எந்த நாட்டிலும் நம்பொணாக் கதைகள் உண்டு
அது போல் இங்குமுண்டு
இதை உணராது...
பூதேவர்களின் புராணாதிகளை அலசிக்காட்டுகிறாயே ...
அவைகளின் ஆபாசங்களை எடுத்துத் தீட்டிக் காட்டுகிறாயே...
யாரப்பா அவைகளிலே உள்ள கதையை மதிப்பவர்?
அந்தக் காலம் மலையேறி விட்டது
- #கம்பரசம்
இப்போது இலக்கியங்களிலே உள்ள "ரசம்" இருக்கிறதே...
அதைத்தான் பருகி இன்புறுகிறோம்!
அதிலும் #கம்பரசம் பருகப் பருக இனிக்குமப்பா
பரதா! நீயும் ஒரு டோஸ் சாப்பிட்டால் தெரியும் அதன் அருமை பெருமை
உணர்ச்சி... உற்சாகம்... எழுச்சியாகவும் உன் உள்ளத்தில் பொங்கும்
"கலா ரசிகனாக வேண்டும் என்றால் #கம்பரசம் பருக வேண்டும்" என்று இலக்கியங் கற்ற இன்சொல் நண்பரொருவர் எனக்கு உபதேசித்தார் கனிவுடன்
என் தோழர், இராமாயணத்திலே இருப்பது கம்பரசம், அதைச் சாப்பிட வேண்டும் என்று எனக்கு உரைத்தார்.
நான் ஒரு டோஸ் உள்ளுக்குள் செலுத்தினேன். ஆமாம் கம்பரசத்தைத்தான்
ஆனால் அவர்கள் இதுவரை எனக்கு சூட்சமத்தை விளக்கிடவில்லை
‘இராமன் வீர உரையைக் கம்பன் தீட்டுவது பார்!
இயற்கையின் எழிலை அப்படியே எடுத்துக்காட்டும் திறத்தைக் கவனி!
உவமைகள் தரும் உல்லாசத்தை உணரு’ என்று கூறி வந்தார்களே தவிர உண்மைக் #கம்பரசம் இதுவென்று கூறினதில்லை
நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற பெருநோக்கின்றி எதை எதையோ எழில் என்று கூறி வந்தார்கள்... எழுதி வந்தார்கள்
உண்மையை உரைத்திடவில்லை
என் நண்பர் மட்டும் எனக்கு உண்மையை உணர்த்திடாது போயிருப்பின்... நினைத்தாலே கவலை மேலிடுகிறது
அவர் எனக்கு எடுத்துக்காட்டிய கம்பரசத்தின் #முதல்டோஸ் மட்டுமே இன்று கூறுகிறேன் பிற பிறகு!
“போக்கிரிப்பயலே!
இப்படி விறைத்து விறைத்துப் பார்ப்பதா பெண்களை?
மங்கையர் செல்வதை இமை கொட்டாது பார்க்கிறாயே உனக்கு அறிவு இல்லையா?
அணங்குகளின் இடை காற்றினால் நெகிழ்ந்து விடும்
-#கம்பரசம்
நடையினால் நங்கையரின் மேலாடை இடம் பெயரும்
நீ முறைத்துப் பார்த்தபடி இருக்கலாமா? காமப்பித்தனே!”
என்று இன்று மிகச் சாதாரணத் தெளிவு பெற்றவர்களும், பெண்ணைக் கண்டால், இளித்துப்பார்க்கும் இயல்பினரை இடித்துரைப்பர்
“அவள் போய்க் கொண்டிருந்தாள்...
நான் அவளைப் பார்த்துக்கொண்டே உடன் சென்றேன்...
