ஈழ ஏதிலி முகாம்கள் குறித்து ஸ்டாலின் அறிவித்துள்ளவை தொடர்பாக:
கேள்வி 1: ஆகஸ்டு 13 அன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்காமல் ஆகஸ்டு 27 அன்று 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட வேண்டிய அவசியமென்ன?
கேள்வி 2: 110 விதியின் கீழ் இதுவரை அறிவிக்கப்பட்ட திட்டங்கள் முறையான
பட்ஜெட்டி திட்டமிடல் இல்லாததல், நிதி முழுமையாக ஒதுக்கப்படாததால் செயல்பாட்டிற்கு வரவில்லையென முன்பு பேசிய கருணாநிதி, ஸ்டாலின் தாம் ஆட்சிக்கு வந்தவுடன் அதனையே செய்வது ஏன்?
கேள்வி 3: 110 விதி என்பது பொது முக்கியத்துவம் வாய்ந்த அவசர கால அறிவிப்புக்காக என்ற பெயரில் எவ்வித விவாதமும்,
கேள்வி பதில்களும் இன்றி சனநாயகத்திற்கு முரணான ஒரு நடைமுறையாக இருப்பதால் அதன் கீழ் ஸ்டாலின் அறிவிப்புகளை ஏன் வெளியிடுகிறார்?
கேள்வி 4: 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் 'சட்ட விரோதக் குடியேறிகள்'ஆக முகாம்களில் கொடுமையான சூழலில் அடைக்கப்பட்டுள்ளது திடீரென இந்த 10 நாட்கள்
இடைவெளியில் தான் ஸ்டாலினுக்கு தெரிந்ததா?
கேள்வி 5: திருச்சி சிறப்பு முகாமில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் தங்களை விடுவிக்கக் கோரி நடத்திவரும் தொடர் உண்ணாவிரதம், தற்கொலை முயற்சி இவற்றை மடைமாற்ற ஸ்டாலின் எடுத்த யுக்தியா இந்த 110 விதியின் கீழான அறிவிப்பு?
கேள்வி 6: திமுக சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், விசிக வன்னியரசு 2 நாளைக்கு முன்னர் சிறப்பு ஏதிலிகள் முகாமை மாநில அரசு மூடக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியது ஸ்டாலினுக்கு தெரியாதா?
கேள்வி 7: சிறப்பு முகாமில் உள்ளவர்கள் மீதான வழக்குகள் முடிக்கப்பட்டு அவர்கள் இலங்கைக்கு திரும்ப அனுப்பி
வைக்கப்படுவார்கள் என ஸ்டாலின் அறிவித்திருப்பது எதன் அடிப்படையில்? அவர்களின் விருப்பத்தை அறியாமல் ஏன் இப்படி குழப்ப வேண்டும்?
கேள்வி 8: பல பேர் மீது பொய் வழக்குகள், தண்டனை முடிந்தும், விசாரணை இன்றியும் பல ஆண்டுகளாக உள்ளே முறைகேடாக அடைத்து வைத்திருக்கிற சூழலில் சிறப்பு முகாமில்
உள்ளவர்களை வெளியே விடுவதிலோ, அந்த முகாமை நிரந்தரமாக மூடுவதிலோ என்ன தடை இருக்கிறது? தடுப்பது எது என்பது குறித்து ஸ்டாலின் ஏன் வெளிப்படையாக பேசவில்லை?
கேள்வி 9: இங்கு வாழும் ஈழத்தமிழர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளி தமிழர்களாக இருப்பதாலும், பெரும்பாலானோர் இந்திய குடியுரிமையை
கோருவதாலும் அதனை தனித்த வேலைப்பாடாக முன்னிறுத்தாது அவர்களை இலங்கைக்கு அனுப்புவதை குறித்து ஆராய்வதை அமைக்கப்படும் குழுவின் வேலையாக சேர்த்திருப்பது குடியுரிமை கோரிக்கையை மலுங்கடிக்கவா?
கேள்வி 10: 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு என்ன?
கேள்வி 11: அமைக்கப்பட இருக்கும் குழுவின் செயல் திட்டங்கள், காலக்கெடு என்ன?
கேள்வி 12: குடியுரிமை பெற்றுத் தருவதற்கான செயல்திட்டம், காலக்கெடு என்ன?
கேள்வி 13: திபெத்திய ஏதிலிகளுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் பாகுபாடு காட்டுவது குறித்து ஏன் ஸ்டாலின் பேசவில்லை?
கேள்வி 14: சிறப்பு முகாம்களைத் தொடர்ந்து இயக்குவது, விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டிப்பது, சோனியா காந்தி குடும்பத்திற்கு விடுதலைப்புலிகளால் அச்சுறுத்தல் இருக்கிறதென கூறிய திமுக இவை மூன்றிற்கும் தொடர்பு இருக்கிறதா?
கேள்வி 15: திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள
ஈழத்தமிழர்களிடையேயான பொதுவாக்கெடுப்பு குறித்து இதுவரை ஸ்டாலின் வாய் திறக்காமல் இருப்பது ஏன்? சட்டசபையில் இது குறித்து ஏன் பேசவில்லை?
