எலக்ட்ரிக்
ரயில்வே
மோட்டார்
கப்பல்
நீர்மூழ்கிக் கப்பல்
அதைக் கண்டுபிடிக்கும் கருவி
டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி
விஷப்புகை
அதைத் தடுக்கும் முகமூடி
இன்ஜக்ஷன் ஊசி
இனாகுலேஷன் ஊசி
இவைகளுக்கான மருந்து
ஆப்ரேஷன் ஆயுதங்கள்
தூரதிருஷ்டிக் கண்ணாடி
ரேடியோ
கிராமபோன்
டெலிபோன்
தந்தி
கம்பியில்லாத் தந்தி
போட்டோ மெஷின்
சினிமாப்படம் எடுக்கும் மெஷின்
விமானம்
ஆளில்லா விமானம்
டைப் மெஷின்
அச்சு யந்திரம்
ரசாயன சாமான்
புதிய உரம்
புதிய விவசாயக் கருவி
சுரங்கத்துக்கள் போகக் கருவி
மலை உச்சி ஏற மெஷின்
சந்திர மண்டலம் வரைபோக விமானம்
அணுவைப் பிளக்கும் மெஷின்
இன்னும், எண்ணற்ற, புதிய, பயன்தரும், மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகியவைகளைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், இன்னமும் கண்டுபிடிக்கும் வேலையிலே உடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் எல்லாம்,
சரஸ்வதி பூஜை
ஆயுத பூஜை
கொண்டாடாதவர்கள்!
அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் இந்தியாவுக்கு வழிகண்டுபிடித்த வாஸ்கோடிகாமா இந்தியாவை இதியில் ஜெயித்த அலெக்சாண்டர், இவர்களெல்லாம்,
ஆயுத பூசை
செய்தவர்களல்ல! நவராத்திரி கொண்டாடினவர்களல்ல!
நூற்றுக்கு நூறு பேர் என்ற அளவில் படித்துள்ள மேனாட்டிலே
சரஸ்வதி பூசை
இல்லை!
ஓலைக்குடிசையும் கலப்பையும் ஏரும் மண்வெட்டியும் அரிவாளும் இரட்டை வண்டியும் மண் குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள்.
தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை.
கற்பூரம் கூட, நீ செய்ததில்லை
கடவுட் படங்களுக்கு அலங்காரத்துக்குப் போடும் கண்ணாடி கூட, சரஸ்வதி பூஜை அறியாதவன் கொடுத்ததுதான். நீ, கொண்டாடுகிறாய்.
சரஸ்வதி பூசை
ஆயுத பூசை!!
ஏனப்பா? கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?
மேனாட்டான், கண்டுபிடித்துத் தந்த அச்சு யந்திரத்தின் உதவி கொண்டு, உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து, அகமகிழ்கிறாயே!!

ஒரு கணமாவது யோசித்தாயா, இவ்வளவு பூசைகள் செய்து வந்த நாம் நமது மக்கள் இதுவரை என்னபுதிய அதிசயப்பொருளைப் பயனுள்ள பொருளைக் கண்டுபிடித்தோம், உலகுக்குத்தந்தோம் என்று
யோசித்துப் பாரப்பா!

கோபப்படாதே! உண்மை, அப்படித்தான், கொஞ்சம் நெஞ்சை உறுத்தும். மிரளாமல், யோசி - உன்னையுமறியாமல் நீயே சிரிப்பாய்.

உன், பழைய நாட்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ய நூற்களை எல்லாம்கூட, ஓலைச்சுவடியிலேதானே எழுதினார்கள்.
அந்தப் பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கிலேயன் வருவதற்கு இடையே இருந்த காலத்திலே அச்சுயந்திரமாவது கண்டுபிடித்திருக்கக் கூடாதா? இல்லையே!

எல்லாம் மேனாட்டான் கண்டுபிடித்துக் கொடுத்தபிறகு அவைகளை உபயோகப்படுத்திக் கொண்டு பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயே
சரியா? யோசித்துப் பார்!
சரஸ்வதி பூசை - விமரிசையாக நடைபெற்றது - என்று பத்திரிகையிலே ‘சேதி’ வருகிறதே. அது, நாரதர் சர்விஸ் அல்லவே!

அசோசியேட் அல்லது ராய்ட்டர் சர்விஸ் - தந்தி முறை - அவன் தந்தது!
தசரதன் வீட்டிலே டெலிபோன் இருந்ததில்லையே!

ராகவன், ரேடியோ கேட்டதில்லை.

சிபி, சினிமா பார்த்ததில்லை!

தருமராஜன், தந்திக்கம்பம் பார்த்ததில்லை!

இவைகளெல்லாம், மிகமிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது - அனுபவிக்கிறோம்
அனுபவிக்கும்போதுகூட, அந்த அரிய பொருளைத் தந்த அறிவாளர்களை மறந்துவிடுகிறோம். அவர்கள்
சரஸ்வதி பூசை
ஆயுத பூசை
செய்தறியாவதவர்கள் என்பதையும் மறந்து விடுகிறோம்.