அவளோ அழகான ஆடையால் தன்னை முழுவதும் போர்த்துக் கொண்டிருந்தாள்... பிறகு ஒரு பெருங்காற்றடித்தது ஆடை…”
...என்று எவனாவது ஒரு காமுகன், தன் நண்பனிடம் கூறினாலும்,
“போதும் நிறுத்தடா, யார் காதிலாவது விழப்போகிறது” என்று மற்றவன் கூறுவான்.
இது சாதாரண மக்கள் வாழுமிடத்து இயல்பு!
அவ்வளவு சிரேஷ்டமான நகர மக்களின் நினைப்பும், நடவடிக்கையும் அதிலும் அரண்மனையிலேயே உள்ளவர்கள், அரச குடும்பத்தினராகியவர்களின் நினைப்பும் எப்படி இருக்கும்?”
-#கம்பரசம்
என்மீது சீறுமுன், கலாரசிகர்கள் நான் கூறுவதைப் பொறுமையுடன் கேட்க வேண்டுகிறேன்
தம்முடன் வரும் அணங்குகள் ஆடை அணிந்திருப்பதால் அவர்தம் அல்குல் வெளியே தெரியவில்லையே என்று ஏங்கிக் கிடந்து, பின்னர் தெரிந்ததும் கண்டேன், கண்டேன், களிகொண்டேன் என்று கருதிரும் மக்களை என்னவென்று கூறுவீர்கள்?
கடையர், காமப்பித்தர் என்று கடிந்துரைக்க மாட்டீர்களா?
மங்கையரை விறைத்துப்பார்ப்பதே மனிதத் தன்மையாகாது, மடத்தனம் என்று கூறுவீர்! மங்கையரின் மறைவிடம் வெளியே தெரியக் காணோமே என்று மனச் சோர்வு கொண்டு அது தெரிந்ததும் அகமகிழ்ந்தனராம் அரி அவதாரமான அயோத்திவாழ் மக்கள் அதிலும் அரண்மனையினர்
“சுத்தப்பொய்
அயோத்தி மக்கள் அவ்விதமாக இருந்திருக்க முடியாது
பெண்ணைத் தெய்வமாகக் கருதும் பெருந்தகைமையினர்” என்று கூறிச் சீறிடுவர் சிலர்
அவர்களை “இராமன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு” கம்பராமாயணம், அயோத்தியா காண்டம், குகப்படலம் 56 ஆவது செய்யுளைப் பார்க்க அழைக்கின்றேன்!
-#கம்பரசம்
மெல்தூசு உயல் உறு பரவை அல்குல், ஒளிப்புறத்தளிப்ப – (அல்குல்) ஒளியானது வெளியே தோன்ற விசாரமடைந்திருந்த வீரர்கள்...
மெல்லிய ஆடைக்குள்ளே கிடந்த பெரிய மறைவிடத்தின் ஒளியானது வெளியே தெரியக்கண்டு, துயரம் நீங்கப் பெற்றனர் என்பது கவியின் கூற்று!
-#கம்பரசம்
ஆனால், மறைந்து கிடந்தது வெளியே தெரிய மாயம் என்ன? கவி கூறுவது கேண்மின்!
இயல்வுறு செலவின் நாவாய் – பொருந்திய மிக வேகத்தை உடைய நாவாய்களின் (அதாவது பெரியபடகுகளின்),
இருகையும் – இருபக்கத்தும்,
எயினர் தூண்ட – வேடர் உந்துதலால்,
துயல்வன – அசைவனவாகிய,
துடுப்பு – துடுப்புகளால்,
-#கம்பரசம்
வீசும் – எறியப்படுவனவாகிய,
துவலைகள் – நீர்த்துளிகள்,
மகளிர் – மாதர்களுடைய
மெல்தூசு – மெல்லிய ஆடையில்
உயல் உறு – தங்கி மறைகின்ற,
பரவை அல்குல் ஒளிப்புறத்து அளிப்ப – பரந்தமறைவிடத்து ஒளியை வெளியே தோன்றச்செய்ய
பதவுரையை மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு பொழிப்புரையைப் பார்க்க வாருங்கள்.