கேள்வி 16: ஏதிலி முகாம்களின் பெயர் பலகையை மாற்றிவிட்டால் எல்லாம் மாறிவிடும் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க முனைகிறாரா ஸ்டாலின்?
கேள்வி 17: ஈழத்தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது குறித்து பேசும் ஸ்டாலின் அவர்களின் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதத்தை கொடுத்தாரா? திரும்பி செல்பவர்களுக்கான சிறப்பு திட்டங்களை இலங்கை அரசுடன் பேசி அறிவித்துள்ளாரா? அதனை முகாம்களில் வாழும் ஈழத்தமிழர்கள் ஏற்றுக்கொண்டனரா?
கேள்வி 18: ஈழத்தமிழர்களை பலி வாங்க 1999-இல் கருணாநிதி முதன்முதலில் தொடங்கி வைத்த இந்த சித்திரவதை சிறப்பு முகாம்களை மூடுவது குறித்தான கோரிக்கைகள் உலகத் தமிழர்களிடையே பேசப்பட்டு வரும் நேரத்தில் அதனை செய்யாது யாரை ஏமாற்ற இந்த 110 விதியின் கீழான அறிவிப்பு ஸ்டாலின்?
வாங்கோ கதைப்போம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தொழிலாளர் தினத்தில் கூட மோசடித்தனம் செய்யும் திமுக!
இந்தியாவில் முதன்முதலில் தொழிற்சங்கத் தலைவர் சிங்காரவேலர் தலைமையில் 1923 ல் சென்னை மெரீனா கடற்கரையில் மே 1 தொழிலாளர் தினம் அனுசரிக்கப்பட்டது.
1957 ஏப்ரல் 15ல் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலான கேரள கம்யூனிச அரசு மே 1 ஐ
முதன்முதலில் விடுமுறை தினமாக அறிவித்ததைத் தொடர்ந்து 1967 ல் ஜோதிபாசு அங்கம் வகித்த மேற்கு வங்க கம்யூனிச கூட்டணி அரசும் மே 1 ஐ விடுமுறை தினமாக அறிவித்தது.
1920 ல் தமிழ்நாட்டில் (அன்றைய சென்னை மாகாணத்தில்) தொழிலாளர் நலத்துறை உருவாக்கப்பட்டது.
1937 களில் ராஜாஜி, 1946 களில் டி.பிரகாசம் ஆகியோரது தலைமையிலான அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக தொழிற்சங்கவாதியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான வி.வி.கிரி இருந்துள்ளார். 1960 களில் பக்தவச்சலம் தலைமையிலான அரசில் கக்கனும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்திருக்கிறார்.
தொழிலாளர்கள் நல தினமான இன்று அதற்கு வாழ்த்தும், வீர வசனங்களும் பேசும் முன் @mkstalin உள்ளிட்ட ஒவ்வொரு உடன்பிறப்புகளும் இதனைப் படித்து விட்டு (ஆதாரங்களுடன்) அதற்கான அருகதை தங்களுக்கு இருக்கிறதா என்பதை யோசித்தி விட்டு பிறகு வாய் திறக்கவும்!
திமுக தலைவர் ஸ்டாலினின் தொழிலாளர்
நலச்சட்டங்கள் குறித்த வீர வசனங்களில் சில இங்கே:-
"தொழிலாளர்கள் நலனுக்கு விரோதமான சட்டங்களை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவரும் திமுக, தொழிலாளர்களின் உரிமைகளுக்கும், நலனுக்கும் “கேடயமும், போர்வாளாகவும்” திமுக எப்போதும் திகழும் என்று
இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்." (மே-2021)
"முதலாளிகளை மட்டுமே மனதில் கொண்டு, அவர்கள் மேலும் மேலும் கொழிக்கும்படி வளர்க்கவும், முழு நேரமும் பாடுபடும் தொழிலாளர்களைத் தொடர்ந்து வஞ்சிக்கவுமான செயலில் மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசு ஈடுபட்டு, ஏற்கெனவே தொழிலாளர்களின்
எனதருமை திமுக உடன்பிறப்புகளுக்காக..
