கரூர்,திருச்சி,கோவையில் புற்றுநோய் சிகிச்சை மையம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அண்ணன் திரு. @Subramanian_ma அவர்களை சந்தித்தேன்
புற்றுநோய் பாதிப்பு கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது.குறிப்பாக பெண்களிடம்.
(1/n)
புற்றுநோய் குறித்த பயம்,குடும்ப சூழல், போதுமான விழிப்புணர்வு இன்மையால் ஆரம்பத்தில் கண்டறிய முடிவதில்லை. புற்றுநோய் முற்றிய நிலையில் பெரும்பாலும் குணமாக்க இயலாமல் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுவருகின்றன.
(2/n)
ஒருவேளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டாலும் ஏழை,எளிய, கிராமப்புற மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பது மிகுந்த சவாலாக உள்ளது. மக்கள் தரமான சிகிச்சைக்காக வெகு தொலைவில் இருக்கும் சென்னை அடையாறு புற்றுநோய் மையத்திற்கோ, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கோ செல்ல வேண்டியுள்ளது.
(3/n)
தமிழ்நாட்டில் புற்றுநோயை தடுப்பதை ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்.
1.புற்றுநோய் உயர் சிகிச்சைக்காக மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்களை கரூர், கோவை, திருச்சி, ஆகிய இடங்களில் அமைப்பது. 2. மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் பரிசோதனை மற்றும் முதல்நிலை சிகிச்சை மையம் அமைப்பது
(4/n)
3. மக்களை தேடி மருத்துவம் திட்ட பணியாளர்கள், செவிலியர்கள் தன்னார்வலர்கள் மூலம் புற்றுநோய் குறித்து, சுயபரிசோதனை உள்ளிட்ட நோய் கண்டறியும் முறை மற்றும் சிகிச்சைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது. நோய்பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளவர்களுக்கு விரைவாக பரிசோதனை
(5/n)
(எ.கா. கருப்பைவாய் புற்றுநோய்க்கு VILI, VIA பரிசோதனைகள்) செய்தல் உள்ளிட்ட முயற்சிகளை முன்னெடுப்பது 4. காங்கிரஸ் ஆட்சியில் புற்றுநோயை ஆரம்பநிலையிலோ,வருவதற்கு வாய்ப்புள்ள நிலையிலோ கண்டறிய VILI VIA எனும் முக்கிய பரிசோதனை அனைத்து அரசு மருத்துவமனைகள்...
(6/n)
ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்பட்டது.இது குறித்த விளம்பரங்கள் தொடர்ச்சியாக வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. திரு.மோடி ஆட்சியில் நிறுத்தப்பட்டு விட்ட இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
(7/n)
இதன் தீவிரத்தை புரிந்துகொண்டு
உடனடியாக கரூர்,திருச்சி,கோவையில் புற்றுநோய் பரிசோதனை மையங்களை அமைப்பதாக உறுதியளித்த அமைச்சர் அண்ணன் மா.சுப்பிரமணியம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
(n/n)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ராஃபியா ஒரு சிவில் டிபென்ஸ் அதிகாரி.கூட்டுபாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு,மார்பகங்கள் வெட்டப்பட்டு,தொண்டை அறுக்கப்பட்டு,அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டிருக்கிறார் என்கிற செய்தியைப் படிக்கவே பயங்கரமாக உள்ளது. #JusticeForRabiya
இவர் டெல்லி லாஜ்பத்நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றினார்.அங்கு நடக்கும் ஊழலை அவர் வெளிக்கொண்டு வராமல் தடுக்க இப்படி நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த கொடூரமான குற்றவாளிகள் உடனடியாக விரைவு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தூக்கிலிடப்படவேண்டும்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அச்சமூட்டும் அளவிற்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதை தடுப்பதற்கு ஆரம்பகல்வி முதலே பெண்கள் சமத்துவம்,மரியாதை,பெண்கள் வெறும் உடல் அல்ல என்பது பற்றி குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். குற்றவாளிகளை விரைவாக விசாரித்து கடுமையாக தண்டிக்கவேண்டும்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை,சுரண்டலை கேள்வி கேட்கும் சமூகம் சரியாகத்தான் இருக்கிறது.பாஜக ராகவனின் பாலியல் குற்றத்தை,சுரண்டலை சிறிதும் வெட்கம் இல்லாமல் அப்பட்டமாக ஆதரிக்கும் திரு.சீமானின் செயல்பாடுதான் வெட்கக்கேடானது. எனது அறிக்கை👇 #Save_Women_From_BJP & #Seeman
சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர்.இவர் இப்படிப் பொறுப்பில்லாமல் ,பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை,சுரண்டலை ஆதரிப்பது அதிர்ச்சியளிக்கிறது.