மிகவேகமாகச் செல்லும் பெரிய படகுகளின் இருபக்கத்திலும் வேடர் துடுப்புகொண்டு நீரைத்தள்ள...
நீர்த்திவலை மேலெழும்பி ஓடத்திலேறி...
மாதரின் மெல்லியஆடையை நனைத்ததால்...
அவ்வாடைக்குள்ளே மறைந்து கிடந்த பெரிய அல்குலின் ஒளி வெளியே தெரியலாயிற்று
-#கம்பரசம்
படகுகளிலே இருந்த வீரர்களின் மனச் சோர்வு அந்தக்காட்சியைக் கண்டதால் நீங்கிற்று!
எப்படி இருக்கிறது தோழர்களே அயோத்தி மக்களின் அறிவு?
ஓடத்தில் உடனிருக்கும் மாதரின் ஆடை நனைந்து மறைவிடம் வெளியே தெரிய வந்து சோகம் நீங்கினராம்
என்ன மாண்பு
எவ்வளவு அறிவு
எத்தகைய யோக்கியர்களப்பா இவர்கள்
ஓடத்திலே சென்றவர் தசரதன் திருமனைவியர் அவர்தம் பாங்கியர்!
ஆடவரோ பரதன், அவன் படையினர்!
அரச குடும்பம் ஓடமேறிச் சென்றதன் வர்ணனை!
அதிலே இந்த ஆபாசரசம்!
அதிலும் எதற்குச் சென்றனர்? கானகத்தும் காட்சி கண்டு களிக்கவா? வேட்டையாடி விருந்து சமைக்கவா? அல்ல அல்ல
மறைவிடத்தின் மாண்பு விளக்கமாம் இக்கவிதை தருவது போன்ற #கம்பரசம் மக்கட்குத் தேவைதானா?
நெஞ்சிலே கைவைத்துப் பதில் கூறுங்கள்
நேரப்போக்குக்கோ நரம்பு முறுக்குக்கோ பஞ்சணைப் பேச்சுக்கோ பாவையர் கண் வீச்சுக்கோ கண்டதால் உண்டான மன நெகிழ்ச்சிக்கோ காமரசக் கவிதை தேவையாக இருக்கலாம்
-#கம்பரசம்
அதுவும் "தொந்தி சரிய மயிரே வெளிர நிறை தந்த மசைய உடலே" கொண்ட பருவத்தினருக்குக் கடவுள் திருஅவதாரக் கதைக்கு இத்தகைய செய்யுள் தேவையா?
இவ்விதமான காமச்சுவையை உண்ட மயக்கமே...
பலரை கம்ப இராமாயணத்தைக் காப்பாற்றித் தீர வேண்டும் என்ற மதுகை மைந்தராக்கிவிட்டது என்று எண்ணுகிறேன்
- #அண்ணாதுரை (#கம்பரசம்)
#டோஸ்2
அயோத்தி நாட்டு மதுகை மைந்தர்கள், மது மைந்தர்களைவிடக் கேவலமான மனப்பான்மையினராக இருந்தது பற்றிக் கம்பரசம் என்பது கேவலம் காமரசமாக இருப்பதை எடுத்தும் காட்டினேன்
- #கம்பரசம்
ஒரு காலத்தில் சோமரசம் குடித்துக் கூத்தாடிக் கிடந்த ஆரியருக்கு ஆதிக்கம் வந்ததன் காரணம், இவ்விதமான மனப்பான்மை கொண்ட புலவர்களின் துணை கொண்டு, தமிழரின் நெஞ்சிலே ஆதிநாள் ஆரியர் நஞ்சு புகுத்தியது
அதன் விளைவுதான் இந்நாள் ஆரியரின் ஆதிக்கம் ஆணிவேருடன் தழைத்திருப்பது
-#கம்பரசம்
இந்த ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமானால் கம்பரசத்தின் சுவையிலே சொக்கும் சல்லாபிகளாக நம்மவர் இருத்தலாகாது. தித்திப்பான பண்டத்தினுள்ளே தீங்கான போதையை வைத்துக் கொடுப்பது போல, கலை, காவியம் என்ற இனிப்புடன் சேர்த்து ஆரியம் தரப்பட்டிருக்கிறது
-#கம்பரசம்
இதை உணராதார் ஊராருக்கு வந்துற்ற இடர்களைத் தெரியாதார் என்பேன்.
