உலகிலேயே கடலுக்குள் ஓர் அதிசய சிவாலயத்தைப் பற்றியும், அதில் உறைந்து திருவருள் புரிந்து வரும் அருள்மிகு நிஷ்களங்க மகாதேவர் பற்றியும் கேள்விப்படுவது இதுவே முதல் முறையாகும். பல இயற்கைப் பேரிடர்களால் நிலம், கடலாகவும், கடல் நிலமாகவும், மலை மடுவாகவும்,
மடு மலையாகவும் மாறியுள்ளன. அவற்றில் அமைந்திருந்த திருக்கோயில்களும் அந்த மாற்றத்தில் மறைந்துபோய் உள்ளன. ஆனால் நிஷ்களங்க மகாதேவர் திருவிடம் மட்டும் எந்தவிதமான பேரிடர்பாடுகளாலும் மாறவில்லை, மறையவில்லை. எப்படி எதை வைத்துக் கட்டியுள்ளனர்? யாரால், எப்பொழுது கட்டப்பட்டது? நிலை இல்லாத
ஒன்று என்றால் அது கடல் தானே? அதற்குள் நிரந்தரமான கோயிலா? நம்ப முடியவில்லை தானே? மண்ணாலும், கல்லாலும், மலை மீதும், மலையைக் குடைந்தும், குகைக்குள்ளும், செங்கல், சுண்ணாம்பாலும் நிலத்தில் கோயில்கள் எழுப்பப்பட்டன. கடலுக்குள் கடலரசனே தனது அலைக்கரத்தால் மாலையிலிருந்து காலை வரைக்கும்
கோபுரம், விமானம், மதில்கள் என நித்தம் புத்தம் புதிதாகக் கட்டிக் காத்து வருகின்றான். திருமேனிகள் கடலுக்குள் தீவு திடல் போன்ற இடத்தில் பிரதிஷ்டையாகி உள்ளனர். இந்த திருக்கோயில் எங்கே உள்ளது? கடலுக்குள் சென்று எப்படி தரிசிப்பது? என்ற நியாயமான கேள்விகள் எழும். இந்திய திருநாட்டில்
குஜராத் மாநிலத்தில், அகமதாபாத் மாவட்டத்தில் பாவ்நகர் என்னும் ஊருக்கு அருகே கோலியாக் என்னும் கடற்கரை கிராமத்திலிருந்து சுமார் 1லு கி.மீ. தொலைவில் அரபிக்கடலின் நடுமத்தியில் அருள்மிகு நிஷ்களங்க மகாதேவர் (களங்கமற்றச் செய்யும் மகாதேவர்) திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்குச்
-சென்று எப்படி சுவாமியை தரிசிப்பது? கடவுள் கடலுக்குள் இருக்கின்றார் என்பது தெரிந்துவிட்டது. இப்பொழுது கேள்வி அவர் கண்ணுக்குத் தெரிவாரா? நம்மை மீறிய சக்தியை நாம் உணரமுடியுமா? நேரடியாகவே அனுபவிக்கவே போகின்றீர்கள். போகலாமா? அகமதாபாத்திலிருந்து பாவ்நகர் சாலை வழியே 176 கி.மீ.
தொலைவிலும் ரயில் பயணத்தின் மூலம் 229 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. பாவ்நகரிலிருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் கோலியாக் கடற்கரை கிராமம் அமைந்துள்ளது கடற்கரையிலிருந்து 1லு கி.மீ. கடலுக்குள் நடந்தால் கடவுளை தரிசித்த மெய்சிலிர்க்கும் அனுபவத்தைப் பெறலாம் நம்மைப் போலவே குழந்தைகள்
பெரியவர்கள், பசுமாடுகள் என ஒரு பெரிய கூட்டமே கடலை நோக்கியபடி தியானம் செய்தபடி நிற்கின்றனர். எதற்காக நிற்கின்றீர்கள்? எப்படி நாம் கடலுக்குள் போவது? என கூட்டத்திற்கு தலைமை தாங்கி நிற்கும் சிவாச்சாரியரிடம் பணிவுடன் வினவுகின்றோம் இந்தக் கடல் அலைகள் உள்வாங்கி நமக்கு
வழிவிடுவதற்காக காத்திருக்கின்றோம்.