நாம் தமிழர் கட்சியில் இருக்கும் கள்ளமில்லாத இளைஞர்களின் மனதில்,பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சரியென்ற மனநிலையை சீமான் உருவாககுகிறார். இது ஒட்டுமொத்த பெண்களுக்கும், தமிழ் சமூகத்திற்கும் ஆபத்தாகிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.
தமிழக பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவித்த பாஜகவின் மாநில தலைவர் திரு. அண்ணாமலை உடனடியாக ராஜினமா செய்யவேண்டும்.
எனது அறிக்கை.
ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி, பாஜகவின் தற்போதைய மாநில தலைவர் தங்கள் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஒப்புக்கொள்கிறார்.ஆனால் அதை தட்டிக் கேட்க அவருக்கு தைரியமில்லை.குற்றவாளியை விட்டுவிட்டு குற்றத்தை வெளிக்கொண்டுவந்தவர்களை கட்சியை விட்டு நீக்குகிறார்.
பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்க முடியாமல் தடுப்பது எது? பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தடுப்பதுஎது? சொந்த கட்சியிலுள்ள பெண்களிடமே பாஜக தலைவர்கள் இவ்வளவு மோசமாக நடந்துகொள்கிறார்கள்,அதை அந்தகட்சியின் தலைவர் சிறிதும் வெட்கமும்,மனசாட்சியும் இல்லாமல் ஆதரிக்கிறார்
தமிழினம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான மொழி,வரலாறு,பாரம்பரியம் உடையது. அதை அழிப்பதற்கு பாஜக துடிப்பது நாம் அறிந்ததே .கீழடியில் இருந்து செம்மொழி ஆய்வு மையம் வரை உதாரணங்கள் குவிந்துகிடக்கின்றன.
தமிழக மக்கள் அன்பை,ஒற்றுமையை,அமைதியை,உழைப்பை,சுயமரியாதையை,தைரியத்தை நம்புகிறவர்கள்.ஆகவே பாஜக / ஆர் எஸ் எஸ் ஆல் தமிழகத்தை மதவெறி மற்றும் வெறுப்பு அரசியலால் வெல்ல முடியவில்லை. அழுத்தத்திற்கும் தமிழகம் பணிவதில்லை.ஆகவே இப்பொழுது புவியியல் ரீதியாக தமிழகத்தை அழிக்கத் துடிக்கிறார்கள்.
தொழில்வளர்ச்சியில் கோலாச்சிய கொங்கு மண்டலம் மோடி ஆட்சியில் உருக்குலைக்கப்பட்டது. பணமதிப்பு நீக்கம்,ஜி.எஸ் டி, தொழிலுக்கு ஆதரவின்மையால் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டன. லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர். மீதமுள்ள உழைப்பையும்,வளத்தையும் சுரண்ட துடிக்கிறார்கள்.
காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக்கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி,வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை.நிறைய
தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை.
தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற
தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை.
நீண்டகாலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம்.காங்கிரஸ் கட்சி தொண்டர்களில் இரத்தத்திலும்,வியர்வையிலும் உருவானது. இதை அழிக்க யாருக்கும் உரிமையில்லை.
எனது தலைவர் @RahulGandhi பணம் தான் பிரதானமென நினைத்திருந்தால் இன்று நான் எம் பி கிடையாது. இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். நமது கட்சியையும்,நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
தரிசு நிலத்தில் சிட்கோ, சிப்காட் அமைக்கலாம். வேலை வாய்ப்புகள் உருவாக்கலாம். அதற்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயார். ஆனால் சிப்காட், சிட்கோ பெயரால் பலநூறுகோடி மதிப்புள்ள இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதையும், விவசாயத்தை அழிப்பதையும் ஏற்க முடியாது.
(1/n)
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஊராட்சி R.கோம்பை பகுதியில் இயற்கை வளங்களை அழித்து சிட்கோ அமைப்பதாகவும்,தங்கள் வாழ்வாதாரமான விவசாயத்தைக் காப்பாற்ற போராடும் தங்களை அதிமுக ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன் காவல்துறையை வைத்து மிரட்டுவதாகவும் ...
(2/n)
...பொதுமக்கள், விவசாயிகள் தெரிவித்த புகாரின் பெயரில் இன்று பொதுமக்களுடன் சிட்கோ அமைக்கும் இடத்திற்கு சென்றேன்.
அங்கே அதிமுக ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன் அந்தப்பகுதிக்கு தொடர்பு இல்லாதவர்களுடன் வந்து தகராறில் ஈடுபட்டார். மிகவும் மோசமாக நடந்துகொண்டனர்.
(3/n)