அவர்களின் நடைமுறையினைக் கண்டித்துப் பத்திரிக்கைகள் எழுதிடப் படிக்கிறோம். ‘ ’ஆமப்பா அவள் எந்தப் படத்திலே நடித்தாலும் ஆபாசமான காட்சிகளாகத்தான் இருக்கிறது’ என்று பேசுகிறோம்.
சினிமாக் கலையின் சீர்கேட்டைக் கண்டிக்கிறோம்
ஆனால் கம்பனின் கலையிலே தேங்கிக் கிடக்கும் காமரசத்தை கண்டிக்க முன்வர மறுக்கிறோம்…
நா கூசுகிறது…
நடுக்கம் பிறக்கிறது…
ஏன் இந்த ஓரவஞ்சனை?
முன்பின் கண்டதில்லை...
தூது விட்டதுமில்லை...
ஆனால் ரசவல்லிகளோ உல்லாசத்தை உவகையுடன் தந்து உரசி நின்று உபசரிக்கின்றனர்.
ஒரு பொருளும் கேட்டாரில்லை...
வலிய அணைந்த சுகமன்றோ சுகம்?
அதிலும் வக்கிரங்களல்ல, வகையிழந்த வயோதிகங்களுமல்ல, சரச குணா ஜெகன்மோகினிகளய்யா! வகை தரும் பருவமுள்ள மங்கையர்! வாசமலர் கூந்தலழகியர் அவர்கள் அருகேயழைத்து இருகை பற்றியிழுத்து மஞ்சத்தில் படுக்கவைத்துப் பக்கமேவி, படுபாவியாம் மதனன் விடுகணைகளைப் பொடி பொடியாக்கி விடுகிறார்கள்
-#கம்பரசம்
“பரதா எங்கேயப்பா, இத்தகைய ‘புண்யவதிகள்’ உள்ளனர்? இத்தகைய காமவல்லிகள், கருணாமூர்த்திகள், தியாகதேவிகள் எங்கே உள்ளனர்? இருந்து முகந்திருத்தி ஈரோடு பேன் வாங்கி எழுந்து வாயேண்டி இரவு மணி பத்தாச்சு!” என்று அழைத்தாலும்...
-#கம்பரசம்
கண்டதும் களிகொண்டு மதனன் மாளிகைக்கு அழைத்துச் செல்லும் ஆரணங்குகள் உள்ள அந்த போகபூமி எங்கேயிருக்கிறது எமக்குக் கூறு என்று கேட்கத் தோழர்கள் துடிப்பர்
-#கம்பரசம்
கலவியைக் கேட்குமுன் வழங்கும் இக்காரிகையர் வாழுமிடம் தெரியும். ஆனால் என் மொழியை அவர் கேளார்
அந்தக் கோலாகலக் கம்பெனியின் மானேஜிங் டைரக்டர் சாதாரண சாமான்ய பேர்வழியல்ல.
போகம் வழங்கும் பூவையர்க்கு, யோகம் செய்யும் முனிவரா ஏஜண்டு? இது எம்மால் நம்ப முடியவில்லையே, காமக் குரோதிகளை அடக்கும் ரிஷிசிரேஷ்டர் காமக்கூத்துக் கழகத்தின் நிர்வாகியா?
