தமிழன் என்று சொல்லுடா
தலை குனிந்து செல்லடா!!
எந்த மாநிலத்திலும் மொழி பற்று தமிழருக்கு நிகர் இல்லை என்று பெருமையோடு சொல்லிய காலங்கள் மடிந்தன,இன்று தமிழ் நிலமையோ அய்யோ பரிதாபம் 1/n
தமிழ் வரலாரு தெரியும்,இந்தியாவில் கிடைத்த தொல்பொருள் ஆராய்ச்சியில் 50 சதவிதம் மேல் கல்வெட்டுகள் தமிழில் உள்ளன என்ற ஒற்றை எடுத்து காட்டு போதும் ஒரு மொழி கடந்து வந்த பாதையை விவரிக்க.தொல்காப்பியம் 5000 ஆண்டுகள் மேல் பழமை அதை எழுதியவர் யாரென்று இன்று வரை கண்டு பிடிக்க முடியவில்லை2/n
தொல்காப்பியனென்று பிற்காலத்தில் சூட்டபட்டது,யாதும் ஊரே யாவரும் கேளிர் ன்னு சொன்னவர் என் முப்பாட்டன் கனியன் பூங்குன்றனார்(சூட்டபட்ட பெயர்),1330 குறளை வடித்தவர் திருவள்ளுவர்(சூட்டபட்ட பெயர்),தன் பெயரைக்கூட பதியாமல் தமிழுக்கு மாபெரும் சேவைஆற்றினர் 3/n
நான் அடிக்கோடிட்டு காட்டியது மிக சிறிய எடுத்துகாட்டு. ஆனால் இன்று தமிழ் என்ற ஒற்றை வார்த்தை வைத்து அதை வளர்க்க எந்த முயற்ச்சியையும் எடுக்காமல் அதன் போர்வையில் அரசியல் செய்கின்றனர்.பெருமைகளை சுமந்த தமிழில் நாம் பேச வெட்க படுகிறோம் என்பது கசக்கும் உண்மை 4/n
ஒரு ஜப்பானியரோ அல்லது கொரியர்களோ சக நாட்டவரிடம் உரையாடும் போது ஒரு வார்த்தை ஆங்கிலம் கலக்காமல் அழகாக பேசுவார்கள் ஆனால் தமிழர்களின் இன்றைய நிலமையோ தமிழை கலக்காமல் ஆங்கிலம் பேசுவதில் உண்ணிப்பாக இருக்கிறார்கள் 5/n
தமிழை பேச கேவளமென்று கருதும் இச்சமுதாயத்திடமிருந்து தமிழ் மெல்ல மடிந்து கடந்து போகும்.உயிர்மெய் என பிரிந்தது தமிழ் எழுத்துகள் அத்தமிழின் உயிரை பிரித்து சிதைத்து விட்டோம்.பிறப்பால் தமிழர் ஆனால் இணைப்பால் இந்தியர். இந்தியன் என்பதால் இந்தி கட்டாயமாக்க படுவது முட்டாள் தனம் 6/n
இவ்வளவு பேசும் நீங்கள் ஆங்கிலத்தை ஏன் கற்கிறிர்களே என்று கூறுவது என் காதில் ஒலிக்கிறது. ஆங்கிலம் ஏன் கற்றோம்?? ஆங்கிலம் கற்ப்பிக்கபடவில்லை மாறாக புகுத்தப்பட்டது.ஆங்கிலம் வெள்ளையர்கள் காலத்தில் புகுத்தப்பட்டது அன்று அடிமைகளாக மாறினோம் ஆங்கிலம் கற்றே தீர வேண்டும் என்ற கட்டாயம் 7/n
ஆனால் இன்று சுதந்திரம் பெற்று விட்டோம் மற்றும் இந்தி நம் நாட்டின் தேசிய மொழி கூட இல்லை அதை ஏன் கற்ப்பிக்கபடனும் மண்ணிக்கவும் கட்டாயபடுத்தபடனும்?வெள்ளைகாரனால் அன்று ஆங்கிலம் புகுத்தப்பட்டது இன்று அரசியல்வாதிகளால் இந்தி புகுத்த படுகிறது 8/n
இந்தி கத்துகிட்ட இந்தியா முழுவதும் போகலாம் என்ற பித்து பிடித்த பிம்பத்தை வைக்கிறார்கள். அப்போ பன்னாட்டு நிறுவணங்கள் இந்தி தெரிந்த பிறகு தான் இங்கு வருகிறார்களோ?கொரியர்களுக்கு ஆங்கிலம் கூட தெரியாமல் இங்கு வந்து ஜாம்பவன் ஆகலையா? 9/n
இந்தியை உங்களுக்கு விருப்பம் என்றால் தாரளமாக கற்றுக்கொள்ளுங்கள் ஆனால் அதை புகுத்தாதிர்கள் என்று தான் கேட்கிறோம். ஒரு நாள் ஆங்கிலம் கலக்காமால்(குறைந்த பட்சம் 80 சதவிதம் ஆங்கிலம் கலக்காமல்)தமிழை பேசி பழகுங்கள். இரண்டு மலையாளி சந்திக்கும்போது மலையாளத்தில் உரையாடுகிறார்கள் 10/n
ஆனால் நான் மும்பை சென்ற போது என்னை கண்ட தமிழ் சகோ ஆங்கிலத்தில் பேசுகிறார்.தமிழை அருவெருப்பாக கருதுகின்றனர் இதற்கு காரணம் ஆங்கிலம் புகுத்துவதால் மற்றும் இல்லை.தமிழை படித்தால் அது ஒரு அவமானம் என்று நம் ஆழ் மனதில் புகுத்தப்பட்டு அதை வைத்தும் அரசியல் செய்கின்றனர் 11/n
ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் தவறாக பேசினால் அதை இழிவாக கருதபடும் நம் மக்கள் அதுவே தமிழை தவறாக பேசுவதில் பெருமையாக கருதுகின்றனர்,கேவலம் ஒரு மதுக்காகவும் அது தரும் போதைக்காகவும் தாய்ப்பாலை கொச்சை படுத்துவதுக்கு சமம் 12/n
இந்தி என்பது ஒரு மொழி அது அறிவு கிடையாது.ஆங்கிலம் தெரிந்தால் அகிலத்தை வலம் வரலாம்! இந்தி தெரிந்தால் இந்தியாவை வலம்வரலாம்! இது இரண்டுமே தெரியாத சீனர்கள்,ரஷ்யர்கள் மற்றும் பலர் உலகத்தை வலம் வரவில்லையா?? தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடைவது மட்டுமே வளர்ச்சி அல்ல 13/n
விவசாயத்தில் வளர்ச்சி அடைந்தாளே உலகத்தை நாம் ஆளலாம்.அன்று ஆங்கிலேயனாள் ஆங்கிலம் புகுத்தப்பட்டது நம் தமிழ் வளம் அழிய துவங்கியது,செம்மொழியான தமிழ் பேச அவமான பட ஆரம்ப்த்தோம் இன்று இந்தி புகுத்தப்பட்டால் தமிழை ஏளனமாகிவிடும் மற்றும் முழுவதும் அழியும் 14/n
நாங்கள் இந்தி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லை அதை கட்டாயபடுத்தாதிர்கள் என்று சொல்கிறோம்.இந்தி கிளை மொழி ஆனால் தமிழ்?? சிந்தியுங்கள். எவன் ஒருவன் தாய் மொழியல் கற்க்கிறானோ அவன் சிந்தனை எளிதாக செயல்படும்,அவன் அறிவு மேம்படும் மற்றும் நம் நாடு வல்லரசு ஆகும்.
@PhonePe_@PhonePeSupport Today I have did purchase & sent money 140Rs through phone Pe. Money deducted but it is not credited to shop keeper,so again I did money transfer 140rs from another phone. Again money deducted but not credited to shop keeper so finally I have paid 140rs
Cash. Now how I can get my money 280rs back which was deducted by you. In above 2 transaction shows that it will reach reciever bank in 2 days. Any shop keeper in the world will accept this ? I have lost 280rs. This is the second time.
Already one time my wife faced this issue but I thought this is due to some banking issue. But now clearly understands this issue is due to phone pe only