“எதிரே இருக்ககூடிய நபர் வேலுசாமியை தெரியுமா?” - நீதிபதி
[ஏளனமாக] “இவரை யார் என்றே எனக்குத் தெரியாது.” - சொன்னவர் யார்
“தெரியாதா? உங்கள் கட்சியில்தானே அகில இந்திய செயலராக இருந்தார்?” - நீதிபதி

"என்கட்சியில் லட்சக்கணக்கான நபர்கள் இருக்கிறார்கள். நிறைய பேருக்கு பொறுப்பு கொடுத்திருந்தேன். அதில் இவர் யார் என்று எப்படி அடையாளம் வைத்துக்கொள்ள முடியும் தெரியலையே.” - சுசா
“சரி, உங்கள் கட்சி சார்பாக நீங்கள் மேற்கொண்ட தேர்தல் சுற்றுப்பயண விவரம் இருக்கிறதா, சொல்லமுடியுமா?” - நீதிபதி

“எனக்கு அதுவெல்லாம் நினைவில்லை.” - சுசா
“உங்கள் கட்சி அலுவலகத்தில் சுற்றுப்பயண விவரம் இருக்குமே. அதைப்பார்த்து சொல்லலாமே?”- நீதிபதி

“அந்தத் தேர்தல் சுற்றுப்பயண விவரம் எல்லாம் கட்சி அலுவலகத்தில் இருந்தது தான். இதோ இருக்கிறாரே வேலுச்சாமி, இவர் கட்சியைவிட்டு போகும்போது அந்த பைலை எல்லாம் திருடிக்கொண்டு ஓடிவிட்டார்” - சுசா
“என்ன மிஸ்டர். இப்போதுதானே அந்த வேலுச்சாமியை யார் என்றே தெரியாது என்றீர்கள். உடனே எப்படி அவர்தான் அந்த பைலை திருடிக்கொண்டார் என்கிறீர்கள். உண்மையை சொல்லுங்கள். [வேலுச்சாமியை] அவரை உங்களுக்கு தெரியுமா தெரியாதா?’’ - நீதிபதி

மாட்டிக்கிச்சே மாட்டிக்கிச்சே 🤣
“சரியாக சொல்லுங்கள் மிஸ்டர்
இது நீதிமன்றம்
நீங்கள் விளையாடுவதற்கான இடம் இல்லை
அவரை உங்களுக்கு முன்னமே தெரியுமா? தெரியாதா?” - நீதிபதி

சுப்ரமணியசாமியிடமிருந்து பதிலேதும் இல்லை
திணறினார்
அதன் பிறகு கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் மிக நிதானமாக யோசித்து நினைவில்லை தெரியாது என்றானார்
“சரி மே மாதம் 21ம் தேதி சென்னையில் இருந்து டெல்லிக்கு எப்படி வந்தீர்கள். விமானத்திலா, ரயிலிலா?”

இந்த கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் தலைகுனிந்தபடியே நின்றார் சாமி.
“21ம் தேதி காலையிலிருந்து மாலைவரை நீங்கள் டெல்லியில் இல்லை. வேறு எங்கோ ரகசியமாக இருந்தீர்கள் என்பதற்கு என்ன பதில்?”

“இல்லை நான் டெல்லியில் தான் இருந்தேன்.”
“சரி டெல்லியில்தான் இருந்தீர்கள் என்றால் அதற்கு என்ன ஆதாரம். மத்திய அமைச்சர்களின் மூவ்மென்ட் ரிப்போர்ட் பைல் இருக்குமே. இருக்கிறதா?” என்ற கேள்விக்கு

“அது தொலைந்துபோய்விட்டதாக மத்திய அரசு பதில் அளித்திருக்கிறது” என்றார் அரசு தரப்பு வழக்கறிஞர்.
“நீங்கள் 21ம் தேதி டெல்லியில்தான் இருந்தீர்கள் என்பதற்கு ஆதாரம் ஏதாவது இருக்கிறதா?” என்றார்.