ஓமத் தீயை மூட்டி சாமவேதத்தைப் பாடிடும் சற்குணம், காமத்தீயை மூட்டி சரசகீதம் பாடிடும் மடந்தையர் மன்றத்திற்குத் தரகரா?
“சே! இது சுத்த தப்பு” என்று கூறுவீர்கள்
தயவுசெய்து நம்புங்கள் தோழர்களே! கூறிய அந்தக் ’குணவதிகளின் ’ கூட்டத்துக்கு பரத்துவாச மாமுனிவரே மானேஜிங் ஏஜண்டாக இருந்தார்!
அவர் அழைத்தார்!
அவர்கள் சதங்கை கொஞ்ச ஓடி வந்தனர்
அவர் பணித்தார்
முனிவரின் விருந்தினருக்கு அந்தச் சுந்தரிகள் மகிழ்வூட்டினர்
பர்ணசாலைகளிலே அல்ல! சாதாரண மாளிகைகளிலேயுமல்ல!
சந்திரமண்டலம் போன்ற தமது மாளிகைகளிலே!
சந்திரமண்டலம் வெறும் சுந்தரம் மிகுந்ததாக மட்டுமா இருக்கும்?
-#கம்பரசம்
சந்திரன் என்ன சாமான்யப் பேர்வழியா?
குருபத்தினியைக் கூடிய குணாளன்
அவனுடைய மண்டலம் போன்ற அழகும் காமமொழுகும் நெகிழும் இடம் அந்தச் சுந்தரிகளின் மந்திர மாளிகைகள்
இனிப் பொறுக்கமாட்டோம் பரதா!
எங்கே இருக்கிறது இந்த விபச்சார விடுதி? இதற்கும் பரத்துவாசருக்கும் என்ன சம்பந்தம்? நீ கூறிகிறபடி எப்போதாவது நடந்ததா?
அந்த அதிர்ஷ்டசாலிகள் யார்?
அந்த சம்பவம் நடந்தது உனக்கு எப்படித் தெரியும்?
என்று அடுக்கடுக்காகக் கேட்க வேண்டாம் தோழர்களே கூறிவிடுகிறேன்
இந்த விடுதி இருக்குமிடம் சுவர்க்கலோகம்
இதனை அனுபவித்தவர் அயோத்தியின் மதுகை மைந்தர்
இதை நடத்தி வைத்தவர் பரத்துவாச முனிவர்
இதை நான் தெரிந்து கொண்டதும் கம்பனின் கதையினால்
-#கம்பரசம்
கல்கத்தாவில் சில வீதிகளில் விபசாரிகள் தங்க, வீட்டு வசதிகளை அதிகாரிகள் ஏற்பாடு செய்து தந்து பட்டாளத்துக்காரர் விபசார வசதி பெற வழி செய்து தந்தனர் என்று ஓர் புகார் வெளிவந்தது
போகத்தைப் பணத்துக்குப் பெறும் பேர்வழிகள் பொது மகளிருடன் சம்பந்தங்கொள்ள இடமளிப்பது குற்றமன்று குடைந்த குணவான்களெவரும் பரத்துவாசர் யாரும் கேட்கா முன்பு, இந்த விபசார விடுதியை அமைத்துத் தந்தார் என்பதற்காக அவரைக் கண்டிக்க மாட்டார்கள்
நான் ஒரு கட்டுக்கதையுங் கூறவில்லை
கடவுள் திருஅவதாரக் கதையாம் இராமாயணத்தைக் கூறுகிறேன்
கம்பன் எழுதியது சாதாரண பேர்வழியின் சாரமற்ற கதையல்ல
சுவர்க்கலோகத்துச் சுந்தரிகள் பரதனுடன் வந்தோர்க்குச் சோடச உபசாரம் செய்தனர் என்று சொல்கிறார்
அதுவும் போதாது என்று அந்த மங்கையர் ஆடவரை பஞ்சணையிலே படுக்கையிலே படுக்கச் செய்து தாமும அவர் பக்கத்திலே படுத்து உறங்கினர் என்று கூறுகிறார் படியுங்கள் அப்பாடலை
