்துவிட்டார்.
பாக்.,கில் கோவில் சீரமைப்பு; ஹிந்துக்கள் வசம் ஒப்படைப்பு
லாகூர்: பாகிஸ்தானில் விஷமிகளால் சேதப்படுத்தப்பட்ட கோவில் சீரமைக்கப்பட்டு, ஹிந்துக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார்கான் மாவட்டத்தின் போங்க் நகரில் பழமை வாய்ந்த ஹிந்து கோவில் உள்ளது. இந்த பகுதியில் ஹிந்துக்கள் கணிசமாக வசிக்கின்றனர்.
கோவிலுக்கு அருகேஉள்ள மதராசாவை, ஹிந்து சிறுவன் இழிவுபடுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அங்கு ஆயுதங்களுடன் ஏராளமானோர் கோவில் முன் திரண்டனர்.
கிறிஸ்தவ இயக்கச் செயலாளர் ஸ்டீபன் மீதான பாலியல் வழக்கில் வீடியோவைக் கைப்பற்ற போலீஸார் தீவிரம்
கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த 18-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் இந்து மதம், பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக,
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மற்றும் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த அருமனை கிறிஸ்தவ இயக்கச் செயலாளர் ஸ்டீபன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.