“ஓ இருக்கிறதே” என்ற சாமி ஆங்கில நாளேட்டில் வந்திருந்த இரண்டு துண்டு செய்தியை எடுத்துக் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்த நீதிபதி ஜெயினுக்கு முகம் சுருங்கியது.
சாமி சரியாகத்தான் சொல்கிறார். நாங்கள்தான் ஏதோதவறாக புகர் செய்திருக்கிறோம் என்பதாக அது பட்டது.

உடனே அதை கொடுக்கும்படி நான் கேட்டேன். எனது வழக்கறிஞரிடம் அதைக் கொடுத்தார்.
அதைப் பார்த்த எனது வழக்கறிஞர் “ஆமாம் வேலுசாமி, சாமி சரியாகத்தான் சொல்கிறார். அன்றைய தினம் பகல் முழுக்க அவர் டெல்லியிலேதான் இருந்திருக்கிறார்” என்றார்

அவருக்கும் பிடிப்பு விட்டுப்போனது
எனக்கு பெரியகுழப்பம். அந்த செய்தித்தாள் பகுதியை கொடுங்கள் என்று வாங்கிப்பார்த்தேன். அன்றைய தினம் சாமி டெல்லியில் செய்தியாளர்களைப் பார்த்து ஒரு செய்தி கொடுத்திருப்பதாக பதிவாகியிருந்தது. எனக்கும் குழப்பம். அதிர்ச்சி. ஒன்றும் புரியாமல் இது எப்படி சாத்தியம் என்று பார்க்கிறேன்.
அப்படியே நீதிபதியையும் பார்த்தேன். நாங்கள் எதோ தவறான புகாரை கொடுத்த நபர்கள். சாமி சரியானவர்தான் என்ற பார்வை தெரிந்தது. இதையெல்லாம் கவனித்தபடி இருந்த பிரியங்கா காந்தி முகத்திலும் குழப்பம்.
நான் மீண்டும் அந்த செய்தித்தாள் பத்திகளைப் பார்த்தேன்
சிங்கள் கால செய்தி, அதன் கீழே கடைசியாக பி.டி.ஐ., பி.டி.ஐ என்று இரண்டிலுமே இருந்தன.

இருண்டு கொண்டிருந்த என் முகத்தில் மின்னல் வெளிச்சம்.
உடனே நீதிபதியைப் பார்த்து “இது போய், சாமி திட்டமிட்டு நீதிமன்றத்தை ஏமாற்றியிருந்தார். அவரது ஏமாற்று புத்தியை இங்கேயும் காட்டியிருக்கிறார்.” என்றேன்.

அங்கிருந்தவர்கள் எல்லோருக்கும் குழப்பம்.

நீதிபதி என்னைப்பார்த்து “எப்படிக் கூறுகிறீர்கள்?” என்றார்.
“சார், சுப்ரமணியசாமி கொடுத்த அந்த இரண்டு செய்திகளின் கிழேயும் பி.டி.ஐ என்றிருக்கிறது. இவர் நேரடியாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்திருந்தால் அப்படி வந்திருக்காது.
பி.டி.ஐ என்பது ஒரு செய்தி நிறுவனம்

ஒருவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் பி.டி.ஐ நிறுவனத்தில் உள்ள ஒருவரைப் பிடித்து செய்தியைக் கொடுக்கலாம்
சாமியும் அப்படித்தான் கொடுத்திருக்கிறார்.

அதனால்தான் செய்தியின் கீழே பி.டி.ஐ என்று போட்டிருக்கிறார்கள்.
பொய்யான ஆவணங்களைக் காட்டி நீதிமன்ற விசாரணையை திசைதிருப்புகிறார் சாமி.

அவர் செய்தியாளர்களை சந்தித்திருந்தால் எங்கே சந்தித்தார். அதில் யாராவது ஒரு செய்தியாளரை அடையாளம் கூற முடியுமா?” என்று கேட்டதும் நீதிபதிக்கு மட்டுமல்ல பிரியங்காவின் முகத்திலும் ஒரு திருப்பம்.
சாமியிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை. அவருக்கு வியர்க்கத் தொடங்கியது. தடுமாறுகிறார் என்பதும் புரிந்தது. எல்லோரும் இதைக் கூர்ந்து கவனித்தபடி இருந்தார்கள்.
அடுத்த கேள்வி. “மே மாதம் 22ம் தேதி மற்றும் 23ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் உங்களுக்கு மதுரையிலும் திருச்சியிலும் பொதுக்கூட்டநிகழ்ச்சி இருந்தது. கட்சியின் தேர்தல் பிரச்சாரம். தெரியுமா?”