அன்னத்தின் மெல்லிட சிறகு, இலவம் பஞ்சு, செம்பஞ்சு, மயில்தூவி, வெண்பஞ்சு ஆகிய இந்த ஐந்து பொருளினாலும் செய்யப்பட்ட மெத்தை விரிக்கப்பட்டிருந்ததாம் பஞ்சணையிலே
#கம்பரசம் காமரசம் என்பதை இப்பாடல் நன்கு விளக்கும் என்றாலும் அப்பாடலிலே அணங்குகள் தூங்கவே ஆடவரும் தூங்கினர் என்று முடிக்கிறாரே அதிலே தொக்கியுள்ள காமரசம் அட அடா சொல்ல முடியாது
இனிப் பதவுரையைப் பாருங்கள்
என் பொழிப்புரை தவறா என்பது தெரியும்
அஞ்சு அடுத்த அமளி – அன்னத்தூவி இலவம் பஞ்சு. செஞ்பஞ்சு, மயில் தூவி, வெண்பஞ்சு எனும் ஐந்து பொருள்களான படுக்கை மெத்தையிலே
அலத்தகம் பஞ்சு அடுத்த – செம்பஞ்சுக் குழம்பு ஊட்டப்பெற்ற
- #கம்பரசம்
பரிபுரம் பல்லவம் – சிலம்பணியை அணிந்த தளிர் போன்ற பாதங்களையும்
நஞ்சு அடுத்த நயனியர் – (காம நோயையூட்டும் காரணத்தால்) விஷம் போன்ற விழிகளையுமுடைய தேவமகளிர்
நவ்வியின் துஞ்ச – பெண் மான்கள் போல அருகிற் படுத்து உறங்க
ஒரு முனிவரின் விருந்து வைபவம் இவ்விதந்தான் இருக்க வேண்டுமா?
ஒரு அரசகுமாரனின் அவதியைப் போக்கச் சென்ற படை, வழியிலே இந்த “வேட்டை:யி லே ஈடுபடுவதா?
சுவர்க்கத்திற்குத்தான் இது யோக்கிதையா?
ரிஷிக்குத்தான் இது நியாயமா?
வீரருக்கு இது அழகா?
தமிழ்நாட்டில் கடந்த ஒரு நூற்றாண்டாக ஹிந்தி திணிப்பிற்கு நடந்துவரும் மொழிப்போரில் 30 ஆண்டுகாலம் தலைமை வகித்து வழி நடத்தியவர் அண்ணா #HBDAnna113
ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போர் 1947ல் முடிவுற்றது
ஆனால் திணிக்கப்படும் ஹிந்திக்கு எதிராக நடத்தப்படும் போர் 1937ல் தொடங்கியது...இன்றும் தீ எரிந்து கொண்டிருக்கிறது #HBDAnna113
இந்த மொழிப்போர் அரசாங்கத்துக்கு எதிரானது அல்ல
ஹிந்தி பேசும் வட மாநில மக்களுக்கு எதிரானதும் அல்ல
தமிழர்கள் மீது ஹிந்தியைத் திணிக்க பல காலகட்டங்களில் ஒன்றிய அரசு அமுல்படுத்திய சட்டங்களுக்கும் திட்டங்களுக்கும் எதிர்வினை மட்டுமே #HBDAnna113
1934,35,36 ம் ஆண்டுகளில் இந்தியை அவர்கள் ஆட்சிமொழி என்று அல்ல; இணைப்புமொழி என்றல்ல; தேசிய மொழி என்றழைத்தார்கள். இந்தத் தேசத்திற்கென்று ஒரு மொழி உண்டு. அதுதான் இந்தி; இந்தத் தேசத்திற்கு இருக்கத்தக்க தேசிய மொழி இந்திதான் என்று 1935 ல் அவர்கள் சொன்னார்கள்.