(கட்டாயம் முழுமையா படிங்க, பிறகு யோசிங்க)
NIA சுருக்கமாக: UAPA போன்ற சிறப்பு சட்டங்களின் கீழ் வரும் பயங்கரவாத குற்றங்களை விசாரிக்கும் ஒன்றிய அரசின் அமைப்பு
கொண்டு வந்தது: 2008, காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு
பாஜக திருத்தம்: NIA அதிகாரிகளுக்கு மாநில காவல்துறையினருக்கு இணையான அதிகாரத்தைக் கொடுத்தல், இணைய தள தீவிரவாதம் உள்ளிட்டவை பட்டியலில் சேர்ப்பு, வெளிநாடுகளில் நடைபெறுவதை இந்தியாவில் நடைபெற்றதாகக் கருதி விசாரிக்கும் அதிகாரம், வெளிநாட்டினரை விசாரிக்கும் அதிகாரம்,
நாடு முழுவதும் இதற்கான சிறப்பு நீதிமன்றங்களை அமைத்துக் கொள்ள அதிகாரம்
UAPA சுருக்கமாக: இந்திய இறையாண்மைக்கு, ஒற்றுமைக்கு எதிராக செயல்படுபவர்களை ஒடுக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டம்
கொண்டு வந்தது: 1967, காங்கிரஸ் அரசு
பாஜக திருத்தம்: எந்த ஒரு தனி மனிதனையும் விசாரணைக்கு முன்பே
கோவிஷீல்டு தடுப்பூசி:
ஒன்றிய அரசுக்கு - ரூ.150
மாநில அரசுக்கு -ரூ. 400
தனியார் மருத்துவமனைக்கு - ரூ.600
கோவாக்ஷின் தடுப்பூசி:
ஒன்றிய அரசுக்கு - ரூ.150
மாநில அரசுக்கு -ரூ. 600
தனியார் மருத்துவமனைக்கு - ரூ.1200 #BJPVaccineScam
இதுபோக அந்நிறுவனங்களுக்கு முதலீடாக ரூ. 4,500 கோடி மக்கள் பணத்தை பாஜக அரசு கொடுத்துள்ளது!
இந்தியாவில் 45 வயதிற்கு கீழே இருப்பவர்கள் 101 கோடி. அவர்களுக்கு 2 முறை போட வெடுமென்றால் 202 கோடி தடுப்பூசி தேவை. இதனை தனி நபர்களோ அல்லது மாநில அரசுகளோ #BJPVaccineScam
அந்நிறுவனங்களிடம் நேரடியாக காசு கொடுத்து வாங்கிப் பயன்படுத்த வேண்டுமென பாஜக அரசு தெரிவித்துள்ளது.
இதில் 50% மாநில அரசுகளே பணம் கொடுத்து வாங்கி மக்களுக்கு இலவசமாகத் தருமென வைத்துக் கொண்டாலும் அந்த கணக்குப்படி கிட்டத்தட்ட #BJPVaccineScam
திமுக பாராளுமன்ற உறுப்பினர் @DrSenthil_MDRD தான் உள்ளிட்ட திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் NIAக்கு ஆதரவாக வாக்களித்ததற்கு காரணங்களாகச் சொன்ன பொய்கள் ஆதாரங்களுடன்.. 1. திடீரென கொண்டு வரப்பட்ட மசோதா 2. போதிய நேரமின்மையால் உறுப்பினர்களுடன் பேச முடியவில்லை 3. தலைவருடன் பேச நேரமில்லை
4. அவசரத்தில் புரிதலில்லாமல் எடுத்த முடிவு 5. காங்கிரசோடு கூட்டணி என்பதாலும், முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த சட்டமென்பதாலும் காங்கிரஸ் எடுத்த முடிவோடு போக வேண்டிய நிலை
@DrSenthil_MDRD கூறிய மேற்கண்ட ஐந்தும் பொய்யென நிரூபிக்கும் ஆதாரங்கள்:
(பாராளுமன்ற ஆவணங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஆதாரங்கள் இணைப்புகளுடன் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன)
பாராளுமன்ற மக்களவையில்,
NIA மசோதா அறிமுகம் செய்யப்பட்ட தேதி: 08-07-2019
NIA மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்ட தேதி: 15-07-2019
வாக்கெடுப்பிற்கு முன் திரு. ஆ.ராசா 5 பக்க அளவிற்கு மசோதா
திமுக பாராளுமன்ற உறுப்பினர் @DrSenthil_MDRD அவர்களின் புரிதலுக்காக 09/12/2019 அன்றைய (பிற்பகல்-இரவு) பாராளுமன்ற நடைமுறைகள்: (பாராளுமன்ற ஆவணங்களின் அடிப்படையில்)
நேரம்12.12 :
126வது அரசியல் சாசன சட்டத் திருத்த மசோதா அறிமுகம்
நேரம்12.18 :
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா அறிமுகம்
நேரம்12.32 :
CAB மசோதா அறிமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து TR பாலு உள்ளிட்ட உறுப்பினர்கள் வெளிநடப்பு
நேரம் 12.32 ~1.34:
CAB மசோதா அறிமுகத்திற்கு எதிராக உறுப்பினர்களின் காரசார விவாதம்
நேரம் 1.34 :
CAB மசோதா அறிமுகத்திற்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர் அதிர் ரஞ்சன் சவுத்ரியின் கோரிக்கையை ஏற்று நடந்த டிவிஷன் (சீட்டு/இயந்திர பயன்படுத்தி) வாக்கெடுப்பு தோல்வி (293-82)
நேரம் 1.40 :
கடற்கொள்ளை தடுப்பு மசோதா அறிமுகம்
நேரம்1.49 :
விதி 377 ன் கீழ் உறுப்பினர்களின்