திணறினார். யோசித்தார்.
“தெரியவில்லை. சரியாக நினைவில்லை” என்றார்.
“யோசித்து சரியாக கூறுங்கள்?” என்றார் நீதிபதி.

“இல்லை, எமக்கு அப்படி ஒரு நிகழ்ச்சி இருந்ததாக நினைவில்லை” என்றார்.
அப்போதுதான் நான் வைத்திருந்த 1991 மே மாதம் 21ம் தேதி வந்திருந்த மாலைமலர், மதுரைமணி ஆகிய இரண்டு மாலை நாளேட்டை எடுத்தேன். இரண்டும் மதுரை பதிப்பு.
அந்த இரண்டு நாளேட்டிலும் சுப்ரமணியசாமி 22ம் தேதி மாலை மதுரையில் பொதுகூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்ற விளம்பரமும் செய்தியும் வந்திருந்தது

அதில் சுப்ரமணிய சாமியோடு நானும் மதுரை மாவட்ட ஜனதா கட்சி தலைவரும் கலந்துகொள்வதாக இருந்தது
கட்சி சார்பான விளம்பரம் செய்தி அறிக்கைதான் அது

அதை சாமியிடம் காட்டினேன்

இப்போதாவது நினைவிருக்கிறதா, தெரிகிறதா என்றேன். அதை வாங்கிப் பார்த்தவர் ஒன்றும் சொள்ளமுடியாதவராக ஒரு மாதிரியாக தலையாட்டி பிறகு ஆமாம் நினைவிருக்கிறது என்றார்.
“ஆக 22ம் தேதி மதுரையிலும் 23ம் தேதி திருச்சியிலும் நீங்கள் பொதுகூட்டத்தில் கலந்துகொண்டு பேச இருந்தீர்கள். சரிதானே? அடுத்த கேள்வி.

யோசித்தபடியே “ஆமாம்” என்றார்.
“அது தேர்தல் பிரச்சார காலகட்டம். 22ம் தேதி மதுரை பொதுகூட்டத்திற்கு நீங்கள் முன்கூட்டியே விமான டிக்கெட் முன்பதிவு செய்திருக்க வேண்டும். இல்லையா? அப்படியென்றால் அந்த விமான டிக்கெட் எங்கே?” என்ற கேள்வியை கேட்டதும் சாமிக்கு மேலும் வியர்வை கொட்டத்தொடங்கியது.
“22ம் தேதி மதுரைக்கு செல்லவேண்டும் என்றால் நீங்கள் அன்றைய தினம் காலை டெல்லியில் இருந்து 6மணி விமானத்திற்குதான் புறப்பட்டுச் செல்லவேண்டும்

அதற்கு நேராக பேருந்துக்குச் சென்று டிக்கெட்டை வாங்குவது போல் வாங்கமுடியாது.
ஆக முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும். எங்கே அந்தப் பயணச்சீட்டு?” மீண்டும் எனது கேள்வி.

சாமியிடம் இருந்து பதில் இல்லை. முழித்தார். ஏதோ சொல்லவருகிறார். ஆனால் முடியவில்லை. நீதிபதியும் எங்கே அந்தப் பயணச்சீட்டு விவரம் என்ற கேள்வியை கேட்கிறார்.
பட்டென்ற பதில் இல்லை. நன்றாக முழித்துவிட்டு கடைசியாக “நான் அந்த புரோகிராமை கேன்சல் செய்துவிட்டேன். அதனால் டிக்கெட்டையும் கேன்சல் செய்துவிட்டேன்” என்றார்.

அப்படி சொன்னதும் அங்கே இருந்த மொத்த பார்வையாளர்களும் அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்க்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் முக்கியமானவர்கள். மெத்த படித்தவர்கள். ஒரு நிமிடம் மௌனமாக செல்கிறது நேரம்.

“சரி டிக்கெட்டை கேன்சல் செய்தீர்கள் என்றால் அதற்க்கான படிவம், அத்தாட்சி எங்கே?” என்றேன். இந்த நேரத்தில் சாமிக்கு மேலும் வியர்த்தபடி இருந்தது.
கிட்டத்தட்ட சட்டை முழுவதும் நனைந்திருந்தது.

பிறகு மிக தயங்கித் தயங்கி “நான் விமான டிக்கெட்டே எடுக்கவில்லை” என்றார்.
“முதலில் விமான டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டேன் என்றீர்கள்

பிறகு டிக்கெட்டே எடுக்கவில்லை என்கிறீர்கள்

சரி, ஏன் எடுக்கவில்லை? அதற்கு ஏதாவது முக்கிய காரணம் இருக்கவேண்டுமில்லையா?
அது என்ன காரணம்?
கடைசிகட்ட தேர்தல் பிரச்சாரத்தையே கேன்சல் செய்துவிடும் அளவிற்கு என்ன முக்கிய வேலை?
என்ன காரணத்திற்க்காக மதுரை பயணத்தை உறுதி செய்யவில்லை?
கேன்சல் செய்தீர்கள்?

என்ற அடுக்கடுக்கான கேள்விக்கு சாமியிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை
நிற்க தடுமாறினார்
நிற்கமுடியாமல் விசாரணை கூண்டின் கைப்பிடியை பிடித்துக்கொண்டார்
உடல் முழுவதும் நனைந்துவிட்டது.
அப்போதுதான் நான் என் வழக்கறிஞர் பாலகிருஷ்ணனிடம் அதை மெதுவாக சொன்னேன். அதை கேட்ட அவர் புத்துணர்ச்சி பெற்றவராக சத்தம் போட்டு “எஸ் மை லாட், த ஹோல் வேல்ட் சேஞ்ட் தேர் ப்ரோக்ராம் ஆப்டர் த அசாசினேசன் ஒன்லி, பட் அவர் ஜென்டில்மேன் டாக்டர் சாமி சேஞ்ட் ஹிஸ் ப்ரோக்ராம் பிபோர் த அசாசினேசன்
மொத்த உலகமும் இந்த ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பிறகுதான் தமது திட்டத்தை மாற்றிகொண்டது
ஆனால் சுப்ரமணியசாமி மட்டுமே படுகொலைக்கு முன்பாக தனது பயணத்திட்டத்தை மாற்றியிருக்கிறார்

அது ஏன்?
முக்கியமாக தேர்தல் பிரச்சாரத்தைவிட்டு எங்கோ ரகசியமாக தங்கியிருக்க காரணம் என்ன?”
என்று கேட்டபோது
யாரிடமும் எந்த சத்தமும் இல்லை.

“இந்த கேள்விக்கு பதிலை சொல்லுங்கள் மிஸ்டர்” என்றார் நீதிபதி
சாமியிடம் இருந்து பதில் இல்லாதஹ்டு மட்டுமல்ல, தலைகுனிந்தபடி நிற்கிறார்.

இப்போது நனைந்த உடலில் இருந்து வியர்வை அவரது கைவிரல் வழியாக சொட்டியபடியே இருக்கிறது.
பார்வையாளர்கள் மத்தியிலும் ஒரே நிசப்தம்

அடுத்து நீதிபதி என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு
ஆனால் ஜெயின் கன்னத்தில் கைவைத்தபடியே சாமியை பார்த்தபடியே இருக்கிறார்

இரண்டு நிமிடங்கள் அப்படியே ஓடுகிறது.
பேனாவை மூடி மேஜை மேல் வைத்தார். பிறகு கண்ணாடியை கழற்றி மேசைமீது வைத்தபடி அப்படியே எழுந்தார்

வழக்கமாக “கோர்ட் is அட்ஜர்ன்ட்” என்று சொல்வதைக்கூட மறந்து சாமியை மேலும் முறைத்தப் பார்த்தபடியே அவரது அறைக்குள் சென்றார்
வழக்கிற்கு சம்பந்தமே இல்லாத பலரும் என்னை அங்கே அங்கீகரித்தார்கள், பாராட்டினார்கள்
கட்டிபிடித்து உருகினார்கள்

ஆனால் ஒருவர் மட்டும் என்னை கோபமாக முறைத்தது முறைத்தபடியே இருந்தார். என்னை வெறுப்பாக பார்த்தபடி எழுந்து விறுவிறுவென வெளியேறினார்
அவர்தான் சி,பி,ஐ சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவரான கார்த்திகேயன்

“தன்நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்”
என்ற குரலை கார்த்திகேயன் படித்திருக்க மாட்டாரோ?
------ திருச்சி வேலுச்சாமி, “ராஜீவ் படுகொலை: தூக்கு கயிற்றில் நிஜம்” என்ற நூலில் இருந்து...

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கவி தா

கவி தா Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kavitha129

16 Jun
#DelhiWelcomesStalin The one who started his political career at the age of 14 MK Stalin campaigned at the age of 14 for DMK in the 1967 po
Media's eyes saw Stalin first time when he was arrested under MISA
#DelhiWelcomesStalin MK Stalin was arrested under MISA
He acted in a movie Ore Raththam (depicted the Untouchability)
#DelhiWelcomesStalin
Read 49 tweets
14 Jun
இறப்பு... பாட்டு கேட்டத எல்லாம் extraordinary னு சொல்றாங்க

இயலாமைல இருக்கறப்ப மன அழுத்தத்தில சுத்தி நடக்கறதுக்கு respond எல்லாம் இயந்திரத்தனமாவும் மூளை ஒரு /+ பாட்டில தன்னைத்தானே rebuild செய்ய loopல சுத்திக்கிட்டே இருக்கும்
Once the pressure s gone that will stop
இத புக்கு படிச்சி யூடூப் பாத்தெல்லாம் தெரிஞ்சிக்கவேண்டிய அவசியமெல்லாம் இல்ல
அப்படித்தான்னா you don't realize what you went through

I can tell this because... I'm in this continuously one after another or woven on one after another
இதுனால தான் யாராவது I'm downனு புலம்பறப்ப I just hint பாட்டு கேளுங்க னு
அது மெலடியோ டூயட்டோ குத்துப்பாட்டோ whatever it is
Our mind will be repaired

மழைல நனையறதும், அலைகளில் நிற்பதும் இப்படித்தான்
ஆனா we can't have them wherever we are isn't it
But music is
Read 4 tweets
4 May
இதுக்குத்தான் படிச்சித் தொலைங்கடா னு சொல்றது
அடுத்து என்ன pressure cooker மூடில ஏன் அத்தனை ஓட்டைங்கனு கேட்கறதா
#கோவிட்-19 சமயத்தில் வெம்மையைத் தணிக்கும் முறைகள் – மத்திய (இப்ப வாயை மூடிக்குவானுவ அறிவாளிங்க) பொதுப்பணித்துறையின் வழிகாட்டு நெறிகள்

Posted On: 27 MAY 2020 4:51PM by PIB Chennai
👇🏽
1- ஏர் கூலர்  மற்றும்  ஏசி  இயந்திரங்களை இயக்கும் வழிகாட்டு விதிமுறைகள்
~ஏசி சாதனங்களில் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை வைக்க வேண்டும்

~சார்பு ஈரப்பதம் 40 முதல் 70% என்ற அளவில் இருக்க வேண்டும்

~காற்று மறுசுழற்சி தவிர்க்கப்பட வேண்டும் மற்றும் புதிய காற்றை உள்எடுத்துக் கொள்வது சிறந்தது.
Read 28 tweets
3 May
பத்திரிகையாளர் அதியமான் KR Athiyaman இன்று காலையில் எழுதியுள்ள பதிவில், திமுக ஆட்சி குறித்த அச்சத்தில் இருக்கும் தனது தொழிலதிபர்-நண்பர் 1.75கோடி பெறும் நிலத்தை அடிமாட்டு விலைக்குக் கேட்டு மிரட்டப்படலாம் என்கிற ரீதியில் ஒரு பதிவு எழுதி இருக்கிறார்.
நிற்க, கீழே படத்தில் உள்ள கட்டடம் கோவை மாநகராட்சியின், ஆர்.எஸ். புரம் 23வது வார்டு ராமச்சந்திரா வீதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான இடத்தில் உள்ளது. இதே இடத்தில் சிலகாலம் முன்புவரை, பழைய கட்டிடத்தில் அரசின் சுகாதாரத்துறை அலுவலகம் இயங்கி வந்தது. Image
அதை இடித்துவிட்டு புதிய கட்டடமும் வணிக வளாகமும் கட்ட ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தத் தொகை 1.75 கோடி. வேலை ஆரம்பித்த அதே வேகத்தில், அரசுக்குச் சொந்தமான இந்த இடத்தை, தற்போது தொண்டாமுத்தூர் தொகுதியில் வென்றுள்ள அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தன் தம்பி எஸ்.பி.அன்பரசன் பெயரில...
Read 7 tweets
7 Apr
இந்துக்கள் பலவகை...! அதில் நீங்கள் எந்த வகை...??
கோவிலுக்கே போகாத #இந்து உண்டு. கோவிலுக்குள் சென்று திருநீறு வாங்காத இந்து உண்டு.

கோவிலுக்குள் சென்று அமர்ந்து விட்டு வரும் இந்து உண்டு. போகிற வழியில் இருக்கும் கடவுளுக்கு மரியாதை மட்டும் செலுத்தும் இந்து உண்டு
குலதெய்வமே தெய்வமென ஏற்று வாழும் இந்து உண்டு. நாள் கிழமை திதி பார்த்து மூச்சு விடும் இந்து உண்டு.

என்ன நாள் என்ன திதி என்பதே தெரியாமல் வாழும் இந்து உண்டு. தெய்வம் என்னடா தெய்வம்... செய்யும் வேலைய ஒழுங்கா செஞ்சா போதுமென வாழும் இந்து உண்டு
நான் இந்துவே இல்லைடா லிங்காயத்து, சீக்கியன், தமிழன், கூர்க்கா என சொல்லும் இந்துவும் உண்டு.

கடவுளே இல்லை, கடவுள் என்று சொல்வது எல்லாம் இவனுக பிழைக்க செய்யற வேலைன்னு சொல்லும் இந்து உண்டு
Read 6 tweets
21 Mar
ஒருநாள் கூத்துக்கு மீசைய... தான் நினைவுக்கு வருது எனக்கு

இந்த கும்பிடு பரிவட்டம் ஆரத்தி சடாரி சாய்க்கிறது... இதெல்லாம் எதுக்கு செய்றாங்க இந்த அரிய வகை உயிரினங்கள்?
சேரன் பாண்டியன் படத்தில வர்ற மாதிரி திச் மரியாதை? முடிஞ்சதும் திமுதிமுனு அவங்க இடத்துக்குள்ள ஓடினா இது நின்னுடுமில
மத சார்பின்மைனு காட்ட சர்ச்ல முட்டியும் பூணூலுக்கு கும்பிடும் அடுத்து என்ன குல்லாவா 🤔போடணுமா என்ன?
அவ்வளவு தத்திகளா அந்த மதத்து மக்கள்? If so educate them not...

ஊடால இந்த ஜமாத்து ஆட்கள் வேற ஷவாஸ்க்கு... 🤦🏾‍♀எப்பலே நீங்க திருந்தப் போறீங்க 👊🏿
#தேர்தல்கூத்து2021
இதுக்கெல்லாம் பயர் உடுற ஆட்களே தான்...
அந்த பிள்ளையார் போட்டோவுக்கு இப்பவும் பொங்கிட்டு இருக்காங்க 🤣🤣🤣
ஆளுக்கொரு நீதி... சமூக நீதி ஆகாதுங்க

Avoid avoidables Not everything
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(