ரேடியோவிலே ராகவனைப்பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச் சக்ரவர்த்தி கதையும், கேட்டும், பார்த்தும், ரசிக்கிறோம்.
இது முறைதானா?
பரம்பரை பரம்பரையாக நாம் செய்துவந்த
சரஸ்வதி பூசை
ஆயுத பூசை
நமக்குப் பலன் தரவில்லையே
அந்தப்பூசைகள் செய்தறியாதவன் நாம் ஆச்சரியப்படும்படியான அற்புதங்களை அற்புதம் செய்ததாக நாம்கூறும் நமது அவதாரபுருஷர்கள் காலத்திலேகூட இல்லாத அற்புதங்களை அறிவின்துணை கொண்டு கண்டுபிடித்து விட்டார்களே...
என்று யோசித்தால் முதலில் கோபம் வரும், பிறகு வெட்கமாக இருக்கும், அதையும் தாண்டினால், விவேகம் பிறக்கும்

யோசித்துப்பார் - அடுத்த ஆண்டுக்குள்ளாவது!

சினிமாவிலே, முன்பு ஓர் வேடிக்கை பார்த்தேன், கவனத்திற்கு வருகிறது, சொல்கிறேன்.
ஒரு இரும்புப் பெட்டி! அதிலே, என்ன வைத்திருக்கிறான் என்று எண்ணுகிறாய்? வைரம், வைடூரியமா, தங்கம், வெள்ளியா? இல்லை! கத்தரி, வாழை, கீரைத் தண்டு, இப்படிப்பட்ட சாமான்களை!

ஒருலோபி!
அவன் இரும்புப் பெட்டியிலே, வைத்திருக்கிறான், இந்தச் சரக்குகளை
மனைவி, சமயலுக்காக வந்து கேட்கும்போது, இரும்புப் பெட்டியை ஜாக்ரதையாகத் திறந்து, கத்தரி ஒன்றும் வாழையில் கால்பாகமும், தருகிறான்!

பிறகு, பெட்டியைப் பூட்டி விடுகிறான்.

காய்கறியின் விலைஎன்ன அதை வைத்துப் பூட்டி வைத்திருக்கிறானே இரும்புப்பெட்டி அதன்விலை எவ்வளவு!
அவன் யோசிக்கிறானா அதை?
அதுபோலத்தான், மேனாட்டு, அறிஞர்கள் கொடுத்த இரும்புப்பெட்டி போன்ற விஞ்ஞான சாதனத்துக்குள்ளே, நாம், நமது பழைய கருத்துக்கள், முறைகள், பூசைகள், ஆகிய சில்லறைகளை வைத்துக் கொண்டு காலந் தள்ளுகிறோம்.
எனக்கு நன்றாகக் கவனமிருக்கிறது, சினிமாவிலே, இநதக் காட்சியைக் கண்ட உடனே கொட்டகையிலே இருந்தவர்கள், ஆட! பைத்தியக்காரா! என்று கேலி செய்தனர்.

நமது போக்கைக் கண்டு, உலகக் கொட்டகையிலே எவ்வளவுபேர், கேலி செய்கிறார்களோ? யார் கண்டார்கள்? செய்யாமலா இருப்பார்கள்?
நாம் கட்டிக் கழித்த துணியை, ஓட்டுப்போட்டு, ஓரம் வைத்துப் போட்டுக் கொண்டு ஒரு ஆள், நம்மிடமே வந்து நின்று, ‘புதுசா ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன் - அருமையான துணிகள் இருக்கு நம்ம கடைக்கே வாங்க’ - என்று நம்மையே, அழைத்தால் நமக்கு எப்படி இருக்கும்..?
(#திராவிடநாடு - 26.10.47) #HBDAnna113

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கவி தா

கவி தா Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kavitha129

15 Sep
தமிழ்நாட்டில் கடந்த ஒரு நூற்றாண்டாக ஹிந்தி திணிப்பிற்கு நடந்துவரும் மொழிப்போரில் 30 ஆண்டுகாலம் தலைமை வகித்து வழி நடத்தியவர் அண்ணா
#HBDAnna113
ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போர் 1947ல் முடிவுற்றது
ஆனால் திணிக்கப்படும் ஹிந்திக்கு எதிராக நடத்தப்படும் போர் 1937ல் தொடங்கியது...இன்றும் தீ எரிந்து கொண்டிருக்கிறது
#HBDAnna113
இந்த மொழிப்போர் அரசாங்கத்துக்கு எதிரானது அல்ல

ஹிந்தி பேசும் வட மாநில மக்களுக்கு எதிரானதும் அல்ல

தமிழர்கள் மீது ஹிந்தியைத் திணிக்க பல காலகட்டங்களில் ஒன்றிய அரசு அமுல்படுத்திய சட்டங்களுக்கும் திட்டங்களுக்கும் எதிர்வினை மட்டுமே
#HBDAnna113
Read 27 tweets
15 Sep
1934,35,36 ம் ஆண்டுகளில் இந்தியை அவர்கள் ஆட்சிமொழி என்று அல்ல; இணைப்புமொழி என்றல்ல; தேசிய மொழி என்றழைத்தார்கள். இந்தத் தேசத்திற்கென்று ஒரு மொழி உண்டு. அதுதான் இந்தி; இந்தத் தேசத்திற்கு இருக்கத்தக்க தேசிய மொழி இந்திதான் என்று 1935 ல் அவர்கள் சொன்னார்கள்.