பெரியார் அவர்களின் போர் முறையின் தன்மை உங்களிலே பலருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் என்று கருதுகிறேன். அவர்கள் எதிரில் உள்ள படையை மட்டுமல்ல; முதலிலே அப்படைக்கு எங்கே மூலபலம் இருக்கிறது என்று கண்டுபிடித்து அந்த மூல பலத்தைத் தாக்குவது தான் அவருடைய போர் முறையாகும் #HBDAnna113
இந்தியைக் கொண்டு வந்தவர்கள் இந்தியைக் காப்பாற்றிக் கொள்ளக் கருதி தேசியத்தையும், இந்தியாவையும் உடைத்துவிடக் கூடாது என்று தேசியம்’ என்று சொல்லியதை மாற்றிக்கொண்டு, ‘இந்தியாவில் தேசிய மொழிகள் பதினான்கு இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்தி...
எலக்ட்ரிக்
ரயில்வே
மோட்டார்
கப்பல்
நீர்மூழ்கிக் கப்பல்
அதைக் கண்டுபிடிக்கும் கருவி
டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி
விஷப்புகை
அதைத் தடுக்கும் முகமூடி
இன்ஜக்ஷன் ஊசி
இனாகுலேஷன் ஊசி
இவைகளுக்கான மருந்து
ஆப்ரேஷன் ஆயுதங்கள்
தூரதிருஷ்டிக் கண்ணாடி
ரேடியோ
கிராமபோன்
டெலிபோன்
தந்தி
கம்பியில்லாத் தந்தி
போட்டோ மெஷின்
சினிமாப்படம் எடுக்கும் மெஷின்
விமானம்
ஆளில்லா விமானம்
டைப் மெஷின்
அச்சு யந்திரம்
ரசாயன சாமான்
புதிய உரம்
புதிய விவசாயக் கருவி
சுரங்கத்துக்கள் போகக் கருவி
மலை உச்சி ஏற மெஷின்
சந்திர மண்டலம் வரைபோக விமானம்
அணுவைப் பிளக்கும் மெஷின்
இன்னும், எண்ணற்ற, புதிய, பயன்தரும், மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகியவைகளைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், இன்னமும் கண்டுபிடிக்கும் வேலையிலே உடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் எல்லாம்,
சரஸ்வதி பூஜை
ஆயுத பூஜை
கொண்டாடாதவர்கள்!
"Do we need a big door for the big dog and a small door for the small dog? I say, let the small dog use the big door too!" ~ C. N. Annadurai #HBDAnna113
India is a continent and should be divided into separate nations. There is no need for a single government.
~ C. N. Annadurai #HBDAnna113
If Hindi were to become the official language of India, Hindi-speaking people will govern us.
We will be treated like third rate citizens
~ C. N. Annadurai #HBDAnna113
“எதிரே இருக்ககூடிய நபர் வேலுசாமியை தெரியுமா?” - நீதிபதி
[ஏளனமாக] “இவரை யார் என்றே எனக்குத் தெரியாது.” - சொன்னவர் யார்
“தெரியாதா? உங்கள் கட்சியில்தானே அகில இந்திய செயலராக இருந்தார்?” - நீதிபதி
"என்கட்சியில் லட்சக்கணக்கான நபர்கள் இருக்கிறார்கள். நிறைய பேருக்கு பொறுப்பு கொடுத்திருந்தேன். அதில் இவர் யார் என்று எப்படி அடையாளம் வைத்துக்கொள்ள முடியும் தெரியலையே.” - சுசா
“சரி, உங்கள் கட்சி சார்பாக நீங்கள் மேற்கொண்ட தேர்தல் சுற்றுப்பயண விவரம் இருக்கிறதா, சொல்லமுடியுமா?” - நீதிபதி