தினமும் அதற்குரிய திதி வரும்பொழுது கடல் கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கி கோயிலுக்கு அப்பால் சென்று காத்திருக்கும். காலை 8 மணி அளவில் கடலரசன் நமக்கு வழிவிடுவான். மறுபடி சமுத்திரராஜன் 7 மணி அளவில் கோயிலை மூழ்கடித்து கரை வரை வந்து விடுவான்
அதற்குள் நாம் கடலுக்குள் நடந்தே சென்று மகாதேவரை
வழிபட்டுவிட்டு வந்துவிட வேண்டும் தினமும்
இத்திருக்கோயிலில் பூஜையும் நடக்கின்றது என்றார் ஜன நெருக்கடியான நகர்புறத்தில் எத்தனை திருக்கோயில்கள் ஒருவேளை பூஜை கூட இன்றி இருப்பது நமது மனக்கண்முன் வந்து போனது திருக்கோயில் எங்கிருக்கின்றது
என்று நாம் கேட்க கடலுக்குள் தூரத்தில் பறக்கும் இரண்டு கொடிகளைக் காட்டி ‘‘அங்குதான் கோயில் உள்ளது. அவைகளே கோயிலின் கொடி கம்பங்கள்’’ என்றார். ஆழ்கடலுக்குள் அனுதினமும் ஆண்டவர் பூஜையை ஏற்றுக் கொண்டு மந்திர ஓசையும், மணி ஓசையும் எழுப்ப அனுமதிக்கின்றார் அதனை விரும்பி கடலும் வழிவிட்டு
ஒதுங்கி நிற்கின்றது வாருங்கள்! சிவபக்தர்களே! நம்மை நிஷ்களங்க மகாதேவர் அழைக்கின்றார் என சிவாச்சாரியார் பக்திப் பெருக்கில் அழைப்பது கேட்கின்றது கடல் அலை கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கத் தொடங்குகின்றது. பக்தர்கள் தங்கள் கையில் வைத்திருந்த தேங்காய்களை மறையும் அலைகளுக்குள் ஹர ஹர மகாதேவா
என கோஷமிட்டவாறு வீசி எறிந்தனர். அனைவரும் குஜராத் அரசு கட்டாயமாக அணிய வேண்டும் என நிர்பந்தித்திருந்த மிதவை ஜாக்கெட்டுகளை அணிந்து சிவாச்சாரி கடலுக்குள் நடக்கத் தொடங்க, அவரைப் பின் தொடர்ந்து கடலுக்குள் நடக்கத் தொடங்குகின்றோம்.
நடையாது நீர் மேல் நடப்பதைக் கேள்விப்பட்டிருப்போம்
தணல் மேல் நடப்பதைப் பார்த்திருப்போம் கனகுளிகைகளைச் சாப்பிட்டு விட்டு கண்ணுக்குத் தெரியாமல் சித்தர்கள் வான்வெளியில் பறப்பதை அறிந்திருப்போம் 300 அடி ஆழக்கடலுக்குள் நாம் நடக்கின்றோம் அதுவும் நாம் போவதோ நடுக்கடலுக்கு கற்றூணைக் கட்டி கடலுக்குள் பாய்ச்சினாலும்
நற்றுணையாவது நமச்சிவாயமே
விழுந்து, எழுந்து பிரம்ம பிரயத்தனப்பட்டுச் சென்றாலும், இன்னும் சற்று தொலைவில் கடவுள் கண்ணுக்குத் தெரியப் போகின்றார் என்ற நினைப்பில் அனைவரும் பரவசத்தோடு போகின்றோம். இதோ! அரபிக் கடலுக்குள் ஓர் அதிசய சிவாலயத்தைக் கண்டு கொண்டோம். மணல் திட்டின் மேல் பலகைக் கற்கள் பரவப்பட்டுள்ளன
அனைவரும் பாண்டவர்கள் உருவாக்கிய தித்திக்கும் சுனை நீரில் கை, கால், முகத்தினை கழுவிக் கொண்டு தூரத்தில் இருந்து கொடிகள் மட்டுமே தெரிந்த பிரம்மாண்டமான கொடி கம்பங்களைக் கண்டோம். இந்தக் கொடி கம்பத்தில் சிவராத்திரி அன்று 2900 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணபிரான், பாண்டவர்களுக்கு கொடுத்த
தெய்வீகக் கொடி கட்டப் பெற்றது.