#HBDAnna113
பெரியார் அவர்களின் போர் முறையின் தன்மை உங்களிலே பலருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் என்று கருதுகிறேன். அவர்கள் எதிரில் உள்ள படையை மட்டுமல்ல; முதலிலே அப்படைக்கு எங்கே மூலபலம் இருக்கிறது என்று கண்டுபிடித்து அந்த மூல பலத்தைத் தாக்குவது தான் அவருடைய போர் முறையாகும்
#HBDAnna113
இந்தியைக் கொண்டு வந்தவர்கள் இந்தியைக் காப்பாற்றிக் கொள்ளக் கருதி தேசியத்தையும், இந்தியாவையும் உடைத்துவிடக் கூடாது என்று தேசியம்’ என்று சொல்லியதை மாற்றிக்கொண்டு, ‘இந்தியாவில் தேசிய மொழிகள் பதினான்கு இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்தி...
Read 6 tweets
15 Sep
"Do we need a big door for the big dog and a small door for the small dog? I say, let the small dog use the big door too!" ~ C. N. Annadurai
#HBDAnna113
India is a continent and should be divided into separate nations. There is no need for a single government.
~ C. N. Annadurai
#HBDAnna113
If Hindi were to become the official language of India, Hindi-speaking people will govern us.
We will be treated like third rate citizens
~ C. N. Annadurai
#HBDAnna113
Read 9 tweets
2 Sep
அறிஞர் அண்ணாவின் #கம்பரசம் (17/06/1963)

“எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்… " அதுதானே தமிழர்க்கு அழகு?

வாருங்கள் கம்பரசம் பருக
எந்த நாட்டிலும் நம்பொணாக் கதைகள் உண்டு
அது போல் இங்குமுண்டு
இதை உணராது...

பூதேவர்களின் புராணாதிகளை அலசிக்காட்டுகிறாயே ...
அவைகளின் ஆபாசங்களை எடுத்துத் தீட்டிக் காட்டுகிறாயே...
யாரப்பா அவைகளிலே உள்ள கதையை மதிப்பவர்?
அந்தக் காலம் மலையேறி விட்டது
- #கம்பரசம்
இப்போது இலக்கியங்களிலே உள்ள "ரசம்" இருக்கிறதே...
அதைத்தான் பருகி இன்புறுகிறோம்!
அதிலும் #கம்பரசம் பருகப் பருக இனிக்குமப்பா
பரதா! நீயும் ஒரு டோஸ் சாப்பிட்டால் தெரியும் அதன் அருமை பெருமை
உணர்ச்சி... உற்சாகம்... எழுச்சியாகவும் உன் உள்ளத்தில் பொங்கும்
Read 88 tweets
22 Jun
“எதிரே இருக்ககூடிய நபர் வேலுசாமியை தெரியுமா?” - நீதிபதி
[ஏளனமாக] “இவரை யார் என்றே எனக்குத் தெரியாது.” - சொன்னவர் யார்
“தெரியாதா? உங்கள் கட்சியில்தானே அகில இந்திய செயலராக இருந்தார்?” - நீதிபதி

"என்கட்சியில் லட்சக்கணக்கான நபர்கள் இருக்கிறார்கள். நிறைய பேருக்கு பொறுப்பு கொடுத்திருந்தேன். அதில் இவர் யார் என்று எப்படி அடையாளம் வைத்துக்கொள்ள முடியும் தெரியலையே.” - சுசா
“சரி, உங்கள் கட்சி சார்பாக நீங்கள் மேற்கொண்ட தேர்தல் சுற்றுப்பயண விவரம் இருக்கிறதா, சொல்லமுடியுமா?” - நீதிபதி

“எனக்கு அதுவெல்லாம் நினைவில்லை.” - சுசா
Read 41 tweets
16 Jun
#DelhiWelcomesStalin The one who started his political career at the age of 14 MK Stalin campaigned at the age of 14 for DMK in the 1967 po
Media's eyes saw Stalin first time when he was arrested under MISA
#DelhiWelcomesStalin MK Stalin was arrested under MISA
He acted in a movie Ore Raththam (depicted the Untouchability)
#DelhiWelcomesStalin
Read 49 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(