இக்கொடியை வருடம் ஒரு முறை கோயில் திருவிழாவின் பொழுது பாவ்நகர் மகாராஜா புதிதாக ஏற்றுவார். இக்கொடி இதுவரை ஒரு முறை கூட அறுந்து விழவில்லை. பறந்து போகவில்லை என்றனர். மற்றோர் கொடி மரத்தின் மாடப் புறைக்குள் சிவபெருமானின் திருமேனி பிரதிஷ்டை ஆகியுள்ளார்
கொடி மரத்திற்குள் ஐந்து சிவலிங்கங்கள் பிரதிஷ்டை ஆகியுள்ளனர். மேலே ஐந்து சிவலிங்கங்கள் ஆங்காங்கே நந்திதேவருடன் பிரதிஷ்டை ஆகியுள்ளனர். ஆங்காங்கே திரிசூலங்கள் நடப்பட்டுள்ளன பழமையான விநாயகர் திருமேனியும் திருக்காட்சி நல்குகின்றது கோயிலுக்குள் வந்த நம்மை பெரும் வியப்பில் ஆழ்த்துவது
கரையில் நின்று பக்தர்கள் வீசி எறிந்த தேங்காய்கள் சிவலிங்கங்களுடன் காந்தத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் இரும்புத் துண்டுகள் போல ஒட்டிக் கொண்டு இருப்பதுதான் அதிசயம் ஆகும் அருள்மிகு நிஷ்களங்க மகாதேவர், நமது பாவக்கறைகளை, களங்களைப் போக்கி சோகங்களைத் துடைத்து எறிகின்றார் உப்பு நீர்க்கூட
சர்க்கரை போல இனிப்பதும், அன்று கண்ட திருமேனிகள் அழியாமல் இருப்பதும், ஆழி வழி விடுவதும், கடலில் போட்டால் எந்த ஒரு பொருளும் கரை ஒதுங்கும். அதற்கு மாறாக பக்தர்கள் சமர்ப்பித்த தேங்காய்கள் அர்ப்பணம் ஆகியிருப்பதும் மந்திர ஓசை கடலுக்குள் ஒளிப்பதும் அறிவியலுக்கே பெரும் சவாலாக அமைகின்றது
எந்த ஒரு ஆய்வும் விளக்க முடியாத ஆன்மிக நிகழ்வுகள். மார்ச் முதல் ஜூலை வரை இங்கு செல்ல உகந்த நாட்களாக அமைகின்றன. கடலுக்குள் இருக்கும் இறைசக்தியை விட கரை மேல் நிற்பவர்கள் நம்பிக்கை அளவு கடந்து உள்ளது
நன்றி @Pvd5888
சிவ சிவ 🙏🙏🙏
சிவாயநம 🙏🙏🙏
#உடலில்_உள்ள குண்டலினி சக்தி பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொண்டால் அற்புதச் சித்திகள் கிடைக்கின்றன. பயிற்சியால் பிரபஞ்சக் குண்டலினிக்கும் மேலாகிய பராசக்தியுடன் தொடர்பு ஏற்பட்டு பரமசிவத்திடம் தொடர்பு கொள்ள முடியும். #மந்திரங்களையும், உணர்வுகளையும்
சிகப்பு நிற ஒளி ஆகியவை நாபியிலிருந்து உச்சந்தலைவரையும் அதற்கு மேலும் செல்ல முயற்சிப்பதால் பிராணசக்தி- குண்டலினி சக்தி நாடிகளில் ஏறி உடல் முழுவதும் பரவுவதே தியானத்தின் உச்சமாகும். காலை உதயம், நண்பகல், மாலை அத்தமனம், இரவு படுக்கைக்கு முன் ஆகிய காலங்களில் தியானம் செய்வது
குண்டலினியும் உள் ஒளியையும் தூண்டும் #தியானத்திற்கு தன்னுடைய ஆத்மாவையோ, காணும் ஒரு வடிவையோ, கடவுளையோ மையமாக வைத்து தியானம் செய்து பழகவேண்டும். தியானம் செய்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒர் நேர்கோட்டில் நெருங்கி வந்து சிவமும் யோகியும் ஒன்றாக இனைவார்கள்.
பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார்.
அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார்.
அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார்.
தாயார் உடலுக்குத் தீ மூட்டும் முன் அவர் உருகிப்பாடிய பாட்டைக் கேட்டால் கல் மனம் கொண்டவர்கள் கூட
மனம் கசிந்து அழுது விடுவார்கள்.
அந்தப் பாடல்கள் பின் வருமாறு..
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே